Sunday, December 25, 2011

நாமும் கவிமன்னர்கள்தான்...

வானக் கடலில் பறவை ஒன்று
சிறகை விரித்து நீந்தும்-அதைக்
காண மனதில் பொங்கும் மகிழ்வு
கவியாய் மாற ஏங்கும்

மௌன மொழியில் மலரை அணைத்து
நிலவு கதைகள் பேசும்-அந்தக்
காமக் கதைகள் கேட்க நெஞ்சில்
கவிதை புயலாய்ச் சீறும்

பருவ உணர்வில் முதிர்ந்த நாற்று
தலையைத் தாழ்த்தி நாணும்-அதை
அறிந்த எந்த இளமை நெஞ்சும்
புதிய சந்தம் தேடும்

மலையைத் தடவி  மகிழ்ந்த அருவி
மண்ணில் வெட்கி ஓடும்-அந்த
அழகை ரசிக்க  மனதில் கவிகள்
அருவி போலப்  பாயும்

கரையைத் தழுவி முத்தம் ஈந்து
அலைகள் மயங்கித் திரும்பும் -அதன்
நிலையை உணர்ந்தால் கவிதைப பூக்கள் 
நெஞ்சில் தானே அரும்பும்

உலகில் காணும் காட்சி யாவும்
கவிதைக் கோலம் தானே -இதை
உணர்ந்து கொண்டால் போதும் நாமும்
கவிதை மன்னர் தானே


93 comments:

  1. அண்ணே கலக்கல் கவிதை!

    ReplyDelete
  2. //உலகில் காணும் காட்சி யாவும்
    கவிதைக் கோலம் தானே -இதை
    உணர்ந்து கொண்டால் போதும் நாமும்
    கவிதை மன்னர் தானே//

    நிச்சயம் நீங்கள் கவிதை மன்னர் தான் ..

    நல்ல கவிதை...

    ReplyDelete
  3. //உலகில் காணும் காட்சி யாவும்
    கவிதைக் கோலம் தானே -//
    உண்மை.ஆனால் அதைக் கவிதையாக்க ஒரு கவி உள்ளம் தேவை,உங்களைப் போல்!

    ReplyDelete
  4. அருமையான கவிதை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. இடைக்கால சினிமாப்பாடல் கேட்ட உணர்வு... சூப்பர் பாஸ்

    ReplyDelete
  6. வெங்கட் நாகராஜ் said...
    //உலகில் காணும் காட்சி யாவும்
    கவிதைக் கோலம் தானே -இதை
    உணர்ந்து கொண்டால் போதும் நாமும்
    கவிதை மன்னர் தானே//

    நிச்சயம் நீங்கள் கவிதை மன்னர் தான் ..//////////////////

    ரிப்பிட்.. உண்மை

    ReplyDelete
  7. கவிதை நன்று.

    ReplyDelete
  8. கவிதை நல்லா இருக்கு..சார்..
    மறக்காம டெரர் கும்மி அவ்வர்ட்ல கலந்துக்கோங்க..

    ReplyDelete
  9. உலகில் காணும் காட்சி யாவும்
    கவிதைக் கோலம் தானே -இதை
    உணர்ந்து கொண்டால் போதும் நாமும்
    கவிதை மன்னர் தானே

    எங்கெங்கும் நிறைந்திருக்கும் செய்திகளை உணரும் இனிய கவிதை உள்ளம் கடவுள் வாழும் இல்லம் அல்லவா...

    மனம் நிறைந்த வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  10. அனைத்து உறவுகளுக்கும் என்
    இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. விக்கியுலகம் //

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்

    ReplyDelete
  12. அத்தனையும் கவிதைதான்.. ஆனால் அதை உணர்ந்து எழுத ஒரு சிலர்தான்.

    ReplyDelete
  13. வெங்கட் நாகராஜ் //.

