Friday, October 14, 2022

சகிப்புத்தன்மை...?

 நேர்மறையான  

ஒரு விஷயத்தைச் சொல்வது

உங்கள்  நோக்கமாயின்

தவறியும்

அதில்

எதிர்மறையான

வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்


"நன்றாக இரு "

என்பதற்குப் பதில்

"நாசமாகிவிடாதே "

என்பதைப் போல....


"புரிந்து இணைந்திருக்கும் தன்மையை

மிகச் சரியாகச் சொல்வதாக நினைத்து

"சகிப்புத் தன்மை" எனச் சொல்லி

சகிக்க முடியாத ஏதோ ஒன்று

இனங்களுக்கிடையில் இருப்பதான

பிம்பத்தை உருவாக்கியதைப் போல..


நேர்மறையான விஷயத்திற்கு

எதிர்மறையான வார்த்தைகளை

எப்போதும் பயன்படுத்தாதீர்கள்..


ஏனெனில்

அது நம் நோக்கத்திற்கு

எதிரான பலனையே தரும்

இப்போதைய

"சகிப்புத் தன்மையைப் " போலவே..

4 comments:

  1. வேண்டும் ப த வி...!

    _சித்திரு
    _னித்திரு
    _ழித்திரு

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரரே

    நல்ல பதிவு.
    /"நன்றாக இரு "
    என்பதற்குப் பதில்
    "நாசமாகிவிடாதே "
    என்பதைப் போல./.

    நல்ல வரிகள். நேர்மையாக பேசுவதில் என்றும் நன்மையே. நல்லதை பேசும் வரிகள் மனதுக்கு உற்சாகம் தருபவை. மற்றபடி விதியின் கரங்களில். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. DD  கமெண்ட் ஸூப்பர்.

    ReplyDelete