புதிய பாணியில் ரேசர்கருவி
ஒரு கடையில் இருந்தது
விலையும் குறைவாய் இருந்தது
அதற்கு பின்னாளில்
பிளேடு வாங்குகையில்தான்
அதன் விலை தெரிந்து அதிர்ந்து போனேன்
வேறு பிளேடு பொருந்தாததால்
ரேசரை மாற்றவும் முடியவில்லை
மாட்டிக் கொண்டது புரிந்தது
இனி இதுபோல் ஏமாறமாட்டேன்
பிளேடு விலை கேட்டுத்தான் ரேசர் வாங்குவேன்
கொஞ்சம் சுமாரான
ஓட்டல் ஒன்றுக்குப் போனேன்
சப்பாத்தியின் விலையும் நானின் விலையும்
பூனை விலையில் இருந்தது
அவசரப்பட்டு ஆர்டர் கொடுத்துவிட்டு
சைடு டிஷ் ஆர்டர் கொடுக்கையில்தான்
அவர்கள் தந்திரம் புரிந்தது
அது யானை விலையில் இருந்தது
ஏமாந்தது புரிந்தது
இனி இதுபோல் ஏமாறமாட்டேன்
சைடு டிஷ் விலையைக் கேட்டுத்தான்
மெயின் டிஷ்ஸே ஆர்டர் செய்வேன்
இலவச மிக்ஸியும் கிரைண்டரும்
கொடுப்பதாகச் சொன்னதும் மகிழ்ந்து போய்
பட்டனை அழுத்தமாய் அழுத்தினேன்
பின்னாளில் பஸ் கட்டண உயர்வையும்
மின்சாரக் கட்டண உயர்வையும்
அரசு அறிவித்தவுடன்தான் அதிர்ந்து போனேன்
அவர்களது அரசியலும் புரிந்தது
ஏமாந்ததும் புரிந்தது
அடுத்த தேர்தலில் அவசியம் ஏமாறமாட்டேன்
கொடுக்கிற பொருளைப் பொருத்தே
இறுதி முடிவெடுப்பேன் என்பதில்
இப்போது நான் மிக உறுதியாய் இருக்கிறேன்
நல்ல குடிமகனாக விழிப்புடன் இருக்கிறேன்
94 comments:
யானையை விட துரட்டியின் விலை
அதிகம் என எவ்வளவு லாவகமாய் சொல்லிடீங்க...
நம்ம வீட்டிலே சொல்லிட்டு நாம வெளியே போகும் போது
பார்த்து சூதானமா போப்பா என்று சொல்வாங்க..
அதுபோல பார்த்து சூதானமா தான் நடந்துக்கணும்
எல்லாத்திலேயும் என்ற கருத்து அழகு நண்பரே..
அதுவும் இன்றைய சூழலை கொக்கிபோட்டு இழுத்து வந்துட்டீங்க...
நல்ல பதிவு
வாழ்த்துக்கள்.
ஹா... ஹா... நாமல்லாம் ஒரு தடவை ஏமாந்ததுக்கப்புறம்தான் முழிச்சுககறோம் இல்லையா ரமணி ஸார்... அழகான வார்த்தைகள்ல அருமையாச் சொல்லியிருக்கீங்க. நன்று!
விலை மலிவு, இலவசம் என்ற விளம்பரங்களுக்குப் பின்னாலிருக்கும் வியாபாரத் தந்திரத்தை எளிய வரிகள் மூலம் அழகாகப் புரியவைத்துவிட்டீர்கள். ஆம், அரசியல், கல்வி, மருத்துவம், விளையாட்டு என்று எல்லாமே இப்போது வியாபாரமாகிவிட்டதே.
இலவசமாய் எது கிடைத்தாலும் அடித்துப் பிடித்து வாங்க அலைமோதும் கூட்டம் இருக்கும்வரை அவர்களுக்குக் கொண்டாட்டம்தான். மக்களுக்கு தம் உழைப்பின் மீது நம்பிக்கை வந்தாலொழிய இந்த நிலை மாறுவது கடினமே.
கவர்ச்சிக்கு மயங்கும் விட்டில் பூச்சிகளின் கதை போல!
சுயலாபமும் ஏமாற்றுதலும் கை கோர்த்து திரிகிறது!
ஏமாற்றத்தின் பின்னரே விழிப்புணர்வு வருகிறது!
த.ம3!
பூனை விலை யானை விலையாகிறது கவனமாக இருக்க வேண்டியதுதான்..
//கொடுக்கிற பொருளைப் பொருத்தே
இறுதி முடிவெடுப்பேன் என்பதில்
இப்போது நான் மிக உறுதியாய் இருக்கிறேன்
நல்ல குடிமகனாக விழிப்புடன் இருக்கிறேன்//
நல்ல வரிகள்.
த.ம - 4
கொடுக்கிற பொருளைப் பொருத்தே
இறுதி முடிவெடுப்பேன் என்பதில்
இப்போது நான் மிக உறுதியாய் இருக்கிறேன்
நல்ல குடிமகனாக விழிப்புடன் இருக்கிறேன்
அருமை. அருமை.
வாழ்த்துகள் ரமணி சார்.
மகேந்திரன் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
நண்டு @நொரண்டு -ஈரோடு //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
கணேஷ் //
ஒருதடவை ஏமாறுவது மட்டுமல்ல
அடுத்த முறை பொருட்களைப் பொருத்து
ஏமாறவும் தயாராகவும் இருக்கிறோம்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
கீதா //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவானஉற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ரமேஷ் வெங்கடபதி //
சிறு பொருட்களுக்கு தரும் அதே மதிப்பைத்தான்
ஓட்டுக்கும் தருவதைக்கூட நாம் முதிர்ச்சி எனக் கொள்கிறோம்
என சொல்ல முயன்றிருக்கிறேன்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
மதுமதி //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
கோவை2தில்லி //
கவிதையின் உள்ள கிண்டலைப் புரிந்து
மிகச் சரியாக பின்னூட்டமிட்டு
உற்சாகப் படுத்தியமைக்கு வாழ்த்துக்கள்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
Rathnavel //
கவிதையின் உள்ள கிண்டலைப் புரிந்து
மிகச் சரியாக பின்னூட்டமிட்டு
உற்சாகப் படுத்தியமைக்கு வாழ்த்துக்கள்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
//கொடுக்கிற பொருளைப் பொருத்தே
இறுதி முடிவெடுப்பேன் என்பதில்
இப்போது நான் மிக உறுதியாய் இருக்கிறேன்
நல்ல குடிமகனாக விழிப்புடன் இருக்கிறேன்//
நம்மை விட ஸ்பிடா அவங்க விழிச்சுக்கிட்டு அடுத்தாப்ல இன்னும் நூதனமா ஏமாத்தறாங்களே.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
அமைதிச்சாரல் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அனைவருக்கும் தேவையான விழிப்புணர்வு.
அண்ணே நச்ன்னு ஒர் விழிப்புணர்வு பதிவு...அருமை!
நல்ல நகைச்சுவையா சொல்லி இருக்கீங்க விலை உயர்வு எந்த விதத்தில் எல்லாம் இருக்கு?
தமிழ் உதயம் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
விக்கியுலகம் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
எப்படி..எப்படி சார் இப்படி எல்லாம் உதிக்கின்றது?சூப்பர்.யதார்த்தத்தை அப்படியே எழுத்தில் வடித்திருப்பது அருமை...
இனி இதுபோல் ஏமாறமாட்டேன்
பிளேடு விலை கேட்டுத்தான் ரேசர் வாங்குவேன்
.//
ஏமாந்ததும் புரிந்தது
அடுத்த தேர்தலில் அவசியம் ஏமாறமாட்டேன்
///
கண்டிப்பா...
