Tuesday, March 29, 2022

அதுவும் சரிதானே..(படித்ததில் பிடித்தது)

 ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தின 40 நாட்கள் 

என்பது கிறிஸ்துவர்களுக்கு தவக்காலம் ஆகும்.

அந்நாட்களில் அவர்கள் non-veg உணவு சாப்பிட மாட்டார்கள்.


ரோம் நகரில் ஒரு பஞ்சாபி இருந்தார். அவருக்கு தினசரி சிக்கன் இல்லாமல் சாப்பிட முடியாது😂


ஒரு முறை அந்த பஞ்சாபி வசித்த அந்த ஏரியாவில் இருக்கும் அனைத்து கிறிஸ்த்தவர்களும் fastingல் இருந்தாங்க..


அதேவேளை பஞ்சாபி வீட்டிலிருந்து கும்முன்னு சிக்கன் குருமா வாசனை வந்தது..


அக்கம்பக்கத்து வீட்டிலிருப்பவர்களுக்கு  வாயில் எச்சில் ஊற ஆரம்பித்தது..

Fasting என்பதால் சாப்பிடவும் முடியல...


சிக்கன் சாப்பிடும் ஆசையையும் தூண்டியது..


அதனால் அக்கம்பக்கத்து வீட்டினர் எல்லாரும் ஒன்று கூடி அந்த பஞ்சாபி வீட்டுக்கு போய் சண்டையிட்டனர்.


நாங்க விரதத்தில் இருக்கோம்..நீ இப்படி non veg சமச்சா ...எங்களுக்கு ஆசை வராதா? ன்னு கேட்டனர்..


இனி 40 நாட்களுக்கு veg உணவு தான்.. நீங்க சாப்பிடணும் னு சொல்விட்டு போய்ட்டாங்க..

இவரும் மண்டைய ஆட்டினார்.


மறுநாள் மதியம் பஞ்சாபி வீட்டில் சிக்கன் fry

வாசனை அனைவரின் மூக்கையும் துளைத்தது..


அக்கம்பக்கத்தினர் ஒரு முடிவுக்கு வந்தனர்..


எல்லோரும் அந்த பகுதியில் உள்ள பாதிரியாரிடம் சென்று complaint செய்தனர்.


பாதிரியார் அந்த பஞ்சாபியை நேரில் அழைத்து அறிவுரை கூறி.. சிக்கன் சமைக்காதே என்று சொல்லி அனுப்பினார்..


மறுநாள் மதியம் பஞ்சாபி வீட்டில் சிக்கன் தந்தூரி


இந்த முறை வாசனை ரொம்ப சூப்பர் போல

எல்லோரும் திபு திபு னு பாதிரியாரிடம் ஓடினார்கள்....


பாதிரியாருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை....


அவருக்கு தெரிந்த, அடிக்கடி செய்யும், ஒரு ஐடியாவை பண்ணினார்....

அந்த பஞ்சாபியை கிறிஸ்துவரா ஞானஸ்நானம் பண்ணி விட்ருவோம் என்று முடிவு பண்ணினார்..


மறுநாள் அவரை அழைத்து.. கிறிஸ்துவின் பல விஷயங்களை எடுத்து கூறி அவரை ஒரு தண்ணீர் தொட்டியில்  மூன்று முறை முக்கி ஞானஸ்நானம் கொடுத்து கிறிஸ்துவரா மாற்றினார்..


"உன் பேர் என்ன ?

"சுக்விந்தர் சிங் "


"இன்று முதல் நீ சாமுவேல் சாமுவேல் சாமுவேல்" ன்னு தண்ணில மூன்று முறை முக்கி சொன்னார்.


இன்று முதல் 40 நாளுக்கு நீ சிக்கன் சாப்பிடக் கூடாது, 

ஜீஸஸ் மீது ஆணை ன்னு சொல்ல, சாமுவேல் என்ற சுக்விந்தரும் ஒப்புக்கொண்டார்


எல்லோருக்கும் நிம்மதி..


பாதிரியார்க்கு  பெருமிதம்.


அனைவரும் மறுநாள் மதியம் ஆவலுடன் வெய்ட் பண்னாங்க..

பஞ்சாபி என்ன செய்றான் என்று பார்க்க..


மதியம் திரும்பவும் பஞ்சாபி வீட்ல இருந்து சிக்கன் வாசனை வந்தது..


எல்லோரும் மீண்டும் பாதிரியாரிடம் முறையிட ..

பாதிரியார் பஞ்சாபியை அழைத்து விசாரிக்க.....


பஞ்சாபியோ, நான் ஜீசஸ் மீது.. சத்தியம் பண்ணிருக்கேன்..நான் இன்னிக்கி சத்தியமா சிக்கன் சாப்பிடல potato தான் சமைத்தேன் னு சொல்ல..


கூட இருந்தவர்கள் மறுத்தனர்..


இல்லை.. நான் பொய் சொல்லவில்லை என்று சத்தியம் செய்து விட்டு போய்விட்டார் பஞ்சாபி..


மறுநாளும் அதே கதை..கூப்பிட்டு கேட்டா...நான் சமச்சது potato ன்னு பஞ்சாபி சாதித்தார்


என்னடா இது...

மக்கள் complaint பண்றாங்க..

இவரோ ஜீசஸ் மீது சத்தியம் பண்றாரே...

யாரு பொய் சொல்றா னு தெரியவில்லையே என்று சந்தேகத்துடன் பாதிரியார், மறுநாள் அந்த பஞ்சாபி க்கே தெரியாமல்..அவர் கிச்சனில் என்ன நடக்குதுன்னு எட்டி பார்த்தார்..


பார்த்த பாதிரியார் மயங்கி விழுந்து விட்டார்


ஏனென்றால்...


அந்த பஞ்சாபி ஒரு full சிக்கன் ஐ எடுத்து அதை ஒரு பக்கெட் டில் மூன்று முறை முக்கி முக்கி..


இன்றிலிருந்து நீ சிக்கன் இல்லை ..


Potato..

Potato..

Potato..


ன்னு சொல்லிக்கொண்டு இருந்தார்...

5 comments:

ஸ்ரீராம். said...

:)))

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... ஹா... ஹா...

Jayakumar Chandrasekaran said...

நல்ல டமாஸ்

வெங்கட் நாகராஜ் said...

ஹாஹா..... படித்தேன் ... ரசித்தேன்.....

Anonymous said...

Nice post thank you Robert

Post a Comment