Friday, November 19, 2021

ஜான்ஸி ராணி...

 🔥 புளியமரத்தின் அடியில் எரிந்து கிடந்த எலும்புகளும் சாம்பலும் மிகப்பெரிய அச்சமூட்டுபவையாக இருந்தன...


இவ்வாறான குறிப்புகள் குவாலியரில்  #யூங்_ரோஸ் எனும் பிரிட்டிஷ் படைகளை வழிநடத்திய ஒருவர் குறித்து வைத்துள்ளார்.


மேலே சொன்னது #மணிகர்ணிகா பற்றின குறிப்பு. இப்படி சொன்னால் சுலபமாக புரிந்து கொள்ள முடியும். 

❤️ #லக்ஷ்மிபாய்

#ஜான்சிராணி_லக்ஷ்மி_பாய்.💕


இந்நாளில்   தேச பக்தி இல்லாத கழிசடைகளுக்கு இப்படி ஒருவர் இருந்ததும் வாழ்ந்ததும் எப்படி சொல்லி புரியவைப்பது, இன்று அவரது பிறந்த நாள்.நவம்பர் மாதம் 19 ஆம் தேதி 1828 ஆண்டில் புகழ் பெற்ற வாரணாசிக்கு அருகில் மராத்திய பிராமண குடும்பத்தில் பிறந்தவர் தான் பின்னாளில் பிரிட்டிஷ் படைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஜான்சியின் ராணி லக்ஷ்மி பாய். ஆரம்ப காலத்தில் அவரின் பெயர் #மணிகர்ணிகா, மணிகர்ணிகா தாம்பே.


வீட்டிலேயே கல்வி பயின்ற இவர் (நன்கு கவனியுங்கள் அவர் வாழ்ந்த ஆண்டினை) நான்கு வயதிலேயே தனது தாயார் பாகிரதி_பாய் யை இழந்தார்.இவரது தந்தை மோராபாந்_தாம்பே புகழ் பெற்ற பேஷ்வார் படைகளை நிர்வாகம் செய்தவர்.


( சமீப காலத்தில் பாஜிராவ் மஸ்தானி என்ற இந்தி திரைப்படத்தில் இஃது இடம் பெற்று இருக்கிறது)


இன்றளவும் மணிகர்ணிகா என்கிற பெயருக்கு உத்தரபிரதேச மாவட்டத்தில் அளப்பறிய ஈர்ப்பு உண்டு.பலவிதமான மல்யுத்தம் மற்றும் ஆயுத போர் பயிர்ச்சிகளில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் மிகச் சிறந்த குதிரையேற்றம் தெரிந்த நபராக இருந்திருக்கிறார். யாருக்கு அடங்காத குதிரைகள் கூட இவர் சொற்படி கீழ் படிந்து நடந்திருக்கிறது.

தனது தனிப்பட்ட பராமரிப்பில் இருந்து குதிரைகளான பவன், பாதல் சாரங்கி ஆகியவற்றில் பாதலுக்கு கடிவாளம் கூட போடப்பட்டது இல்லையாம்.


அதன் மீது பயணிக்கும் சமயத்தில் தானாக முன்வந்து அமர்ந்து இவரை தன் மீது ஏற்றிக் கொண்டு செல்லும் என்கிறது குறிப்புகள். பின்னாளில் ஜான்ஸி கோட்டையில் பிரிட்டிஷ் படைகளுடன் நடந்த சண்டையின் போது இந்த குதிரை தான் கோட்டை உச்சியில் இருந்து ராணியுடன் கீழே பாய்ந்து தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றியிருக்கிறது. இஃது இன்று இந்த தகவலுடன் அந்த கோட்டை கொத்தளத்தில் காட்சி படுத்தப்பட்டு இருக்கிறது.


இந்த பாதல் என்கிற பெயரிடப்பட்ட குதிரை தன் வாழ்நாளில் கடிவாளம் போட அனுமதித்தது இல்லை, கட்டிவைக்கவும் அனுமதித்தது இல்லை, அதுபோலவே தன் மீது லக்ஷ்மி பாயை தவிர வேறு ஒருவரையும் ஏற்றியதும் இல்லை. இதனை தன் வீரர்களுடன் உரை நிகழ்த்தும் போதும் உரையாற்றும் போது தவறாமல் குறிப்பிடும் லக்ஷ்மி பாய் ஒரு ஐந்து அறிவு ஜீவனுக்கே இவ்வளவு திடம் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டாராம்.


