இப்போது சினிமா பார்ப்பவர்களுக்கெல்லாம்
தெரியும் முதலில் நன்றி சொல்லும்போதெல்லாம்
பத்திரிக்கையாளர்கள்,ஊடகவியலார்கள்,
தொலைக்காட்சி நண்பர்களுடன்
வலைத்தள நண்பர்களுக்கும் மறக்காது
சொல்லிப் போவது....
அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை
முன்னர் சொன்ன மூவரை விட மிக விரைவாக
அழுத்தமாக ஒரு படம் குறித்த விமர்சனத்தைத்
தருபவர்கள் வலைத்தள நண்பர்களே
விளையாட்டாகச் சொன்னால் சைக்கிள்
கேப்பில் என்பதைப் போல....
இடைவேளையில் கிடைக்கிற இடைவெளியில்
கூட அதுவரையிலான படம் குறித்த விமர்சனத்தைப்
பதிவு செய்வதைக் கூட நாம் படித்திருக்கிறோம்
காக்கா முட்டையின் வெற்றிக்கும்,
சூர்யாவின் ஒரு படம் பட்ட பாட்டுக்கும்
சிம்புவின் வம்பினை வீதிவரை கொண்டு
வந்ததற்கும் வலைத்தளமே,பத்திரிக்கைகளை விட
முக்கிய காரணம் என்றால் அது மிகையில்லை
சமீபத்தில் சென்னையில் நேர்ந்த வெள்ள அவலம்
குறித்து அதிகம் பதிவு செய்ததும்.
வேண்டுதல்கள் மூலம் அதிக உதவிகளைச்
சேர்த்துக் கொடுத்ததும் வலைத்தளம் மற்றும்
நமது சகோதர டுவிட்டரும்
முக நூலும் என்பது அனைவரும் அறிந்தததே
இப்படி சமூகத்தில் உடனடி பாதிப்பினை
ஏற்படுத்த வாய்ப்புள்ள பலமான சக்தியாக
வலைத்தளம் இருப்பதோடு அல்லாது...
தமிழின் அருமை பெருமை,தமிழரின் தொன்மை
குறித்து அறியவும் ,அறிந்து தெளியவும்
தவறின்றி மொழியினை எழுதப் பழகவும்
கவிதை இலக்கணம்,அருமையான கவிதைகள்
கட்டுரைகள் படித்துக் கற்றுத் தேறவும் பயனுள்ள
தளமாக அல்லாது...
தூரம் தொலைவினை வெட்டிச் சாய்த்து
உலக அளவில் ஒருங்கிணையவும்,
நட்பைனை வளர்த்து உறவாடவும் அல்லாது..
இப்படி அல்லாது அல்லாது எனச் சொல்லிக் கொண்டே
போகிற அளவு சக்தி மிக்க ஊடகமான இந்த
வலைத்தளத்தினை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்த
பயிற்சிப்பெறவும் ,அதன் மூலம் இந்தச் சமூகத்திற்கு
இன்னும் கூடுதலாக பயன்படும்படியாகச் செய்யவும்
நமக்கு ஒரு அமைப்புத் தேவை என்பதை அனைவரும்
அறிந்திருக்கிறோம்
அதன் காரணமாகவே கடந்த சில ஆண்டுகளாக
பதிவர் சந்திப்புகளை நடத்தி அதற்கான
அஸ்திவாரமும் அமைத்து விட்டோம்
புதுகை பதிவர் சந்திப்பு இன்னும்
அதிக நம்பிக்கையையும் வாய்ப்பின் வழிகளையும் ,
நமது பலத்தையும் மிகத் தெளிவாகக்
காட்டிவிட்ட பின்னும் அதன் தொடர்ச்சியாய்
காரியங்கள் தொடராது ஒரு தேக்க நிலையில்
இருப்பதற்குக் காரணமே இது குறித்து யோசிக்கவும்
செயல்படவும் பரவலாக அனைவரையும் உள்ளடக்கிய
ஒரு மைய அமைப்பு இல்லாததே என்பது
என் எண்ணம்
இது குறித்து அனைவரும் கருத்தினைப்பதிவு செய்தால்
அடுத்து அடுத்து செயல்பட வசதியாய் இருக்கும்
இப்போதிருந்து ஆரம்பித்தால் இன்னும் ஆறு மாதத்தில்
நடக்க இருக்கிற பதிவர் சந்திப்பில் ஒருமுழுமையான
முடிவுக்கு வரவும்,செயல்படத் துவங்கவும்
வசதியாக இருக்கும் என்பதாலேயே இந்தப் பதிவினை
இப்போது எழுத வேண்டி வந்தது
மூத்த பதிவர் ஜி எம்.பி.அவர்கள் இது குறித்து
பதிவிடுவதாகப் பதிவிட்டிருப்பது நம்பிக்கையளிக்கிறது
அனைவரின் பதிவுகளையும்,ஆலோசனைகளையும்
ஆவலுடன் எதிர்பார்த்து....
தெரியும் முதலில் நன்றி சொல்லும்போதெல்லாம்
பத்திரிக்கையாளர்கள்,ஊடகவியலார்கள்,
தொலைக்காட்சி நண்பர்களுடன்
வலைத்தள நண்பர்களுக்கும் மறக்காது
சொல்லிப் போவது....
அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை
முன்னர் சொன்ன மூவரை விட மிக விரைவாக
அழுத்தமாக ஒரு படம் குறித்த விமர்சனத்தைத்
தருபவர்கள் வலைத்தள நண்பர்களே
விளையாட்டாகச் சொன்னால் சைக்கிள்
கேப்பில் என்பதைப் போல....
இடைவேளையில் கிடைக்கிற இடைவெளியில்
கூட அதுவரையிலான படம் குறித்த விமர்சனத்தைப்
பதிவு செய்வதைக் கூட நாம் படித்திருக்கிறோம்
காக்கா முட்டையின் வெற்றிக்கும்,
சூர்யாவின் ஒரு படம் பட்ட பாட்டுக்கும்
சிம்புவின் வம்பினை வீதிவரை கொண்டு
வந்ததற்கும் வலைத்தளமே,பத்திரிக்கைகளை விட
முக்கிய காரணம் என்றால் அது மிகையில்லை
சமீபத்தில் சென்னையில் நேர்ந்த வெள்ள அவலம்
குறித்து அதிகம் பதிவு செய்ததும்.
வேண்டுதல்கள் மூலம் அதிக உதவிகளைச்
சேர்த்துக் கொடுத்ததும் வலைத்தளம் மற்றும்
நமது சகோதர டுவிட்டரும்
முக நூலும் என்பது அனைவரும் அறிந்தததே
இப்படி சமூகத்தில் உடனடி பாதிப்பினை
ஏற்படுத்த வாய்ப்புள்ள பலமான சக்தியாக
வலைத்தளம் இருப்பதோடு அல்லாது...
தமிழின் அருமை பெருமை,தமிழரின் தொன்மை
குறித்து அறியவும் ,அறிந்து தெளியவும்
தவறின்றி மொழியினை எழுதப் பழகவும்
கவிதை இலக்கணம்,அருமையான கவிதைகள்
கட்டுரைகள் படித்துக் கற்றுத் தேறவும் பயனுள்ள
தளமாக அல்லாது...
தூரம் தொலைவினை வெட்டிச் சாய்த்து
உலக அளவில் ஒருங்கிணையவும்,
நட்பைனை வளர்த்து உறவாடவும் அல்லாது..
இப்படி அல்லாது அல்லாது எனச் சொல்லிக் கொண்டே
போகிற அளவு சக்தி மிக்க ஊடகமான இந்த
வலைத்தளத்தினை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்த
பயிற்சிப்பெறவும் ,அதன் மூலம் இந்தச் சமூகத்திற்கு
இன்னும் கூடுதலாக பயன்படும்படியாகச் செய்யவும்
நமக்கு ஒரு அமைப்புத் தேவை என்பதை அனைவரும்
அறிந்திருக்கிறோம்
அதன் காரணமாகவே கடந்த சில ஆண்டுகளாக
பதிவர் சந்திப்புகளை நடத்தி அதற்கான
அஸ்திவாரமும் அமைத்து விட்டோம்
புதுகை பதிவர் சந்திப்பு இன்னும்
அதிக நம்பிக்கையையும் வாய்ப்பின் வழிகளையும் ,
நமது பலத்தையும் மிகத் தெளிவாகக்
காட்டிவிட்ட பின்னும் அதன் தொடர்ச்சியாய்
காரியங்கள் தொடராது ஒரு தேக்க நிலையில்
இருப்பதற்குக் காரணமே இது குறித்து யோசிக்கவும்
செயல்படவும் பரவலாக அனைவரையும் உள்ளடக்கிய
ஒரு மைய அமைப்பு இல்லாததே என்பது
என் எண்ணம்
இது குறித்து அனைவரும் கருத்தினைப்பதிவு செய்தால்
அடுத்து அடுத்து செயல்பட வசதியாய் இருக்கும்
இப்போதிருந்து ஆரம்பித்தால் இன்னும் ஆறு மாதத்தில்
நடக்க இருக்கிற பதிவர் சந்திப்பில் ஒருமுழுமையான
முடிவுக்கு வரவும்,செயல்படத் துவங்கவும்
வசதியாக இருக்கும் என்பதாலேயே இந்தப் பதிவினை
இப்போது எழுத வேண்டி வந்தது
மூத்த பதிவர் ஜி எம்.பி.அவர்கள் இது குறித்து
பதிவிடுவதாகப் பதிவிட்டிருப்பது நம்பிக்கையளிக்கிறது
அனைவரின் பதிவுகளையும்,ஆலோசனைகளையும்
ஆவலுடன் எதிர்பார்த்து....
11 comments:
மைய அமைப்பு எத்தனை பேரைக்கொண்டதாக இருக்கலாம்?
அதன் பணிகள் என்னவாக இருக்கும்?
மெம்பர்ஷிப் என்று தொடங்கி, பெயர்ப்பதிவு, கட்டணம் என்று நிர்ணயிக்கப்படுமா?
இவை என் கேள்விகளே தவிர, யோசனை அல்ல.
மைய அமைப்பு என்றால்....
இதனுடன் ஸ்ரீராம் கேட்டிருப்பதும் கேட்க் நினைத்தவை...
ஸ்ரீராம். sir..
முதலில் மாவட்ட ரீதியாக விருப்பமுள்ளவர்களை
அமைப்பாளர்களாக நியமனம் செய்து அவர்கள் மூலம்
நீங்கள் குறிப்பிட்டுள்ள விஷயங்களையெல்லாம்
கலந்து பேசி அமைப்பு விதிகளை உருவாக்கி
அதனை வலைத்தளத்தில் வெளியிட்டு
அனைத்து வலைப்பதிவர்களின் கருத்தைக் கோரலாம்
பின்னர் அதனை அடுத்து நடைபெற உள்ள
பதிவர் மா நாட்டில் ஒப்புதல் பெற்று அமல் படுத்தலாம்
கடைசியாக பதிவர் சந்திப்பை முடித்தவர்கள் என்கிற
நிலையில் ஆரம்ப முயற்சியை புதுகைப் பதிவர்கள்
துவங்கினாலும்,அல்லது இது சம்பந்தமாக
முயன்றுள்ள சென்னைப் பதிவர்கள் துவங்கினாலும் சரி
முதலில் ஒருவர் துவங்க வேண்டும்
பின்னால் எல்லாம் தானாய்த் தொடரும்
என்பது என் அபிப்பிராயம்
இப்படி ஒரு அமைப்பு இல்லாததால்
அடுத்த சந்திப்பு எங்கு என்று யார்
கேட்பது,யாரிடம் கேட்பது எனக் கூடப்
புரியாத நிலையில் இப்போதிருக்கிறோம்
நல்லதோர் யோசனை. அனைவரும் சேர்ந்து செயல்பட்டால் நிச்சயம் பல நல்ல விஷயங்களைச் செய்ய முடியும்.
நல்ல செய்தி. இப்படி ஒரு அமைப்பு தேவை
சீரிய சிந்தனை ஐயா
புதுவை திரு. முத்து நிலவனிடம் மாவட்ட வாரியாக பதிவர்களின் பட்டியல் இருக்கும். அதில் தலைமைப் பண்பு ஏற்க தகுதியானவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பதிவர்களை உறுப்பினர்களாகச் சேர்க்கச் சொல்லவேண்டும். அந்தந்த மாவட்ட உறுப்பினர்கள் ஒரு செயற்குழு ஏற்படுத்தி ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.இது முடிந்ததும் ஒரு மாநில அமைப்பை இந்த மாவட்ட நிர்வாகிகள் சேர்ந்து உருவாக்கலாம்.
வெளி மாநில பதிவர்கள் அந்தந்த மாநிலத் தலைநகரில் இந்த மாதிரி ஒரு அமைப்பை உருவாக்கிக் கொள்ளலாம்.
நல்லதோர் யோசனை.
அவசியம் தேவைதான்!
முனைப்புடன் செயல் பட்டு முடிவு காணுங்கள்
அடுத்த பதிவர் மாநாடு எங்கே? எப்போது என முடிவெடுக்கவே இல்லையா?
உங்கள் கருத்து கொண்ட பதிவை எதிர்பார்க்கிறேன்
வணக்கம்
ஐயா
நல்ல ஆலோசனையாக உள்ளது நடைமுறைக்கு வந்தால் நல்லது.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment