Monday, May 17, 2021

நீங்கள் அரசுப்பணியாளரா ?

 நீங்கள் அரசுப்பணியாளரா ?

ஆம் எனில் நீங்கள்

யோகவான் மட்டுமல்ல

பாக்கியவானும் கூட....


யோகவான் என்பதை

உங்கள் அதிகாரத்தின் மூலம்

உங்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் மூலம்

நீங்களே அறிந்திருப்பீர்கள்

அதற்கு விளக்கம் வேண்டியதில்லை


பாக்கியவான்கள் என்பதற்குத்தான்

விளக்கம்வேண்டி இருக்கிறது...


இந்துவுக்கு காசி

இஸ்லாமியனுக்கு மெக்கா

கிறித்தவனுக்கு ஜெருசலேம்

முக்கிய ஸதலங்கள்...


வாழ்வில் ஒருமுறையேனும்

சென்றாகவேண்டும் எனும்

புண்ணிய ஸ்தலங்கள்

அதற்காக அவர்கள்படும் பாடும் ஏராளம்                                                                                                                                                                                                                                                  ஆயினும்                                                                                                                                        அந்த ஸ்தலங்களிலேயே  வாழும்         

பாக்கியம் பெற்றவர்கள்

அவ்விடத்தின் மகிமை உணர்திருப்பர்களாயின்

அவர்களே கொடுத்துவைத்தவர்கள்

அவர்களே பயணச் சிரமமில்லா பாக்கியவான்கள்

...

அங்ஙனமே..


மறுமைச் சுகங்களுக்காக

விரதம் இருந்து

கோவில் கோவிலாய் ஏறி இறங்கி

ஆயிரம் ஆயிரமாய் தானதருமங்கள் செய்து

சேர்க்கின்ற புண்ணியத்தை...


உதவி நாடிவரும்  

கல்வி அறிவற்ற பாமரர்க்கும்

வசதி வாய்ப்பற்ற

ஏழை எளியவருக்கும்

செய்யும் சேவையே

வேலையென வாய்த்த உங்களுக்கு


அன்றாடம் செய்யும் கடமைகளே

சேவைகளாக அமைவது

எத்தனைப் பெரிய பாக்கியம்...


ஆம் இதை உணர்ந்தால்......


கடமையை கடனெனச் செய்யாது 

கருத்தூன்றிச் செய்தால்.....


நீங்கள்தான் ஆண்டவன் கணக்கில் 

நேரடி வரவாகும் பாக்கியவான்கள்...


ஆம் அரசுப் பணியாளரான நீங்கள் 

யோகவான மட்டும் அல்ல

நிச்சயம் பாக்கியவானும் கூட..

9 comments:

  1. Replies
    1. ஆம் அந்த அபிப்பிராயம் சரியே..

      Delete
  2. ஐயா எல்லா அரசு பணியாளர்களுக்கும் பொதுமக்களுடன் நேரடி சம்பர்க்கம் இல்லை. உதாரணமாக நான் இஸ்ரோவில் இருந்து ஒய்வு பெற்றவன். அலுவலக ரீதியாக பொது மக்கள் தொடர்பு  என்றுமே இருந்ததில்லை.

     Jayakumar

    ReplyDelete
    Replies
    1. நேரடித் தொடர்பில்லை ஆயினும் மக்களுக்கான பணிதானே...இதுவும் புண்ணியமே..

      Delete
  3. சரியாகச் சொன்னீர்கள். ஒவ்வொருவரும் தங்களது கடமைகளை உணர்ந்து சரியாகப் பணியாற்றினால் பலருக்கும் நன்மையே.

    ReplyDelete
    Replies
    1. ஆம் மக்கள் சேவையே மகேசன் சேவை என்பது அரசுப் பணியாளர்களுக்கு அதிகம் பொருந்தும்..

      Delete
  4. பாக்கியவானின் இலக்கணம் அறிந்துகொள்ள முடிந்தது.

    ReplyDelete