Monday, August 13, 2018

கன மனம் கொண்டோரே கவலை மிகக் கொண்டோரே

கன மனம் கொண்டோரே
கவலை மிகக் கொண்டோரே

நதிக்கரையோரம்...
குளக்கரையோரம்...
ஓடைக்கரையோரம்...

மெல்ல நடப்பதாலேயே
நீங்கள் ஆறுதல் கொள்வது நிஜம்தான்...

அந்தச் சூழல் உங்களுக்குள்
ஒருமாற்றம் ஏற்படுத்துவது நிஜம் தான்

ஆயினும்
அதற்கு மறுபக்கம் ஒன்று உண்டு
என்பதை நீங்கள் என்றேனும்  சிந்தித்ததுண்டா ?

ஆம் சிந்தித்தீர்கள் ஆயின்

நிச்சயம் கனத்த மனத்துடன்..
கவலை தோய்ந்த முகத்துடன்
அவ்விடம் செல்ல மாட்டீர்...

மேலே பறந்தபடி
தன்னைக் கவ்வ நோட்டமிடும்
பருந்துக் கூட்டம் எதையும்..

தவமுனிவனைப் போல்
ஒற்றைக்காலில் நின்று தன்னைக் கொத்த எண்ணும்
கொக்குக் கூட்டம் எதையும்...

வலைவீசியபடி
ஆசையோடுக் காத்திருக்கும்
மீனவர் கூட்டம் எதையும்...

துளியும் கவலையது கொள்ளாது

பிடிபடும் கடைசி நொடிவரை
சந்தோசித்துத் திரியும்
அந்த மீன் கூட்டதின் மன நிலையை..

அதன்
உற்சாக மன நிலையை
உல்லாச சுக நிலையை

உங்கள் கனத்த மன நிலை
கவலை கொண்ட மன நிலை

நிச்சயம் மாற்றவும்
வாய்ப்பு உண்டுதானே..

எனவே
கன மனம் கொண்டோரே
கவலை மிகக் கொண்டோரே...

11 comments:

  1. கன மனம் கொண்டாரே கவலை மிகக் கொண்டாரே நன்று பாராட்டுகள்

    ReplyDelete
  2. வரிகளை மிகவும் ரசித்தேன் கவிஞரே

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரரே

    நல்ல பக்குவமான வரிகள். கவலை மிக கொண்டவர்கள் தன்னைப் போல் நிலையிலுள்ள அந்த குளத்து மீன்களும்,பிடிபடப்போகும் அந்த நிமிடம் வரை சந்தோஷத்தை மட்டுமே நினைத்து துள்ளிக் குதிக்கும் என்பதை உணர வேண்டும் என சூட்சுமாய் சொன்ன கவிதையை ரசித்துப் படித்தேன் பகிர்வுக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. // துளியும் கவலையது கொள்ளாது

    பிடிபடும் கடைசி நொடிவரை
    சந்தோசித்துத் திரியும்
    அந்த மீன் கூட்டதின் மன நிலையை..

    அதன்
    உற்சாக மன நிலையை
    உல்லாச சுக நிலையை

    உங்கள் கனத்த மன நிலை
    கவலை கொண்ட மன நிலை

    நிச்சயம் மாற்றவும்
    வாய்ப்பு உண்டுதானே..//

    மீனாக பிறக்காமல்.....
    சிந்திக்கத் தெரிந்த மனிதராகப் பிறக்க நேர்ந்துள்ளதால்.....
    கன மனம் கொண்டோராகவும்,
    கவலை மிகக் கொண்டோராகவும்
    இருக்கத்தான் வேண்டியதாக உள்ளது.

    ReplyDelete
  5. வாழ்வது ஒருமுறை ; வாழ்த்தட்டும் தலைமுறை.. இன்றே வாழ்வோம். நன்றே வாழ்வோம்.

    ReplyDelete
  6. வாழ்வியல் தன்மையை அழகாய் சொல்கிறது கவிதை ஐயா.

    ReplyDelete
  7. கன மனம் நமக்கு ஏற்றதல்ல இருப்பது ஒரு வாழ்வு இருக்கும்வரை மகிழ்ச்சியாக இருக்கலாமே வலையில் பிடிபடப்போகும்மீன்களுக்குத்தெரியுமா பிடிபடுவோமென்று

    ReplyDelete
    Replies
    1. நதிக்கும் காற்றுக்கும் கூட அவைகளால் நாம் இதம் பெறுகிறோம் என்பது தெரியாதுதானே

      Delete