Monday, September 13, 2021

பாரதி போல் ...புறக்கணிக்க இயலா உச்சம் தொடுவோம்..

 நீட் தேர்வை வைத்து இன்றைய நிலையில் அரசியல் கட்சிகள் அரசியல் செய்து கொண்டிருக்கும் நிலையில்  பிராமண சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்மணியின் பின் வரும் சுய வாக்குமூலம்... அனைத்து தரப்பினருக்கும் பொதுவான ஒரு கருத்தாய் நினைத்து

மிக கவனமாக படியுங்கள்.. சிந்தியுங்கள்.. செயல்படுங்கள்.!

👇👇👇


95% மார்க் வாங்கியும், பிராமணன் என்பதனால் வாய்ப்பு மறுக்கப்பட்ட எந்த பிராமண இளைஞனும் இளைஞியும் தற்கொலையை நாடியதில்லை! 


மெடிக்கல், என்ஜினீரிங், வேலை வாய்ப்பு எதுவானாலும் 'மெரிட்'டால் வெல்ல முயற்சிப்பான்!  


95/96/97% மதிப்பெண் பெற்றும் அந்த இடம் தனக்குக் கிடைக்கவில்லை என்றால் அடுத்த வாய்ப்பைத் தேடிப் போய்க்கொண்டே இருப்பான்! 


அயல் மாநிலமா, அயல் நாடா, எதுவும் அந்த பிராமண இளைஞன்/ இளைஞிக்குப் பொருட்டில்லை! 


எனவே அது 'நீட்' டோ, JEE யோ... 


கிடைத்தால் தர்ம வினை - கிடைக்காவிட்டால் கர்மவினை!  


சர்வம் கிருஷ்ணார்ப்பணம்! அதிக பட்சம் தனக்கு மெரிட் இருந்தும் வாய்ப்பு மறுத்த அரசுகளின் மீது ஒரு பிடி சாபம்! 


அத்துடன் பிராமண இளைஞன் அடுத்த வாய்ப்பைப் பார்க்கப் போய்கிட்டே இருப்பான்! 


படிப்பு மட்டுமின்றி பல்வேறு தேர்வுகளில் நாங்கள் வாங்கின 90+ % மதிப்பெண்களுக்கு...  


எத்தனையோ நுழைவுத் தேர்வு, அரசு வேலைத் தேர்வுகளில் நாங்கள் பெற்ற பாராட்டத்தக்க ரேங்குகளுக்கு...


பிராமணனாகப் பிறந்த ஒரே காரணத்தால் எமக்கு மறுக்கப்பட்ட வாய்ப்புகளுக்கு... 


தூக்கில் தொங்குவது என்று நாங்கள் முடிவெடுத்திருந்தால் கொத்துக் கொத்தாக நூற்றுக் கணக்கில் தொங்கி இருக்க வேண்டியிருக்கும்! 


"பகவான் எதையும் காரணமில்லாமல் மறுக்கவும் மாட்டான் - கொடுக்கவும் மாட்டான்"- என்று மனதைத் தேற்றிக் கொண்டுதான் எமது இளைஞர்கள் இத்தனை தலைமுறைகளைக் கடந்துள்ளோம்! 


ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டம் மற்றும் தந்தையை இழந்த 8 வயது பிராம்ண ஆண் குழந்தை தந்தைக்கு அம்மாவாசை தர்ப்பணம் செய்ய 5 ருபாய் பணம் கிடையாது, குடும்ப பொறுப்புடன் மிக கடினமாக  Oriental Syllabus Sanskrit படித்து உழைத்து,  உழைத்த வருமானத்தில் IIT entrance clear பண்ணி படித்து, 17 வருடமாக படிப்படியாக முன்னேறி இன்றைக்கு ஒரு நல்ல பதவியில் 1 கோடி ரூபாய் சம்பளத்தில் இந்தியாவிலேயே வேலை செய்யும் தலை சிறந்த நிர்வாகத்தையும் பார்த்து இருக்கிறேன், இது வேறு யாரும் அல்ல, எனது கணவர் தான், in a public limited. 


Also Service to the nation, India Smart Cities Project - IT Enterprise Architect since last 3 years for country.


எந்த ஒரு சூழ்நிலையிலும் பணத்துக்காக  துரோகமிழைத்தில்லை.  இவை அனைத்தும்  ஓரு சிறிய Oriental பள்ளியில் RSS சொல்லி கொடுத்த பாடம்.


வெளியே சொல்வதில்லை, முடிந்த உதவிகளை கொண்டு ஒரு வருடத்திற்கு 5 குழந்தைகளுக்கான கல்வி செலவை ஏற்றும் படிக்கவும் வைக்கிறோம்.


My husband Quote:


தொழிலில் இந்தியா இரும்பு அடிக்கிற இடம், இங்கு ஈ க்கு வேலை கிடையாது. There are many opportunities for right profiles on red carpet.


இலக்கை நோக்கி தேடி போகதே, இலக்கை உருவாக்கு.


ஓரு நல்ல 15 வருட தொழில் அனுபவத்திற்கு பிறகு, வேலையை தேடாதே, மொத்த Industry யும் உன்னை தேட வேண்டும், அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்.....


Thanks : Lakshmanan Sankarasubramanian 

Courtesy : Gayathri Sampathkumar

Friday, September 10, 2021

நல்லதோர் வீணையாய்..

 


"

நல்லதோர் வீணையாய் "அவனிருந்தான்

அதனால்தானே மடமை இருளில்
ஆழ்ந்திருந்த மக்களை தட்டி எழுப்பி
பூபாளம் இசைத்து விடியலைக் காட்ட முடிந்தது

"சுடர்மிகும் அறிவுடன் "அவனிருந்தான்
அதனால்தானே அடிமைச் சிறுமதிச் சுகத்தில்
சீரழிந்து பார்வையற்றுக் கிடந்த தம் மக்களுக்கு
ஒளியாகி விழிப்பூட்டி நல்வழி காட்ட முடிந்தது

"எமக்குத் தொழிலே கவிதை" யென்றிருந்தான்
அதனால்தானே பண்டிதர்களின் நாவினில்
அடைபட்டுத் தவித்த அருந்தமிழை விடுவித்து
கவிதையை அனைவருக்குமான தாக்க முடிந்தது

"ஊருக்குழைத்தலே" தன் கடமையென்றிருந்தான்
அதனால்தானே சமூகச் சீர்கேட்டைச் சீரழிக்கும்
கூர்வாளாய்ப்  புரட்சிக் கவிகள் படைத்து
சமதர்மச் சமூதாயத்திற்கு அடித்தளமிட முடிந்தது

" இமைப்பொழுதும்"  இருக்கும்வரைச் சோராதிருந்தான்
அதனால்தானே இளம்வயதில்
 காலனவன் அழைத்தபோதும்
காலத்தை வென்றவனாய் காவிய மானவனாய்
பாட்டுக்கொருவனென  இன்றளவும்
 அவன் மட்டுமே பரிமளிக்க முடிகிறது

Thursday, September 9, 2021

உலக தற்கொலை தடுப்புத் தினம்.


 இன்று செப்டம்பர் 10


உலக தற்கொலை தடுப்பு தினம்.


     தற்கொலை எண்ணம் தோன்றினால் அதிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பது குறித்த விழிப்புணர்வு ஊட்டவும், உணர்ச்சிகளின் சாராம்சங்களில் சிக்கிக் கொண்டு, தற்கொலை முடிவை தேர்ந்தெடுப்பவர்களை தடுக்கும் நோக்கிலும், செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக அறிவிக்கப்பட்டு, உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலக தற்கொலைத் தடுப்பு சங்கம் இணைந்து செயல்படுத்தி வருகின்றன.

      உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை படி உலகம் முழுவதும் ஆண்டுக்கு 10 லட்சம் மக்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

       இன்றும் 40 வினாடிகளுக்கு ஒருவர் தற்கொலை முடிவை தேர்ந்தெடுக்கின்றார் என்கிறது ஆய்வு.

      தமிழகத்தைப் பொருத்தவரை தற்கொலை விகிதம் 11.8 சதவீதமாக உள்ளது. 

      15 முதல் 30 வயதிற்குள்ளான

வர்களுக்கு பரவலாக ஏற்படும் மனச்சோர்வு, தேவையற்ற குழப்பம், சமூகத்தில் பிரச்சனைகளை கண்டு பயப்படுவது, பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மனப்பான்மையை இழந்தவர்களுக்கு தற்கொலை எண்ணமே முதலில் தோன்றுவதாக அறிவியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

      தற்கொலை உணர்வோடு யாரேனும் இருக்கும்போதோ அல்லது தங்களது உணர்வை வெளிப்படுத்தும்

போதோ அவர்களை அலட்சியப்படுத்தாமல், மருத்துவர் உதவியுடன் அல்லது பரிந்துரையாளர்கள் மூலமாக உரிய சிகிச்சையளித்து அவர்களின் மனதை மாற்ற முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

     வாழ்வில் பிரச்சனைகள் இல்லாத மனிதரே இல்லை, அதை  கண்களுக்கு அருகில் வைத்து பார்க்கும் போது அது உலகத்தையே மறைத்துவிடும், அதையே சற்று தள்ளிவைத்து பாருங்கள் அது என்ன என்பது நம் மனதிற்கு விளங்கும்.அதை தூக்கி கால்களுக்கு கீழே எறிந்துவிடுங்கள்.   