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான அழ்கான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  14. சென்னை பித்தன் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான அழ்கான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  15. நண்டு @நொரண்டு -ஈரோடு //..

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  16. துஷ்யந்தன் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான அழ்கான உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  17. ஸ்ரவாணி //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  18. Madhavan Srinivasagopalan //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. இராஜராஜேஸ்வரி //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான அழ்கான உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. ரிஷபன் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  21. ஆமாம்.காணும் காட்சியெல்லாம் கவிதைதான்.நல்ல கவிதை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. ஆஹா வார்த்தை ஜாலம் அருமை நண்பரே

    கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

    த.ம 10

    ReplyDelete
  23. //உலகில் காணும் காட்சி யாவும்
    கவிதைக் கோலம் தானே -இதை
    உணர்ந்து கொண்டால் போதும் நாமும்
    கவிதை மன்னர் தானே //

    சங்கம் வளர்த்த மதுரையில்
    தெள்ளு தமிழில் கவிதை படிக்கும்
    ரமணியே! நீர் ஓர் கவிதை மன்னர்!

    ReplyDelete
  24. கவிக்கு கவிதையின் கரு பிறக்கும்
    விடயங்களை அழகாக பட்டியலிட்டமை மிக அழகு நண்பரே...

    ReplyDelete
  25. shanmugavel //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. M.R //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. தி.தமிழ் இளங்கோ //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. மகேந்திரன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. ''...உலகில் காணும் காட்சி யாவும்
    கவிதைக் கோலம் தானே -இதை
    உணர்ந்து கொண்டால் போதும் நாமும்
    கவிதை மன்னர் தானே!...'''
    உண்மையே உண்மை..உங்களைப் போல எழுதினால் மட்டுமே... வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்...
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  30. //உலகில் காணும் காட்சி யாவும்
    கவிதைக் கோலம் தானே -இதை
    உணர்ந்து கொண்டால் போதும் நாமும்
    கவிதை மன்னர் தானே!...//

    எல்லாமே கவிதைக் கோலம் தான்!
    உணர்ந்து கொள்ளும் கவிதை மன்னர்
    உங்க்ளைப்போன்ற ஒரு சிலரே!

    வாழ்த்துகள். vgk

    ReplyDelete
  31. பாடல் போலுள்ள கவிதை ;)

    ReplyDelete
  32. ஆம்..அனைத்தும் சந்த வரிகள்தான்..அருமை

    TM 12

    அன்போடு அழைக்கிறேன்..

    அழுகை அழ ஆரம்பிக்கிறது

    ReplyDelete
  33. kavithai (kovaikkavi) //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. வை.கோபாலகிருஷ்ணன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. சாய் பிரசாத் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. மதுமதி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. ச‌ந்த‌ அழ‌கிலும் க‌ருப்பொருளிலும் சொக்கி நிற்கிற‌தென் சிந்தை.

    ReplyDelete
  38. நிலாமகள் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. உலகில் காணும் காட்சிகள் யாவும்
    கவிதைகள் போலவே என்கிற பறைசாட்டு
    மிக அருமை.காண்கின்றவையே கவிதையாகவும்,கவிதைகளையே,,,,,, காண்கிறமனபக்குவம் பெற்றுவிட்டவர்களாயும் ஆகிப்போகிறபோது மனிதமனது பண்படுகிறதுதானே/நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  40. கவிஞனின் மனமும் பொதுவாகவே எழுத்தாளர்களின் மனமும் பார்ப்பதை எல்லாம் எழுத்தில் வடிக்கத் துடிக்கும் இயல்பைக் கவிதையில் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  41. ஆமாங்க... பார்க்கும் எல்லாவற்றிலும் கவிதையைப் பார்க்க முடிகிறது, ரசிக்க முடிகிறது. நானும் தலைகீழா நின்னு பாத்துட்டேன்... எழுதத் தான் முடியறதில்லை. பேப்பர், பேனா ஈத‌னைத்தும் போதாதிங்கே... கவியின் உள்ளமென்று ஒன்றும் வேண்டியதாயிருக்கிறதே! என் செய்வேன்? உங்களைப் போன்ற கவி வேந்தர்களை ரசித்துக் கருத்திடுவேன். பாராட்டி மகிழ்வேன்!

