எப்போது பள்ளி ஆண்டு விழா
போட்டிகளைக் காண வந்தாலும்
தொடர் ஓட்டம் நடக்கும் போட்டியையே
காணவிழைவார் அப்பா
குறிப்பாக குச்சியைக் கைமாற்றி ஓடும்
அந்த " ரிலே " ஓட்டம்
அவரது அதீத ஆர்வத்தில்
ஏதோ காரணம் இருப்பதைப் புரிந்து
ஒருமுறை விளக்கம் கேட்டேன்
"இது எல்லா போட்டியையும் போல அல்ல
இந்த நால்வரும் சரியாக ஓட வேண்டும்
ஒருவர் பின் தங்கினாலும் தோல்விதான்
குறிப்பாக அந்தக் குச்சி வீழாது ஓட வேண்டும்" என்றார்
'இதில் ரசிப்பதற்கு என்ன இருக்கிறது
எல்லா போட்டிகளையும் போல
இதற்கும் சில விதிகள் " என்றேன்
"நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன்
உன் தாத்தாதான் எனக்கு விளக்கினார்
அந்தக் குச்சி என்பது
பாரம்பரிய குடும்பப் பெருமைக்கும்
செல்வச் சிறப்பிற்குமான ஒரு குறியீடு
நான் விரைவாக ஓடி
உன்னிடன் சேர்ப்பது போலவே
உன் வாரிசுகளிடமும் நீ சேர்க்கவேண்டும்
ஒருவன் தடுமாறினாலும் அதனைச் சீராக்க
நான்கு தலை முறை ஆகிவிடும் " என்றார்
நான் புரியாது விழித்தேன்
அவரே தொடர்ந்தார்
"இப்படியும் சொல்லலாம்
காணவிழைவார் அப்பா
குறிப்பாக குச்சியைக் கைமாற்றி ஓடும்
அந்த " ரிலே " ஓட்டம்
அவரது அதீத ஆர்வத்தில்
ஏதோ காரணம் இருப்பதைப் புரிந்து
ஒருமுறை விளக்கம் கேட்டேன்
"இது எல்லா போட்டியையும் போல அல்ல
இந்த நால்வரும் சரியாக ஓட வேண்டும்
ஒருவர் பின் தங்கினாலும் தோல்விதான்
குறிப்பாக அந்தக் குச்சி வீழாது ஓட வேண்டும்" என்றார்
'இதில் ரசிப்பதற்கு என்ன இருக்கிறது
எல்லா போட்டிகளையும் போல
இதற்கும் சில விதிகள் " என்றேன்
"நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன்
உன் தாத்தாதான் எனக்கு விளக்கினார்
அந்தக் குச்சி என்பது
பாரம்பரிய குடும்பப் பெருமைக்கும்
செல்வச் சிறப்பிற்குமான ஒரு குறியீடு
நான் விரைவாக ஓடி
உன்னிடன் சேர்ப்பது போலவே
உன் வாரிசுகளிடமும் நீ சேர்க்கவேண்டும்
ஒருவன் தடுமாறினாலும் அதனைச் சீராக்க
நான்கு தலை முறை ஆகிவிடும் " என்றார்
நான் புரியாது விழித்தேன்
அவரே தொடர்ந்தார்
"இப்படியும் சொல்லலாம்
செல்வச் செழிப்பில் வாழ்ந்தாலும்
முறையாக வளர்க்காத உழைப்பாளியின் மகன்சோம்பேறி ஆகிப் போவான்
சோம்பேறிக்குப் பிறந்த பையன்
கடனாளி ஆகிப்போவான்
கடனாளிக்குப் பிறந்த மகன்
கடுமையான உழைப்பால்தான்
சராசரி நிலைக்கு வருவான்
சராசரியின் மகன்
கடினமான உழைப்பினால்தான்
மீண்டும் பழைய நிலையை அடையக் கூடும்
அதற்கு முன்னூறு வருட்ங்கள் ஆகிப்போகும் " என்றார்
அப்போது சரியாகப் புரியவில்லை ஆயினும்
கால ஓட்டத்தில் புரியத் துவங்கியது
நான் மிகச் சரியாக ஓடிய பெருமிதத்தோடு
இப்போது தொடர் ஓட்டம் பார்க்க
என் புதல்வனை அழைத்துப் போகிறேன்
92 comments:
///அப்போது சரியாகப் புரியவில்லை//
நீங்க என்ன சொல்லவரீங்கண்ணு எனக்கும் "நல்லா புரிஞ்சுருச்சு சார்
மனம் நிறைந்த கைத்தட்டல்கள் நண்பரே,
தொடர் ஓட்டத்தை வைத்து
தலைமுறைகளின் தத்துவத்தை விளக்கி விட்டீர்கள்.
