Monday, January 28, 2013

குப்பை முதல் காவியம் வரை

சொல்வதற்கு ஏதுமற்று
சொல்லும் திறனுமற்று
சொல்லிச் செல்ல முயலுகையில்
 அது"குப்பை"யாகிப் போகிறது

சொல்வதற்கு  நூறிருந்தும்
சொல்லும் திறனின்றி
சொல்லி விட  எத்தனிக்கையில்
அது"கூளம் "ஆகிப் போகிறது

சொல்லுகிற திறமிருந்தும்
சொல்வதற்கு ஏதுமற்று
சொல்லிவிடத் துடிக்கையில்
அது"மொக்கை"யாகிப் போகிறது

சொற்திறத்தின் சிறப்போடு
கருப்பொருளும் உடனமைய
சொல்லிச் செல்ல முனைகையில்
அது"படைப்பாகிப் "போகிறது

ஆயினும்
பயனதனைப் பண்பாகக்
கொள்ளுகின்ற படைப்பொன்றே
காலம் கடக்கவும் செய்கிறது
அதுவே
"காவிய "மாகியும் போகிறது


28 comments:

  1. காவியத்தின் விளக்க கவிதை அருமை! நன்றி!

    ReplyDelete
  2. சொற்திறன் சுவை..

    ReplyDelete
  3. //குப்பை முதல் காவியம் வரை//

    வார்த்தைகள் அதன் கோர்வைகள் - கோர்த்த விதம் - பாராட்டுக்கள்

    ReplyDelete
  4. குப்பையும் காவியமாகிறது உண்மை

    ReplyDelete
  5. உண்மை உண்மை உண்மை

    ReplyDelete
  6. கவிதை மனதில் தைக்கிறது

    ReplyDelete
  7. வலைப் பதிவர்களின் மனதை வெளிச்சம் போட்டுக்
    காட்டுகிறது.
    நன்றி பகிர்விற்கு.

    ReplyDelete
  8. அருமை இரமணி ஐயா.
    த.ம. 5

    ReplyDelete
  9. காவியம் பற்றி கவிதை மிக சிறப்பாக இருக்கு.

    ReplyDelete
  10. அருமையான வரிகள்.

    ReplyDelete

  11. குப்பையும் கூளமும் காவியத்தின் படிக்கட்டுகளாகக் கூட இருக்கலாம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. G.M Balasubramaniam //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  13. கோவை2தில்லி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  14. கோவை2தில்லி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  15. RAMVI //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  16. கோமதி அரசு //.

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  17. அருணா செல்வம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  18. rajalakshmi paramasivam //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. ரிஷபன் //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. Avargal Unmaigal//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  21. கவியாழி கண்ணதாசன் //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. முத்தரசு //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. Seeni //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. Madhu Mathi //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. s suresh //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. படைப்புகளின் தன்மைகளை எவ்வளவு அழகாக சொல்லிவிட்டீர்கள்

    ReplyDelete