இனி இதுபோல் ஏமாறமாட்டேன்
சைடு டிஷ் விலையைக் கேட்டுத்தான்
மெயின் டிஷ்ஸே ஆர்டர் செய்வேன்
//
Lakshmi //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸாதிகா //
தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவானஉற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்
//கொடுக்கிற பொருளைப் பொருத்தே
இறுதி முடிவெடுப்பேன் என்பதில்
இப்போது நான் மிக உறுதியாய் இருக்கிறேன்
நல்ல குடிமகனாக விழிப்புடன் இருக்கிறேன்//
- அருமையான விழிப்புணர்வு பதிவு. உங்கள் அனுபவம் எங்களுக்கு ஒரு பாடம் ரமணி சார். மணம் கவர்ந்த பதிவு.
- தமிழ்மணம் வாக்கு 8.
// கொடுக்கிற பொருளைப் பொருத்தே
இறுதி முடிவெடுப்பேன் என்பதில்
இப்போது நான் மிக உறுதியாய் இருக்கிறேன்
நல்ல குடிமகனாக விழிப்புடன் இருக்கிறேன்//
சகோ! இது அருமையான அறிவுரை மட்டுமல்ல
அனைவரும் மனதில் கொள்ள வேண்டிய அனுபவ
உரை!
புலவர் சா இராமாநுசம்
த ம ஓ 9
புலவர் சா இராமாநுசம்
பட்டபின்தான் மக்களுக்கு புத்தி வருதுன்னு, அழகான அனுபவத்தில் சொல்லிட்டீங்க குரு...!!!
ஓட்டு போட்டு ஏமாந்தாச்சு, இனி அடுத்தும் இதைவிட ஒசத்தியா குடுத்து கவுத்துருவானுகளே இந்த அரசியல்வியாதிகள்...!!!!
சவரக் கத்தியில் தான் ஏமாந்தோம், என்று அதில் ஏமாறாமல் உணவகத்தில் ஏமாந்து...
உணவகத்தில் தானே ஏமாந்தோம் என்று அதில் கவனமாக இல்லாமல் இலவசத்தில் ஏமாந்து...
இலவசத்தில் தானே ஏமாந்தோம் என்று அதில் மட்டும் கவனமாக இல்லாமல் அனைத்தையும் சிந்திப்போம்..
பலரின் வாழ்க்கைக்கு விடியல் படைப்போம்
'இலவச உணவு' இல்லவே இல்லை...
There is no FREE LUNCH
//பட்டனை அழுத்தமாய் அழுத்தினேன்// ஹா..ஹா..
படித்தவுடன் சிரிக்க வைத்தாலும்,சிந்தனையைத் தூண்டிய விழிப்புணர்வு பதிவு.நன்றி பகிர்வுக்கு.
ஏமாறுபவர் இருக்கும்போது ஏமாற்றுபவர் இருக்கத்தானே செய்வார்கள்.எங்கும் எதிலும் எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டிய அவசியத்தை அழகாக கவிதை வடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
சுண்டைக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம் மாதிரி....ஹா..ஹா...ஏமாற நாம இல்லைன்னா யாரைத்தான் அவங்களும் ஏமாத்துவாங்க.....இதெல்லாம் தப்பிக்க முடியாத ஏமாற்றங்கள் சார்...!
//ஓட்டல் ஒன்றுக்குப் போனேன்
சப்பாத்தியின் விலையும் நானின் விலையும்
பூனை விலையில் இருந்தது
அவசரப்பட்டு ஆர்டர் கொடுத்துவிட்டு
சைடு டிஷ் ஆர்டர் கொடுக்கையில்தான்
அவர்கள் தந்திரம் புரிந்தது
அது யானை விலையில் இருந்தது//
எல்லா ஓட்டல்களிலும் இப்படி தான் பாஸ். சாகடிக்கிரானுங்க.... tm 11
அருமையான அனுபவப் பகிர்வு. பாராட்டுக்கள்.
தமிழ்மணம் 12 vgk
துரைடேனியல் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
புலவர் சா இராமாநுசம் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வை.கோபாலகிருஷ்ணன் //..