கஷ்டங்களையும் கவலைகளையும் மறந்து சிரிப்புடன் சிறப்பாக வாழ்வீர்கள்.

இருப்பதைக் கொண்டுத் தொழுவோம் வேண்டுவன எல்லாம் பெறுவோம்

 எந்த மதக் கடவுளாயினும்

இப்படித்தான் இருக்கவேண்டும் என

ஒரு நியதி உண்டு


இராமன் என்றால்

வில்லேந்தியபடி....


கண்ணன் என்றால்

குழலேந்தியபடி..


ஏசு என்றால்

சிலுவையில் இருக்கும்படி


அல்லா என்றால்

உருவமே இல்லாதபடி


அந்தக் காலத்தவர்களாகவே

ஆம் நிலையான வடிவிலேயே

இருந்துதான் ஆகவேண்டும்


மாறுதல் இருப்பின்

மனம்  மறுப்பளித்துவிடும்


நம் வினாயகன் மட்டுமே

ஈசன் மடியில் இருக்கும் படியும்

இரு சக்கர வாகனம் ஓட்டியபடியும்.

இருக்கச் சாத்தியம்


வேறு எந்தக் கடவுளாயினும்

அதற்கான இடத்தில்

அதற்குரிய பாவனைகளுடனே

இருக்கச் சாத்தியம்


நம் கணபதிக்கு மட்டுமே

கோவிலிலும் சாத்தியம்

தெருவோரமும் சாத்தியம்


பிற தெய்வங்கள்

செதுக்கி வைத்தால் மட்டுமே

விக்ரகமாகி அருள் தரச் சாத்தியம் 


நம் பிள்ளையாரே

சந்தனத்தில் மஞ்சளில் மட்டுமின்றி

களிமண்ணிலுக் கூட விக்ரமாகி

அருள் தரச் சாத்தியம்


இப்படி

பாமரனுக்கு

யானை முகத்தோனாய்

பண்டிதனுக்கு

ஓம் வடிவினனாய்


எல்லோருக்கும்

எற்றவனாய்

எங்கும் நிறைந்தவனை


இன்று இருப்பதைக் கொண்டுத்தொழுவோம்  அவன் ஏற்றுக் கொள்வான்                               என்றும் வேண்டுவன எல்லாம் பெறுவோம்     அவன் நிறைவாய்த் தருவான்.    

Wednesday, September 8, 2021

வெண்மைப் புரட்சியின் தந்தை


 இன்று செப்டம்பர் 9


இந்திய வெண்மை புரட்சியின் தந்தை என்றழைக்கப்படும் வர்கீஸ் குரியன் நினைவு நாள்.


பிறப்பு:நவம்பர் 26, 1921

இறப்பு:செப்டம்பர் 9,2012


      கேரள மாநிலம் கோழிக்கோடில் பிறந்தவர்.  

     கோபிசெட்டிபாளயத்

திலுள்ள வைரவிழா மேனிலைப்பள்ளியில் 

பள்ளிப்படிப்பை படித்தார்.  

     சென்னை 

லயோலாக் கல்லூரியில் 1940ஆம் 

ஆண்டுஇயற்பியலில் 

இளங்கலைப்

பட்டம் பெற்றார்.

      பின்னர் 

சென்னைப் பல்கலைக்கழகத்தில் 

இயந்திரவியல் 

பொறியியல் பட்டம் பெற்றார். 

        1946ஆம் ஆண்டு 

ஜாம்ஷெட்பூரில் உள்ள

 டாடா எஃகு தொழில்நுட்ப நிலையத்தில் பட்டமேற்படிப்பை முடித்தார்.

       பின்னர் அரசு உதவித்தொகையில் அமெரிக்காவின் 

மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் 

படித்து இயந்திரவியல் பொறியியலில் எம்.எஸ் பட்டத்தை சிறப்புநிலையில் பெற்றார்.

       குஜராத்தில் குடியேறினார்.

       1949ம் ஆண்டு தனக்குக் கிடைத்த மிகப் பெரிய அரசு வேலையை விட்டு விட்டு கூட்டுறவு பால் பண்ணை மேம்பாட்டில் குதித்தார்.  

        இதுவே அமுல் 

பிறக்க வழி வகுத்தது. 

        மேலும் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியம் குஜராத்தில் உதயமானது. 

       அன்று முதல் அவரது கடுமையான உழைப்பு காரணமாக 50களில் தினசரி சில ஆயிரம் லிட்டர் பால் என்ற அளவில் இருந்த இந்தியாவின் பால் உற்பத்தி ஒரு நாளைக்கு 90 லட்சம் லிட்டர் என்ற இமாலய அளவை எட்டியது.

       இந்த அபாரமான திட்டத்தை அமுல் என்ற பெயரில் குஜராத்தில் உருவாக்கி அமல்படுத்தினார் குரியன். 

        இன்று இந்தியாவின் மிக முக்கியமான வர்த்தக பிராண்டுகளில் ஒன்றாக அமுல் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

       இந்தியாவின் பால் துறை மிகப் பெரிய வளர்ச்சியையும், சாதனையையும் படைக்க குரியன்தான் முக்கியக் காரணம். 

      இதனால்தான் அவரது திட்டம் வெண்மைப் புரட்சி என்று அழைக்கப்படுகிறது.

       பால்பண்ணை மேம்பாட்டிற்காக குரியனுக்கு இந்தியாவில் மட்டுமன்றி 

பிற நாடுகளிலும் உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

     1963 ல் ரமன் மக்சேசே பரிசு சமூக தலைமைக்காக ,

     1965ல் பத்மஸ்ரீ

     1966 ல் பத்ம பூஷண்

     1986 ல் கிருஷி ரத்னா விருது (இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து)

      1986 ல் வாடேலர் அமைதிப் பரிசு (கார்னெகி நிறுவனம்)

       1989 ல் உலக உணவுப் பரிசு

       1993 ல் ஆண்டின் பன்னாட்டு மனிதர் - உலக பால்பண்ணை கண்காட்சி, மாடிசன், ஐக்கிய அமெரிக்கா

      1999 ல் பத்ம விபூஷண்

       2007 ல் கரம்வீர் புரஸ்கார்

ஆகிய விருதுகள் பெற்றவர்.

       குரியன் 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் நாள் மரணமடைந்தார்.

        *இவரை கௌரவிக்கும் வகையில் இந்திய அரசு இவரது பிறந்த நாளான நவம்பர் 26 ஐ ஒவ்வொரு ஆண்டும் தேசிய பால் நாளாக(National Milk Day) 2014ஆம் ஆண்டு முதல் கொண்டாடிவருகிறது.*

Tuesday, September 7, 2021

ஆமைகள் ஜெயிப்பதும் இப்படித்தான்.


 எதைச் செய்தாலும் விடாது தொடர்ந்து செய்யவேண்டும் ..அப்படிச் செய்தால் ஒரு சமயத்தில் நாம் செய்வது எல்லாமே பெரும் சாதனையாகிவிடச் சாத்தியமுண்டு..கூகுள் மேப்பில் என்னுடைய பதிவுகளைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கி....

Monday, September 6, 2021

'குடி'மக்களின் அரசு

....எந்த ஒரு நிறுவனம் ஆனாலும் லாபத்தை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல் தம் வாடிக்கையாளர் நலனிலும் கொஞ்சமேனும் அக்கறை கொள்ளவேண்டும்..அந்தவகையில் அரசு இயங்குவதற்கே காரணமாயிருக்கிற "குடி"மக்களின் நலனிலும் அரசு கொஞ்சமேனும் கூடுதல் அக்கறை செலுத்தவேண்டும்.உதாரணமாக சைட் டீஸ்ஸீம் தண்ணீரும் இலவசமாய் தரலாம்.அதிகப் போதைக்காரர்களை வீட்டில் கொண்டு சேர்க்க தனியாக ஆட்களை நியமனம் செய்யலாம்.ஊருக்கு வெளியே கடை இருக்குமானால் ஊர் வரை போக்குவரத்து ஏற்பாடு செய்யலாம்.போதையில் ரகளை செய்தால் அதற்கு தண்டனை கிடையாது எனச் சொல்லலாம்..சில மதிக்கத் தக்க நாளில் கடைக்கு விடுமுறை அளிப்பதைப் போல மதுக்கடையை கொணர்ந்த தலைவர்களின் பிறந்த நாளை கௌரவிக்கும் விதமாக அன்று இலவசமாக மதுவினைத் தரலாம்..மொத்தத்தில் அனைவருக்கும்  குடிக்கும் பழக்கம் ஏற்படுத்தும்படியாக ஒரு பிரச்சார அமைப்பை ஏற்படுத்தலாம்.குடியினால் இறப்பவர்களுக்கு இறுதிச் சடங்கை அரசின் செலவில் செய்யலாம்.இலவசமாக இறப்புச் சான்றிதழ் தரலாம்..இதை மட்டும்கொள்கையாக வைத்து ஒரு கட்சியை ஆரம்பிக்கப்படுமானால் அப்புறம் எத்தனை காலமானாலும் எதிர்க்கட்சியே இல்லாமல் எப்போதும்அந்தக் கட்சியே  தமிழகத்தை  ஆளும் கட்சியாக இருக்கும்  என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை..(கொரோனாவுக்கு பல விசயங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதை நினைக்க இப்படித் தோணியது )