பாரம்பரியம் கலாச்சாரம் போன்ற குச்சியை தவறவிட்டு
வேகமாக ஓடினால் மட்டும் வென்றதாக பொருளாகாது....
நான்கு தலைமுறைகளுக்கு துன்பம் தரும் செயலை
நாம் ஏன் செய்ய வேண்டும் ????!!!
நாம் சரியாக ஓடுவோம், நம் தலைமுறைகள் பின்பற்றும்...
அருமையான படைப்புக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
பார்க்கும் எல்லாவற்றிலும் உவமைகளைக் காண எங்கேயிருந்து கற்றுக்கொண்டீர்கள் சார்... சாதாரணமாக ரிலே ரேஸ் பார்க்கும்போது மற்றவர்களுக்கெல்லாம் தெரியாத ஒன்று உங்களுக்குத் தெரிவது என்னைப் பொறுத்த வரை நல்லது - அது உங்கள் மொழியில் அழகிய கவிதையாக எங்களுக்குக் கிடைக்குமே...
நல்ல கவிதை பகிர்வுக்கு மிக்க நன்றி சார்.
சாதாரண பார்வைக்கும் அசாதாரணப் பார்வைக்கும் வித்தியாசம் காட்சியில் இல்லை என்பது உங்கள் கவிதைகளில் தொடர்ந்து தெளிவாகிறது. அருமை.
நிகழ்வுகளை சிறப்பான தனிக் கண்ணோட்டத்தில் காண்பதும் அவற்றை தெளிவாக வார்த்தைகளில் கொண்டு வந்து படிப்பவர் மனதில் புகுத்துவதும் தங்களுக்கு கை வந்த கலையாக உள்ளது சார்!
ரொம்பவும் அழகாக சொன்னீர்கள் சார். தன் தவறுகளால் ஆட்டத்தில் டிஸ்குவாலிஃபை ஆகாமல் இருத்தலும் மிக முக்கியம். கவிதைக்கு நன்றி.
ரொம்ப நல்லா சொல்லி இருக்கிங்க நல்லா இருக்கு
நினைவுகள்....
கவிதையும் அழகு..
மிகவும் அருமையான பதிவு சார்.
// நான் மிகச் சரியாக ஓடிய பெருமிதத்தோடு
இப்போது தொடர் ஓட்டம் பார்க்க
என் புதல்வனை அழைத்துப் போகிறேன்//
வாழ்த்துக்கள் சார்.
ஒருவர் உழைத்து நான்கு தலைமுறைக்கு சொத்து சேர்க்க முடியும் என்பது ஒரு புறம். ஒரு தலைமுறை தம் கடமையை மறந்து வாழ்ந்தால் - அந்த குடும்பம் தலையெடுக்க நான்கு தலைமுறை ஆகும் என்பது உண்மை. அதை வெளிப்படுத்திய கவிதை அருமை.
வாழ்க்கையே ஒரு தொடர் ஓட்டம் தான்.
தங்கள் தாத்தா அப்பாவுக்கும், அப்பா தங்களுக்கும் சொன்னதெல்லாம் மிகச்சரியான வார்த்தைகளே. எல்லாவற்றையும் தான் நாமே நம்மிடமும், நம் சொந்தங்களிடமும், நம் சுற்றுவட்டாரத்திலும் காண முடிகிறதே! சிலவற்றை உஷாராக இருந்து சரி செய்துவிட முடியும். சிலவற்றை அவ்வாறு செய்துவிட முடியாமலும் போகும். முடியாதவற்றிற்கும் 300 வருடங்களும் ஆகும், 3000 வருடங்களும் கூட ஆகும். நல்ல பதிவு.
தமிழ்மணம்: 7
இது தலைமுறைகள் தாண்டி ஓடும் ஓட்டம்!
தடைகள் தாண்டி ஓடும் ஓட்டம்!
4ம் தலைமுறையில் சொத்துகள் மாறிவிடும் எனும் மூதுரை இதன் அடிப்படைதானோ!
உங்கள் தலைமுறை ஓட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
Avargal Unmaigal //
தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந நன்றி
மகேந்திரன் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்நத நன்றி
சாகம்பரி //
நீங்கள் சொல்வதும் அதி முக்கியம்
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்நத நன்றி
raji //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்நத நன்றி
வெங்கட் நாகராஜ் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்நத நன்றி
அப்பாதுரை //
தங்கள் உடன் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்நத நன்றி
Lakshmi //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்நத நன்றி
RAMVI //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்நத நன்றி
தமிழ் உதயம் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்நத நன்றி
வாழ்க்கையே ஒரு தொடர் ஓட்டம்தான் என்பதை அருமையாகச் சொல்லி விட்டீர்கள்.
த.ம.9
வை.கோபாலகிருஷ்ணன் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்நத நன்றி
ரமேஷ் வெங்கடபதி //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்நத நன்றி
சென்னை பித்தன் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்நத நன்றி
வாழ்க்கை கவிதை வாழ்த்துக்கள்
வாழையடி வாழையாக என்ற சொலவடை பல இடங்களில் பொய்த்து போவதும் உண்டு, அது பொய்க்காமல் இருப்பதில் தான் நம் திறமை உள்ளது
அசத்தலான மேட்டர் சார். நல்ல உதாரணம்.. நன்றி.
கவி அழகன் //.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்நத நன்றி
suryajeeva //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்நத நன்றி
Madhavan Srinivasagopalan //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்நத நன்றி
//முறையாக வளர்க்காத உழைப்பாளியின் மகன்
சோம்பேறி ஆகிப் போவான்
சோம்பேறிக்குப் பிறந்த பையன்
கடனாளி ஆகிப்போவான்
கடனாளிக்குப் பிறந்த மகன்
கடுமையான உழைப்பால்தான்
சராசரி நிலைக்கு வருவான்
சராசரியின் மகன்
கடினமான உழைப்பினால்தான்
மீண்டும் பழைய நிலையை அடையக் கூடும்
அதற்கு முன்னூறு வருட்ங்கள் ஆகிப்போகும் //
வாழும்
இனி வாழப்போகும்
தலைமுறைக்கான
வாழ்கை நெறிகளை உணர்த்துகிறது ..
கவிதை அருமை ..
jayaram thinagarapandian //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்நத நன்றி
ஆஹா குரு சூப்பரான விளக்கம் கலக்கல் பதிவு...!!
நான் மிகச் சரியாக ஓடிய பெருமிதத்தோடு
இப்போது தொடர் ஓட்டம் பார்க்க
என் புதல்வனை அழைத்துப் போகிறேன்//
நல்ல தந்தையும் மகனும், வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...!!!
வாழ்க்கைத் தொடரோட்டத்தை அழகாகப் புரியவைத்துள்ளீர்கள் அன்பரே..
இந்தப் புரிதல் தான் எல்லோருக்கும் இருப்பதில்லை..
நல்ல பகிர்வு.
MANO நாஞ்சில் மனோ //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்நத நன்றி
முனைவர்.இரா.குணசீலன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்நத நன்றி
விளையாட்டில் பின்பற்றப்படுவது விதிமுறைகள் மட்டுமல்ல அதனுள் சில வாழ்வியல் தத்துவங்களும் பொதிந்திருக்கின்றன என்பதை அழகாக
தந்துள்ளீர்கள்!
அருமை.
கோகுல் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்நத நன்றி
ஸ்ரீராம். //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்நத நன்றி
கவிதையிலேயே வினாவும் எழுப்பி அதற்கு விளக்கமும் தருவது புதுமை!
அழகாகச் சொல்லியுள்ளீர்கள் பாஸ்...
மகுடத்திற்கு பொருத்தமான கவிதை.
Arumai!
"இப்படியும் சொல்லலாம்
செல்வச் செழிப்பில் வாழ்ந்தாலும்
முறையாக வளர்க்காத உழைப்பாளியின் மகன்
சோம்பேறி ஆகிப் போவான்
சோம்பேறிக்குப் பிறந்த பையன்
கடனாளி ஆகிப்போவான்
கடனாளிக்குப் பிறந்த மகன்
கடுமையான உழைப்பால்தான்
சராசரி நிலைக்கு வருவான்
சராசரியின் மகன்
கடினமான உழைப்பினால்தான்
மீண்டும் பழைய நிலையை அடையக் கூடும்
அதற்கு முன்னூறு வருட்ங்கள் ஆகிப்போகும் " என்றார்//
என்ன ஒரு வார்த்தை விளையாட்டு.... அவர் அழகாய் சொல்லி விட்டார்....
