Tuesday, October 11, 2022

படித்ததில் பிடித்தது..

 Eternity is Forever


Larry and Harry, two homeless men were given a chance to travel to a third world country on an all-expenses paid trip.


They were told to carry nothing and return with nothing...


They were to make sure they spend all that was given to them.


Provision had been made for their expenses and welfare which they would get upon arrival at their destination.


The only caveat was that neither of them knew when they would be asked to return home.


As they arrived, they were both given a huge sum of money and a credit card with no limits, but reminded to spend it all before returning to their home country.


At this, they became instantly wealthy by local standards.


Harry thought to himself. "Wow! This is my opportunity to live like a king for I don't know how long this would last".


So he went and rented a Ferrari and rented the best room in the best hotel in town.


He went to the best stylist, shaved and transformed his looks. He had parties everyday. Everyone in the city thought the cars and the wealth were his and they loved and respected him for it.


But....


At the back of his mind, Harry knew he would go back home someday and leave all of it behind but he didn't want to think about it.


Right now he was living in the moment and enjoying himself to the fullest...


Larry, on the other hand rented a small Honda to get him around town and stayed in a modest inn.


He thought to himself. "This money will not last and I don't know when I am going back so I have to do something tangible with it."


He decided to use it to change some people's lives while there was still time.


So he got busy, went out on the streets and started making a difference.


He didn't just give away money, rather he tried to help people be self-sufficient.

He paid off all the school fees of some promising young ones to enable them get an education and take care of themselves and their families.


He found some responsible adults and funded them in a business that guaranteed they would be able to take care of their family and create employment.


He devised a means of helping some of the homeless people get off the street and getting them into a trade for he thought "I wish someone would do this for me when I get back".


In short, while Larry was there, he was busy changing lives...


Then after just two months they were suddenly notified that it was time to go back.


They hadn't even finished spending all the money but still had to leave it all.


They both said their goodbyes and headed for the airport.


At the airport they were given their original clothes to put back on before boarding the plane back to their country...


Harry reminisced on the good times he had but wasn't too happy that he was going back to his old life.

How would he readjust to being homeless?


Larry on the other hand felt good. He came with nothing and is leaving with nothing, but he at least helped others with a chance at life and that alone meant the world to him.


Readjusting to being a homeless person wouldn't be a problem because he never lived like the wealth was his anyway and always had it at the back of his mind that he would leave it all someday.


But... Little did they know that each moment they spent on vacation was being secretly recorded and they would be rewarded accordingly.


Now, which one do you think would be cast back out to the slums as a homeless person and which one would be entrusted with large sums of wealth and position of authority?


The same goes with our lives here on earth.


We are sent here on a mission and will return empty handed except for the recordings of our dealings here on earth.


Yet, many of us walk around thinking that the wealth we have is ours to keep forever.


We look at ourselves in the mirror and think that what we see will always be there, forgetting that we are wearing a temporary cloth, a human body, that would be required of us before we leave this world.


Our vacation on earth is but a short time while eternity is forever.


How we spend this vacation determines how we get to spend eternity.

Monday, October 10, 2022

அன்றும் இன்றும்

அன்று

பசிக்கு உணவின்றி

ஒவ்வொரு பொழுதும்

ஏங்கி ஏங்கித் தவித்தவர்களே

சபிக்கப்பட்டவனாய்த் தெரிந்தார்கள்


இன்று

உண்ண உணவிருந்தும்

உண்ணமுடியாது

பார்த்துப் பார்த்துத் தவிப்பவர்களே

பாவியாய்த் தெரிகிறார்கள்


அன்று

அதீதத் திறனிருந்தும்

பதவி அடைய முடியாது

பரிதவித்துப் புலம்பியவர்களே

பரிதாபமாய்த் தெரிந்தார்கள்


இன்று

போதியத் திறனுமின்றி

எதனாலோ பதவியடைந்தவர்கள்

அன்றாடம் படும்பாடே

பரிதாபமாய்ப் படுகிறது


அன்று

அன்றாட வாழ்வுக்காக

ஒவ்வொரு நாளும்

செத்துத் செத்துப் பிழைத்தவர்களே

பாவியாய்த் தெரிந்தார்கள்


இன்று

மரணப் படுக்கையில்

ஒவ்வொரு நொடியும்

சாகமுடியாது பிழைத்திருப்வர்களே..

பாவியாய்ப் படுகிறான். 

Saturday, October 8, 2022

அவசர உதவிக்கு..

 *நமது* *ஒவ்வொரு மொபைல் போனிலும்,  கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய எண்கள்!*


1.அவசர உதவி அனைத்திற்கும்———— *911*


2.வங்கித் திருட்டு உதவிக்கு ———— *9840814100*


3.மனிதஉரிமைகள் ஆணையம் ————– *044-22410377*


4.மாநகரபேருந்தில *அத்துமீறல்* ———— *09383337639*


5.போலீஸ் SMS :- ——————— *9500099100*


6.போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—— *9840983832*


7.போக்குவரத்து விதிமீறல் SMS : —— *98400 00103*


8.போலீஸ் : —————— *100*


9.*தீயணைப்புத்துறை* :————— *101*


10.போக்குவரத்து விதிமீறல——— *103*


11.விபத்து :—————— *100, 103*


12. *ஆம்புலன்ஸ்* : ————— *102, 108*


13.*பெண்களுக்கான* அவசர உதவி : ———– *1091*


14.*குழந்தைகளுக்கான* அவசர உதவி :——– *1098*


15. *அவசர காலம் மற்றும் விபத்து : ——— *1099*


16.*முதியோர்களுக்கான* அவசர உதவி:—— *1253*


17.*தேசியநெடுஞ்சாலையில்* அவசர உதவி: *1033*


18.*கடலோர பகுதி* அவசர உதவி : ———— *1093*


19. *ரத்த வங்கி அவசர* உதவி : ————— *1910*


20.*கண் வங்கி* அவசர உதவி : ———— *1919*


21.*விலங்குகள் பாதுகாப்பு* —————— *044 -22354959/22300666*


22.நமது அலைபேசியில் *911* என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.. நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும். *இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.*


பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— *93833 37639*

பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:- Toll Free No :- *180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828*

மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- *044 – 26530504 / 26530599*

வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– *044- 26184392 / 9171313424*

ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: *044- 25353999 / 90031 61710 / 99625 00500*

ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் — *044-24749002 / 26744445*

சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற *95000 99100* ( SMS ).


இதனை அலட்சிய படுத்தாமல் *அனைவருக்கும் பகிருங்கள், நன்றி....*

பங்குச் சந்தையான..நட்பு..

 ஆண்டுக்கொருமுறை

நிதி நிலைமைகளைச்

சரிபார்த்தலைப் போலவே

உறவு முறைகளையும்

சரிபார்த்துக் கொள்ளவேண்டியுள்ளது


உலகச் சந்தையின் அசாதாரணப் போக்கில்...


எதிர்பார்த்து முதலீடு செய்த

பங்குகள் சில

குழிபறித்து குப்புறத் தள்ள


எதிர்பாராதவை சில

எகிறிப் பாய்ந்து

துள்ளல் போட வைப்பதைப் போலவே


சந்தர்ப்பச் சூழலின் நெருக்கடியில்...


தெரிந்தவன் பழக்கமானவன் என

நினைத்திருந்தவன்

ஆத்ம நண்பனாய்

சமயத்தில் கைகொடுத்து உதவ


உயிருக்குயிரானவன் என

நம்பி இருந்தவன்

சமயம் பார்த்து

கழுத்தறுத்துத் தொலைக்க


இப்போதெல்லாம்

தவறாது

ஆண்டுக்கொருமுறையேனும்

அல்லது அவசியமெனில்

அன்றாடமேனும்


நிதி நிலைமைகளைக் கையாளுதலைப் போலவே

உறவு முறைகளையும்

மிகக் கவனமாய்

புதுப்பித்துக் கொள்ளவேண்டி இருப்பது

நிச்சயம் துரதிஸ்டமே..

Thursday, October 6, 2022

உயர்ந்தவை...எளிமையானவையே...

 *மன முதிர்ச்சி என்றால் என்ன?*

*What is Maturity of Mind ?*


01. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது.

