Saturday, January 19, 2013

பயணங்களும் அனுபவங்களும்-1

எப்படியும் அடிக்கடி திருமலை செல்கிற வாய்ப்பு
எனக்கு ஏற்பட்டுவிடும்.இந்தமுறை
அண்ணன் மகன் திருமணம்
திருமலையில் நடப்பதற்கு ஏற்பாடாகி இருந்ததால்
நாங்கள் குடும்பத்துடன் சென்றிருந்தோம்.

நான் ஏற்கெனவே  அங்கு ஒரு வாரம்
தங்கி இருந்து சேவா செய்தவன் என்கிற முறையில்
திருப்பதியின் நடை முறைகள் அத்துப்படி.எனவே
வெங்கடேஷனை தரிசிக்க மிகச் சரியான
திட்டமிடுதலுடன் செல்ல வில்லையெனில்
அதிக நேரம்காக்க வேண்டியிருக்கும்
என்பதால் அதற்கான பதிவுகள் எல்லாம் செய்து
மிகச் சரியாகப் போய் தரிசித்து வந்தேன்.

ஆயினும்
கூடுதலாக பிரசாத லட்டுகள் பெறுவது நாங்கள்
தொட்ர்ந்து புனே செல்ல ரயில் பிடிக்க
வேண்டி இருந்ததால்அத்தனை சுலபமாக இல்லை.
கிடைத்த லட்டுடன்புறப்பட்டுவிட்டாலும் கூட
பூனே மற்றும் பாம்பேஉறவினர் இல்லங்களுக்குச்
செல்கையில் எப்படிபிரசாதங்கள் இல்லாமல்
செல்வது என்கிற குழப்படி
இருந்து கொண்டே இருந்தது

சரி எப்படியும் இருப்பதில் சமாளித்துக் கொள்வோம்
 என நினைத்து திருமலையில் இருந்து
திருப்பதி செல்லும்பஸ்ஸில் ஏறி அமர்ந்து விட்டோம்.
ஆனாலும்அனைவருக்கும் கொடுக்கும்படியான
பிரசாதங்கள் வாங்கி வராதது கொஞ்சம்
மனச் சங்கடமாகவே இருந்தது

நான் அமர்ந்திருந்த சீட்டுக்கு அருகே
வட இந்தியர் ஒருவர் கையில் ஒரு
பெரிய பிளாஸ்டிக் பையுடன் அமர்ந்திருந்தார்
பஸ் ஐந்து மலைகளைக் கடந்து இறங்கிக்
கொண்டிருக்கையில்திடுமேன ஏதோ ஒன்று
சறுக்கி என் மடியில்விழுவதை ப் போலிருக்க
 திடுக்கிட்டு விழித்தேன்


நான்கு லட்டுகளுடன் கூடிய ஒரு பை
என் மடியில் இருந்தது.பக்கத்து இருக்கையில்
அந்தவட நாட்டவர் குறட்டைவிட்டுத்
 தூங்கிக் கொண்டிருந்தார்

நிச்சயமாக அவர் விழித்து  எழுந்தாலும் கூட
பையிலிருந்தது விழுந்தது தெரியாத அளவு
பை பெரியதாக இருந்தது.எனவே  நாமே
வைத்துக் கொள்ளலாமா ?
நம்முடைய மனக் குறை அறிந்து வெங்கடேசன்தான்
இப்படி இந்த வட இந்தியர் மூலம் ஏற்பாடு செய்கிறாரா ?
இல்லையெனில் இப்படி மிகச் சரியாக பக்கத்தில்
அமர்ந்தஒருவரிடம் இருந்து லட்டு மட்டும் நமக்குக்
கிடைக்கும்படியானநிகழ்வு நடக்குமா என
எனக்கு சாதகமாக உள்ள அனைத்து
விஷயங்களயும் குரங்கு மனம்
பட்டியலிடத் துவங்கிவிட்டது

ஆனாலும் மனச் சாட்சி மட்டும் இதே நிகழ்வை
அவன் போக்கில்நினைத்துப் பார் .அவன் பிரசாதம்
இல்லாததை இழந்ததைஒரு அபசகுனமாக
நினைத்தால் அந்தப் பாவம்உன்னைத்தான் சேரும் என அறிவுறுத்திக்கொண்டே வந்தது

