Tuesday, July 23, 2013

எல்லைக்கோடு

வெகு நேரம் பேசி முடித்தபின்
இனி பேசுவதற்கு ஏதுமில்லை எனும்
நிலைக்கு உரையாடல் வர
இருவருக்கும் இடையில்
சிறு மௌனத்திற்குப் பின்
சட்டென கோடாரியாய்
வந்து விழும் "அப்புறம் "போல
அதைத் தொடர்ந்து வரும்
"சரி அப்புறம் பார்ப்போம்:" என்பதுபோல்

நிறைய எழுதிவிட்டு
இனி எழுதுவதற்கு ஏதுமில்லை என
உணர்வு எச்சரித்த போதும்
உள்ளம் நச்சரித்த போதும்
எழுதுபவர்கள் மட்டும்
நம் கடைமூடாது
பாம்பாட்டி காட்டும்
கீரிப்பாம்புச் சண்டையாய்
பம்மாத்து காட்டுவது எதனால் ?

விஷயம்  ஏதும் இல்லையெனினும்
சொல்லும்வித்தை தெரிந்த கர்வத்தினாலா ?
வாசகனின் முகக்குறிப்பை
எதிரே காண முடியாத சௌகரியத்தினாலா ?

24 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லாவே கேட்டீங்க கேள்விகளை...! இரண்டும் @ இருக்கலாம்...!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நியாயமான கேள்விகள்தான் ,. எழுதுவதும் ஒரு வித போதையே!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம.3

கவியாழி said...

உங்க கேள்வியில் நியாயம் உள்ளது கேளுங்கள்?

வை.கோபாலகிருஷ்ணன் said...

//எழுதுபவர்கள் மட்டும்
நம் கடைமூடாது
பாம்பாட்டி காட்டும்
கீரிப்பாம்புச் சண்டையாய்
பம்மாத்து காட்டுவது எதனால் ?//

யார் எங்கு எதை எப்படி எழுதித் தொலைத்தாலும் அதையும் பாராட்டி உற்சாகப்படுத்த ஓர் மதுரைக்காரரும், ஓர் திண்டுக்கல் ஆசாமியும் இருக்கிறர்கள் என்ற தைர்யத்தால் இருக்குமோ?

[அதுமட்டுமா? போனஸாக ’த.ம.’ வோட்டு வேறும் தரப்படுகிற்தே ;))))) பம்மாத்து வேலைகளுக்குப் பஞ்சமே இருக்காது]

Seeni said...

nalla kettuteenga...

RajalakshmiParamasivam said...

எல்லோருக்கும் உற்சாக பின்னூட்டம் அளிக்கும் தனபாலன் சார் கூட காரணமாயிருக்கலாம்.

Avargal Unmaigal said...

தவறு எழுதுபவன் மேல் இல்லை அதை ஆஹா ஒகோ என்று பாராட்டும் மக்களிடம்தான் உள்ளது இதை நாம் எழுத்தில் மட்டுமல்ல அரசியலிலும் வியாபாரத்திலும் காண்கிறோம்

MANO நாஞ்சில் மனோ said...

நல்ல கேள்வி ஆனால் பதில் சொல்லத்தான் தெரியவில்லை, இது ஒரு போதையா அல்லது புகழுக்கா ஒண்ணுமே புரியவில்லை...!

கரந்தை ஜெயக்குமார் said...

நல்ல கேள்வி? விடைதான் ஏது?

அருணா செல்வம் said...

கற்பனைக்கு ஏதெல்லைக் கோடு? எழுதிடும்
சொற்கள் சுமையாமோ? மின்னிடும் - நற்கவிகள்
பெற்ற பெரும்பயன் மற்றவரைப் போற்றுதலே!
நற்றமிழே நம்மின் உயர்வு!

தொடருங்கள் இரமணி ஐயா.

தி.தமிழ் இளங்கோ said...

// நிறைய எழுதிவிட்டு
இனி எழுதுவதற்கு ஏதுமில்லை என
உணர்வு எச்சரித்த போதும்
உள்ளம் நச்சரித்த போதும்
எழுதுபவர்கள் மட்டும்
நம் கடைமூடாது
பாம்பாட்டி காட்டும்
கீரிப்பாம்புச் சண்டையாய்
பம்மாத்து காட்டுவது எதனால் ? //

வேறு எதற்கு? வாசகர்கள் அய்யோடா சாமி இனி இந்தபக்கம் வரக் கூடாது என்று ஓடுவதற்குத்தான். நல்ல உவமான உவமேயம்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கேள்வி.....

த.ம. 7

இளமதி said...

உண்மை மிகவே சகோதரரே!
ஆயினும் தோழி அருணா கூறியதை நானும் கூறுகிறேன்.
தமிழை வளர்ப்போம். தமிழாராய் ஒன்றுகூடி...

Anonymous said...

நானும் 1976லிருந்து எழுதுகிறேன். எழுத எழுத ஆசை குறைவதில்லை.
தங்கள் கூற்றுப் பற்றி எண்ணுகிறேன்...வேறு கருத்து வரவில்லை.
எஐத அலுப்பு வந்தால் வாசிப்பேன்.
வேதா. இலங்காதிலகம்.

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்பதிவு அழைப்பு : http://geethamanjari.blogspot.in/2013/07/blog-post_24.html

கீதமஞ்சரி said...

தங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். நேரமிருக்கும்போது தொடருங்கள் ரமணி சார்.

http://geethamanjari.blogspot.com.au/2013/07/blog-post_24.html

முந்தி வந்து தகவல் தந்த தனபாலனுக்கு அன்பு நன்றிகள்.

”தளிர் சுரேஷ்” said...

சொல்ல ஏதுமில்லாத போதும் சொல்லாமலிருக்க முடியாமையால் இருக்கலாம்! வித்தியாசமான கவிதை! நன்றி!

G.M Balasubramaniam said...


/எழுதுபவர்கள் மட்டும்
நம் கடைமூடாது
பாம்பாட்டி காட்டும்
கீரிப்பாம்புச் சண்டையாய்
பம்மாத்து காட்டுவது எதனால் ?/ எதனால்..?குறைகள் என்று எடுத்துக்காடட எவரும் முன்வராததால் எழுதுபவர் கொடி பறக்கும்.

ஹேமா said...

முடித்துக்கொண்டு போகிறேனென்று முறித்துச் சொல்லமுடியாமையும் காரணமாக இருக்கலாம்.ஆனாலும் நல்ல கேள்விதான் !

vimalanperali said...

எழுதுபவர்கள் கடை மூட வேண்டாம்.ஏதாயினும் ஒன்றை எழுதும் போது ஒரு நல்ல விஷ்யம் வந்து உருக்கொண்டு அதில் நிற்கும்.அதற்காகவாவது எழுதவே ண்டும்.கடையின் சாவியை எங்காவது தொலைத்து விடுங்கள் என சொல்லத்தோணுறது இக்கணம்/நன்றி.

கோமதி அரசு said...

நல்ல கேள்வி.

Ranjani Narayanan said...

நீங்கள் கேட்ட கேள்விக்கு நிறைய பேர் நிறைய காரணங்கள் சொல்லியிருக்கிறார்கள். புகழா? போதையா? தமிழ்மணம் வோட்டா? திண்டுக்கல் அண்ணாச்சியா?

எனக்கென்னவோ மனதில் இருப்பதை கொட்டிவிட்டோம் என்கிற நிம்மதி என்று தோன்றுகிறது.

Ranjani Narayanan said...

உங்கள் தொடர்கதை 'எமனோடு விளையாடி, எமனோடு உறவாடி' என்னாயிற்று?

Post a Comment