அனுபவத்தில்
விளைந்து முதிர்ந்தபயனுள்ள வீரியமிக்க விதைகளை
வீணாக்கிவிட விரும்பாது
அறிந்தவர் தெரிந்தவர் அனைவரிடத்திலும்
பயன்பெறட்டும் எனக் கொடுத்துப் போகிறேன்...
மரியாதை நிமித்தம்
பணிவுடன் கனிவுடன்
பெற்றுக் கொண்ட போதிலும்
எவரும் விதைக்கவோ விளைவிக்கவோ
இல்லையெனத் தெரிந்த போது
மிக நொந்து போகிறேன்
இப்போதெல்லாம்
விதைகளை யாரிடமும் கொடுத்தலைத் தவிர்த்து
விதைப் பந்துகளாக்கி
வெளிதனில் வீசிப் போகிறேன்
அது மெல்ல முளைவிட
முகமறியாதவர்கள் ஆயினும்
அதன் மதிப்பறிந்தவர்கள்
அதனைப் போற்றிப் பாதுகாக்க
மிக மகிழ்ந்து போகிறேன்..
7 comments:
அருமை...
அருமை
வணக்கம் சகோதரரே
அருமையான பதிவு. அனுபவங்கள் எனும் விதைப்பந்துகளின் மனம் நோகாமல், அதன் மதிப்பறிந்து தாங்கள் செய்யும் செயல் பாராட்டத்தக்கது. அனுபவ பகிர்வுகள் என்றும் சிறந்த ஒரு பொக்கிஷமானது என்பதை விரைவில் அனுபவபடாதவர்களை காலம் புரிந்து கொள்ள வைக்கும். தங்கள் அழகான அனுபவ பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
விதைப் பந்துகள் நல்ல கான்செப்ட்.
நல்ல விஷயம் செய்கிறீர்கள்
துளசிதரன்
நீங்கள் செய்வதுமிக மிக நல்லவிஷயம்.
விதைப்பந்து இப்போதெல்லாம் சிலர் அவர்கள் வீட்டு விசேஷங்களில் அன்பளிப்பாகக் கொடுக்கிறார்கள். நல்ல விஷயம் போகும் வழியில் திறந்த வெளியில் வீசிப் போகலாம்.
இதைப் பற்றிய மற்றொருகருத்து உண்டு எனக்கு..என் அனுபவம் பதிவாக எழுதி வைத்துள்ளேன்...
கீதா
அருமை.
அருமை.
Post a Comment