முடிவாக தவறு செய்வதற்குக் கூட
ஒரு தைரியம் வேண்டும் என்பார்கள்.
அந்தத் தைரியும் இல்லாததாலோ அல்லது
வழக்கம்போல மனச் சாட்சியே இம்முறையும்
வெற்றி கொண்டதாலோ என்னவோ
தூங்கிக்கொண்டிருந்த அவரை எழுப்பி
ஜாடையில் லட்டு விழுந்த விஷயத்தைச் சொல்லி
அவரிடம் அந்தப் பையைக் கொடுத்தேன்

அவர் நன்றி சொல்லும் முகமாக இந்தியில்
 ஏதோ ஒன்றைச் சொல்லிஅதை என்னிடமே
திரும்பக்கொடுத்து அதை வைத்துக் கொள்ளச்
சொல்லிவிட்டு பின்னால் அமர்ந்திருந்த
குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு
கீழே இறங்கிவிட்டார்

இறங்கியவர் ஏனோ திருமலை நோக்கித்
தரையில் விழுந்துஒரு கும்பிடு போட்டபடி
பின் என் பக்கம் திரும்பிப் பார்த்து
பின் திருமலை நோக்கி என்னவோ
 சொல்வது போல இருந்தது

அவர் முகக் குறிப்பை வைத்து நிச்சயம்
அந்தப் பி ரசாத லட்டுகள்அவரைச் சேர்ந்ததில்லை.
அவரும் எப்படியோ கிடைத்து
கொண்டு வந்திருக்கிறார் என புரிந்து கொண்டேன்.

நானும் கெட்டிக் காரத் தனமாக இதை கவர்ந்திருந்தால்
நானும் நிச்சயமிதை இழந்திருப்பேன் என
என் மனச் சாட்சிஅறிவுறுத்திக் கொண்டே வந்தது.

அந்த அறிவுறுத்தல் நம்பிக்கையின் விளைவா அல்லது
மூட நம்பிக்கையின் விளைவா என்கிற குழப்பம் மட்டும்
இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது

58 comments:

  1. நீங்கள் சொன்னால் நம்பமாட்டீர்கள்! சற்று நேரத்திற்கு முன்தான் “ரமணி சார் பதிவைக் கொஞ்ச நாட்களாய் காணோமே!” என்று நினைத்தபடியே BLOGGER – இல் நுழைந்தேன்! 14 minutes ago என்று இந்த பதிவு வந்தது. சிந்தித்துப் பார்த்தால் நமது வாழ்க்கையில் பல சங்கிலிகள் தொடர்பு உள்ளது போலும் இல்லாதது போலும் நிகழ்வாய்த் தெரிகின்றன.


    ReplyDelete
  2. //நான் ஏற்கெனவே அங்கு ஒரு வாரம் தங்கி இருந்து சேவா செய்தவன் என்கிற முறையில் திருப்பதியின் நடை முறைகள் அத்துப்படி.//

    திருப்பதியில் சேவார்த்தியாக இருந்த அனுபவங்களை பதிவுகளாக எழுதலாமே. ( தமிழ்மணம் ஓட்டுப்பட்டை என்ன ஆயிற்று? நிறுவவும்.)


    ReplyDelete
  3. நல்லதொரு அனுபவ பகிர்வு! நமக்கு சொந்தமில்லாதது இன்று கிடைத்தாலும் ஒருநாள் இழக்க நேரிடும். இதை நானும் அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கிறேன்! வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் ஒரு விளம்பரம் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்! இன்று என் தளத்தில் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_19.html நான் தான் மாஸ் ஹீரோ! பவர்ஸ்டார் அட்ராசிட்டி!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_9185.html

    ReplyDelete
  4. கெட்டிக்காரத்தனமாக இதைக் கவர்ந்திருந்தால்
    நானும் நிச்சயமிதை இழந்திருப்பேன் ///

    ReplyDelete
  5. 'தானே தானே பர் லிக்கா ஹை கானே வாலே கா நாம்'ன்னு இங்கே சொல்லுவாங்க. அந்த லட்டு உங்களுக்குக் கிடைக்கணும்ன்னு இருந்திருக்கு அவ்ளோதான். குழப்பமெதற்கு :-)))

    மும்பை தங்களை அன்புடன் வரவேற்கிறது.

    ReplyDelete

  6. மனசாட்சியை நம் துணைக்கு எப்போதும் அழைத்துக் கொள்ளலாம். அது நம் சொல்படிக் கேட்கும்.எப்படியானாலும் உங்கள் மனக் குறை தீர்ந்ததல்லவா.? லட்டு எல்லோருக்கும் கொடுத்தீர்கள் இல்லையா.?

    ReplyDelete
  7. இரமணி ஐயா.... எங்கே கொஞ்ச நாட்களாக உங்கள் பதிவுகளைக் காணோமே... என்று நினைத்து வருந்தினேன். நல்ல வேலை வந்து விட்டீர். இல்லையென்றால்..... “தீதும் நன்றும் பிறர் தர வாரா...” என்ற வலையின் தலைவரும் எங்களுக்கு நல்ல வழிகாட்டுபவருமான இரமணி ஐயாவைக் காணவில்லை“ என்று பதிவேற்றி இருப்பேன்.

    “தீதும் நன்றும் பிறர் தா வாரா“ என்பதை எவ்வளவு
    அழகான அனுபவத்துடன் விளக்கி இருக்கிறீர்கள்.
    நன்றி இரமணி ஐயா.
    த.ம. 3

    ReplyDelete
  8. அனுபவம் சொல்லும் பாடங்கள் ஏராளம்.

    ReplyDelete
  9. அந்த பெருமாளே உங்களுக்கு தந்ததாக எண்ணி மன நிம்மதியுடன் இருங்கள் சார்.

    திருப்பதி தரிசனம் பற்றி எழுதுங்களேன்.

    ReplyDelete
  10. ஆமாம் இன்று புத்தக கண்காட்சி சென்று வந்தேன் அங்கும் ரமணி ஐயாவை காணவில்லை என்பதே பேச்சாக இருந்தது. வந்து இங்கு தங்கள் பதிவைப் பார்த்ததும் மகிழ்ச்சி ஐயா .

    ReplyDelete
  11. இது நிட்சயம் அந்த இறைவனுடைய செயல்தான் !..மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது இப் பகிர்வு .வாழ்த்துக்கள் ஐயா மேலும் இது போன்ற தெய்வீக பயணங்கள் தொடரட்டும் .......

    ReplyDelete
  12. பயண அனுபவத்திலும் நல்லதொரு மெசஜ் !

    // நமக்கு சொந்தமில்லாதது இன்று கிடைத்தாலும் ஒருநாள் இழக்க நேரிடும். //

    அன்புச்சகோதரர் சுரேஷ் அவர்கள் பதிந்துள்ள கருத்தை வழிமொழிகின்றேன்.

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  13. தன் பக்தன் ஆசைப்படி மேலும் லட்டுகளை கொடுத்து இருக்கிறார் பெருமாள். எல்லோருக்கும் வழங்கி மகிழ்ந்தீர்களா ?

    பெருமாள் தரிசனம் நன்கு ஆனதா?
    பயண அனுபவங்கள் தொடர் படிக்க ஆவலாய் இருக்கிறோம்.

    ReplyDelete
  14. இந்த மனதின் இயல்பே இப்படித்தான் போலும். ஆயுசுக்கும் 'கெட்டிக்காரத்தனத்திர்க்கும்' உண்மையாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்திற்கும் எப்போதும் போராட்டம். உண்மையே வெல்லும் என்று மறுபடி மறுபடி நிரூபிக்கப்பட்டாலும், 'கெட்டிக்காரத்தனத்துடன்' வாழ்க்கையெங்கும் போராட்டம்! அழகாக எழுத்தில் வடித்திருக்கிறீர்கள்!மற்றபடி, எனக்கும் திருப்பதியில் ஒரு வார சேவை செய்ய ஆசை. பெருமாள் கிருபை கிடைக்கும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  15. ரமணி சார்,

    வெங்கடேசன் என்ன நினைக்கிறானோ அது மட்டுமே நடக்கும் .திருப்பதிக்கு போவதற்கு கூட நாம் நினைத்தால் மட்டும் போதாது பெருமாளும் நினைக்க வேண்டும் என்று என் தோழி கூறிக் கொண்டே இருப்பாள்.

    உங்கள் பயணம் மற்றும் தரிசன அனுபவங்களை பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.

    உங்கள் பகிர்விற்கு நன்றி.

    ராஜி.

    ReplyDelete
  16. இதுதான் ஆண்டவன் சித்தம் என்பது...

    ReplyDelete
  17. Super post. Enjoyed reading your post.

    ReplyDelete
  18. உங்கள் மனச்சாட்சி என்றும் இப்படியே இருக்கட்டும். அதன்படி நடந்ததற்குப் பரிசு வெங்கடேசஸ்வரனின் அருளும் அதன் அடையாளமாய் லட்டுக்களும் கிடைத்தது. தொடரவிருக்கும் உங்கள் அனுபவப் பயணத்தில் மகிழ்வுடன் பங்கு கொள்ள நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  19. வாழ்வின் படிக்கற்கள் நமக்கு ஏதேனுமொரு பாடம் போதித்தபடி...

    ReplyDelete
  20. ஸார் உண்மையாக சொல்கிறேன்..இதை படிக்கும்போது எனக்கு கண்களில் கண்ணீர பெருகி உடல் லேசானது.அந்த ஏழுமலையான் தான் உங்களுக்கு அருள் செய்துள்ளார்.
    சந்தேகமே வேண்டாம்.

    அன்று ஒரு நிராதரவான ஒரு பெண்ணின் பசி போக்கி வைகுண்டத்தில் ஒரு FD open செய்தீர்கள்.அதற்கான வட்டி இப்போ லட்டு வடிவில் உங்களுக்கு வந்துள்ளது. மேலும் இதுபோல வருடா வருடம் கிடைத்துக்கொண்டே இருக்கும். ஐயம் வேண்டாம்.
    "அற்றார் அழிப்பசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான்பொருட்வைப்புழி"
    என்பது பொய்யா மொழி.

    ஒரு முக்கிய வேண்டுகோள்:மறந்து போய் கூட பகுத்தறிவு என்றெல்லாம் சொல்லி இந்நிகழ்வை கொச்சை படுத்த வேண்டாம்.நம் மாநிலத்தைப் பொருத்தவரை பகுத்தறிவு என்பது ஒரு கெட்ட வார்த்தை.

    கோவிந்தா,கோவிந்தா கோவிந்தா!!

    ReplyDelete
  21. நினைத்ததை நடத்தி வைப்பார் கோவிந்தன்! பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  22. நேர்மையாக இருப்பது..இருக்க நினைப்பது..நினைவின் வழி நடப்பது, மூடநம்பிக்கை எனில்..அப்படியே இருந்துவிட்டு போவோம் !

    திருப்பதியில் பெருமாள்..கலியுக வரதனாக இருக்கிறான் என்பதை, உணர்ந்தே அறியமுடியும் !

    தங்கள் வட இந்தியப் பயணம் மேலும் பல ஸ்வாரஸ்யங்களைத் தாங்கி வரும்..என ஆவலுடன் !

    ReplyDelete
  23. உங்களுக்கென்றே பெருமாள் கொடுத்திருக்க வேண்டும்.....

    சந்தேகமென்ன?

    பயணத்தின் போது கிடைத்த அனுபவங்கள் தொடரட்டும்....

    த.ம. 8

    ReplyDelete
  24. ஆமாங்க தவறு செய்யவும் ஒரு துணிச்சல் வேனும் தான். நல்ல மனசு உள்ளவங்களுக்கு மனசாட்சியின் உறுத்தலைதாங்கிக்கவே முடியாதே.

    ReplyDelete
  25. எப்படியொ லட்டு கிடைத்த அனுபவங்கள் அருமை

    ReplyDelete
  26. அனுபவங்கள் நம் பார்வையை எப்போதும் விசலமாக்கிக்கொண்டே வருகின்றன! மனசிலிருந்ததை அப்படியே பகிர்ந்த உங்கள் நேர்மையை நிச்சயம் பாராட்ட வேன்டும். சலனத்தை வென்ற உங்களுக்கு கிடைத்த பரிசு இது! நல்ல பதிவிற்கு பாராட்டுக்கள்!!

