*இதுவும் கடந்து போகும்*
நம்முடைய, இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால்,
இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும் !
*எத்தனை வெற்றிகள் ?*
*எத்தனை தோல்விகள் ?*
*எத்தனை மகிழ்ச்சிகள் ?*
*எத்தனை துக்கங்கள் ?*
எல்லாம் வந்து,
சிறிது காலம் தங்கி, கடந்து போயிருக்கின்றன !!
வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால், நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா ?
வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால்,
நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா ?
*எத்தனை நண்பர்கள் ?*
*எத்தனை பகைவர்கள் ?*
*எத்தனை உறவுகள் ?*
நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து, வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள் ?
வாழ்வில் வந்ததெல்லாம், நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன?
ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா ?
இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது,
கிடைக்கும் அமைதி சாதாரணமானது அல்ல.
அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.
வெற்றிகள் கிடைக்கும் போது,
*இதுவும் கடந்து போகும்* என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
*கர்வம் தலை தூக்காது !!*
தோல்விகள் தழுவும் போது,
*இதுவும் கடந்து போகும்* என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
*சோர்ந்து விட மாட்டீர்கள்*
நல்ல மனிதர்களும்,
நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது,
*இதுவும் கடந்து போகும்* என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
*இருக்கும் போது அவர்களை கௌரவிப்பீர்கள்*
*அவர்கள் விலகும் போது, பெரிதாக பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்*
தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது,
*இதுவும் கடந்து போகும்* என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
*தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள்*
*பெரிதாக மன அமைதியை இழக்க மாட்டீர்கள்*
நெற்றி சுருங்கும் போதெல்லாம்,
*"இதுவும் கடந்து போகும்* என்பதை நினைவில் கொள்ளுங்கள்,
*சுருக்கம் போய் முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்.*
வாழ்க்கையின் ஜீவநாதமாக இந்த உண்மை உங்கள் இதய ஆழத்தில் பதிந்து போய் விடவும்..
அந்தப் புன்னகைநிரந்தரமாக உங்கள் முகத்தில் தங்கி இருக்க மனமார்ந்த நல்வாழ்த்துகள்...படித்ததில் பிடித்தது
😊😊😊
வணக்கம் சகோதரரே
ReplyDeleteபதிவு அருமை. ஆம். நம் வாழ்வில் சுக துக்கம் எல்லாம் நம்மை கடந்துதான் போகிறது. நாமும் அதை கடந்து செல்ல பழகி விட்டால், நம் மனதில் அமைதியை தக்க வைத்துக் கொள்ளலாம். நல்ல பகிர்வு. மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாழ்க்கை என்னும் ரயில் பயணத்தில் கடந்து செல்லும் தந்தி கம்பங்களாய் அனுபவங்கள், இறங்கிச் செல்லும் பயணிகளை உறவுகள்... நம் நிறுத்தமும் வரும்.
ReplyDeleteஉண்மை
ReplyDelete//நெற்றி சுருங்கும் போதெல்லாம்,
ReplyDelete*"இதுவும் கடந்து போகும்* என்பதை நினைவில் கொள்ளுங்கள்//
சிறப்பான சிந்தனை. இதுவும் கடந்து போகும் என்பதை புரிந்து கொள்ள பல அனுபவங்கள் தேவைப்படுகிறது.
அன்புள்ள நண்பர்களே, அதிக எண்ணிக்கையிலான வலைப்பதிவுகளைக் கொண்ட தமிழ் வலைப்பதிவு திரட்டியை அறிமுகப்படுத்துகிறேன்.. இன்றிலிருந்து படிக்கத் தொடங்குங்கள்
ReplyDeleteClick Here