01. Correcting Ourselves without Trying to Correct Others.


02. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்)

ஏற்றுக்கொள்வது.

02. Accepting others with Their Defects


03. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் 

கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.

03. Understanding the Opinions of Others from Their Perspectives.


04. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.

04. Learning to Leave what are to be Avoided.


05. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.

05. Leaving the Expectations from Others.


06. செய்வதை மன அமைதியுடன் செய்வது.

06. Doing whatever We Do with Peace of Mind.


07. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது.

07. Avoiding to Prove Our Intelligence On Others.


08. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் 

என்ற நிலையை விடுதல்.

08. Avoiding the status that others should accept our actions.


09. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.

09. Avoid Comparing Ourselves with Others.


10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்..

10. Trying to Keep Our Peace in Our Mind without Worrying for Anything.


11. நம் அடிப்படை தேவைக்கும்., நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.

11. Understanding the Difference Between the Basic Needs and what We Want.


12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல்.

12. Reaching the Status that Happiness is Not Connected with Material Things.


*இந்த 12 ல் குறைந்தது ஒரு ஏழெட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்.*

*Our Life will be Simple if Only We Practice 7 or 8 of the Above 12.*


Live Your Life & Love Your Life.

இந்துக் கடவுள்களை வணங்கினால் இந்துவா..?

 தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்வதற்கு முன்னால் சென்னை மாகாணம்தான் இருந்திருக்கிறது.. தமிழ்நாடு என்று ஏதும் இல்லை..மன்னர்கள் காலத்தில் கூட சேர/சோழ/பாண்டியநாடு /பல்லவ நாடு என்றெல்லாம் கூட இருந்திருக்கிறது...தமிழ்நாடு என்று ஒன்று இருந்ததில்லை..எனவே சோழர்கள் இருந்திருக்கிறார்கள்/பாண்டியர்கள் இருந்திருக்கிறார்கள்/சேரர்கள் இருந்திருக்கிறார்கள்...எனவே தமிழ் மொழி பேசினார்கள் என்பதற்காககத்  தமிழர்கள் இருந்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்வதற்கில்லை...சைவம்/வைணவம் எல்லாம் இருந்திருக்கிறது..சிவனும் திருமாலும் தெய்வங்களாக வணங்கப்பட்டிருக்கிறார்கள்.இந்து தெய்வங்களை வணங்கி இருக்கிறார்கள்  என்பதற்காக இந்து மதம் இருந்தது எனச் சொல்வதற்கில்லை..சோழர்கள் இந்து மதம் சார்ந்தவர்கள் எனச் சொல்லவும் முடியாது...சரிதானே...

Friday, September 30, 2022

நான் ஏன் இந்து ஆனேன்..

 *சற்றே நீண்ட பதிவு தான்.. பொறுமையாக வாசித்து விடுங்கள்.*


          நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை.


          நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.


           நீங்கள் கோவிலுக்குள் நுழையும் தருணத்தில்.. ஒரு பூசாரி உங்கள் நெற்றியில் (உங்கள் சம்மதம் இல்லாமல்) திலகம் வைத்து 10 ரூபாய் கேட்பார், அப்போது யாராவது உங்கள் நெற்றியில் மயில் தோகை அடித்து மேலும் 10 ரூபாய் கேட்பார்கள். பிறகு சாம்பலுடன் மற்றொரு திலகம் & 10 ரூபாய்.


          என் அம்மா மூடநம்பிக்கையால்.. அந்த பணத்தை சந்தோஷமாக செலவு செய்தார்கள் என்று நம்பிய  எனக்கு வெறுப்பாக இருந்தது. 


           இது போன்ற விஷயங்கள்.. என்னை கோவில்கள் மற்றும் கடவுள் நம்பிக்கைகள் இருந்து விலக்கி வைத்தது. 


          பின்னர் நான் வளர்ந்து, நான் விரும்பிய மதசார்பற்ற  அரசியலைப் பின்பற்ற ஆரம்பித்தேன். புரட்சி, புடலங்காய் என பல வேப்பிலைகள் எனக்கு அடிக்கப்பட்டன. சேகுவேராவின் படம் போட்ட டி-ஷர்ட்டை, பணியனை அணிந்துகொண்டு சுற்றுமளவு தீவிர முற்போக்கு மற்றும் பகுத்தறிவுவாதியாகி போனேன்.