அதற்கு தகுந்தாற்போல் இவர் எதிர்த்து போட்டியிட்ட படைகளின் எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கு மாத்திரமே இவர் பயன் படுத்தி வந்திருக்கிறார். ஆனால் அசாத்தியமான துணிச்சல் மற்றும் போர் தந்திரம் ஆகியவற்றை கொண்டு செயல் பட்டு வெற்றி பெற்று வந்திருக்கிறார்.இன்று வரையில் 1857 ஆம் ஆண்டினை இந்திய சுதந்திர போரின் ஆரம்ப காலமாக வகை படுத்தப்படுவது எல்லாம் இவரின் தாக்கத்தால் தான் என்பது கூட நம்மில் பலருக்கு தெரியாது.


💞உடல் நலமே பிரதானம் என்பதை செயல் வடிவம் கொடுத்து செயல் படுத்தியவர் இவர் தான். தன் ராஜ்ஜியத்தில் உள்ள ஒவ்வொருவரும் காலையில் உடற் பயிற்சி செய்வதை கட்டாயம் மாக்கியிருக்கிறார். தானும் அவ்விதம் பலர் முன்னனியில் பயிற்சி மேற்கொண்டு வந்திருக்கிறார்.பஸ்கி, தண்டல் போன்றவற்றை அநாயாசமாக கையாள கூடியவர் என்கிறது சரித்திரம்.


பிரிட்டிஷ் படைகளின் பொறுப்பு வகித்த #டல்லோசி படாதபாடு பட்டிருக்கிறார் இவரை எதிர் கொள்ள...


பின்னாளில் #பாதல் தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றிய ஜான்ஸியின்  ராணி லக்ஷ்மி பாய் குவாலியர் கோட்டையில் வைத்து பிடிபட்ட நிலையில் தன் வீரர்களுக்கு போரில் படுகாயம் அடைந்த தன்னை கொன்று எரியூட்ட உத்திரவிட்டுயிருக்கார். அஃது நிறைவேற்றப்பட்டது.


அதனை தான் மேல் உள்ள வரிகளில் படித்தீர்கள். 

அப்படி சாம்பலாக இருந்ததை கைப்பற்றி அந்த புளியமரத்தின் அடியிலேயே புதைத்தனராம் பிரிட்டிஷ் படையினர். கிட்டத்தட்ட ஒரு வாரம் வரையில் தீவிர கண்காணிப்பு மற்றும் காவல் போடப்பட்ட இருந்ததாம் அந்த இடத்திற்கு.


பீனிக்ஸ் பறவை போன்று உயிர்த்தெழுந்து வந்தாலும் வரலாம் என்று நம்பியிருக்கிறார்கள் என்றால் எத்தனை வீரியமுடன் அவர் வாழ்ந்திருக்க வேண்டும்??????


அந்த தலைமுறையில் வாழ்ந்த சிறு பெண் குழந்தைகளை கண்டாலேயே பிரிட்டிஷ் படைப்பிரிவினருக்கு அலறல் ஏற்படுமாம்.


இன்று பெயர் மாத்திரமே தெரிந்த சிலராக சுதந்திர இந்தியாவில் சுகமாக வாழ்ந்து கொண்டு வருகிறோம்.


💓 ஜெய் ஹிந்த்.


Wednesday, November 17, 2021

வ.உ.சிதம்பரம் பிள்ளை

 தான் இறப்பதற்கு 23 நாட்கள் (26.10.1936) முன்னர் தூத்துக்குடி அசெ. சு. கந்தசாமி ரெட்டியாருக்கு கப்பலோட்டிய செம்மல் வ உ சி எழுதிய உயில் 


மூத்தமகன் ஆறுமுகத்திற்கு பாகம் பிரித்து கொடுத்து பல வருடமாகிறது. பம்பாய் எம்பெயர் ஆப் இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனியில் ₹1000, ஓரியண்டல் லைவ் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனியில் ₹1000 எனது ஆயுளை இன்ஸ்யூரன்ஸ் செய்து இருக்கிறேன், ஒவ்வொரு கம்பெனியிலும் ₹500 லாபம் கிடைக்க கூடும் ஆனால் ஒவ்வொரு கம்பெனியிலும் ₹500 கடன் பெற்றுள்ளேன்; கடனுக்கும் லாபத்திற்கும் சரியாக போகும். 2 கம்பெனிகளுக்கும் கடைசி பிரிமியம் கட்டப்படவில்லை அது கட்டப்பட வேண்டும். 


எனது பாகத்திற்கு ஒட்டப்பிடாரத்தில் பெரிய புஞ்சையில் 2 சங்கிலி நிலமும் 16 மரக்கால் நஞ்சையும் கிணற்று தோட்டமும் இருக்கிறது, இது தவிர ஒட்டப்பிடாரத்தில் கீழ்க்காட்டில் 1.75 சங்கிலி கரிசல் புஞ்சை ஒன்று, .75 சங்கிலி புஞ்சை ஒன்றும் இருக்கின்றன என் மக்களால் அவ்வளவு தூரத்தில் உள்ள புஞ்சைகளையும் பயிர் செய்ய முடியாது. அவற்றை தங்கள் பெயருக்கு ₹500 கிரயம் செய்து கொடுக்க நினைத்து கொண்டு இருக்கிறேன். 


ஒட்டப்பிடாரத்தில் ஒரு பழைய காரைக்கட்டு மட்டப்பா வீடு ஒன்று இருக்கிறது. அதன் மச்சுக் கட்டைகளெல்லாம் இற்றுப்போய் ஆபத்தான நிலையில் இருக்கின்றன. மச்சை பிரித்தெடுத்து சுவர்களை இன்னும் 3 அடி உயர்த்தி தேக்கு தேக்கு மரக்கட்டை போட்டு மேல் பக்கமுள்ள இரண்டு சன்னகளுக்கு நேராக கீழ் பக்கம் இரண்டு சன்னல்கள் வைத்து அரைவிட்டை புதுப்பித்து கொடுக்க வேண்டும்...... இப்போழுதும் ₹200 விலை போகக் கூடிய சட்ட புஸ்தகங்கள் என்னிடமிருக்கின்றன அவற்றை விற்க வேண்டும். 


இப்போது செய்ய வேண்டிய அவரச காரியம் என் மகளிருவரில் மூத்தவளாகிய சௌபாக்கியவதி ஆனந்தவல்லி அம்மாளுக்குகலியாணம் செய்து வைக்க வேண்டும் ₹500 க்கு அவளிடம் நகைகள் இருக்கின்றன. இன்னும் ₹500 க்கு நகைபோட வேண்டும். கலியாணப் பந்தல் செலவு ஒரு வருஷத்து சீராட்டு செலவு என ஒரு கம்பெனி பணம் ₹1000 சரியாய் போகும். மரகதவல்லி அம்மாளுக்கு இன்னும் இரண்டு வருடம் கழித்து கலியாணம் செய்து வைக்க வேண்டும் அவளுக்கும் அவளிடம் இருக்கின்ற நகைகளை சேர்த்து ₹1000 க்கு நகைகளை போட வேண்டும் அதற்கு மற்றொரு கம்பெனி பணம் சரியாய் போகும். 


என் குடும்பத்திற்கு வரக்கூடிய தொகைகளை தாங்கள் வாங்கி வைத்து இருந்து கோவாப்பிரேட்டிங் சொஸைட்டியில் கொடுக்கிற கரண்ட் டிபாஸிட் வட்டி போட்டு கொடுக்க வேண்டும். இந்த நிலைமையில் என் மனைவி மக்களுக்கு அன்னவஸ்திர கல்வி செலவுகளுக்கு யாதொரு ஐவேசுமில்லை. அதற்கு ஒரு நிதியுண்டு பண்ண நான் முயல்கிறேன். என் நிலங்களில் நஞ்சை தவிர பெரிய புஞ்சை தவிர பெரிய புஞ்சை சங்கிலி இரண்டும் தோட்டமும் என் தங்கை அன்னவஸ்திரத்திற்காக விடப்பட்டுள்ளன


தூத்துக்குடி நேஷனல் பேங்க் ஆப் இந்தியா லிமிடெட்டுக்கு 5 மாத வீட்டு வாடகை ₹135 


தூத்துக்குடி சரோஜினி ஸ்டோர்ஸ் ஜவுளி பாக்கி ₹30 


வன்னியஞ் செட்டியார் எண்ணெய் கடைக்கு ₹30 


சில்லறை கடன் ₹60 


இன்ஸ்பெக்டர் பிள்ளைக்கு ₹20 


சோமநாத்துக்கு ₹16 


வேதவல்லி ₹50 


எனது தம்பி மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு சாப்பாடு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் 


_____________ 


தன் உயிலில் தன் கடன்களை மறவாமல் நேர்மையாக எழுதிய செம்மலுக்கு இன்று நினைவு நாள் (18.11.1936)....நன்றி ஜோதிஜி திருப்பூர்


சூரியாத்தனம்...

 

நிச்சயமாக சூரியா தெரிந்தே இத்தனையும் செய்திருக்கிறார் என்பதற்கு இந்தப் படங்கள் உதாரணம்.இனியும் வில்லன் பெயரை மாற்றாது பம்மாத்து செய்து கொண்டிருந்தால் எம்மைப் போன்ற நடுநிலையாளர்கூட எரிச்சல் கொள்ளுதல் தவிர்க்க இயலாதது..இந்த விசயத்தில் கிடைத்த ஒரே ஒரு லாபம் சைகைக் காட்டியதும் ரொட்டி போட்டதும் குரைக்கக் கூடியவைகளை அடையாளம் காண முடிந்ததே..(அனைவரின் உண்மைப் பெயரைப் பதிவு செய்ததைப் போலவே வில்லன் பெயரையும் பதிவு செய்திருக்கலாம்..அல்லது அனைவரின் உண்மைப் பெயர்களையும் தவிர்த்திருக்கலாம்.செய்திருந்தால் யதார்த்தமாய் தெரிந்திருக்க வேண்டிய இந்தக் காட்சிகளை கூர்ந்து கவனிக்கத் தோன்றாது.மாறாக.ஆதிக்க இனத்தால் அதிகார வர்க்கத்தால் அன்றாடம் இன்றும் அல்லல்படுகிற பாமர மக்கள் குறித்த அற்புதமான படம் இது போன்ற குள்ள நரித்தனத்தால் குரங்காய் முடிந்திருக்கிறது..)

Monday, November 15, 2021

பகிர்வோமே..

 நாலு பேர் சேர்ந்து கேங் ரேப் பண்ண வந்த என்ன பண்றது - குரூப்ல ஒருத்தங்க கேட்ட கேள்வி


கற்பா, உயிரா னு பாக்கும் போது உயிர் பெரிசு. விட்ருங்க போகட்டும் என்பது போல பல வழிகாட்டல்கள். ஆனா போலீஸ கூப்பிடலாமே னு ஒரு பின்னூட்டம் கூட கண்ணுல படல.


போகட்டும் என்ன பண்றது. போலீஸ்னாலே கிளைமாக்ஸ் முடிஞ்சுதான் வருவாங்க அப்டீங்குற எண்ணம் மக்களுக்குள்ள இருந்திட்டே இருக்கு


சரி விஷயத்துக்கு வருவோம்.


இந்த மாதிரி சமயத்துல என்ன பன்றது?


ஒன்னு நீங்க 100 க்கு டயல் பண்ணி எந்த சூழ்நிலையா இருந்தாலும் சொல்லலாம். "100 கால் எங்களுக்கு High priority duty"  முதல்ல அத அட்டன் பண்ணீட்டுதான் வேற எந்த டியூட்டியா இருந்தாலும் பாக்கனும்.  அதிக பட்சம் 10-15 நிமிடங்கள்ள போலீஸ் அங்க இருக்கும்.


சரி, பேச முடியாத சூழல் துறத்துறானுங்க. நீங்க ஓடுறீங்கனே வச்சுக்குவோம். Play store la " Kavalan SOS" னு ஒரு ஆப் இருக்கு கண்டிப்பா எல்லோரோட போன்லயும் இருக்க வேண்டிய ஆப். இதுல உங்க சொந்தக்காரங்க போன் நம்பர் 5 எண்ணம் ஸ்டோர் பண்லாம். 


இந்த ஆப் ஓப்பன் பண்ணுனா ரெட் கலர்ல ரவுண்டா ஒரு வட்ட சிகப்பு நிற பொத்தான் டிஸ்ப்ளேயோட சென்டர்ல தெரியும். அதுல SOS னு பெரிசா எழுதிருக்கும். இத நீங்க ஆபத்து காலங்கள்ல ப்ரஸ் பண்ணும் போது உங்க சொந்த காரங்களுக்கு மட்டுமில்ல சென்னையில இருக்குற கண்ட்ரோல் ரூம், டிஸ்ட்ரிக்ட் கண்ட்ரோல் ரூம், பக்கத்துல இருக்குற போலீஸ் ஸ்டேசன், ரோந்துல இருக்குற காவலர்கள், ஹை- வே பேட்ரோல்,  பைக் - பேட்ரோல் எல்லாருக்கும் நீங்க ஆபத்துல இருக்கீங்க னு 15 செகண்ட்ஸ்க்குள்ள மேசேஜ் போகும். அது மட்டுமில்ல இது GPS based. ஆபத்துல இருக்குறவங்கள எங்களால டிராக் பண்ணி ஸ்பாட்டுக்கு போக முடியும். ரொம்ப சீக்கிரமா உங்களுக்கு உதவி கிடைக்கும். இதெல்லாம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த எவ்வளவோ விளம்பரம் பண்ணியும் பெரிசா விழிப்புணர்வு இல்ல. 


களத்துல வேலை பார்க்குற எங்களுக்குதான் இதனால எத்தனை உயிரை பாதுகாத்துருக்கோம் னு தெரியும்.


So, பெண்கள் கண்டிப்பா இந்த ஆப் அ டவுண்லோட் பண்ணி வச்சுக்கங்க. ஆபத்து காலங்கள்ள உதவும். எப்பனாலும் உதவிக்கு காவல்துறையை கூப்பிடுங்க. யாரு வந்தாலும் வரலைனாலும் போலீஸ் நாங்க வந்து நிற்போம். காவல்துறை எப்பவுமே உங்கள் நண்பன்தான்.



கொஞ்சம் Share பண்ணுங்க !!

Sunday, November 14, 2021

சூரியா...ஜாதி வன்மம் பிடித்தவரே..


 இது வன்முறை போலத்தான் படும்..படத்தில் எல்லா கதாபாத்திரங்களுக்கும் உண்மைப் பெயரை வைத்துவிட்டு ஒரு மோசமான கதாபாத்திரத்துக்கு மட்டும் வேறு பெயரை வைத்து அதுவும் வன்னியர் தலைவராக இருந்த ஒருவரின் வைத்தது...இவ்வளவு எதிர்ப்பு வந்தும் மாற்றாமல் கம்னியூஸ்டுகள் நல்லவர்கள் வல்லவர்கள் என பேட்டிக் கொடுப்பது..இதற்கு மட்டும் பதில் சொல்லாமல் தெனாவெட்டாகத் திரிகிறவருக்கு வேறு எப்படி ரெஸ்பாண்ட் செய்வது..இதைச் சொன்னவருக்கு மிதிப்பது என்பது நோக்கம் இல்லை..நிச்சயம்இதை எதிர்த்து வன்முறை என கோர்ட்டுக்குப் போனால் கோர்ட் நிச்சயம் இதை நீக்கவே சொல்லும்..இது ஜாதியை வைத்து கல்லாக்கட்ட நினைப்பவர்களுக்கு நிச்சயம் இது ஒரு பாடமாகவே அமையும்...பதினாறு வகை காய்கறி வைத்து ஓரத்தில் கொஞ்சம் மலம் வைத்த கதையாய் ஒரு அற்புதமான படம் எடுத்து அதில் தன் ஜாதி வன்மத்தை காட்டிய சூரியா அவர் மரியாதையை அவரே கெடுத்துக் கொண்டார் எனத்தான் எனக்குப்படுகிறது..(இதிலெல்லாம் ஒன்றுமில்லை என சூரியா நினைப்பார் ஆயின் அந்த வில்லன் பெயரை அவர் ஜாதி சார்ந்த தலைவரின் பெயரை வைத்து நிரூபிக்கலாம்..)

தெரிந்து கொள்வோமே..


 இதுவரை இந்த விசயம் எனக்குத் தெரியாது.அறிவோம்..பகிர்வோம்..அனைவரும் பயன் படச் செய்வோம்...

Saturday, November 13, 2021

கொடுமையிலும் கொடுமை என்பது...


 மனம் வெறுத்து உயிரை மாய்த்துக் கொள்ளும்போது கூட அந்த நாயை என எழுதாமல் அந்த சார் என எழுதி வைத்துப் போகும் மாணவியை நினைக்க கண்கலங்குவதைத் தவிர்க்க இயலவில்லை..