Monday, May 17, 2021

சாபத்துள் மறைந்திருக்கும் வரம்..

 இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற

நாமெல்லாரும் இதுவரை சந்தித்திராத

ஒரு மோசமான சூழலைக் 

கடந்து கொண்டிருக்கிறோம்


அதே சமயம் நம்முள் இருக்கும்

மனித நேயத்தை நம் செய்கையால்

வெளிப்படுத்த வேண்டிய அவசியமான

சூழலிலும் இருக்கிறோம்...


சாபத்தின் இடையில் ஆண்டவன்

நமக்களித்திருக்கிற வாய்ப்பாகவும்

வரமாகவும் கூட இந்தச் சூழலை

நாம் புரிந்து கொள்வோம் ஆயின்

மிகச் சிறப்பு...


நல்ல நண்பனாக உறவினராக

சமூக நேயமிக்க மனிதராக இந்தச்

சூழலில் நாம் செய்கிற ஒருசிறு உதவி கூட

அதைப் பெறுகிறவர்களுக்கு

நிச்சயம் பேருதவியாகவே இருக்கும்


உதவி என்பது பணத்தால்

பொருளால்தான் இருக்கவேண்டும் என்கிற

அவசியமில்லை


உடலளவில் சிறு உழைப்பாக இருக்கலாம்

சிறு ஆறுதல் வார்த்தைகளாக இருக்கலாம்

ஏன் அலைபேசியின் மூலம் நலம்

விசாரித்தலாகக் கூட இருக்கலாம்.....


வீட்டில் இருந்தபடி அனைவருடன்

முன்பை விட அதிகத் 

தொடர்பில் இருப்போம்


பாதிப்பை அமைதியுடன் ஏற்று

அதனுடன் வாழப் பழகும்

மிருகங்களல்ல நாம். என்பதை..


எதையும் வென்று சாதித்து

தலை நிமிரும்  இனம்மனித இனம்

என்பதை நீரூபனம் செய்ய

இது ஒரு நல்ல வாய்ப்பு.....


ஆம் சாபத்திடையில் இருக்கும்

வரத்தினைப் புரிந்து செயலபட

இது ஒரு நல்ல வாய்ப்பு....


புரிந்து செயல்படுவோம் வாரீர்

இணைந்து செயல்படுவோம் வாரீர்

5 comments:

  1. அருமையான பதிவு.
    வீட்டில் இருந்து அன்பான வார்த்தைகளை பகிர்ந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  2. நேர்மறைச் சிந்தனை.

    ReplyDelete
  3. சிறப்பான நல்ல சிந்தனை. ஆம் வீட்டிலிருந்தபடியே அன்பைப் பரிமாறிக் கொள்ளலாம்தான்.

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete