The Kashmir Files : படம் பார்த்தாச்சா !
மதுரையில் மதுரை மாநகர பாஜக சார்பில் நாளை 16.03.22 மாலை 5.30 க்கு சக்தி தியேட்டரில் இலவச ஷோ நடைபெற உள்ளது
நண்பர்கள் சிலர் தமிழில் வருமா என்று கேட்டு இருந்தார்கள் ..
சகமனிதர்களின் வலி புரிய மொழி எதற்கு ...
இருந்தாலும்
கூட தமிழில் Subtitle வருது போய் பாருங்க !
ஒரு குறிப்பிட்ட மனிதருக்கு ஏன் இப்படி கோர முடிவுன்னு பலமுறை யோசிச்சது உண்டு ..
1990 இல் அவர் கண்டுக்காமல் விட்ட இந்த கொடுமையின் "கர்மா" என்று இன்று புரிகிறது ..
" ஹே ராம் " படத்தில் ஒரு வசனம் வரும் " ராம் நீ சவுத் இந்தியன் , உனக்கு எங்கள் வலி புரியாதுனு "
100% உண்மை ... வலி என்று இதனை சொல்வது சாதாரண வார்த்தை ..ரணம் ..
உன் வீட்டு பெண்களையும் ,குழந்தையையும் விட்டுட்டு , நீ இந்த இடத்தை விட்டு ஓடி போயிடுனு துப்பாக்கி முனையில் எந்த சவுத் இந்தியன் கேட்டு இருக்கான் ?
அடிபட்ட தீவிரவாதிக்கு துப்பாக்கி முனையில் ரத்தம் கொடுக்க வெச்சு , கொடுத்தவரையே துடி துடிக்க ..
இன்று எங்கோ உக்ரைனில் நடந்த நிகழ்வுக்கு இங்கே எத்தனை கூக்குரல் ,அதுவும் அரசு இந்த அளவிற்கு உழைத்து மீட்டு எடுக்கும்போதே ..
ஜஸ்ட் 30 ஆண்டுகளுக்கு முன்னாள் ,நாம் இங்கே ஜாலியாக "அஞ்சலியும் ,தளபதியும்" பார்த்து கொண்டு இருந்த போது ஒரு சமூகமே நம் சொந்த நாட்டில் அகதிகளாக இருந்துள்ளார்கள் ..
மத்திய அரசு , மிலிட்டரி ,படைகள் இருந்தும் ?
ஒரு ஆதரவு குரல் ?
இன்று ஏன் வடக்கில் "மோடிஜியை" பலர் கடவுளாக பார்க்கிறார்கள் என்பதற்கும் பதில் கிடைக்கும் ..
ஆர்டிகிள் 370 யை நீக்கி இன்று அங்கே இயல்பு நிலையை கொண்டுவந்தது சாதாரண விஷயம் இல்லை
JNU போன்ற பல்கலைக்கழகங்களில் உள்ள அர்பன் நக்சல்கள் நாட்டின் மாணவர்களிடையே எப்படி பிரிவினை நச்சை பரப்புகிறார்கள் என்பதை தெளிவாக சொல்கிறது ..
இந்த படத்தை பற்றி பல மீடியாக்கள் பேசமாட்டார்கள், பின்ன செப்டிக் டேங்கிற்குள் அவர்களை தள்ளிவிட்டு பிறகு தூக்கி வெளியே உக்கார வைக்கும் படி வசனங்கள் ..
இந்த படத்தின் டைரக்டர் விவேக் அக்னியோத்தரி : இவரின் காலில் ஏன் பண்டிட்டுகள் விழுந்து நன்றி சொன்னார்கள் என்று இப்போ புரிகிறது ..
நடுநிலைகளுக்கு சுருன்னு உரைக்கும் ...உணர்வு என்று ஒன்று இருந்தால் ...
Must Watch .....
இந்த பதிவை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பகிருங்கள்
4 comments:
தியேட்டருக்குச் சென்றுதான் பார்க்க முடியுமா? ஓட்டிட்டியில் கிடைக்கிறதா?
// நடுநிலைகளுக்கு சுருன்னு உரைக்கும் ...உணர்வு என்று ஒன்று இருந்தால் ...//
உணர்வு!..
அதுதான் எந்த வடிவிலும் இல்லாமல் போனதே!..
படம் குறித்து நிறைய தளங்களில் பார்த்தேன். படம் பார்க்க வேண்டும்.
படம் பற்றி வாசித்த வரையும் ட்ரெய்லர் பார்த்த வரை மனம் திடமாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது
கீதா
Post a Comment