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
MANO நாஞ்சில் மனோ //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
suryajeeva //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Madhavan Srinivasagopalan //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
G.M Balasubramaniam //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
RAMVI //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஸ்ரீராம். //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சசிகுமார் //
வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவானஉற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்தநன்றி
பார்த்து எல்லாத்திலேயும் ஜாக்கரதையாக தான் நடந்துக்கணும் என்ற கருத்து அசத்தல் நண்பரே..
* வேடந்தாங்கல் - கருன் *! //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அவர்களது அரசியலும் புரிந்தது
ஏமாந்ததும் புரிந்தது
சரியாக சொன்னீர்கள் நண்பரே
த.ம 14
சூப்பரோ சூப்பர். தொடருங்கள்.
அடுத்த தேர்தலில் அவசியம் ஏமாறமாட்டேன்.
>>
இப்படித்தான் ஒவ்வொரு முறையும் முடிவெடுக்கின்றோம். அப்புறம் பிரசவ வைராக்கியம் போல அந்த முடிவை காத்துல பறக்கவிட்டுடுறோம்.
த ம 15
M.R //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
vanathy //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ராஜி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
எல்லாருக்கும் இந்த விழிப்பணர்வு தேவை.
பகிர்விற்கு நன்றி Sir!
என் வலையில் :
"நீங்க மரமாக போறீங்க..."
திண்டுக்கல் தனபாலன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ரமணி ஐயா,
ஏமாற்றங்களை நன்றாகச் சொன்னீர்.
சிறுவயதில், அப்பா எனக்கொரு கதை சொல்வார்.
ஒரு ஊரில ரெண்டு நரிகள் இருந்துச்சாம். பனிக்காலத்தில் ரொம்ப குளிருச்சாம். ராத்திரியில் அந்த இரண்டு நரிகளும் பேசிக்கிச்சாம். விடிஞ்சதும் முதல் வேலையா போர்வை வாங்கிற வேணும்- என்று.
ஆனா, தினமும் இதே கதையாத்தான் நடந்துச்சாம்.
நம்மளும் அப்படித்தான். தேர்தல் வரும்போது ஆயிரத்தையோ, ஐநூறையோ கண்ணுல காட்டிட்டா ....!
சத்ரியன் //
வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவானஉற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சசிகுமார் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ரமணி சார் வணக்கம்!
// சைடு டிஷ் விலையைக் கேட்டுத்தான்
மெயின் டிஷ்ஸே ஆர்டர் செய்வேன் //
பாக்கெட் நிறைய பணம் எடுத்துக்கங்க. விரும்பியதை விலையைப் பார்க்காமல் சாப்பிடுங்க.முன் ஜாக்கிரதையின் அவசியத்தை வார்த்தைகளால் வடித்துக் காட்டிய கவிதை.
தி.தமிழ் இளங்கோ //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
நாட்டு நடப்பை ரசனையோடு சொல்லியிருக்கிறீர்கள் !
ஹேமா //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
பட்டபின் புத்தி: நாட்டு நடப்பின் சாரம்..
அன்புடன் மலிக்கா //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஏமாற்றத்தை நடப்பு வாழ்க்கையோடு சொன்ன விதம் அருமை எல்லோரது எண்ணமும் இதுவாய் தான் இருக்கும்
நிதர்சனமாக நடக்கின்ற நிகள்வுகளாயினும் அதிகம் கவனிக்கப்படுவதில்லை அதனையே கவனிக்கும் விதத்தில் அளித்து கவர்ந்துவிட்டீர்கள் வாழ்த்துகள்
r.v.saravanan //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
haseem hafe //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
விழிப்பணர்வு எப்போதும் தேவை, ஆனால் பட்ட பின்பு தானே புத்தி விழிக்கிறது என்பது சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. வாழ்த்துகள் சகோதரா.பணி தொடரட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
kovaikkavi //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
விழிப்புணர்வளிக்கும் சிந்தனைகள் அருமை...
