Saturday, October 30, 2021

தமிழ் வான் அவை..

 மீண்டும் நினைவுபடுத்தல் 



31.10.21 அன்று தமிழ் வான் அவை நடத்த இருக்கின்ற மாதாந்த இணைய வழிப் பன்னாட்டு இலக்கியச் சந்திப்பி‌ல்   பாரதி விழாநடக்க இருக்கின்றது. 15 நிமிடங்களுக்கு முன்னமே   இணைந்து

கொள்ளுங்கள்


இந்நிகழ்வில் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள் உரையாற்ற இருக்கின்றார். 


சிறப்பு விருந்தினர்களாக  மகாகவி பாரதியாரின்  கொள்ளுப் பேரன் பேத்திகளாகிய வைரபாரதி அவர்கள், நிரஞ்சன் பாரதி அவர்கள், திருமதி. நீலா  நடராஜன் , Dr.ஜெயந்தி கிருஷ்ணன் அவர்கள்  கலந்து சிறப்பிக்க இருக்கின்றார்கள். 


கலை நிகழ்வுகள் 


ஆடற்கலாலய மாணவன் நிமலன் சத்தியகுமார் நடனம்,


தனுசன் சிவராஜா  மெல்லிசைப் பாடல் 


கொ/விவேகானந்த கல்லூரி மாணவர்கள் மெல்லிசைப் பாடல் 


கீழுள்ள இணைப்பை அழுத்தி அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்


https://us02web.zoom.us/j/2509770769?pwd=M0kyckx0aHdVL0xNeGR4MnRzYkVGdz09

Friday, October 29, 2021

தேசமும் தெய்வீகமும்..

 தேசமும் தெய்வீகமும் இரு கண்கள் என வாழ்ந்த தலைவர் ஐயா முத்துராமலிங்க தேவர் பிறந்தநாளான இன்று அவரை

வணங்கிப்


போற்றிடுவோம்.தேசத்திற்கும் ஆன்மீகத்திற்கும் எதிராக திட்டமிட்டு செயல்படுவோரின் முகத்திரைக்கிழிக்க இந்நாளில் உறுதி ஏற்போம்..

Thursday, October 28, 2021

வாலி...நீ வாழீ

 இன்று அக்டோபர் 29


கவிஞர் வாலி அவர்களின் 

பிறந்த நாள்.


      கவிஞர் வாலி (இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன்)


பிறப்பு:29அக்டோபர்,1931

மறைவு:18 ஜூலை, 2013


   தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். 

   இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை.

    ஆனந்த விகடன் இதழில் வாலி தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய‌ 'நினைவு நாடாக்கள்' என்ற தொடரும் பெயர் பெற்றது.

    வாலி திரைப்படங்களுக்கு 

15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். 

    இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.அவர் நடித்த திரைப்படங்களுள் சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 

    மேலும் 'கையளவு மனசு' என்ற தொலைக்காட்சித் தொடரிலும் வாலி நடித்துள்ளார்.                 

     ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வாலி பிறந்தது திருப்பராய்துறையில், வளர்ந்தது திருவரங்கத்தில்.

    ஓவியர் மாலி போல இவர் பெயர் எடுக்க வேண்டும் என்று பள்ளித்தோழன் பாபு, வாலி என்ற பெயரைச் சூட்டினான்.

    தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. அன்று திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால் வானொலிக்கு கதைகள் நாடகங்கள் எழுதிக் கொடுக்கும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது.

    திருவரங்கத்தில் 

வாலி நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிகையில் பல இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர்.அப்படிப் பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா.       

    இவர் சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தங்கள் எழுதியுள்ளார்.

    அவற்றுள் குறிப்பிடத்தக்கவை: அம்மா, பொய்க்கால் குதிரைகள், நிஜ கோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் மற்றும் அவதார புருஷன். 

   வாலி அவர்களின் 80வது பிறந்தநாள் அன்று நடைபெற்ற விழாவில், 'வாலி 1000' என்ற பெயரில், வாலியின் ஆயிரம் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையிசைப்பாடல்கள் புத்தகமாக வெளியிடப்பட்டது.

      இவரது பாடல்களில் குறிப்பிடத்தக்க

பாடல்கள் சில:


" ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை... "( ஆயிரத்தில் ஒருவன் 1968)


" மல்லிகை என் மன்னன் மயங்கும்... " (தீர்க்க சுமங்கலி 1974)


" மாதவிப்பொன் மயிலாள் தோகைவிரித்தாள்... "( இரு மலர்கள் 1967)


நான் ஆணையிட்டால் (எங்க வீட்டு பிள்ளை 1965)


காற்று வாங்க போனேன் - (கலங்கரை விளக்கம் 1965)


சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ- (சந்திரோதயம் 1966)


வெற்றி வேண்டுமா போட்டு பாரடா - (எதிர்நீச்சல் 1968)


இறைவா உன் மாளிகையில்- (ஒளிவிளக்கு 1968)


அந்த நாள் ஞாபகம் - (உயர்ந்த மனிதன் 1968)


புன்னகை மன்னன் பூவிழிகண்ணன்- (இருகோடுகள் 1969)


ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி (சுபதினம் 1969)


மதுரையில் பறந்த மீன்கொடியை- (பூவா தலையா 1969)


     இவர் பெற்ற விருதுகள்:

     பத்மஸ்ரீ விருது-2007

         

     1973-ல் 'இந்திய நாடு என் வீடு' என்ற பாரத விலாஸ் திரைப்படப் பாடலுக்காகக் கிடைத்த இந்திய தேசிய விருதை மறுத்தார்.