       அன்று ஒருநாள் என்னை இளக வைத்த ஒரு செய்திக் கட்டுரையைப் பார்த்தேன்.


          ஆம் ஆத்மி கட்சியின் தலைவரின் அறிவிப்பின்படி, இமாம்களின் சம்பளம் மாதம் ரூ.10,000லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்படும். 


        அதேசமயம், உதவியாளர்களின் சம்பளம் மாதம் ரூ.9,000லிருந்து ரூ.16,000 ஆக உயர்த்தப்படும்.டெல்லி வக்ஃப் வாரியத்தின் கீழ் வரும் தேசிய தலைநகரில் உள்ள 185 மசூதிகளுக்கு இந்த முடிவு பொருந்தும். மஸ்ஜித்களில் வசிக்கும் மௌலவிகள்,  மௌலானாக்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு கணிசமான மாதச் சம்பளம் அரசு சார்பாக (மக்கள் வரிப் பணம்) வழங்கப்பட்டதை நான் உணர்ந்தேன்.


             கிருத்துவ தேவாலயத்தில்.‌ பங்குத் தந்தைகள் மற்றும் பிற ஊழியர்களுக்கும் மாத ஊதியம் வழங்கப்பட்டது. பல்வேறு நலத்திட்டங்கள் அவர்கள் எந்தவித கோரிக்கையும் வாய் திறக்கும் முன்பே நிறைவேற்றப் பட்டுவிட்டது. இந்த செயல்பாட்டை எல்லாம் நான் ஒரு நடுநிலையாளனாக வரவேற்றேன்.


        பிறகு தான் அந்த உண்மை எனக்கு சுட்டது. இந்துக் கோவில்களுக்கு என்று எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. உண்மையில் பெரும்பாலான கோவில்களில் பூசாரிகளுக்கு கிட்டத்தட்ட சம்பளம் என்று எதுவும் வழங்கப்படவில்லை.


            பக்தர்கள் கொடுக்கும் பணத்தை நம்பியே அந்த பூஜை செய்பவர்கள் இருந்தனர். அதை நான் பிச்சை என்று கேலி செய்திருக்கிறேன். ஆனால் இப்போது நான் பெரும் அதிர்ச்சியடைந்தேன். அரசுகளின் வருமானம் பெரும்பாலும் இந்துக்களுடையது.


      மேலும் கோவில் சொத்துக்கள் நிறைய நிறைய உள்ளன. ஆனாலும் இந்துக்களின் கோவில்களை பராமரிப்போர், பூஜை செய்வோருக்கு சம்பளம் மறுக்கப்படுகிறது.


      எனது கோவில்களில் இருந்து என்னை விலக்கிய ஒரு மதமாற்றக் கட்டுக்கதையின் மறுபக்கம் பல்லிளித்த தருணம். உண்மையில் பூஜாரிகள் எந்த தவறும் செய்யவில்லை. 


         அவர்கள் குற்றவாளிகள் அல்ல. ஆனால் அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள். எனது தர்மத்திற்கு ஆதாரமான வழிபாட்டுத் தலங்களைப் பராமரிப்பவர்கள்.  நான் வணங்கும்  எனது கடவுள் சிலைகளைத் தூய்மை செய்பவர்கள். இன்று கையேந்தும் பிச்சைக்காரர்களாக ஆக்கப்பட்டார்கள். அதனால் அவர்கள் மேலும் கேலிக்கும் உள்ளாக்கப்பட்டார்கள்.


         நமது வரிப்பணத்தில்.‌ காசு வாங்கும் முல்லா, மௌலானாக்களுக்கு தரப்படும் மரியாதை கூட அல்ல ,, இவர்களுக்கு அவமானம் தரப்பட்டது.  "கருவறைக்குள் நீ நுழைய முடியுமா..? என்ற தர்ம சங்கடமான கேள்வி ஒன்றை முன் வைத்து என்னை மடக்கினார்கள். அது எனது வேலை அல்ல என எனக்கு அப்போது தெரியாது.


            ஆனாலும் எனது மாமா கோவில் ஒன்றில் கருவறையில் பூஜை செய்கிறார். 'பூஜாரி குடும்பம்' என்பதே ஊரில் அவருக்கு பெயர். ஆனால் அவர் பிராமணர் அல்ல. மெல்ல.. மெல்ல என்னைச் சுற்றி பின்னப்படும் பெரும் சூழ்ச்சி வலை ஒன்றை கண்டு கொண்டேன். அது *பிராமண வெறுப்பு!!*


          தெ(ளி/ரி)ந்த பிறகு இந்த மதமாற்ற அரசியலை ஊன்றிக் கவனிக்க ஆரம்பித்தேன்.


         முதலில் என் மனதில் எழுந்த கேள்வி, "ஏன்? இந்த பாகுபாட்டிற்கு என்ன காரணம்?"


         நான் மேலும் தோண்டினேன் ..


 பதில்..


 *அரசியல்.*


          ஆளும் கட்சி இந்து மதத்தை வளர்க்கவே  விரும்பவில்லை. மாறாக நமது தர்மத்தை அழிக்க செய்த நிறைய முயற்சிகள் ('அதற்காகத்தான்.. அவர்களுக்கு கோடி கோடியாக ஹவாலா பணம் வருகிறது' என்ற தகவலை.. பின்னர் தேடி அறிந்து கொண்டேன்) நம் கண்ணுக்குத் தெரியாமல் திறமையாக மறைக்கப்பட்டது.


            அவர்கள் மற்ற மதங்களை ஊக்குவிக்க விரும்பினர். (இந்த பணியும் அவர்களுக்கு கோடியோடியாகப் பணம் வாரி வழங்கும் அன்னிய சக்திகளின் அசைன்மென்ட் தான் என்பதும் புரிந்து கொண்டேன்) இவர்கள் வெளியில் நேர்த்தியாக வேஷம் போடுகிறார்கள். ( இந்த நடிப்பு தான் அவர்களது ஒரே முதலீடு)


           இந்து மதத்தை முடக்கிப் போட.. அவர்கள் கண்டுபிடித்ததே.. "மதசார்பற்ற அரசியல்."


         என்னைப் போலவே பெரும்பாலான இந்துக்கள் அதில் ஏமாந்து விட்டதை உணர்ந்தேன். அது அவர்களது வெற்றிகரமான செயல்பாடு.


       ஏனெனில் ஏமாந்து போன கோடிக்கணக்காணோரில் நானும் ஒருவன்.


"ஏன் அந்த 70 வருடங்களில் ராமர் கோவில் கட்டப்படவில்லை?" 


"ஏன் கங்கை தூய்மைப் படுத்தப்படவில்லை?"


"ஏன் காசி கோவிலின் ஆக்கிரமிப்புகள் நீக்கப்படவில்லை?"


"ஏன் சார்தாம் (கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் புனித ஸ்தலங்கள்) யாத்திரையின் பாதைகள் சீரமைக்கப்படவில்லை?"


"ஏன் கைலாய மலைக்கு இந்தியா நிலப்பரப்பினூடே வழிகள் உருவாக்கப்பட வில்லை?"


"ஏன் இந்துக்களின் (பெரும்பான்மையாக இருந்தும் கூட)  உணர்வுகள் மதிக்கப்படவேயில்லை?மாறாக தொடர்ந்து அவமானப் படுத்தப்பட்டார்கள்? "


     என்ற.... என் எல்லா கேள்விகளுக்கும் எனக்கு பதில் கிடைத்தது.

            

  ‌          உண்மையிலேயே அவர்கள்.. இதில் எதையுமே, என்றுமே செய்ய விரும்பியதில்லை. இந்துக்களின் ஆலயங்களை மேம்படுத்துவது மதசார்பற்ற அரசியலுக்கு எதிரானது என்று எனக்கு கூறப்பட்டது.


ஆனால்..


         தெருவெல்லாம் மசூதிகள், சர்ச்சுகள் எழுந்த வண்ணம் இருந்தன. அப்படி இருந்தும் அவர்களுக்கு இந்துக்கள் ஓட்டுக்கள் விழுந்து கொண்டே இருந்தது. அதில் நானும் ஒருவன். இதை சொல்வதில் நான் தற்போது வெட்கப்படவில்லை.


ஏனென்றால்..


          இன்று நான் ஏமாறுவதிலிருந்து தப்பித்துக் கொண்டேன்.


        சில நாட்கள்.. தேர்தல்களில்.. நோட்டா கூட எனது  தெரிவாக இருந்தது. ஆனால் உண்மை என்ன தெரியுமா?? 


       நோட்டா வுக்கு ஓட்டுப் போட்டவர்களும் பெரும்பாலும் என்னைப் போன்ற விரக்தி அடை(யவைக்கப்பட்ட)ந்த இந்துக்களே. 


உண்மையில்..


          அந்நிய மத ஓட்டுக்கள் துல்லியமாக ஒருங்கிணைக்கப் பட்டு விட்டன. ஒட்டுமொத்தமாக யார்க்கு அவர்கள் ஓட்டு என்பது தீர்மானிக்கப் படுகிறது. ஆனால் இந்துக்கள் ஓட்டுக்கள் நோட்டா, இனவாதம், பகுத்தறிவு, பொதுவுடைமை மற்றும் மொழிவாதம் உள்ளிட்ட பல்வேறு திட்டமிட்ட காரணிகளால் சிதறடிக்கப் படுகின்றன. நான்(நாம்) இதை உணரும் முன் போலி மதசார்பற்ற கட்சி ஆட்சியில் அமர்ந்து.. தனது மதசார்பற்ற செயல்பாடுகளை மீண்டும் செய்ய ஆரம்பித்து விட்டது.


           நீங்கள் இதை உணர்ந்து பார்க்கும் தருணம் இருந்திருக்கும்.


               தாஜ்மகால்.. ஒரு அற்புதமான 'காதல் சின்னம்' என்று நமக்கு சொல்லப்பட்டது. ஆனால் மும்தாஜ் தொடர்ந்த கருத்தரிப்பால் தனது 14வது குழந்தையை பெற்றதால்.. இறந்தார் உண்மையில் ஷாஜஹானால் கொல்லப்பட்டார் என்று பிறகு தான் தெரிந்தது.


        தாஜ் மகாலை இப்போது காதலின் சின்னமாக பார்க்க முடியவில்லை. அது ஒரு கட்டமைக்கப்பட்ட.. திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு.. நிறுவப்பட்ட பொய்.

         அது இப்போது.. மறுக்கப்பட்ட பெண்ணுரிமையின் இரக்கத்திற்குரிய சின்னமாக எனக்கு புரிகிறது. 


           ஆனால் உங்களுக்கு  தஷ்ரத் மஞ்சி தெரியுமா?அவரது  முயற்சிகள் நம் வரலாற்று புத்தகங்களில் குறிப்பிடப்படவில்லை. தன் 22 வருட கடின உழைப்பால் மலையை வெட்டி சாலை அமைத்தவர்.


         ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட.. ராஜ ராஜ சோழனின் தஞ்சை பெரிய கோயில் தான் ஒரு உலக அதிசயம்.


           இது நமது மண்டைக்குள்  உட்கார்ந்து கொண்டு வேறு  யாரோ செயல்படுவது போன்றது. இது ஒரு சின்ன உதாரணம்.


            இந்துக்களின் உணர்வுகள் மதிக்கப் படவில்லை என்பது கூட ஒரு பக்கம்.


   மாறாக..

        நமது மனம் புண்படுத்தப்பட்டது. 'இராமபிரான் ஒரு கற்பனை கதாபாத்திரம்' என்று காங்கிரஸ் கட்சி இந்திய அரசு சார்பாக அஃப்டவிட் தாக்கல் செய்தது.


          கோடிக்கணக்கான இந்துக்கள் இருந்தும் அவர்களை காங்கிரஸ் உட்பட எந்த கட்சியும் இதுவரை மதித்தது இல்லை.


