Thursday, April 6, 2017

அவ நம்பிக்கை கொள்ளத் துவங்குகிறது நம்பிக்கை...

எது இருக்கிறது
எப்படி இருக்கிறது
என்பதைவிட
"எதில் "இருக்கிறது என்பதிலும்

யார் இருக்கிறார்
எப்படி இருக்கிறார்
என்பதைவிட
"யாருடன்" இருக்கிறார் என்பதிலும்

எதைச் சொல்கிறான்
எப்படிச் சொல்கிறான்
என்பதைவிட
"எவர்" சொல்கிறார் என்பதிலும்

ஏன் தருகிறான்
எதற்குத் தருகிறான்
என்பதைவிட
"எவ்வளவு" தருகிறான் என்பதிலும்

அதிகக் கவனம்  கொண்டவர்கள்தான்
முடிவைத் தீர்மானிப்பவர்களாக இருக்க
அனைத்துத் துறைகளிலும் நிலைகளிலும் 
கூடுதல் எண்ணிக்கையில் இருக்க

அவ நம்பிக்கை
கொள்ளத் துவங்குகிறது
தர்மத்தை நம்பிய நம்பிக்கை

மெல்ல மெல்ல
அதர்மத்திற்கு
தலைவணங்கத் தயாராகிறது
நம்பிக்கையை இழந்த  தர்மமும்...

8 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அவ நம்பிக்கை கொள்ளத் துவங்குகிறது தர்மத்தை நம்பிய நம்பிக்கை//

எதிர்பார்த்ததுதான். ஆக்கம் அருமை.

ஸ்ரீராம். said...

அப்படிச் சொல்ல வேண்டாம்.. நம்பிக்கைகள் தாமதமாகவேனும் துளிர்க்கட்டும்!

கரந்தை ஜெயக்குமார் said...

இன்றைய வாழ்வியல் யதார்த்தம் இதுதான் ஐயா
அருமை

KILLERGEE Devakottai said...

அருமையான உவமை இன்றைய அரசியல் நிலைப்பாட்டோடு...

G.M Balasubramaniam said...

Hope for the best but be prepared for the worst

தி.தமிழ் இளங்கோ said...

ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

Yarlpavanan said...



"அவ நம்பிக்கை
கொள்ளத் துவங்குகிறது
தர்மத்தை நம்பிய நம்பிக்கை

மெல்ல மெல்ல
அதர்மத்திற்கு
தலைவணங்கத் தயாராகிறது
நம்பிக்கையை இழந்த தர்மமும்..." என
நன்றே மூளைக்கு வேலை தரும்
வரிகள் ஆச்சே!

Thulasidharan V Thillaiakathu said...

தர்மம் தலைகாக்கும் என்பது லேட்டானாலும் லேட்டஸ்டாக வரட்டுமே....நாம் நம்பிக்கையை இழக்காமல் இருப்போமே...

Post a Comment