     வாலி ஐந்துமுறை சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றவர்.

     கவிஞர் வாலி ஒரு படத்தையும் இயக்கியுள்ளார். "வடை மாலை" (1982) என்ற படத்தை ஒளிப்பதிவாளர் மாருதிராவுடன் இணைந்து இவர் (வாலி) இயக்கியுள்ளார். இப்படத்தின் வசனம் மற்றும் பாடல்களை இவர் எழுதியுள்ளார். 

     2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் நாள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் 18 ஜூலை 2013 அன்று காலமானார்...நன்றி வாட்ஸ் அப்


Wednesday, October 27, 2021

சூரியனுக்கு காப்புரிமை.?????

 


இன்று அக்டோபர் 28


போலியோ தடுப்பு மருந்து கண்டுபிடித்த ஜோனஸ் எட்வர்ட் சால்க் (Jonas Edward Salk) பிறந்த நாள்.


பிறப்பு:அக்டோபர்28,1914

இறப்பு:ஜூன் 23, 1995.


     இவர் அமெரிக்க மருத்துவ ஆய்வாளரும், நச்சுயிரியலாளரும் ஆவார். 

     அமெரிக்க யூதப் பெற்றோருக்கு நியூயார்க் நகரில் பிறந்தவர். 

      இவரே முதன் முறையாக போலியோ தடுப்பூசியைக் கண்டுபிடித்து, வெற்றிகரமாக சோதித்தவர்.

     அமெரிக்காவின் மருத்துவ ஆராய்ச்சியாளரும், நச்சுயிரியல் ஆய்வாளருமான ஜோனஸ் எட்வர்ட் சால்க், தனது முதல் போலியோ தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து அறிமுகம் செய்தார்.

    ஜோனஸ் சால்க், மருத்துவ ஆராய்ச்சி படிப்பை முடித்து, 1947 ஆம் ஆண்டில் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் பணியில் அமர்ந்தார். 

   1948 ல் போலியோவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வில் இறங்கினார்.

     1952 ஆம் ஆண்டில் கொள்ளை நோய்க்கு 58,000 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 3,145 பேர் உயிரிழந்தனர். 

21,269 பேர் முடக்குவாதத்திற்

குள்ளாயினர்.

     இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள். 

    இதனால் தனது ஆய்வை தீவிரப்படுத்திய சால்க், 1952ஆம் ஆண்டு போலியோ தடுப்பூசியை கண்டுபிடித்தார்.

    பின்னர் இதனை மேம்படுத்தி, 1953ஆம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி குழந்தைகளுக்கு செலுத்தி வெற்றிகரமாக பரிசோதித்தார்.

    1955 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று சால்க் தடுப்பூசி(சொட்டு மருந்து) வெற்றி பெற்றதாக முறைப்படி அறிவிக்கப்பட்டது. 

     பின்னர் 1957ஆம் ஆண்டு சால்க் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தது.

    அந்நாள் ஏறத்தாழ ஒரு பொது விடுமுறையாகவே கணிக்கப்பட்டது. 

    தனது தனிப்பட்ட வளத்தை அவர் கருத்தில் கொள்ளவில்லை.இந்த மருந்துக்கான காப்புரிமையை அவர் கோரவில்லை.

    இத்தடுப்பூசிக்கான கண்டுபிடிப்பு உரிமம் யாரிடம் உள்ளது என தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் சால்க்கிடம் கேட்கப்பட்ட போது, அவர் "ஆக்கவுரிமை எதுவும் கிடையாது. சூரியனுக்கு நீங்கள் ஆக்கவுரிமை கோர முடியுமா?" எனக் கேட்டார்.

   1960-ல் கலிபோர்னியாவில்

உயிரியல் படிப்புகளுக்கான சால்க் கல்வி நிறுவனத்தை சால்க் நிறுவினார்.

   இந்நிறுவனம் இன்று மருத்துவ, அறிவியல் ஆய்வுகளுக்கு மையமாகத் திகழ்கிறது.

    சால்க் தனது இறுதி நாட்களில் எச்.ஐ.வி.க்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டார். 


   

நிழல்கள் நிஜங்களாய்..நிஜங்கள் நிழல்களாய்..


 

Thursday, October 21, 2021

நவீன உரைகல்

தலைப்பின்றி

எழுதியவர் பெயருமின்றி

ஒரு கவிதையைக் கொடுத்து

வாசிக்கச் சொன்னார்

எம் பத்திரிக்கை ஆசிரியர்


படித்துப் பார்த்தேன்

எதுவும் புரியவில்லை


"எதுவும் புரிந்ததா ?" என்றார்


"இல்லை " என்றேன்


பின் தலைப்பை மட்டும் சொல்லி

"இப்போது புரிகிறதா ? " என்றார்.


"புரிவது போலவும் இருக்கிறது

புரியாதது போலவும் குழப்புகிறது "

என்றேன்


பின் மெல்லச் சிரித்தபடி

எழுதியவர் பெயரைக் காட்டி

"இப்போதாவது புரிகிறதா ? " என்றார்.


அவர் பிற(ர)பலக் கவிஞராய் இருந்தார்


மீண்டும் "இப்போது..."என்றார் ஆசிரியர்


நானும் இப்போது மெல்லச் சிரித்தபடி

"புரிவதோடு மட்டும் இல்லை

மிகச் சிறந்த கவிதையாகவும்..."என்றேன்