        வேதனையின் உச்சமான தருணங்கள் தொடர்ந்தன. 70 வருடங்களில் எதுவும் மாறவில்லை. காங்கிரசுக்கு மாற்று என்று நான் நினைத்த கம்யூனிஸ்ட்கள், ஆம் ஆத்மீ, திரிணமூல், ஜகன் காங்கிரஸ், திமுக போன்ற பிற கட்சிகள் இந்துக்களை அவமதிப்பதிலும் பிற மதத்தவரை காபந்து செய்வதில் ஒருபடி மேலே இருந்தன.


          கேரளா மற்றும் மே. வங்கத்தில் இந்துக்கள் மீது நடக்கும் கொலைவெறித் தாக்குதல்கள் பற்றிய தரவுகள் காங்கிரசே  பரவாயில்லை போன்ற தோற்றத்தை தந்தது.


           மீண்டும் மீண்டும் இந்துக்கள் ஏமாந்து போயினர். போலி மதசார்பின்மை.. ஒரு ஆபத்தான மதமாற்ற வலை என்று உணரும் வரை இது  தொடரும் என்பதை அறிகிறேன்.


ஆனால்...


        இவை எல்லாம் ஒருநாள் மாறி விட்டது!!!


*2014...!!*


      நான் அதுவரை இந்துக்களுக்கு மட்டுமே ஆதரவானது, மற்ற இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு எதிராக இந்துக்களை வைத்து மதவாதம் வளர்க்கும் கட்சி என்று நினைத்திருந்த அல்லது எனது மனதில் விதைக்கப்பட்டிருந்த ஒரு கட்சி ஆட்சி அமைத்தது.


            அந்த நாளிலிருந்து எல்லாம் மாறி விட்டது. பேசுவதற்கு அஞ்சிய இந்துக்கள் தலை நிமிர்ந்து பேச ஆரம்பித்தனர்.


      அயோத்தி, காசி, கங்கை, சார்தாம் போன்ற சீரமைப்புகள் இந்துக்கள் யாரும் கோரிக்கை கேட்காமலேயே நடந்தன.


       இருந்தும் கூட எங்கும் முஸ்லீம் அல்லது கிறித்தவ விரோதம் வளர்க்கப்படுகிறது என்ற பேச்சே இல்லை.( ஆனாலும் இங்கொன்றும் அங்கொன்றும் சிறுபான்மையினருக்கு எதிராக அநீதி இழைக்கப்படுவதாக பொய்ச் செய்திகள் கட்டமைக்கப்பட்டு கொண்டே இருந்தன.)


            நான் நினைத்தது தவறு. இத்தனை நாள் எனது முட்டாள்தனம் நிறைந்த போலி மதச்சார்பின்மையை உணர ஆரம்பித்தேன்.


       என்னில் பிற ஊடகங்கள் மூலமாக வளர்த்தெடுக்கப்பட்ட நடுநிலை என்னை இதுநாள் வரை ஏமாற்றுவதற்காக கட்டமைக்கப்பட்டது என்பதை உணர்ந்த தருணம்.


         எனது கண்களுக்கு முன்னே ஒரு கட்சி.. இந்துக்களின் நலனிற்காக செயல்படுவதை கண்டுகொள்ளாமல் இருக்க நான் ஒன்றும் 'நடுநிலைக் குருடன்' அல்ல.


       பளிச்சிடும் விளக்குகள், சாலைகளுடன் கங்கை வரை நீளும் காசி விஸ்வநாதரின் அந்த வளாகம் எனது மனதைத் திறந்து சொல்லி விட்டது.


         இந்த ஆட்சியை ஒரு இந்துவாக நான் ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதை. இந்த ஆட்சியின் சார்தாம் யாத்திரை, நமாமி கங்கா போன்ற திட்டங்களை அதன் விபரங்களை பிறகு நான் தேடிப் பார்த்தேன். உண்மை எனக்கு உறைக்க ஆரம்பித்தது.


         ஏன் இந்த ஆட்சி மிகமிக தீவிரமாக எதிர்க்கப்படுகிறது.? என்பதை புரிய இப்போது அதிக நேரம் எடுக்கவில்லை.


         ஆம். இப்போது எனது மதத்தை வளர்க்க விரும்பும் ஒரு கட்சி மையத்தில் உள்ளது. இதை சொல்லவோ ஆதரிக்கவோ உண்மை புரிந்த இந்நாட்டின் குடிமகனாகிய எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை.