சகோதரரே வாழ்க்கை ஒரு அஞ்சல் ஓட்டம் தான்.(றிலே) இலண்டன் தமிழ் வானொலியில் இந்த வார்த்தையை அதன் அதிபர் பாவிப்பார். இதையே நீங்களும் கூறியுள்ளீர்கள். மிக நன்றி. எனக்கு ஒரு விடயம் புரியவில்லை. நீங்கள் உங்கள் அனுபவத்தை வைத்து கருத்துகளைத் தருகிறீர்கள் ஏன் எல்லோரும் கவிதை கவிதை என்கிறார்கள்? கவிதைக்கும் கருத்து உரை நடையாக வருவதும் வித்தியாசம் உண்டு அல்லவா?. அல்லது நீங்களும் இதைக் கவிதை என்றே ஒத்துக் கொள்கிறீர்களா?. பலருடைய கருத்தில் இது உள்ளது. இது எனது சிந்தனை . வெளியிட்டுள்ளேன் தவறானால் பொறுத்தருளவும். வாழ்த்துகள் நல்ல கருத்திற்கு.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
மிக அருமையான கருத்து
அரிய சிந்தனை!
மனதில் ஆழப் பதிந்துவிட்டது; என்றும் மறக்க இயலாதது.
மன்ம் நிறைந்த பாராட்டுகள்.
தங்களுக்கு மகுடம் சூட்டி தமிழ்மணம் பெருமைப்பட்டுள்ளது!
ஸாதிகா //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்நத நன்றி
K.s.s.Rajh //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்நத நன்றி
துரைடேனியல் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்நத நன்றி
துஷ்யந்தன் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்நத நன்றி
kovaikkavi //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
தற்போதைய அவசர பிரச்சனைகள் நிரம்பிய
நிலவின் அழகையும் குயிலின் இனிய கானத்தையும்
ரசிக்க போதிய நேரம் காலம் மன நிலைஇல்லாத சூழலில்
வசன கவிதைக்கும் உரை நடைக்கும் இடையிலான
எனது முயற்சி இது.இலக்கணம் அறிந்துதான்
இலக்கணம் மீறி எழுதுகிறேன்.இது குறித்து மார்ச் பதிவில்
யாதோ என ஒரு பதிவிட்டிருக்கிறேன்
தாங்கள் நேரமிருப்பின் பார்த்து தங்கள் பதிலைப்
பதிவு செய்யவும் இப்போது நான் சொல்லியுள்ள
எவ்வித இலக்கண அலங்காரங்கள் அற்ற
விஷயம் அலங்காரங்களுடன் சொல்ல முயன்றால்
நான் கவிஞன் என அங்கீகரிக்கப் படலாம்
நான அந்த நோக்கத்திற்காக எழுதவில்லை
நான் எனது அனுபவத்தை நான அனுபவித்தபடி
அனைவரும் எளிதாக அறிந்து கொள்வதற்காக எழுதுகிறேன்
அதனால்தான் யாதோரமணிஎனவும் பெயர் வைத்துக் கொண்டுள்ளேன்
உண்மையில் தங்களைப் போன்ற கவிஞர்களுக்கு
நிச்சயம் ஏமாற்றமளிக்கும் என எனக்குத் தெரியும் மன்னிக்கவும்
நான் தங்கள் கவிதையின் ரசிகன் தொடர வாழ்த்துக்கள்
கலாநேசன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்நத நன்றி
பரமசிவம் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்நத நன்றி
ரமேஷ் வெங்கடபதி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்நத நன்றி
>>கால ஓட்டத்தில் புரியத் துவங்கியது
adhuthaan அதுதான் அனைவருக்கும் ஆசான்
சி.பி.செந்தில்குமார் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்நத நன்றி
கால ஓட்டத்தில் உங்களுக்கு புரிந்ததை ஒரே பதிவில் அழகாக எங்களுக்கு புரியவைத்துவிட்டீர்கள் சகோ! பகிர்வுக்கு நன்றி!
மாய உலகம் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்நத நன்றி
நிஜம். கூட்டு முயற்சியினை மிக சிறப்பாக காட்டும் விளையாட்டு இது. அதற்கு தங்களின் விளக்கவுரை மேலும் எளிமையாக்கி இருக்கிறது.
சிவானந்தம் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்நத நன்றி
சகோ!
தமிழ்மணத்தின் மணிமகுடம் இன்று
பெற்றதற்கு முதற்கண் என் வாழ்த்துகள்
உரியன!
// நான் மிகச் சரியாக ஓடிய பெருமிதத்தோடு
இப்போது தொடர் ஓட்டம் பார்க்க
என் புதல்வனை அழைத்துப் போகிறேன்//
உங்கள் மகனும் உங்கள் பேரனை
தொடர் ஓட்டம் காண அழைத்துப் போவான்
எல்லாம் வல்ல வேங்கடவன் அருள்வான்
இது உறுதி!