    ReplyDelete
  42. விமலன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. ஸ்ரீராம். //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. கணேஷ் //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. கவிதை அருமை!

    காணும் யாவையும் ரசிப்பவன் நல்லிதயம் கொண்ட மனிதன்!

    த.ம 15!

    ReplyDelete
  46. ரமேஷ் வெங்கடபதி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  47. ஒவ்வொரு வரிகளும் உணர்ந்து எழுதப்பட்டவை,நல்ல ரசனை,கவிதை அருமை.

    ReplyDelete
  48. உலகில் எல்லாம் கவிதையா அல்லது உலகமே கவிதையா? அருமையான கவிதை.

    ReplyDelete
  49. அழகும், சொல்வளமும் கற்பனை நயமும்
    கலந்த‍ அருமையான கவிதை வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    த ம ஓ18

    ReplyDelete
  50. asiya omar //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  51. தமிழ் உதயம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  52. புலவர் சா இராமாநுசம் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  53. நல்ல கவிதையும்,நகைசுவையும் என்றும் இனிமை தரும்! உங்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  54. இனிமையான கவிதை.

    மலையைத் தடவி மகிழ்ந்த அருவி
    மண்ணில் வெட்கி ஓடும்-அந்த
    அழகை ரசிக்க மனதில் கவிகள்
    அருவி போலப் பாயும்

    இந்த வரிகள் மிகவும் பிடித்தமானவை. மலையைத் தடவி மகிழ்ந்த அருவி எனும் சொற்பிரயோகம் மிகப் பொருத்தம். அட்சரலட்சம் பெறும். வாழ்த்துகள்.

    ReplyDelete
  55. //உலகில் காணும் காட்சி யாவும்
    கவிதைக் கோலம் தானே -இதை
    உணர்ந்து கொண்டால் போதும் நாமும்
    கவிதை மன்னர் தானே//

    தாமத வருகைக்கு மன்னிக்கவும். இரண்டு நாட்களாக வலைப்பக்கம் வரமுடியவில்லை.

    ஆஹா அருமையான கவிதை சார். கவிஞனுக்கு காண்கின்ற எல்லாமே பாடுபொருள்தான் என்பதை அழகாக சொல்லிவிட்டீர்கள். சொல்நயம் அருமை.

    தமிழ்மணம் வாக்கு 19.

    ReplyDelete
  56. வணக்கம் ரமணி அண்ணா,
    நல்லா இருக்கிறீங்களா?

    இப்பவும் உங்கள் கவிதையின் சந்தம் மனதினுள் நிற்கிறது,

    தானத் தனன தானத் தனனா...
    தனத் தான தன தன தானத் தனான...

    ஹே...ஹே...

    சூப்பரா ஒரு சந்த கவிதையில் இயற்கையினையும், உணர்வுகளையும் ரசிக்கத் தெரிந்தால் நாமும் கவிஞர்கள் என்பதனைச் சொல்லியிருக்கிறீங்க.

    ReplyDelete
  57. ஓசூர் ராஜன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  58. துரைடேனியல் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  59. //உலகில் காணும் காட்சி யாவும்
    கவிதைக் கோலம் தானே -இதை
    உணர்ந்து கொண்டால் போதும் நாமும்
    கவிதை மன்னர் தானே//

    ஹா ஹா அப்போ நானும் கவிதாயினிதான் போல

    ReplyDelete
  60. ராஜி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  61. நிரூபன் //

    தனது சமையலை கண்ணை மூடி சப்புக் கொட்டி
    சாப்பிடுகிற மனிதரைக் கண்டதும்
    தான் சமையலறையில் கனலில்வெந்த கஷ்டத்தையெல்லாம்
    சமையல் காரன் மறந்து போவான்
    படைப்பாளிக்கும் மிகச் சரியாக ரசிக்கத் தெரிந்தவரைக் கண்டால்
    அதுதான் அவனுக்கு அதிகச் சுகம் தரும்
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான அழகான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  62. ஔவை //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  63. வானக்கடலில் நீந்தும் பறவை - முதல் வரியிலேயே கவித்துவம் அசத்துகிறது. பின்வரும் ஒவ்வொரு வர்ணனையும் அழகாய் மிளிர்கிறது. வாசிக்கும் மனத்தைத் தன்னுள் ஈர்த்துக் கொள்ளும் அழகுக் கவிதை. பாராட்டுகள் ரமணி சார்.

    ReplyDelete
  64. ரமணி அண்ணே,எனக்கு இன்னமும் பதில் போடலையே?
    ஹே...ஹே...

    ReplyDelete
  65. ஓ...அண்ணே பதில் போட்டிருக்கிறீங்க.

    மன்னிக்கவும்!

    ReplyDelete
  66. கீதா //.


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  67. இயற்கை காட்சிகள் எல்லாமே எழிலானவை. எண்ணிப்பார்த்தால் எல்லாவற்றிலும் இறைவனை காண லாம். நம்மை சுற்றியுள்ள நிகழ்வுகளை ரசிக்கத் தெரிய வேண்டும். பிறகு தான் கற்பனை ஊறும். எல்லோருக்கும் எளிதில் வசப் படக் கூடியதல்ல.பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  68. G.M Balasubramaniam //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  69. தங்களது கவிதைகள் அருமை. கருத்துக்களும் அருமை! எப்படி நேரம் கிடைக்கிறது உங்களுக்கு என்று தெரிந்தால் சொல்லுங்களேன்!

    ReplyDelete
  70. ஓசூர் ராஜன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  71. #கவிதை மன்னர் தானே# அருமை...!

    ReplyDelete
  72. ஹை ஹை ஹைக்கூ ...! http://pesalamblogalam.blogspot.com/2011/12/blog-post_26.html

    ReplyDelete
  73. உலகில் காணும் காட்சி யாவும்
    கவிதைக் கோலம் தானே -இதை
    உணர்ந்து கொண்டால் போதும் நாமும்
    கவிதை மன்னர் தானே// மிக சிறந்த செய்தி உண்மையில் இந்த பெரும் புடவி எங்கும் இன்பம் கொட்டி கிடக்கிறது அதை முறையே பாவலன் வெடிப்படுத்தி இந்த குமுகத்தை முறையாக வழி நடத்த வேண்டும் சிறப்பு பாராட்டுகள்

    ReplyDelete
  74. ரசிக்கும் மனநிலை இருந்தால் எல்லோரும் கவிஞர்கள்தான்.அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் !

    ReplyDelete
  75. ananthu //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  76. மாலதி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  77. ஹேமா //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  78. ஆம் நம் கண்கள் அழகை பார்க்க ஆரம்பித்தால் நாமும் கவிதை மன்னர் தானே!
    நல்ல கவிதை! உங்களுக்கு வாழ்த்துக்கள்!

    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  79. dhanasekaran .S //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  80. உயிர்க் கவிதை மகளை வளர்க்கத் துடித்த
    தாயின் விழியில் குளங்கள் .இன்று வைரஸ் என்ற
    பட்டம் சூட்ட முனைந்த நபரால் பெரும் வாட்டம்
    எளிதில் என்னை உணரும் தன்மை உனக்கு உண்டு ஐயா என் ஏக்கம் போக்கும் நல் வார்த்தை சொல்லு
    என் இதயச் சுமைகள் குறைய .காத்திருக்கின்றேன்.

    ReplyDelete
  81. ஆகா...இன்னோர் இடத்தில போயி அக்கா காலை வாருறாங்களே...
    தவறுகளைச் சொன்னால் திருத்திக் கொள்வது தானே மனிதப் பண்பு! ஹே...ஹே...

    ReplyDelete
  82. ஆகா...இன்னோர் இடத்தில போயி அக்கா காலை வாருறாங்களே...
    தவறுகளைச் சொன்னால் திருத்திக் கொள்வது தானே மனிதப் பண்பு! ஹே...ஹே...

    ReplyDelete
  83. இதுக்குப் பெயர் காலை வருவது அல்ல .நான் தவறு செய்தேனா இது என் மனதில் எழுந்த ஆதங்கம் .ஒரு கவிஞனின் உள்ளக் கிடக்கையை உணரும் வல்லமை .இன்னொரு அதே உணர்வுகள் உடைய மூத்த எழத்தாளர் அதிலும் இவருக்குத்தான் நான் அதிகம்
    கருத்திட்டுள்ளேன் இவரது கருத்து என் மனக் குழப்பத்துக்கு மருந்தாகும் என்பது எனது நோக்கம் .தாயைத் தேடும் கன்றுபோல் இன்று என்
    மனம் ......................................

    ReplyDelete
  84. "உலகில் காணும் காட்சி யாவும்
    கவிதைக் கோலம் தானே -இதை
    உணர்ந்து கொண்டால் போதும் நாமும்
    கவிதை மன்னர் தானே"

    ஆஹா! அற்புதம் அருமையான வரிகள்...
    அருமையானக் கவிதை..
    நன்றி...

    ReplyDelete
  85. தமிழ் விரும்பி .

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  86. This comment has been removed by the author.

    ReplyDelete
  87. நிரூபன் //அம்பாளடியாள் //

    என்னுடைய பலம் எனக்குத் தெரியும்
    அம்பாளடியாள் குறிப்பிட்டிருப்பதைப் போல
    நான் அதிகம் அறிந்தவனும் இல்லை
    பெரும் கவிஞனும் இல்லை
    இருவருக்குமாக ஒரு கருத்தை வேண்டுமானால் என்னால்
    முன் வைக்க இயலும்
    விமர்சனக் கற்களை எறிபவர்கள் எப்போதும்
    வான் நோக்கி எறிவதே நன்று அது அனைவருக்கும் தெரியும் புரியும்
    கருத்தை பாடமாக எடுத்துக் கொள்பவர்கள் எடுத்துக் கொள்வார்கள்
    நேரடியாக முகம் நோக்கி வீசுவதைத் தவிர்க்கலாம்
    நாம் பழுத்த மரமாய் இருக்கிறோம்.
    என்வே தான் கல்லெறி படுகிறோம் என எடுத்துக் கொள்வதே
    எப்போதும் படைப்பாளியின் வளர்ச்சிக்கு உதவும்
    எனக்கு சரியெனப் பட்டதை இங்கு சொல்லியுள்ளேனே தவிர
    இதுதான் சரியானது என்கிற எண்ணத்தில் சொல்லவில்லை
    பாராது உடன் வாழாது கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் போல
    உயிர்கொடுக்கும் அளவு மிக நேசமாகப் பழகும் பல உறவுகளை
    பதிவுலகில் அனைவரும் பெற்றிருக்கிறோம்
    அதனைக் காப்பதே தலையாய பணி எனக் கொண்டு
    தொடர்வோம்.தொடரட்டும் பதிவுலக நட்பு

    ReplyDelete
  88. சென்னை பித்தன் சொன்னது. அதே.

    ReplyDelete
  89. அப்பாதுரை //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  90. உலகில் காணும் காட்சியாவும் கவிதைக் கோலம்தானே
    அருமையான வார்த்தைக் கோலம் இனிய கவிதைக்கு நன்றி சார்

    ReplyDelete
  91. radhakrishnan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete