Monday, November 13, 2017

நேரு மாமா பிறக்கும் முன்பும் ரோஜா இருந்தது

நேரு மாமா பிறக்கும் முன்பும்
ரோஜா இருந்தது  - அது
நூறு பூவில் தானும்  ஒன்று
என்றே   இருந்தது

நேரு மாமா மார்பில்  அதனைச்
சூடிக் கொண்டதும்-அதுவே
ரோஜா பூவின் ராஜா என்று
பெருமை கொண்டது

பஞ்சம் பசியும் பிணியும் உலகை
விட்டு விலகவும்  -எங்கும்
மிஞ்சும் போரை ஒழிக்க வென்று
உறுதிக் கொண்டதும்....

பஞ்ச சீலக் கொள்கை தன்னை
உலகு உய்யவே -தந்து
ஐந்து கண்டம்  புகழும் வண்ணம்
உயர்வு கொண்டதும் .....

முதலாய் இருத்தல்  மட்டும் பெருமை
என்று  இறாது  -அதிலே
தொடர்ந்து இருத்தல்  அதுவே பெருமை
என்று   உணர்ந்ததும் ......

ஐந்து ஆண்டுத் திட்டம் தந்து
பெருமை சேர்த்ததும் -நமது
இந்தி யாவும்  வளர்ந்து சிறக்க
வழியை வகுத்ததும் ......

நமது  வாழ்வு ஏற்றம் கொள்ள
வழியைத்  தந்தது - அதை
உணர்ந்துப்   போற்றி நெஞ்சில் பதித்தல்
மகிழத்  தக்கது -

குழந்தை  நலமே நாட்டின் நலமாய்
மனதில் கொண்டதால்  -என்றும்
குழந்தைக் கூட்டம்   சுற்றி  இருக்க
விருப்பம் கொண்டதால்

குழந்தை  களுக்கே   உரிய தெனது
பிறந்த நாளது -என்று
உவந்து சொன்ன  நேரு மாமா
பிறந்த நாளதில்

அவர்தம்  பெருமை முழுதாய்  அறிந்து
மகிழ்ச்சி  கொள்ளுவோம்  -என்றும்
அவர்தம் கனவை  நிஜமென் றாக்க
உறுதி  கொள்ளுவோம்

7 comments:

ஸ்ரீராம். said...

நேருஜி நினைவைப் போற்றுவோம்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

மனதை வருடும் வரிகள் குழந்தைகள் தினத்துக்கு சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா த.ம3

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை. குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் - நம்முள்ளே இருக்கும் குழந்தைக்கும் சேர்த்து!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ரோஜாவின் ராஜாவை நினைவுகூர்ந்த விதம் அருமை.

KILLERGEE Devakottai said...

அருமை நேரு மாமாவுக்கு எழுதிய கவிதை

ராமலக்ஷ்மி said...

அழகான பாடல்.

G.M Balasubramaniam said...

தொழிற்கூடங்களே ஆலயங்கள் என்று ஓங்கி உரைதவர் பற்றி இன்றைய அறிவு ஜீவிகள் எதையும் பேசுகிறார்கள்

Post a Comment