    ReplyDelete
  27. சிந்தித்துப் பார்த்தால் நமது வாழ்க்கையில் பல சங்கிலிகள் தொடர்பு உள்ளது போலும் இல்லாதது போலும் நிகழ்வாய்த் தெரிகின்றன.//

    நிச்சயமாக.தங்கள் முதல் வரவும் வாழ்த்தும்
    அருமையான பின்னூட்டமும் அதிக
    உற்சாகமளிக்கிறது.தங்கள் நினைவில் தொடர்வதை
    பெருமையாகக் கருதுகிறேன்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. தி.தமிழ் இளங்கோ//

    தமிழ்மணம் ஓட்டுப்பட்டை என்ன ஆயிற்று? நிறுவவும்.)//

    இணைத்து விட்டேன்.வரவுக்கும்
    வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. s suresh //

    நல்லதொரு அனுபவ பகிர்வு! நமக்கு சொந்தமில்லாதது இன்று கிடைத்தாலும் ஒருநாள் இழக்க நேரிடும். இதை நானும் அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கிறேன்! //


    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. சின்னப்பயல் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. அமைதிச்சாரல் //

    'தானே தானே பர் லிக்கா ஹை கானே வாலே கா நாம்'ன்னு இங்கே சொல்லுவாங்க. அந்த லட்டு உங்களுக்குக் கிடைக்கணும்ன்னு இருந்திருக்கு அவ்ளோதான். குழப்பமெதற்கு //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. G.M Balasubramaniam ''

    மனசாட்சியை நம் துணைக்கு எப்போதும் அழைத்துக் கொள்ளலாம். அது நம் சொல்படிக் கேட்கும்.எப்படியானாலும் உங்கள் மனக் குறை தீர்ந்ததல்லவா.? லட்டு எல்லோருக்கும் கொடுத்தீர்கள் இல்லையா.?//

    எல்லோருக்கும் பகிர்ந்தளித்து வருகிறேன்

    பிரசாதம் கிடைத்த விதம் அறிய அவர்கள் அனைவரும்
    கூடுதல் மகிழ்ச்சி கொண்டார்கள்

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. அருணா செல்வம் //

    இரமணி ஐயா.... எங்கே கொஞ்ச நாட்களாக உங்கள் பதிவுகளைக் காணோமே... என்று நினைத்து வருந்தினேன். நல்ல வேலை வந்து விட்டீர். இல்லையென்றால்..... “தீதும் நன்றும் பிறர் தர வாரா...” என்ற வலையின் தலைவரும் எங்களுக்கு நல்ல வழிகாட்டுபவருமான இரமணி ஐயாவைக் காணவில்லை“ என்று பதிவேற்றி இருப்பேன்.//

    தங்களால் நினைத்துக் கொள்ளப்படுவதை
    நான் பெரும் பேறாகக் கருதுகிறேன்

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
    விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. T.N.MURALIDHARAN//
    .

    அனுபவம் சொல்லும் பாடங்கள் ஏராளம்.//


    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. T.N.MURALIDHARAN//

    தங்கள் உடன் வரவுக்கும் வாக்கிற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. கோவை2தில்லி //

    அந்த பெருமாளே உங்களுக்கு தந்ததாக எண்ணி மன நிம்மதியுடன் இருங்கள் சார்.//


    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. Sasi Kala //
    ஆமாம் இன்று புத்தக கண்காட்சி சென்று வந்தேன் அங்கும் ரமணி ஐயாவை காணவில்லை என்பதே பேச்சாக இருந்தது. வந்து இங்கு தங்கள் பதிவைப் பார்த்ததும் மகிழ்ச்சி ஐயா //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. அம்பாளடியாள் //

    இது நிட்சயம் அந்த இறைவனுடைய செயல்தான் !..மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. சேக்கனா M. நிஜாம் //

    பயண அனுபவத்திலும் நல்லதொரு மெசஜ் !//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  40. ஹர் ஏக் பூந்திமே லிக்கா ஹை கானே வாலா கா நாம் என்றது எவ்ளோ உண்மை பாருங்க!

    கிடைக்கணும் என்பது கிடைக்காமப்போகாதுன்றதும் இதைத்தான்.

    தரிசனம் நல்லாக் கிடைச்சதுங்களா?

    என் கண்ணை மறைச்சுட்டான்னு நான் அழுது தீர்த்தது நினைவுக்கு வருது.

    நேரம் இருந்தால் பாருங்க.

    http://thulasidhalam.blogspot.co.nz/2011/06/2.html

    ReplyDelete
  41. அருமை. லட்டு கிடைத்தவிதம் அதிசயிக்க வைக்கிறது. எத்தனையோ லட்டு ஊழல்கள். நம்மை மாதிரி நியாயமன முறைப்படி வாங்குபவர்கள் இருக்கும் அதே இடத்தில் இடைத்தரகர்கள் வழியாக ஏகப்பட்ட லட்டுகள் விலைக்கு வருகின்றன.
    உங்களுக்குத் திருவருள் இருக்கிறது. வாழ்த்துகள்.

    ReplyDelete

  42. வல்லிசிம்ஹன்//

    உங்களுக்குத் திருவருள் இருக்கிறது. வாழ்த்துகள். //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. துளசி கோபால்//

    ஹர் ஏக் பூந்திமே லிக்கா ஹை கானே வாலா கா நாம் என்றது எவ்ளோ உண்மை பாருங்க!கிடைக்கணும் என்பது கிடைக்காமப்போகாதுன்றதும் இதைத்தான்.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete


  44. மனோ சாமிநாதன் //

    மனசிலிருந்ததை அப்படியே பகிர்ந்த உங்கள் நேர்மையை நிச்சயம் பாராட்ட வேன்டும். சலனத்தை வென்ற உங்களுக்கு கிடைத்த பரிசு இது! //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. கவியாழி கண்ணதாசன் //

    எப்படியொ லட்டு கிடைத்த அனுபவங்கள் அருமை//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  46. பூந்தளிர் //

    ஆமாங்க தவறு செய்யவும் ஒரு துணிச்சல் வேனும் தான். நல்ல மனசு உள்ளவங்களுக்கு மனசாட்சியின் உறுத்தலைதாங்கிக்கவே முடியாதே.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  47. வெங்கட் நாகராஜ் //

    உங்களுக்கென்றே பெருமாள் கொடுத்திருக்க வேண்டும்.....சந்தேகமென்ன? //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  48. ரமேஷ் வெங்கடபதி //

    நேர்மையாக இருப்பது..இருக்க நினைப்பது..நினைவின் வழி நடப்பது, மூடநம்பிக்கை எனில்..அப்படியே இருந்துவிட்டு போவோம் !

    திருப்பதியில் பெருமாள்..கலியுக வரதனாக இருக்கிறான் என்பதை, உணர்ந்தே அறியமுடியும் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  49. Seshadri e.s. //

    நினைத்ததை நடத்தி வைப்பார் கோவிந்தன்! பகிர்விற்கு நன்றி!//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  50. Ganpat //

    ஸார் உண்மையாக சொல்கிறேன்..இதை படிக்கும்போது எனக்கு கண்களில் கண்ணீர பெருகி உடல் லேசானது.அந்த ஏழுமலையான் தான் உங்களுக்கு அருள் செய்துள்ளார்.
    சந்தேகமே வேண்டாம்.//


    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  51. நிலாமகள் //

    வாழ்வின் படிக்கற்கள் நமக்கு ஏதேனுமொரு பாடம் போதித்தபடி...//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  52. பால கணேஷ் //

    உங்கள் மனச்சாட்சி என்றும் இப்படியே இருக்கட்டும். அதன்படி நடந்ததற்குப் பரிசு வெங்கடேசஸ்வரனின் அருளும் அதன் அடையாளமாய் லட்டுக்களும் கிடைத்தது//


    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி. //

    ReplyDelete
  53. vanathy //

    Super post. Enjoyed reading your post.//


    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  54. Advocate P.R.Jayarajan//

    இதுதான் ஆண்டவன் சித்தம் என்பது...//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  55. rajalakshmi paramasivam //

    ரமணி சார்,

    வெங்கடேசன் என்ன நினைக்கிறானோ அது மட்டுமே நடக்கும் .திருப்பதிக்கு போவதற்கு கூட நாம் நினைத்தால் மட்டும் போதாது பெருமாளும் நினைக்க வேண்டும் என்று என் தோழி கூறிக் கொண்டே இருப்பாள்.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  56. bandhu //

    இந்த மனதின் இயல்பே இப்படித்தான் போலும். ஆயுசுக்கும் 'கெட்டிக்காரத்தனத்திர்க்கும்' உண்மையாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்திற்கும் எப்போதும் போராட்டம். உண்மையே வெல்லும் என்று மறுபடி மறுபடி நிரூபிக்கப்பட்டாலும், 'கெட்டிக்காரத்தனத்துடன்' வாழ்க்கையெங்கும் போராட்டம்! அழகாக எழுத்தில் வடித்திருக்கிறீர்கள்!//


    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  57. கோமதி அரசு //

    தன் பக்தன் ஆசைப்படி மேலும் லட்டுகளை கொடுத்து இருக்கிறார் பெருமாள். //


    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete