சமீபமாக ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருக்கும் போது எனது இருக்கைக்கு அருகாமையில் இருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி மிகவும் பதட்டமாகவே இருந்தார்...முஹுர்த்த நேரம் நெருங்க நெருங்க இன்னும் பதட்டமாகி திருமண மேடையையும் மண்டப வாயிலையும் திரும்பத் திரும்பப் பார்த்தபடி இன்னும் பதட்டமானார்...அவர் செய்கையைப் பார்க்கப் பார்க்க எனக்கும் நிச்சயம் ஏதோ நடக்கப் போகிறது..போலீஸோ இல்லை யாரோ வந்து எதற்காகவோ திருமணத்தை நிறுத்தப் போகிறார்கள்.அந்த விசயம் எப்படியோ இந்தப் பெண்மணிக்குத் தெரிந்திருக்கிறது..அதனால்தான் இத்தனைப் பதட்டமடைகிறார் எனப் புரிந்து கொண்டு நானும் பதட்டமாய் இருபக்கமாய் மாறி மாறி பார்க்கத் துவங்கினேன்.சிறிது நேரத்தில் கெட்டி மேளம் கெட்டி மேளம் எனச் சப்தம் வர மண மேடை பக்கம் திரும்பி தம்பதிகள் மீது அட்சதையைப் போட்டு ஆசீர்வதித்துவிட்டு அந்தப் பெண்மணியைப் பார்த்தேன்.அவரும் அது மாதிரியே செய்துவிட்டு நெஞ்சில் கைவைத்துப் பெருமூச்சு விட்டு விட்டு ஆண்டவனுக்கு நன்றி சொல்வது போல வானம் நோக்கி கைகளைக் குவித்து வணங்கினார்..எனக்கு இதற்கு மேலும் பொறுமையாய் இருக்க முடியவில்லை..என்ன விசயம் எனத் தெரிந்து கொள்ளாவிட்டால் மண்டைவெடித்துவிடும் போலாகிவிட்டது...பின் இயல்பாக நகர்ந்து அமர்வது போல் அவர் அருகில் அமர்ந்து அவர் யாருக்கு உறவு முறை என்பதையெல்லாம் விசாரித்து கொஞ்சம் இயல்பான நிலைக்கு அவர் வந்ததும் "என்னம்மா ரொம்ப நேரமா உங்களை கவனிச்சுக்கிட்டே வர்றேன்..ரொம்ப டென்ஸனாகவே இருத்தீங்க என்ன காரணம் " என்றேன்.. அவர் நிதானமாகவே பேச ஆரம்பித்தார்.." இப்ப எல்லாம் எந்தக் கல்யாணத்துக்குப் போனாலும் இப்படித்தான் டென்ஸனாயிடுது.தாலி கட்டுறதுக்குள்ளே யாரும் வந்து என்னவோ சொல்லி கல்யாணத்தை நிறுத்திடுவாங்களோன்னு மனசு பட படன்னு அடிச்சிக்கிறுது...அதைத் தடுக்க முடியலே " என்றார்..எனக்குத் தூக்கி வாரிப் போட்டது...அட...இது சீரியல் மெண்டல் எனப் புரிய முதலில் சிரிக்கத் தோன்றியது.பின் யோசித்துப் பார்த்து அடக்கிக் கொண்டேன்..காரணம் முழுப்பைத்தியத்தைப் பார்த்து அரைப்பைத்தியம் சிரிச்சா நல்லாவா இருக்கும்..
Wednesday, January 29, 2020
Wednesday, January 22, 2020
பார்க்க மட்டுமல்ல பகிரவும்
Tuesday, January 21, 2020
சாத்வீகமாய்.....
எங்கள் வீட்டுத் தோட்ட மாமரத்தில்
கைக்கெட்டும் உயரத்தில்
நம்பிக்கையுடன்
கூடுகட்டி முட்டையிட்டு
அடைகாத்துக் கொண்டிருக்கிறது
சிறு பறவை ஒன்று
பறவையினங்களுக்கு எதிராக
நாம் எத்தனைக் கொடுமைகள்
இழைத்த போதும்..
அவைகள் இன்னமும்
நம்மையும் நம்பி அண்டி வாழ முயல்வது
அதன் அன்பை மட்டும்
வெளிக்காட்டுவதாக மட்டும் எனக்குப் படவில்லை
மாறாக நம் சுயநலத்தையும்
வேட்டையாடி உண்ணுதலையே
தருமமாகக் கருதும்
நம் மிருக குணமதனை
சாத்வீகமாய் நமக்குச்
சுட்டிக் காட்டுதலைப் போலவும் ....
கைக்கெட்டும் உயரத்தில்
நம்பிக்கையுடன்
கூடுகட்டி முட்டையிட்டு
அடைகாத்துக் கொண்டிருக்கிறது
சிறு பறவை ஒன்று
பறவையினங்களுக்கு எதிராக
நாம் எத்தனைக் கொடுமைகள்
இழைத்த போதும்..
அவைகள் இன்னமும்
நம்மையும் நம்பி அண்டி வாழ முயல்வது
அதன் அன்பை மட்டும்
வெளிக்காட்டுவதாக மட்டும் எனக்குப் படவில்லை
மாறாக நம் சுயநலத்தையும்
வேட்டையாடி உண்ணுதலையே
தருமமாகக் கருதும்
நம் மிருக குணமதனை
சாத்வீகமாய் நமக்குச்
சுட்டிக் காட்டுதலைப் போலவும் ....
மரணத்திலும் ஒரு ஆறுதல்...
மரணம்
எவ்வகையிலும் யாராலும்
தவிர்க்க இயலாததே.
.
இது மிகத் தெளிவாய்த் தெரிந்தும்
சிலரின் இழப்புகள்
தாங்க முடியாததாகவே
சங்கடப்படுத்திப் போகிறது
ஆனாலும் கூட...
"ஆறு மாதமாய்
மிகவும் அவதிப்பட்டார்
நல்ல வேளை போய்ச் சேர்ந்தார் "
எனக் கேட்பதை விட...
"போனவாரம் கூடப் பார்த்தேனே
மிக நன்றாகத் தானே இருந்தார்
திடீரென என்ன ஆச்சு "
எனக் கேட்க நேர்ந்த மரணங்கள்
கொஞ்சம் ஆறுதல் படுத்தியே போகிறது..
ஆம்
மரணம் எவ்வகையிலும்
யாராலும் தவிர்க்க முடியாததே...
ஆயினும் இனி எப்போதும்
ஆறுதலான மரணத் தகவலே
எல்லோருக்கும் கிடைக்கட்டும் என
வேண்டிக் கொள்வோமாக..
எவ்வகையிலும் யாராலும்
தவிர்க்க இயலாததே.
.
இது மிகத் தெளிவாய்த் தெரிந்தும்
சிலரின் இழப்புகள்
தாங்க முடியாததாகவே
சங்கடப்படுத்திப் போகிறது
ஆனாலும் கூட...
"ஆறு மாதமாய்
மிகவும் அவதிப்பட்டார்
நல்ல வேளை போய்ச் சேர்ந்தார் "
எனக் கேட்பதை விட...
"போனவாரம் கூடப் பார்த்தேனே
மிக நன்றாகத் தானே இருந்தார்
திடீரென என்ன ஆச்சு "
எனக் கேட்க நேர்ந்த மரணங்கள்
கொஞ்சம் ஆறுதல் படுத்தியே போகிறது..
ஆம்
மரணம் எவ்வகையிலும்
யாராலும் தவிர்க்க முடியாததே...
ஆயினும் இனி எப்போதும்
ஆறுதலான மரணத் தகவலே
எல்லோருக்கும் கிடைக்கட்டும் என
வேண்டிக் கொள்வோமாக..
Monday, January 20, 2020
"வாழ்வாங்கு வாழ்பவன் "
ஒரு அபூர்வமான இடத்திற்கு
இன்பச் சுற்றுலா சென்று வந்த பின்...
இன்னும் சரியாய்த் திட்டமிட்டு
கூடுதல் இடங்களை
இரசித்துப் பார்த்திருக்கலாமோ..
ஓய்வெடுத்தலைக் குறைத்து
இன்னும் பயணத்தைப்
பயனுள்ளதாக ஆக்கி இருக்கலாமோ..
என எண்ணி எண்ணி
வருந்துபவனைப் போல் அல்லாது .
அபூர்வமாய் வாய்த்தப் பிறப்பின்
அந்திமக் காலத்தில்.
இன்னும் கூடுதலாய் உழைத்து
பிறருக்குக் கொடுத்து இரசித்திருக்கலாமோ
இன்னும் ஒவ்வொரு நொடியினையும்
நேர்த்தியாய் இரசித்துக் களித்திருக்கலாமோ
என்கிற எண்ணமே தோன்றாதபடி
அப்படியே வாழ்ந்து கொண்டிருப்பவன் எவனோ
அவனே "வாழ்வாங்கு வாழ்பவன் "
எனும் வார்த்தைக்குப் பொருளானவன்
மற்றவரெல்லாம் நிச்சயமாய்
சாகாததால் இங்கிருப்பவர்கள் அவ்வளவே
இன்பச் சுற்றுலா சென்று வந்த பின்...
இன்னும் சரியாய்த் திட்டமிட்டு
கூடுதல் இடங்களை
இரசித்துப் பார்த்திருக்கலாமோ..
ஓய்வெடுத்தலைக் குறைத்து
இன்னும் பயணத்தைப்
பயனுள்ளதாக ஆக்கி இருக்கலாமோ..
என எண்ணி எண்ணி
வருந்துபவனைப் போல் அல்லாது .
அபூர்வமாய் வாய்த்தப் பிறப்பின்
அந்திமக் காலத்தில்.
இன்னும் கூடுதலாய் உழைத்து
பிறருக்குக் கொடுத்து இரசித்திருக்கலாமோ
இன்னும் ஒவ்வொரு நொடியினையும்
நேர்த்தியாய் இரசித்துக் களித்திருக்கலாமோ
என்கிற எண்ணமே தோன்றாதபடி
அப்படியே வாழ்ந்து கொண்டிருப்பவன் எவனோ
அவனே "வாழ்வாங்கு வாழ்பவன் "
எனும் வார்த்தைக்குப் பொருளானவன்
மற்றவரெல்லாம் நிச்சயமாய்
சாகாததால் இங்கிருப்பவர்கள் அவ்வளவே
Saturday, January 18, 2020
தலாக்......மறுமுகம்
என் பள்ளிக் காலங்களிலும்
கல்லூரிக் காலங்களிலும் மட்டுமல்ல
இப்போது நான் வாழும் பகுதியில் கூட எனக்கு
முஸ்லீம் நண்பர்கள் அதிகம்..
அப்படிப் பழகியவர்களில் பழகுபவர்களில்
என் அதிஷ்டமோ என்னவோ இதில் அதித்தீவிர
மதவாதிகள் அவ்வளவாக இருந்ததில்லை
இப்போதும் இல்லை
காரணம் அப்படி இருந்த ஒரு சிலர் கூட
இவன் அதுக்கு ஒத்து வரமாட்டான் என
ஒரு விலகிப் போய் இருக்கிறார்கள்...
காரணம் அப்படிப்பட்டவர்களிடம் நான்
மிகத் தெளிவான ஒன்றைச் சொல்லி விடுவதுண்டு
"நான் இதுவரை அல்லாவைத் தொழுததில்லை
நீங்கள் இதுவரை இராமரையோ கிருஷ்ணரையோ
கும்பிட்டதில்லை.இருவரும் கெட்டுப் போகவில்லை
அதைப் போலவே நீங்கள்
அல்லாவை நம்பித் தொழுகிறீர்கள்
நான் என் தெய்வங்களை நம்பிக் கும்பிடுகிறேன்
இருவரும் நன்றாக இருக்கிறோம்
இது அவரவர் நம்பிக்கை சம்பத்தப்பட்ட விஷயம்
நம்பிக்கையால் விளையும் விஷ்யம்
இதில் தெய்வங்கள் கூட இரண்டாம்பட்சம்தான்
எனத் தெளிவாகச் சொல்லிவிடுவதுண்டு
அவர்கள் இந்து கோவிலுக்கு வருவதில்லை
கும்பிடுவதில்லை பிரசாதம் சாப்பிட மாட்டேன்
என மறுப்பார்கள்
நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை
நான் அவர்கள் மசூதிக்கும் அழைப்பின் பேரில்
சென்றிருக்கிறேன்.கூடுமானவரையில் எல்லா
வருடமும் அவர்கள் அழைப்பின் பேரில்
நோன்பு திறக்கச் சென்றுகொண்டிருக்கிறேன்
சில குறிப்பிட்ட நண்பர்கள் ஒவ்வொரு வருடமும்
வீட்டிற்கே நோன்புக் கஞ்சியை வந்து
கொடுத்துப் போவார்கள்
இவ்வளவு விரிவான முன்னுரை கூட
உங்களுக்கு அவர்களைப் பற்றி என்ன தெரியும்
என எளிதாகச் சொல்லி விடக்கூடாது
என்பதற்காகத்தான்
இப்படிப் பட்ட சூழலில் எனக்கு மிகவும்
பழக்கமான ஜமாத் தலைவராக இருக்கிற நண்பர்
நான் நண்பர்களுடன் அமர்ந்திருந்த இடம் வந்தவர்
"மாமா மாப்பிள்ளை எல்லோரும் கொஞ்சம்
இதைக் கவனியுங்க.இன்னைக்கு நம்ப ஜமாத்துல
பெரிய கூத்து நடந்து போச்சு,,
சிரிப்பை அடக்க முடியவில்லை
நீங்கள் கேட்டாலும் அடக்க முடியாது "என
அவர் பாணியில் சபதம் போட்டுச் சிரிக்க
ஆரம்பித்து விட்டார்
நகைச்சுவையாய் பேசுவதில் பொதுக் காரியங்களுக்கு
எப்போதும் முன் நிற்பதில் பொது விஷயயங்களுக்காக
தனிப்பட்ட பணத்தைச் செலவு செய்வதில்
எப்போதும் அவர் முன்னணியிலேயே இருப்பார்
அதனாலேயே நாங்கள் எங்கள் பொது அமைப்பு
ஒன்றுக்கும் அவரையே தலைவராக வைத்திருந்தோம்
அந்த வகையில் அவர் எல்லோருக்கும் மிக நெருக்கம்
அவர் பேச ஆரம்பித்தார்....
"எங்கள் ஜமாத்தில் கணவன் மனைவிக்கு
சரிப்பட்டு வரவில்லை.நாங்களும்ஜமாத்தில் ஒன்று
சேர்க்க முயற்சித்து முடியாது போக தலாக்
சொல்லவைத்து பிரித்து வைத்துவிட்டோம்
இது நடந்து ஆறு மாத காலம் ஆகிவிட்டது
பிரிந்திருந்ததாலோ என்னவோ அல்லது
ஒருவரை ஒருவர் தவறாகப்
புரிந்து கொண்டாதாக பிறர் மூலம் அறிந்ததாலோ
என்னவோ மீண்டும் சேர்ந்து வாழ விரும்புவதாக
ஜமாத்துக்கு தகவல் தெரிவித்தார்கள்
எங்கள் வழக்கப்படி தலாக் சொல்லி விலக்கி
வைக்கப்பட்டவர்கள் மீண்டும் ஒன்றாக வாழ
விருப்பம் தெரிவித்தாலும் அந்தப் பெண்
வேறு ஒருவருடன் ஒரு நாள் இரவைத் தனியாகக்
கழிக்கவேண்டும்
அந்த வகையில் இந்தப் பெண்ணும் ஒரு ஆணுடன்
தனியாக இருக்கவேண்டும் என்பதற்காக
நானே தவறு ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காக
கொஞ்சம் வயதானவரைத் தேர்ந்தெடுத்து
அவரிடம் பக்குவமாய் நாளை கணவன் மனைவியையும்
அவர்கள் விருப்பப்படி சேர்த்து வைக்க இருக்கிறோம்
நம் விதிமுறைப்படி ஒரு நாள் பிறருடன் இருக்கவேண்டும்
என்பதற்காக அனுப்பி வைக்கிறோம்.தப்பு தண்டா இல்லாம
இருந்துக்கோ என சொல்லி அனுப்பி வைத்தோம்"
எனச் சொல்லிவிட்டு மீண்டும் குலுங்கிக் குலுங்கி
சிரிக்கத் துவங்கிவிட்டார்....
"பாய் சொல்லிட்டுச் சிரிங்க .நாங்களும் சேர்ந்து
சிரிப்போம் இல்ல " என நண்பன் சொல்ல
பாய் சிரித்தபடியே சொல்ல ஆரம்பித்தார்
"சொல்றேன் சொல்றேன்.மறுநாள் நாங்க
இவங்களைச் சேர்த்து வைக்கலாம் எனச் சொல்லி
எங்கள் வழக்கப்படி என்னம்மா நீ உன்
புருஷனோடு சேர்ந்திருக்கச் சம்மதமா எனக் கேட்க..
படுபாவிப்பய என்ன சொல்லி மனசை மாத்தினானோ
இல்லை என்ன செஞ்சி மனசை மாத்தினானோ
தெரியலை...நான் இவரோடயே இருந்துக்கறேன்
புருஷன் வேண்டாம் எனச் சொல்லிவிட்டார்"
எனச் சொல்லிவிட்டு சப்தம் போட்டு
மீண்டும் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்..
எனக்கும் என் நண்பர்களுக்கும் பெரும் அதிர்ச்சி
இதுவரை இப்படி ஒரு நடைமுறைப் பழக்கம்
அவர்களிடம் இருக்கும் என்பது சத்தியமாய்
தெரியாது
இப்படியொரு மோசமான விஷயம் அவர்களுக்குள்
இருந்ததானால் எத்தனை பேர் அதிகம்
பாதிக்கப்பட்டிருப்பார்கள் என எண்ணிப் பார்க்க
அதிர்ச்சியாய் இருந்தது...
இதன் காரணமாகவே முத்தலாக் குறித்து
பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவிக்கும் வகையில்
மௌனம் காக்க அதனால் பயன் அனுபவித்த
சிலரே (இவர்களைத்தான் அல்லக்கைகள்
எனச் சொல்வதுண்டு இவர்கள் தான் சில இயக்கங்கள்
மத ஸ்தாபனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளில்
இருந்து கொண்டு பெருவாரியான மக்களை
பொய்ப்பிரச்சாரம் மூலம் திசைத் திருப்புவது )
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து
சில நாள் போராடி ஓய்ந்தும் போனார்கள்
என நினைக்கிறேன்.
எந்த மதமாயினும் மதத்தை வைத்து
பிழைப்பவர்கள் அல்லது சுகத்தை அனுபவிப்பவர்களே
மதத்தின் பெயரால் ....இதுபோன்று
எந்த நோக்கத்திற்காக சில சம்பிரதாயங்கள்
ஏற்படுத்தப்பட்டதோ அதனைமிகச் சரியாகப்
புரிந்து கொள்ளாது
தங்கள் சுய நலத்திற்குப் பயன்படுத்துவதால்தான்
மதம் குறித்து ஒரு மோசமான அபிப்பிராயம்
ஏற்படக் காரணமாவதோடு பகுத்தறிவு வாதிகள்
எனச் சொல்லிக் கொள்வோர் அதைத் தங்களுக்கு
சாதகமாக பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக்
கொள்கிறார்கள் என்பதைச் சொல்லவும்...
.(மிகக் குறிப்பாக இந்து மதத்திற்கு எதிராக மட்டும்)
மூட நம்பிக்கை என்பது ஒரு மதத்தில் தான் உண்டு
என்பதில்லை எல்லா மதத்திலும்
எதன் காரணமாகவோ உண்டு
என்பதைச் சொல்லவுமே இந்தப் பதிவு..
கல்லூரிக் காலங்களிலும் மட்டுமல்ல
இப்போது நான் வாழும் பகுதியில் கூட எனக்கு
முஸ்லீம் நண்பர்கள் அதிகம்..
அப்படிப் பழகியவர்களில் பழகுபவர்களில்
என் அதிஷ்டமோ என்னவோ இதில் அதித்தீவிர
மதவாதிகள் அவ்வளவாக இருந்ததில்லை
இப்போதும் இல்லை
காரணம் அப்படி இருந்த ஒரு சிலர் கூட
இவன் அதுக்கு ஒத்து வரமாட்டான் என
ஒரு விலகிப் போய் இருக்கிறார்கள்...
காரணம் அப்படிப்பட்டவர்களிடம் நான்
மிகத் தெளிவான ஒன்றைச் சொல்லி விடுவதுண்டு
"நான் இதுவரை அல்லாவைத் தொழுததில்லை
நீங்கள் இதுவரை இராமரையோ கிருஷ்ணரையோ
கும்பிட்டதில்லை.இருவரும் கெட்டுப் போகவில்லை
அதைப் போலவே நீங்கள்
அல்லாவை நம்பித் தொழுகிறீர்கள்
நான் என் தெய்வங்களை நம்பிக் கும்பிடுகிறேன்
இருவரும் நன்றாக இருக்கிறோம்
இது அவரவர் நம்பிக்கை சம்பத்தப்பட்ட விஷயம்
நம்பிக்கையால் விளையும் விஷ்யம்
இதில் தெய்வங்கள் கூட இரண்டாம்பட்சம்தான்
எனத் தெளிவாகச் சொல்லிவிடுவதுண்டு
அவர்கள் இந்து கோவிலுக்கு வருவதில்லை
கும்பிடுவதில்லை பிரசாதம் சாப்பிட மாட்டேன்
என மறுப்பார்கள்
நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை
நான் அவர்கள் மசூதிக்கும் அழைப்பின் பேரில்
சென்றிருக்கிறேன்.கூடுமானவரையில் எல்லா
வருடமும் அவர்கள் அழைப்பின் பேரில்
நோன்பு திறக்கச் சென்றுகொண்டிருக்கிறேன்
சில குறிப்பிட்ட நண்பர்கள் ஒவ்வொரு வருடமும்
வீட்டிற்கே நோன்புக் கஞ்சியை வந்து
கொடுத்துப் போவார்கள்
இவ்வளவு விரிவான முன்னுரை கூட
உங்களுக்கு அவர்களைப் பற்றி என்ன தெரியும்
என எளிதாகச் சொல்லி விடக்கூடாது
என்பதற்காகத்தான்
இப்படிப் பட்ட சூழலில் எனக்கு மிகவும்
பழக்கமான ஜமாத் தலைவராக இருக்கிற நண்பர்
நான் நண்பர்களுடன் அமர்ந்திருந்த இடம் வந்தவர்
"மாமா மாப்பிள்ளை எல்லோரும் கொஞ்சம்
இதைக் கவனியுங்க.இன்னைக்கு நம்ப ஜமாத்துல
பெரிய கூத்து நடந்து போச்சு,,
சிரிப்பை அடக்க முடியவில்லை
நீங்கள் கேட்டாலும் அடக்க முடியாது "என
அவர் பாணியில் சபதம் போட்டுச் சிரிக்க
ஆரம்பித்து விட்டார்
நகைச்சுவையாய் பேசுவதில் பொதுக் காரியங்களுக்கு
எப்போதும் முன் நிற்பதில் பொது விஷயயங்களுக்காக
தனிப்பட்ட பணத்தைச் செலவு செய்வதில்
எப்போதும் அவர் முன்னணியிலேயே இருப்பார்
அதனாலேயே நாங்கள் எங்கள் பொது அமைப்பு
ஒன்றுக்கும் அவரையே தலைவராக வைத்திருந்தோம்
அந்த வகையில் அவர் எல்லோருக்கும் மிக நெருக்கம்
அவர் பேச ஆரம்பித்தார்....
