சிமெண்ட் கலவை
தயார் செய்யும் முன்
கலவை எந்தப் பயன்பாட்டுக்கு என்பதை
உறுதி செய்து கொள்கிறார் கொத்தனார்
அதைப் பொருத்தே
சிமெண்ட் மணல் தண்ணீரின்
விகித்தாச்சாரத்தை
மிகச் சரியாய்த் தீர்மானிக்கிறார் அவர்.
கரு அமைந்து
கவிதைப் புனையும் முன்
கவிதை எதனைத் திருப்திப்படுத்தவேண்டும் என்பதை
உறுதி செய்து கொள்கிறான் கவிஞன்.
அதைப் பொருத்தே
மொழி,உணர்வு அறிவின்
விகித்தாச்சாரத்தை
மிகக் கவனமாய் முடிவு செய்கிறான் அவன்..
காங்கிரீட்டுக்கு பூச்சுக் கலவை
பூச்சுக்கு காங்கிரீட் கலவை
நிச்சயம் கட்டுமானத்தின்
உறுதித் தனமைக்கு ஊறுவிளைவிக்கும்
ஊணர்வுப்பூர்வமான கருவுக்கு தர்க்கமும்
தர்க்கரீதியான கவிதைக்கு அதீத உணர்வும்
நிச்சயம் கவிதையின்
தரத்தைப் பாழ்ப்படுத்திவிடும்
ஆம்..
கலவையின் கூர் அறிந்து
கட்டுமானம் செய்கின்ற
நல்ல கொத்தனாரும்
சிறந்த கவிஞரே
ஆம்
"கலவையின் "சீர் அறிந்து
கவிதை கட்டுகிற
நல்ல கவிஞரும்
சிறந்த கொத்தனாரே
6 comments:
ஒப்புமை அருமை...
சொல்லப்பட்டிருக்கும் அழகு ஒப்புக் கொள்ள வைக்கிறது.
கட்டமைத்துக் கவி பாடி
சொல் நலம் தேடுவார் கவிஞர்.
கல் அடுக்கிச் சாரம் அமைப்பார்
சுமை தூக்கும் சித்தாள்.
கலவை பூசி சுவர் அமைத்துக்
கட்டிடம் ஆக்குவார் கொத்தனார்.
கையில் தமிழ்த்தாய் வந்தால்
கலவையும் உயிர் பெறும்.
வணக்கம் சகோதரரே
பதிவு அருமை. கவிஞரையும், கலவை பூசி கட்டிடத்தை உருவாக்கும் கொத்தனாரையும் சொற்களால் அழகாக இணைத்திருக்கும் தங்கள் கவிதையை ரசித்தேன். சிறந்த ஒப்பீடு. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எந்த பணியினையும் அதன் தன்மை உணர்ந்து அதற்குத் தக்கவாறு செய்து தருபவரே சிறந்தவர். நல்ல ஒப்புமை.
அருமை
அருமையான ஒப்புமை.
Post a Comment