Wednesday, January 25, 2017

அனுமார் வாலில்வைக்கப்பட்ட....

தலைமையின்றித் தானாய்
சுயம்புவாய்
ஆர்ப்பரித்து எழுந்த
மாணவரின் எழுச்சி...

அன்றைய
உப்புச் சத்தியாகிரகம் போல
அனைத்துதரப்பு மக்களையும்
அணைத்துச் சென்ற
அதன் வீச்சு...

காரணம்
ஜல்லிக்கட்டு எனக்
கொண்டாலும்

அதன் வேராக இருந்தது
மைய அரசும்
மா நில அரசும்
அதிகாரத்திலிருக்கிற
மமதையில்

மக்கள் நிலை குறித்துச்
சற்றும் சிந்தியாது

மக்கள் நலனுக்கெனச்
சொல்லிச் செய்கிற
சுயநலத் தகுடுத்தித்தினங்களுக்கு
எதிரான கோபப் பெரும்மூச்சே

இருத் தலைமைகளுமிதை
புரிந்து கொண்டால்
நாட்டுக்குமட்டுமல்ல
அவர்களுக்கும் நல்லது


இல்லையெனில்
மாணவரிடை புகுந்து
காவாலிகளால்

அல்லது
காரணம் வேண்டிக் காவலர்களால் 

வைத்ததாகச் சொல்லப்படும்
அந்தப் பெருந்தீ
நீறுபூத்த  நெருப்பாகத்
தொடர்ந்திடவும்

அதுவே  அனுமார் வாலில்
வைக்கப்பட்டதாக
மாறிவிடவுமே   கூடுதல் சாத்தியம்

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அவ்வாறே ஆகட்டும்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அதுவே அனுமார் வாலில் வைக்கப்பட்ட தீயாக
மாறிவிடவுமே கூடுதல் சாத்தியம்.//

அனுமார் வாலில் தீ வைத்தால் .... போச்சு .... போச்சு .... எல்லாமே போச்சு !

அனுமார் வாலில் குளுகுளுவென்று சந்தனப் பொட்டும், குங்குமப்பொட்டும் மட்டுமே வைக்கக் கடவது. அவரின் நெஞ்சினில் கொஞ்சமேனும் வெண்ணெய் தடவக்கடவது.

எச்சரிக்கை செய்துள்ள வரிகள் அழகோ அழகு ! பாராட்டுகள்.

Thulasidharan V Thillaiakathu said...

அருமை!!!
//காரணம்
ஜல்லிக்கட்டு எனக்
கொண்டாலும்

அதன் வேராக இருந்தது
மைய அரசும்
மா நில அரசும்
அதிகாரத்திலிருக்கிற
மமதையில்

மக்கள் நிலை குறித்துச்
சற்றும் சிந்தியாது

மக்கள் நலனுக்கெனச்
சொல்லிச் செய்கிற
சுயநலத் தகுடுத்தித்தினங்களுக்கு
எதிரான கோபப் பெரும்மூச்சே//

அதே அதே!!! இதை அவர்கள் புரிந்து கொண்டால் அவர்களுக்கு நல்லது!!!

ananthako said...

அராஜக சொத்துக்குவிப்பு
ஹனுமான் வாலில் வைத்த நெருப்பாகட்டும்.
நல்லா இருக்கு. நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற.

வெங்கட் நாகராஜ் said...

அருமை....

நல்லதே நடக்கட்டும்....

G.M Balasubramaniam said...

சிலர் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயன்றார்களோ

Seeni said...

நல்ல பகிர்வு அய்யா..

Yarlpavanan said...

"காரணம் வேண்டிக் காவலர்களால்

வைத்ததாகச் சொல்லப்படும்
அந்தப் பெருந்தீ
நீறுபூத்த நெருப்பாகத்
தொடர்ந்திடவும்

அதுவே அனுமார் வாலில்
வைக்கப்பட்டதாக
மாறிவிடவுமே கூடுதல் சாத்தியம்" என்பதே
உண்மை தான்!

Post a Comment