Sunday, February 14, 2016

மீண்டும் ஒரு காதல் கவிதை

பல்லவி கிடைத்த புலவன் போல
பாடிக் களிக்கிறேன்-பந்தய
எல்லையைத் தொட்ட வீரன் போல
தாவிக் குதிக்கிறேன்
கருவிழி பார்த்த பார்வை ஒன்றில்
கவிழ்ந்து போகிறேன்-உன்
ஒருமொழி கேட்ட கணத்தில் நானும்
கவிஞன ஆகிறேன்

நிலவு கூட நெருங்கி வந்து
சொந்தம் கொள்ளுதே -சோலை
மலரும் கூட மணந்து எனக்கு
பந்தம் என்குதே
மனது கூட எல்லை கடந்து
எங்கோ பறக்குதே-அடக்
கனவு போல கவிதை நூறு
தானாய் சுரக்குதே

உணவை நீரை மறுத்த உடலும்
சக்தி கொள்ளுதே -உன்
நினைவு ஒன்றே போதும் என்று
மனதும் சொல்லுதே- உன்
நினைவும் கனவும் கலந்த நிலையில்
சொர்க்கம் தெரியுதே -அந்த
நிலையில் உதிர்க்கும் உளறலை உலகம்
கவிதை என்குதே

பொன்னும் பொருளும் கோடி வந்து
என்னைச் சேரலாம்- இந்த
மண்ணே என்னை மன்னவ னாக்கி
மகிழ்ந்தும் போற்றலாம்-உன்
மடியில் துயிலும் ஒர் நொடி அதற்கு
இவைகள் ஈடாமோ-அந்தத்
துடிப்பைச் சொல்லும் கவிதை இதற்கு
என்றும்  நிகராமோ

(காதலர்களுக்கு   சமர்ப்பணம்  )

8 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கனவு போல கவிதை நூறு தானாய் சுரக்குதே//

காதலர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ள கவிதை வரிகள் யாவும் அருமையோ அருமை. பாராட்டுகள்.

//அந்த நிலையில் உதிர்க்கும் உளறலை உலகம்
கவிதை என்குதே//

இதுவும் காதலர்களுக்கு மட்டுமே சமர்ப்பணம் :)

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா...

ஸ்ரீராம். said...

ரசித்தேன்.

Thulasidharan V Thillaiakathu said...

ரசித்தோம் அருமை!!!

Unknown said...

நன்றாக இருந்தன

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இனிமை

UmayalGayathri said...

அருமை ஐயா

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

மிகஅருமையாக உள்ளது இரசித்தேன் ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment