அந்தச் சிறு குன்றின் முன்
எதையோ உற்றுப் பார்த்தபடி
நான்கு சிறுவர்கள்
வெகு நேரம் நின்று கொண்டிருந்தார்கள்
நானும் பொறுமை இழந்து
வெகு நேரம் கழித்து
"என்ன பார்க்கிறீர்கள் " என்றேன்
"இங்கிருந்தால் எதிரொலி கேட்கும்
என நண்பர்கள் சொன்னார்கள்
நாங்களும் வெகு நேரம் நிற்கிறோம்
எந்த ஒலியும் கேட்கவில்லை "
என்றார்கள் சலிப்புடன்
"நீங்கள் ஒலி எதுவும் எழுப்பினீர்களா ? "என்றேன்
"இல்லை ஏன் ஒலி எழுப்பினால்தான் கேட்குமா ?"
என ஆச்சரியத்துடன் கேட்டார்கள்
நான் சிரித்துக் கொண்டேன்
எதிரொலி குறித்துச் சொன்னவர்கள்
குரல் கொடுக்கச் சொல்லித் தராதது
ஆச்சரியமாக இருந்தது
"குரல் கொடுத்தால்தான் கேட்கும்
அதுவும் நீங்கள் எதைச் சொல்கிறீர்களோ
எப்படிச் சொல்கிறீர்களோ அப்படித்தான் கேட்கும்
சப்தத்தை திருப்பிவிடத் தெரியுமே ஒழிய
அதற்கென தனியாக குரலில்லை " என்றேன்
அவர்கள் முதலில்
வினோதமான சப்தங்களை எழுப்பினார்கள்
அது திரும்பச் சொல்லச் சொல்ல
புதிது புதிதான நல்ல வார்த்தைகளை
சொல்லத் துவங்கினார்கள்
ஏதோ அறியாத ஒரு அரிய புதிரை
அறிந்த மகிழ்ச்சி அவர்கள் முகத்தில் தெரிந்தது
இனி அவர்கள் வெறுமனே நின்று
எதிரொலியை எதிர்பார்க்கமாட்டார்கள் என அறிய
மகிழ்ச்சியாய் இருந்தது
நான் என் வழியில் நடக்கத் துவங்கினேன்
எதையோ உற்றுப் பார்த்தபடி
நான்கு சிறுவர்கள்
வெகு நேரம் நின்று கொண்டிருந்தார்கள்
நானும் பொறுமை இழந்து
வெகு நேரம் கழித்து
"என்ன பார்க்கிறீர்கள் " என்றேன்
"இங்கிருந்தால் எதிரொலி கேட்கும்
என நண்பர்கள் சொன்னார்கள்
நாங்களும் வெகு நேரம் நிற்கிறோம்
எந்த ஒலியும் கேட்கவில்லை "
என்றார்கள் சலிப்புடன்
"நீங்கள் ஒலி எதுவும் எழுப்பினீர்களா ? "என்றேன்
"இல்லை ஏன் ஒலி எழுப்பினால்தான் கேட்குமா ?"
என ஆச்சரியத்துடன் கேட்டார்கள்
நான் சிரித்துக் கொண்டேன்
எதிரொலி குறித்துச் சொன்னவர்கள்
குரல் கொடுக்கச் சொல்லித் தராதது
ஆச்சரியமாக இருந்தது
"குரல் கொடுத்தால்தான் கேட்கும்
அதுவும் நீங்கள் எதைச் சொல்கிறீர்களோ
எப்படிச் சொல்கிறீர்களோ அப்படித்தான் கேட்கும்
சப்தத்தை திருப்பிவிடத் தெரியுமே ஒழிய
அதற்கென தனியாக குரலில்லை " என்றேன்
அவர்கள் முதலில்
வினோதமான சப்தங்களை எழுப்பினார்கள்
அது திரும்பச் சொல்லச் சொல்ல
புதிது புதிதான நல்ல வார்த்தைகளை
சொல்லத் துவங்கினார்கள்
ஏதோ அறியாத ஒரு அரிய புதிரை
அறிந்த மகிழ்ச்சி அவர்கள் முகத்தில் தெரிந்தது
இனி அவர்கள் வெறுமனே நின்று
எதிரொலியை எதிர்பார்க்கமாட்டார்கள் என அறிய
மகிழ்ச்சியாய் இருந்தது
நான் என் வழியில் நடக்கத் துவங்கினேன்
83 comments:
நல்ல ஆசானுக்கு வாழ்த்துக்கள்!
வாழ்க்கை மற்றவருக்கு சொல்லிக்கொடுத்துக்கொண்டே நகர்த்துவதுதான் நாம் வாழ்ந்ததற்க்காக அர்த்தம்...
தாங்களின் வழிகாட்டுதலுக்கும் இந்த சமூகம் காத்திருக்கிறது..
ம்ம்.. நல்லாத்தான் சொன்னீங்க போங்க.
நாம் கொடுப்பதுதான் நமக்குத் திரும்பக் கிடைக்கும். எதிரொலியின் மூலம் அரிய தத்துவம் ஒன்றை உணர்த்தி விட்டீர்கள். மிக அருமை. நன்றி.
///தீதும் நன்றும் பிறர் தர வாரா..///
சார் உங்களுடைய இந்த தலைப்பு மிக அருமை... ஒரே வரியாக இருந்தாலும் அதில் உள்ள கருத்தை புரிந்து கொண்டால் இந்த உலகில் எந்த தீங்கும் நடைபெறாது... உங்க கவிதையும் நல்லா இருக்கு சார்...TM 5
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்; எதனைக் கண்டான், மதங்களைப் படைத்தான்//காண்ணதாசனின் காலங்கடந்து நிற்கும் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
நினைக்கத் தனக்கு என்பதும், உள்ளுவதெல்லாம்
உயர்வுள்ளல் என்பதும் இங்கே ஏதிரொலியாக வந்துள்ளது என்றே கருதுகிறேன்
தீயது எண்ணின் தீயதும் நல்லது எண்ணின் நல்லதும் ஏதிரொலி போல திரும்ப வரும் என்பதை
அழகு படச் சொல்லியுள்ளீர்
அருமை! த ம ஓ 6
புலவர் சா இராமாநுசம்
அண்ணே நச்சுன்னு புரிஞ்சிது நன்றி!
"குரல் கொடுத்தால்தான் கேட்கும்
அதுவும் நீங்கள் எதைச் சொல்கிறீர்களோ
எப்படிச் சொல்கிறீர்களோ அப்படித்தான் கேட்கும்
சப்தத்தை திருப்பிவிடத் தெரியுமே ஒழிய
அதற்கென தனியாக குரலில்லை " என்றேன்
உண்மைதான் .நானும் குரல் கொடுக்கின்றேன் .
கவிதை காத்திருக்கு தினமும் காத்திருக்கும்
உங்கள் கருத்தை எதிர் பார்த்துத் தவறாமல்
வாருங்கள் ஐயா.....நல்லா சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்தி விட்டேனோ!....அருமை!.....
எப்பவுமே நாலுபேருக்கு நல்லது சொல்லும்
கவிதைவரிகள் தங்களது .வாழ்த்துக்கள் ஐயா .
மிக்க நன்றி பகிர்வுக்கு ........
அருமை சார். நல்ல பகிர்வு.
தமிழ்மணம் - 7
ரமேஷ் வெங்கடபதி //
தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
கவிதை வீதி... // சௌந்தர் // //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Madhavan Srinivasagopalan //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
கணேஷ் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சசிகுமார் //
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் விரிவான் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
G.M Balasubramaniam //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
புலவர் சா இராமாநுசம் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
விக்கியுலகம் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அம்பாளடியாள் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
தாங்கள் சொல்ல வருவது என் மனதில் நன்கு எதிரொலித்தது. நன்றி! அன்புடன் vgk
தமிழ்மணம்: 9
சூப்பர் குரு, என்ன சொல்ல வாரீங்கன்னு நல்லா புரியுது நன்றி...!!!
இது உண்மை நிகழ்ச்சியா குரு...?
சரி தான்... இது எல்லா விஷயங்களுக்கும் பொருந்துதே...
உண்மைதான் விதைத்ததுதான் முளைக்கும்.அறிவான கவிதை !
தெளிய வைத்து விட்டீர்கள்.... இதில் நிறைய அர்த்தம் மறைந்திருக்கிறது... அதில் ஒன்று தெரியாததை சொல்லிக்கொடுத்தமையால் அவர்களுக்கு ஆனந்தம்.. அதைப்பார்த்து உங்களுக்கு ஆத்ம திருப்தி அருமை சகோ!
suryajeeva //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஹேமா //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
மாய உலகம் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வை.கோபாலகிருஷ்ணன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
MANO நாஞ்சில் மனோ //
வேறு ஒரு நிகழ்வை எதிரொலியாக
உருவக்ம் செய்துள்ளேன்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
உங்க வலைப்பூ தலைப்பையே கவிதையாக்கிட்டீங்களா? பலே!
அப்பாதுரை //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Karpanai arputham Ramani Sir!
TM 12.
நல்ல முயற்சி, நல்ல வெற்றி நல்லா சொல்லி இருக்கீங்க.
துரைடேனியல் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
Lakshmi //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
நாம் என்ன செய்கிறோமோ அதுதான் நமக்கு திருப்பிக்கிடைக்கும்.அழகாக கவிதையில் சொல்லிவிட்டீங்க.
Super touching story
RAMVI //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
கவி அழகன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
மிக மிக அருமை....
கொஞ்சம் கவனித்துப் படித்தால் பல கோணங்களைக் காணக் கூடியதாய் இருக்கக் கூடிய படைப்பு.பகிர்விற்கு நன்றி
அருமையான பதிவு சார் ...
கவிதை அருமை
வெங்கட் நாகராஜ் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
jayaram thinagarapandian //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
raji //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
இந்தக் கவிதை எளிமையாகத் தோன்றினாலும் மிகப் பெரிய வாழ்வியல் ஒளிந்துள்ளன வரிகளுக்குள்.
ஜென் தத்துவம் போல.
இது தான் தங்கள் சிறப்பு.
இந்தக் கவிதை எளிமையாகத் தோன்றினாலும், வரிகளுக்குள் மிகப் பெரிய வாழ்வியல் தத்துவங்கள் ஒளிந்துள்ளன.
ஜென் தத்துவம் போல.
இது தான் தங்கள் சிறப்பு.
சிவகுமாரன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
உங்கள் எதிரொலியில் ஒலிக்கும் குரல் நிச்சயம் வேறானதுதான் ரமணியண்ணா.
தினை விதைத்தவன் தினை அறுப்பான் -வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதை மற்றொரு கோணத்தில் அருமையாய்.
ஏதோ அறியாத ஒரு அரிய புதிரை
அறிந்த மகிழ்ச்சி அவர்கள் முகத்தில் தெரிந்தது
இனி அவர்கள் வெறுமனே நின்று
எதிரொலியை எதிர்பார்க்கமாட்டார்கள் என அறிய
மகிழ்ச்சியாய் இருந்தது
//மிக்க அருமையாக சொல்லி இருக்கீங்க.வாழ்த்துக்கள்!
சுந்தர்ஜி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸாதிகா //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
முயற்சியும், வெற்றியும் ஒரு சிறிய கருத்துப் பொறியில் உருவான பெரும் கவிதைத் தீயாகத் தெரிகிறது. நல்ல படைப்பு. வாழ்க.
எதிரொலியின் மூலம் வாழ்க்கை தத்துவம் அருமை சார்
எளிமையான ஆனால் வாழ்வின் அர்த்தங்கள் பொதிந்த அற்புதமான வரிகள்.
அருமையான வாழ்க்கைத் தத்துவம், மிக எளிய வரிகளில்.
பாராட்டுக்கள்!
சுந்தரா //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அம்பலத்தார் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
r.v.saravanan //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ShankarG //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
அருமை.
நண்டு @நொரண்டு -ஈரோடு //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
எந்தவினைக்கும் எதிர்வினை உண்டு...
நாம் செய்விக்கும் வினை நன்றேன்றால் நன்றே விளையும்
அதுவே தீதென்றால் அன்றே விளையும்....
அருமையான பதிவுக்கு நன்றி நண்பரே...
தமிழ்மணம் 17
மகேந்திரன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
தத்துவம் ,வெறுமனே இல்லாமல் ஏதாவது முயற்சி செய்தால் அதற்கு பலன் அந்த முயற்சிக்கு தகுந்த மாதிரி உண்டு எனும் அர்த்தத்தில் அருமையான பதிவு ,மிக்க நன்றி நண்பரே
த.ம 18
தத்துவார்த்தமான கதை. நன்றி சார்!
M.R //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
NIZAMUDEEN //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தீதும் நன்றும் பிறர் தர வாரா,.. எதிரொலியும் அப்படியே. இது தொடர்பாய் ஒரு கதை படித்திருக்கிறேன். ‘நீ முட்டாள்’ என்று கத்தினால் எதிரொலியும் அதையே சொல்லும். நல்ல வார்த்தை சொல்லும் போது எதிரொலிப்பதும் அதுவே. வாழ்க்கையிலும் அப்படியே. என்ன செய்கிறோமோ அதுவே எதிரொலிக்கிறது.. நல்ல பதிவு,
ஸ்ரீரங்கம் கோவிலில் பிராகாரத்தில் ‘ரெங்கா..’என்று சிறுவர்கள் ஏன் பெரியவர்கள் கூட கத்துவதும் அதுவே எதிரொலிப்பதும் கேட்டிருக்கிறேன்.. கூட வருபவர்கள் முகத்தில் தெரியும் ஆனந்தம் சுவாரசியம். மறைமுகமாய் வாழ்க்கை தத்துவம் போதிக்கிறது எதிரொலி
நீங்கள் எழுப்பிய ஒலிக்கு எத்தனை எதிரொலி பாருங்கள்.
நல்ல ஒலிக்கு மிகுந்த நேரம் எதிரொலிக்கும் தன்மை உண்டு போலும்.
வரப்போகும் காலங்களில் இதையும் சிறுவர்கள் அறிந்து கொள்வார்கள்.
ரிஷபன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
VENKAT //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
" எல்லா வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு " - நியூட்டனின் மூன்றாம் விதி - இது நல்லது , கேட்டது இரண்டிற்கும் பொருந்தும் ... இதை சுருக்கமான பதிவில் சுவையாக விளக்கி விட்டீர்கள் ...
த.ம 19
ananthu //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வாழ்க்கைக்கும் இது போன்ற ஆசான் கிடைத்திட்டால்? அருமை..
Thamizh //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அருமை. அப்பாதுரையை வழிமொழிகிறேன். கொடுப்பதைத்தான் எடுக்கிறோம். இந்த மாதிரிக் காட்சி ஒன்று அர்ஜுன் படத்தில் ஆரம்பக் காட்சியாகப் பார்த்த நினைவு இருக்கிறது!
ஸ்ரீராம். //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
பிள்ளைகளுக்குக் கொடுத்த ஒரு வாழ்க்கைப் பாடம். ஒரு காலத்தில் வளரும் போதும் இது ஒரு இனிய அனுபவமாக இருக்கலாம் அந்தப் பிள்ளைகளுக்கு. ஒரு சிறு நிகழ்வு எத்தனை பெரிய கருத்தை ஒளித்துள்ளது தன்னுள். வாழ்த்துகள். மிக்க நன்றி இனிய இடுகைக்கு.
வேதா. இலங்காதிலகம்.
kovaikkavi //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Post a Comment