Thursday, June 30, 2016

மூலதனம்

குழந்தைகளின்
சேட்டைகளை மட்டுமல்ல

அவர்களின்
அறியாமை
முட்டாள்த்தனம்
முரண்டு
முதலானவைகளை
நொடியும் விட்டுவிடாது

மிகக் கவனமாய்
இரசிக்கப் பழகுங்கள்

மிகக் கவனமாய்க்
கையாளப் பழகுங்கள்

பின்னாளில்

அவர்களின்
வளர்ச்சியை மட்டுமல்ல

அவர்களின்
அறிவு
புத்திசாலித்தனம்
பெருந்தனமை
முதலானவைகளை
மிகச் சரியாய் இரசிக்க

கூடுதலாய் இரசிக்க
முழுமையாய் அனுபவிக்க

அதுதான் மூலதனம்
அதுதான் ஆணிவேர்

11 comments:

  1. இயந்திரமாய் வளர்க்காமல் இயல்பாய் வளர்க்க வேண்டும்!

    ReplyDelete
  2. ஸ்ரீராமின் பதில வழிமொழிகின்றோம்...

    ReplyDelete
  3. உண்மைதான் குழந்தைகள் எப்போதுமே புத்திசாலித் தனமாக செயல்படவேண்டும் என்று நினைப்பது அறியாமைதான்

    ReplyDelete
  4. அருமையான பதிவு
    காலம் பதில் சொல்லும்

    http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

    ReplyDelete
  5. அருமையான பகிர்வு.

    த.ம. +1

    ReplyDelete
  6. அருமை ஐயா.நல்ல பகிர்வு நன்றி.

    ReplyDelete
  7. உண்மைதான். குழந்தைகளின் சின்ன சின்ன விஷயங்கள் கூட சிறு முதலீடுதான். அருமை.

    ReplyDelete
  8. கடவுளைக் கண்டதில்லை. குழந்தைகளைக் கண்டிருக்கிறேன் என் பேரனின் சில குணாதிசயங்களைப் பகிர்ந்தும் இருக்கிறேன்

    ReplyDelete
  9. உண்மைதான், ஆனால் பொறுமை கடலினும் பெரியது.

    அருமையான கருத்து.

    கோ

    ReplyDelete