புலவர் சா இராமாநுசம்
த ம ஓ 22
புலவர் சா இராமாநுசம்
புலவர் சா இராமாநுசம் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்நத நன்றி
மிகவும் அழகான கருத்து நண்பரே ,இதனை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றீ நண்பரே
த.ம 23
வாழ்க்கை என்பது நாம் ஓடுவதில் மட்டுமல்ல நம்மை சார்ந்தவர்களையும் நல்வழியில் ஓடவைப்பது என்பதை உணர்த்தும் பதிவுக்கு நன்றி ...
M.R //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்நத நன்றி
ananthu //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்நத நன்றி
நான் மிகச் சரியாக ஓடிய பெருமிதத்தோடு
இப்போது தொடர் ஓட்டம் பார்க்க
என் புதல்வனை அழைத்துப் போகிறேன்...
உங்கள் புதல்வரும் விரைவில் உங்களைப்போல...
ரெவெரி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்நத நன்றி
அருமையான பதிவு ஜயா..
அருமையான பதிவு...தொடருங்கள்
http://sparkkarthikovai.blogspot.com/2011/11/002.html?showComment=1320681793472#c7169129423929897141
!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்நத நன்றி
! ஸ்பார்க் கார்த்தி @ //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்நத நன்றி
அண்ணே நச்சின்னு சொல்லி இருக்கீங்க...நன்றி!~
ரமணி சார்...
உங்கள் பதிவுகள் நிரம்பவும் மெருகேறி வருகின்றன. இந்தப் பதிவு எத்தனை எளிமையாக பெரிய செய்தியை முன் மொழிந்திருக்கிறது. வாழ்க்கை ஒரு விளையாட்டு மைதானம்தான். அவரவர்க்கென்று ஒரு விளையர்ட்டை விளையாடுவதற்கான திறனை ஆண்டவன் வகுத்திருக்கிறான். ஆடுகிறார்கள். வெற்றியும் தோல்வியும் நிர்ணயிக்கப்படுகின்றன.
வாழ்க்கை விளையர்ட்டல்ல அதாவது விளையாடுவதுபோல வாழமுடியாது.. அதற்குரிய விதிகளை அதற்குரிய எல்லைக்குள் இருந்துதான் வாழவேண்டும். வாழும்போது அது விளையாட்டைப்போல நமக்குப் புரிந்துவிடுகிறது.
இருமுனைப்புக்களையும் இந்தப் பதிவில் நான் உணர்கிறேன். இதேபோன்று தொடர்ந்து எழுதுங்கள். விரைவில் அதனைப் புத்தகமாக வெளியிடுங்கள். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். வணக்கம்.
பந்தயங்களில் வெற்றிதான் இலக்கு என்றாலும் பங்கேற்பு என்பதும் மிக முக்கியம். தொடர் ஒட்டத்தில் குச்சியை நழுவவிட்டு பந்தயத்தில் இருந்து நீக்கப்படுவதைவிட, விதிகளுக்கு உட்பட்டு ஓடிமுடிக்க வேண்டும் . எல்லோரும் வெற்றி பெற முடியாது. முயற்சி திருவினையாக்கும் என்று சொல்லும் விதம் அருமை. தொடருகிறேன் பாராட்டுக்கள். ( வலையுலகில் இருந்து நான்கு நாட்கள் விடுப்பில் இருந்ததால் இந்த தாமதம் )
விக்கியுலகம் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்நத நன்றி
ஹ ர ணி said... //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்நத நன்றி
G.M Balasubramaniam //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்நத நன்றி
பிரமாதம் ரமணி சார். விளையாட்டுகள் மூலம் வாழ்க்கை பற்றிய பரந்த சிந்தனை. படித்து முடித்ததும் என்னை நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் - நான் சரியாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறேனா? என் பிள்ளைகளைத் தயார்படுத்திவிட்டேனா?
கீதா //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்நத நன்றி
வாழ்க்கைப் பாடம் அழகு
ரிஷபன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்நத நன்றி
தொடர் ஓட்டம் மூலம் மனிதன் எவ்வாறு அர்த்தமுடன் வாழ வேண்டுமென்பதை நன்கு பொருத்திச் சொல்லியிருப்பது மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது. 'புதல்வியை' என்று சொல்லியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமோ? எனது வாழ்த்துக்கள்.
ShankarG //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்நத நன்றி
Post a Comment