"எங்கள் ஜமாத்தில் கணவன் மனைவிக்கு
சரிப்பட்டு வரவில்லை.நாங்களும்ஜமாத்தில் ஒன்று
சேர்க்க முயற்சித்து முடியாது போக தலாக்
சொல்லவைத்து பிரித்து வைத்துவிட்டோம்
இது நடந்து ஆறு மாத காலம் ஆகிவிட்டது
பிரிந்திருந்ததாலோ என்னவோ அல்லது
ஒருவரை ஒருவர் தவறாகப்
புரிந்து கொண்டாதாக பிறர் மூலம் அறிந்ததாலோ
என்னவோ மீண்டும் சேர்ந்து வாழ விரும்புவதாக
ஜமாத்துக்கு தகவல் தெரிவித்தார்கள்
எங்கள் வழக்கப்படி தலாக் சொல்லி விலக்கி
வைக்கப்பட்டவர்கள் மீண்டும் ஒன்றாக வாழ
விருப்பம் தெரிவித்தாலும் அந்தப் பெண்
வேறு ஒருவருடன் ஒரு நாள் இரவைத் தனியாகக்
கழிக்கவேண்டும்
அந்த வகையில் இந்தப் பெண்ணும் ஒரு ஆணுடன்
தனியாக இருக்கவேண்டும் என்பதற்காக
நானே தவறு ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காக
கொஞ்சம் வயதானவரைத் தேர்ந்தெடுத்து
அவரிடம் பக்குவமாய் நாளை கணவன் மனைவியையும்
அவர்கள் விருப்பப்படி சேர்த்து வைக்க இருக்கிறோம்
நம் விதிமுறைப்படி ஒரு நாள் பிறருடன் இருக்கவேண்டும்
என்பதற்காக அனுப்பி வைக்கிறோம்.தப்பு தண்டா இல்லாம
இருந்துக்கோ என சொல்லி அனுப்பி வைத்தோம்"
எனச் சொல்லிவிட்டு மீண்டும் குலுங்கிக் குலுங்கி
சிரிக்கத் துவங்கிவிட்டார்....
"பாய் சொல்லிட்டுச் சிரிங்க .நாங்களும் சேர்ந்து
சிரிப்போம் இல்ல " என நண்பன் சொல்ல
பாய் சிரித்தபடியே சொல்ல ஆரம்பித்தார்
"சொல்றேன் சொல்றேன்.மறுநாள் நாங்க
இவங்களைச் சேர்த்து வைக்கலாம் எனச் சொல்லி
எங்கள் வழக்கப்படி என்னம்மா நீ உன்
புருஷனோடு சேர்ந்திருக்கச் சம்மதமா எனக் கேட்க..
படுபாவிப்பய என்ன சொல்லி மனசை மாத்தினானோ
இல்லை என்ன செஞ்சி மனசை மாத்தினானோ
தெரியலை...நான் இவரோடயே இருந்துக்கறேன்
புருஷன் வேண்டாம் எனச் சொல்லிவிட்டார்"
எனச் சொல்லிவிட்டு சப்தம் போட்டு
மீண்டும் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்..
எனக்கும் என் நண்பர்களுக்கும் பெரும் அதிர்ச்சி
இதுவரை இப்படி ஒரு நடைமுறைப் பழக்கம்
அவர்களிடம் இருக்கும் என்பது சத்தியமாய்
தெரியாது
இப்படியொரு மோசமான விஷயம் அவர்களுக்குள்
இருந்ததானால் எத்தனை பேர் அதிகம்
பாதிக்கப்பட்டிருப்பார்கள் என எண்ணிப் பார்க்க
அதிர்ச்சியாய் இருந்தது...
இதன் காரணமாகவே முத்தலாக் குறித்து
பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவிக்கும் வகையில்
மௌனம் காக்க அதனால் பயன் அனுபவித்த
சிலரே (இவர்களைத்தான் அல்லக்கைகள்
எனச் சொல்வதுண்டு இவர்கள் தான் சில இயக்கங்கள்
மத ஸ்தாபனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளில்
இருந்து கொண்டு பெருவாரியான மக்களை
பொய்ப்பிரச்சாரம் மூலம் திசைத் திருப்புவது )
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து
சில நாள் போராடி ஓய்ந்தும் போனார்கள்
என நினைக்கிறேன்.
எந்த மதமாயினும் மதத்தை வைத்து
பிழைப்பவர்கள் அல்லது சுகத்தை அனுபவிப்பவர்களே
மதத்தின் பெயரால் ....இதுபோன்று
எந்த நோக்கத்திற்காக சில சம்பிரதாயங்கள்
ஏற்படுத்தப்பட்டதோ அதனைமிகச் சரியாகப்
புரிந்து கொள்ளாது
தங்கள் சுய நலத்திற்குப் பயன்படுத்துவதால்தான்
மதம் குறித்து ஒரு மோசமான அபிப்பிராயம்
ஏற்படக் காரணமாவதோடு பகுத்தறிவு வாதிகள்
எனச் சொல்லிக் கொள்வோர் அதைத் தங்களுக்கு
சாதகமாக பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக்
கொள்கிறார்கள் என்பதைச் சொல்லவும்...
.(மிகக் குறிப்பாக இந்து மதத்திற்கு எதிராக மட்டும்)
மூட நம்பிக்கை என்பது ஒரு மதத்தில் தான் உண்டு
என்பதில்லை எல்லா மதத்திலும்
எதன் காரணமாகவோ உண்டு
என்பதைச் சொல்லவுமே இந்தப் பதிவு..
Tuesday, January 14, 2020
பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்
விதைத்த ஒன்றை
நூறாய் ஆயிரமாய்
பெருக்கித் தரும்
பூமித் தாய்க்கு
நன்றி சொல்லும் நாளிது
எதிர்பார்ப்பு ஏதுமின்றி
உடனுழைத்து
நம் உயிர் வளர்க்க உதவும்
விலங்கினங்களுக்கு
நன்றி சொல்லும் நாளிது
இணைந்து இயைந்து
இருப்பதாலேயே
வாழ்விற்கு அர்த்தம் சேர்க்கும்
உறவுகளுக்கு
நன்றி சொல்லும் நாளிது
அனைத்து இயக்கங்களுக்கும்
மூல காரணமாகி
உலகைக் காக்கும்
கதிரவனுக்கு
நன்றி சொல்லும் நாளிது
நம்மிருப்புக்கு காரணமான
அனைத்திற்கும்
நன்றிசொல்வதன் மூலமே
மனிதராக நம்மை நாம்
நிலை நிறுத்திக் கொள்ளும் நாளிது
ஜாதி மதம் கடந்து
உழைப்பின் பெருமை சாற்றும்
தமிழர் திரு நாளிதன்
உட்பொருள் அறிந்து மகிழ்வோம்
அதன் உன்னதம் காத்து உயர்வோம்
( அனைவருக்கும்
பொங்கல் திரு நாள்
நல்வாழ்த்துக்கள் )
நூறாய் ஆயிரமாய்
பெருக்கித் தரும்
பூமித் தாய்க்கு
நன்றி சொல்லும் நாளிது
எதிர்பார்ப்பு ஏதுமின்றி
உடனுழைத்து
நம் உயிர் வளர்க்க உதவும்
விலங்கினங்களுக்கு
நன்றி சொல்லும் நாளிது
இணைந்து இயைந்து
இருப்பதாலேயே
வாழ்விற்கு அர்த்தம் சேர்க்கும்
உறவுகளுக்கு
நன்றி சொல்லும் நாளிது
அனைத்து இயக்கங்களுக்கும்
மூல காரணமாகி
உலகைக் காக்கும்
கதிரவனுக்கு
நன்றி சொல்லும் நாளிது
நம்மிருப்புக்கு காரணமான
அனைத்திற்கும்
நன்றிசொல்வதன் மூலமே
மனிதராக நம்மை நாம்
நிலை நிறுத்திக் கொள்ளும் நாளிது
ஜாதி மதம் கடந்து
உழைப்பின் பெருமை சாற்றும்
தமிழர் திரு நாளிதன்
உட்பொருள் அறிந்து மகிழ்வோம்
அதன் உன்னதம் காத்து உயர்வோம்
( அனைவருக்கும்
பொங்கல் திரு நாள்
நல்வாழ்த்துக்கள் )
Subscribe to:
Posts (Atom)

