Thursday, June 11, 2020

பிணத்து மேல் போட்டப் பூமாலை..

சிந்தனையைத் தூண்டாத கல்வி
சங்கடத்தில் உதவாத நட்பு
நம்பிக்கை தாராத பக்தி
பயன்படுத்த இயலாத சக்தி
தன்மதிப்பைக் கூட்டாத செல்வம்
சமயத்தில் இணையாத சுற்றம்
நம்மோடு இருந்தால்தான் என்ன?
இல்லையென்று ஆனால்தான் என்ன?

பயனின்றி பேசுகின்ற பேச்சு
ஆக்ஸிஜன் இல்லாத காற்று
தயார் நிலையில் இல்லாத படைகள்
உடலுறுப்பு மறைக்காத உடைகள்
மனமகிழ்ச்சி  தாராத கூத்து
நடப்படாது கட்டிவைத்த நாற்று
கணக்கின்றி  இருந்தால்தான் என்ன ?
இல்லையென்று போனால்தான் என்ன ?

நோய் நொடிகள் தீர்க்காத மருந்து
நோக்கமற்று எழுதுகின்ற எழுத்து
பார்வையற்று திறந்திருக்கும் விழிகள்
ஒழுக்கமற்ற அழகான பெண்கள்
தாய்தந்தை பேணாத தனயன்
தனனலத்தை துறக்காத தலைவன்
மேற் சொன்ன எல்லாமே வீண்தான்
பிணத்தின்மேல் பூமாலை போல்தான்

15 comments:

  1. எக்கச்சக்கமான கோபம் போலிருக்கிறதே! கொரோனா மீதுள்ள கோபத்தை எப்படியாவது வெளிப்படுத்தியாக வேண்டுமே! நல்ல கவிதை.

    ReplyDelete
  2. //சிந்தனையைத் தூண்டாத கல்வி சங்கடத்தில் உதவாத நட்பு  பயனின்றி பேசுகின்ற பேச்சு //

    உண்மையைச் சொன்னீர்கள்.  நிலையற்ற உலகில் எது நிலையென்று புரியாமல் அடுத்தவரிடம் குறைகண்டுகொண்டு தன்குறை தெரியாமல் வாழ்கிறோம். 

    ReplyDelete
  3. அருமையான சிந்தனைகள்!!

    ReplyDelete
  4. அருமையான சிந்தனைகள்!!

    ReplyDelete
  5. சிறப்பான சிந்தனைகளுடன் கவி வரிகள்

    துளசிதரன்.

    கவிதை மிக மிக அருமை. யதார்த்தம். ரசித்தேன்

    கீதா

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரரே

    அழகான கவிதை. ஒவ்வொரு வரிகளும் உண்மையை சொல்கிற சிறப்பை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரரே

    அழகான கவிதை. ஒவ்வொரு வரிகளும் உண்மையை சொல்கிற சிறப்பை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  8. நிலத்தை எடுத்துக் கூறும் கவிதை அழகு.

    ReplyDelete
  9. அருமை அருமை.

    நடப்படாது கட்டிவைத்த நாற்று … அருமை

    ReplyDelete
  10. இருந்தால் தான் என்ன இல்லையென்று ஆனால் என்ன....
    அருமையான வார்த்தைகள்

    ReplyDelete
  11. இருந்தால் தான் என்ன இல்லையென்று ஆனால்தான் என்ன....
    அருமையான வார்த்தைகள்

    ReplyDelete