பட்டியல் தொடர்கிறது ....பொன்னகை விலைத் தள்ளுபடி ..சேதாரத்தில் விஷயம் உள்ளதடி ..
0 % வட்டி ... பின்னாளில் எடுக்கும் வாட்டி !
இலவசத்திற்கும் ஓர் விலை உண்டு ..ஆனால் உங்கள் அருமையான பாடல்கள்
அனைத்திற்கும் விலை என்று ஒன்று இல்லை எங்கள் மனங்களைத் தவிர .
இந்த உலகத்துல உஷாரா இல்லேன்னா நிஜார உருவிடுவாங்கன்னு உணர்த்தும் கவிதைக்கு நன்றி ... !
guna thamizh //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ananthu //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஸ்ரவாணி //
வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவானஉற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்?
சீனுவாசன்.கு //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
/இலவச மிக்ஸியும் கிரைண்டரும்
கொடுப்பதாகச் சொன்னதும் மகிழ்ந்து போய்
பட்டனை அழுத்தமாய் அழுத்தினேன்
பின்னாளில் பஸ் கட்டண உயர்வையும்
மின்சாரக் கட்டண உயர்வையும்
அரசு அறிவித்தவுடன்தான் அதிர்ந்து போனேன்
அவர்களது அரசியலும் புரிந்தது
ஏமாந்ததும் புரிந்தது
அடுத்த தேர்தலில் அவசியம் ஏமாறமாட்டேன்//
ஹாஹா
எல்லாரும் ஓவ்வொரு வகை ஏமாற்ற தான் செய்கிறாரக்ள்
நாம் தான் கொஞ்சம் சுதாரிச்சிக்கனும்
Jaleela Kamal //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பது அடுத்தவனை ஏய்த்துப் பிழைக்கும் உத்தி மாத்திரமே. சாமானியர்களின் கதி தான் கவலைக்கிடமாய்...
நிலாமகள் //.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
:) வித்தியாசமான கவிதை.
ஆங்கிலத்தில் There is nothing called free lunch என்பார்கள். மக்கள் எழுச்சி வந்தால் மட்டுமே நல்லது நடக்கும்.
ஔவை //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
>புதிய பாணியில் ரேசர்கருவி
ஒரு கடையில் இருந்தது
விலையும் குறைவாய் இருந்தது
அதற்கு பின்னாளில்
பிளேடு வாங்குகையில்தான்
அதன் விலை தெரிந்து அதிர்ந்து போனேன்
ஆம். இப்போது நான் கா(ர்)ட்ரிட்ஜ் பாவிக்கும் ரேசர்களைப் பாவிப்பதில்லை. பிளேட் ரேசர் இங்கு கிடைப்பதில்லை. எனவே use and throw தான். என்றாலும் கா(ர்)ட்ரிட்ஜ் பாவிக்கும் ரேசர்களை - ஒரு எதிர்ப்பிற்காகப் பாவிப்பதில்லை.
எஸ் சக்திவேல் //
வரவுக்கும் விரிவானஉற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
''புதிய பாணியில் ரேசர்கருவி கடையில் இருந்தது''
தாராளமயமாக்கல் கொள்கையில் , நுகர்வோரைக் கவரும் கலாச்சாரத்தில்,இலவச இணைப்புக்கும்,இரண்டுக்கு இரண்டு அல்லது மூன்று
என்று தேவையில்லாதவற்றை வாங்கி அடுக்கி , பின்
அவதிப்படும் மக்களுக்கு நல்ல சவுக்கடி.
கருத்து மிக்க கவிதை. நன்றி சார்
radhakrishnan //
வரவுக்கும் விரிவானஉற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சார், கமென்ட் பாக்ஸூக்கு தாவ முடியாதா?100க்கும்
மேற்பட்ட கமெண்டுகளைத்தாண்டுவதறகுற்குள்நொந்து
நூலாகிவிடுகிறோமே.நன்றி சார்
Post a Comment