Friday, March 13, 2020

இல்லையென்று ஆனால்தான் என்ன?

சிந்தனையைத் தூண்டாத கல்வி
சங்கடத்தில் உதவாத நட்பு
நம்பிக்கை தாராத பக்தி
பயன்படுத்த இயலாத சக்தி
தன்மதிப்பைக் கூட்டாத செல்வம்
சமயத்தில் இணையாத சுற்றம்
நம்மோடு இருந்தால்தான் என்ன?
இல்லையென்று ஆனால்தான் என்ன?

பயனின்றி பேசுகின்ற பேச்சு
ஆக்ஸிஜன் இல்லாத காற்று
தயார் நிலையில் இல்லாத படைகள்
உடலுறுப்பு மறைக்காத உடைகள்
மனமகிழ்ச்சி  தாராத கூத்து
நடப்படாது கட்டிவைத்த நாற்று
கணக்கின்றி  இருந்தால்தான் என்ன ?
இல்லையென்று போனால்தான் என்ன ?

நோய் நொடிகள் தீர்க்காத மருந்து
நோக்கமற்று எழுதுகின்ற எழுத்து
பார்வையற்று திறந்திருக்கும் விழிகள்
ஒழுக்கமற்ற திறமையான ஊழியன்
தாய்தந்தை பேணாத தனயன்
தனனலத்தை துறக்காத தலைவன்
மேற் சொன்ன எல்லாமே வீண்தான்
பிணத்தின்மேல் பூமாலை போல்தான்

9 comments:

  1. வணக்கம்
    ஐயா

    சொல்லிய வார்த்தைகள் யாவும் உண்மை இறுதியில் சொன்ன வரிகளும் அருமை

    நன்றி
    அன்புடன்
    த ரூபன்

    ReplyDelete
  2. உண்மைதான் ஐயா
    பயன்படாதவை
    பயன்தராதவை இருந்தால் என்ன
    இல்லாவிட்டால் என்ன?

    ReplyDelete
  3. இறுதியில் சொன்ன வரிகள் - நல்ல உவமை.

    ReplyDelete
  4. அருமை என்பதை விட உண்மை...

    ReplyDelete
  5. இருந்தும் பயனில்லாமல் பூமிக்கு பாமாய் இருப்பவர்கள் பலர்... திருந்தவா போகிறார்கள்?
    வரிகள் அருமை.

    தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 14 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது இல்லையென்று ஆனால்தான் என்ன? பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete
  6. அனைத்தும் உண்மை ஐயா .. அருமை.

    ReplyDelete
  7. ஒத்த வார்த்தைகளைத் தொகுத்திருப்பது சிறப்பு.

    ReplyDelete
  8. வணக்கம் சகோதரரே

    அத்தனையும் உண்மையான அருமையான வரிகள். ஒன்றுக்கொன்று தொடர்புடையதாய் வரிகளை நிர்ணயித்து கோர்த்த விதம் அழகு. மிகவும் ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  9. பயனின்றி பேசுகின்ற பேச்சு
    ஆக்ஸிஜன் இல்லாத காற்று
    ஆம்
    உண்மை

    ReplyDelete