Tuesday, November 3, 2026

என் முகவரி

 கடலுக்கு அலையே முகவரி

நிலவுக்குப் பனியே முகவரி
மலருக்கு  மணமே முகவரி-என்
மகிழ்விற்கு "அவளே" முகவரி

கொடையதற்குக் கருணை முகவரி
காதலுக்கு அன்பே முகவரி
படையதற்குத் தலைவன் முகவரி-என்
புகழுக்கும்"அவளே" முகவரி

மனதுக்கு நினைவே   முகவரி
நினைவுக்கு மொழியே  முகவரி
பகலுக்கு ஒளியே  முகவரி-என்
உயர்வுக்கும் "அவளே" முகவரி

கடவுளுக்கு கோவில் முகவரி
கனியினுக்கு சுவையே முகவரி
உடலுக்கு முகமதே  முகவரி-ஆம் 
எனக்கென்றும் "கவிதையே   " முகவரி

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

கவிதை உங்கள் முகவரியாக... சிறப்பு. சிறப்பான கண்ணோட்டம். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

Post a Comment