செய்தி.
தற்கொலை நடப்பதால் NEET தேர்வில் இருந்து விலக்கு கோரும் தீர்மானம். தமிழக சட்டசபையில்.
+2 தேர்வில் தோல்வி.
மனம் உடைந்து மாணவர் தற்கொலை.
+2 தேர்வை தடை செய்யலாம்.
10 th தேர்வு. தோல்வி அல்லது எதிர் பார்த்த மதிப்பெண் வர வில்லை.
தற்கொலை.
10th தேர்வை தடை செய்யலாம்.
அரசியல் கட்சிகளில் முன்னேற முடியாமல் பலர் தற்கொலை.
தான் சார்ந்த கட்சி தோல்வி அடைந்தாலோ, தன் கட்சி தலைவர்களை கைது செய்தாலோ
தொண்டர்கள் தீக்குளித்து தற்கொலை.
அரசியல் கட்சிகளை தடை செய்து விடலாம்.
TNPSC தேர்வில் தோல்வி.
தற்கொலை.
அந்த TNPSC தேர்வுகளை தடை செய்து விடலாம்.
சினிமா துறையில் பலர் தற்கொலை.
சினிமா,OTT, TV serialகளை தடை
செய்து விடலாம்.
சினிமாவே இல்லாத போது தியேட்டர்கள் எதற்கு?
தடை செய்து விடலாம்.
வேலை கிடைக்காமல் பலர் தற்கொலை.
வேலை வாய்ப்பையே தடை செய்து விடலாம்.
IIT, IIM தேர்வில் தோல்வி.
தற்கொலை.
அந்த படிப்புகளை தடை செய்து விடலாம்.
JEE entrance,Tancet, CAT,MAT, SAT நுழைவுத் தேர்வுகளில் தோல்வி.
தற்கொலை.
அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் தடை செய்து விடலாம்.
எனஜினீயரிங் பட்ட படிப்பு தேர்வில் தோல்வி.
தற்கொலை.
அந்த பட்ட படிப்புகளை தடை செய்து விடலாம்.
திருமணம் நடக்காமல் ஏக்கம்.
தற்கொலை.
திருமணங்களை தடை செய்து விடலாம்.
குழந்தை பெற முடியவில்லையே.
தற்கொலை.
குழந்தை பெறுவதையே தடை செய்து விடலாம்.
குடும்ப தகராறு. தற்கொலை.
குடும்பங்களை தடை செய்து விடலாம்.
கிரிக்கெட்டில் இந்தியா தோல்வி.
ரசிகர்கள் தற்கொலை.
கிரிக்கெட்டை தடை செய்து விடலாம்.
வங்கி கடனை கட்ட முடியாமல் தற்கொலை.
வங்கிகள் கடன் கொடுப்பதால்தானே கட்ட முடிவதில்லை.
கடன் கொடுப்பதை தடை செய்து விடலாம்.
காதல் தோல்வி.
தற்கொலை.
காதலையே தடை செய்து விடலாம்.
போலிஸ் தற்கொலை.
காவல் நிலையங்களை மூடி விடலாம்.
வக்கீல் டாக்டர் ஆடிட்டர் எதிர் பார்த்த முன்னேற்றம் இல்லை.
தற்கொலை.
அந்த தொழில்களையே தடை செய்து விடலாம்.
நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பால் பாதிப்படைந்த மனுதாரர் தற்கொலை.
நீதி மன்றங்களை தடை செய்து விடலாம்.
NEET தேர்வு மட்டும் என்ன தவறு செய்தது? அதை மட்டும் தடை செய்ய?
7 comments:
வாழ்வின் மீது விரக்தி - தற்கொலை. வாழ்க்கையையே தடை செய்து விடுவோம். வாழ்க தமிழகம்.
ஒரு வரி எனினும் திருவரி..
ஒரு மருத்துவர் சீட் ஒரு கோடிக்கு மேல். இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் பலதும் கட்சி முக்கியத்துவர்களுடையது. Neet இதை கெடுப்பதால் அதன் மேல் இத்தனை வன்மம்!
மக்கள் மேல் இவ்வளவு அக்கறை இருந்தால் டாஸ்மாக் கடைகளை மூட மாட்டார்களா? இந்த அளவு கூட மக்கள் சிந்திப்பதில்லையா என்று ஆச்சர்யமாக இருக்கிறது!
சரியான தலைப்பு, பதிவு.
தமிழக மக்கள் வித்தியாசமானவர்கள்...அதை நன்றாகப் புரிந்து கொண்டவர்கள் அரசியல்வாதிகள்.அரசியல்வாதிகளை தமிழக மக்கள் புரிந்து கொள்ளாதவரை இந்த அவலங்கள் தொடரவே செய்யும்..அருமையான விரிவான பதிலுரைக்கு வாழ்த்துகள்..
தங்கள் வருகையும் பதிலுரையும் ஊக்கமளிக்கிறது..வாழ்த்துகளுடன்..
இதற்கான தீர்வு இரு குறள்களின் சீர்கள் :-
வாழும் உயிர்க்கு...
எல்லா உயிர்க்கும்...
மேலும் அறிய :-
இருவிழிக் கல்விக்கொள்கை...
https://dindiguldhanabalan.blogspot.com/2021/07/numbers-letters.html
Post a Comment