           இந்துக்களாகிய நான்/நாம் இதுவரை இவர்களை ஆதரிக்கவில்லை.


       அதனால்தான்.. சோனியா, கெஜ்ரிவால், ஸ்டாலின், ஜெகன்,  பினாரயி  போன்றவர்கள்.. பாதிரிகளின்/மௌல்விகளின் சம்பளத்தை உயர்த்த விரும்புகிறார்கள்.


          இந்துக்களாகிய நாம் போலி மதச்சார்பின்மையால் மூழ்கி இருந்தோம். அதனால் தான் கோவில்களின் இந்த தேவையை யாரும் பார்க்கவில்லை.


       நம் கண் முன்னே நமது கோவில் சொத்துக்களை அவர்கள் கொள்ளை அடிக்க முடிந்தது.


          இந்துக்களாகிய நாங்கள் எங்கள் மத அடிப்படையில் வாக்களிக்க முடியாமல் செய்யப்பட்டோம். ஆனால் மறுபக்கம் மற்ற மதஓட்டுக்கள் ஒருங்கிணைக்கப் படுகின்றன. 


           இந்துக்களின் பார்வை மட்டும் மதசார்பற்ற நோக்கு கொண்டதாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவை எடுக்க இந்துக்களுக்கு தவறான புரிதல்களும், வழிநடத்தல்களும் ஊட்டப்பட்டது. நமது வழிபாடுகள், நடைமுறைகள் திட்டமிட்டு நிறுத்த/தடை செய்யப்பட்டன.


       இது ஒரு கூடுதல் செய்தி.    ஈரமுள்ள மனதால் படிக்க வேண்டாம்.


           நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவின் படி மனு தாக்கல் செய்யும் போது நரசிம்ம கோபாலன் என்ற கோவில் குருக்களின் மாத சம்பளமாக ரூ. 750, உயர்த்தப்பட்டது.


         அதுவரை கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாக (காலம் காலமாக) அவர் பெற்றுக் கொண்டிருந்த மாதச் சம்பளம் 250  ரூபாய்.


          நீதிமன்றம் வழங்கிய 750/- சம்பளத்தை, "3 மடங்கு சம்பள உயர்வு - இதோ உனக்கு..." என்று கிண்டல் தொனியில் அவருக்கு அந்தப் பணம் வழங்கப் பட்டது.


          கோயிலில்.. மேலும் ஆறு முழுநேர சேவை பணியாளர்கள் உள்ளனர்.


          அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெறும் மூன்று இலக்க சம்பளம். 900க்கு அருகில் என்று நினைத்து விட வேண்டாம்.  300, 400, 600 என்ற அளவில் தான். திருப்பூந்துருத்தி ஆலய உதவியாளரின் மாதச் சம்பளம் வெறும் 240ரூபாய்.


அதுவும் பல மாதங்களாகத் தரப்பட வில்லை.


         பத்தமடை அருகே உள்ள வில்வநாதர் கோவிலில் பூசாரிக்கு மாதம் ரூ.1000 சம்பளம் வழங்கப்படுகிறது.


        பிரம்மதேசத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க மற்றும் புராதனமான கைலாசநாதர் கோவிலில்‌. அர்ச்சகருக்கு மாதம் 19 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.

 🤦🏻‍♂️


            இதெல்லாம் காணும்போது ஒரு இந்து தான் ஒரு ஆலய வழிபாட்டாளாராக  கலங்கினால்.. இதற்கு "காரணம்.. நீங்களும், நானும் தான்" என்பதை வலித்தாலும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

எனக்கு அதில் தயக்கமில்லை.  ஏனெனில் நான் உண்மை தெரிந்து கொண்டேன்.


        நிஜத்தில் கோவில் சொத்துக்கள் பல ஆயிரம் கோடிக்கணக்கில். சம்பளம் தாராளமாக தரலாம். ஆனால் இது திட்டமிட்டுக் காரணத்துடன் மறுக்கப் படுகிறது.


             இவர்களுக்கு ஆழமான உள்நோக்கம் இருக்கிறது. நமது கோவில்களை அழிய விடப்படவேண்டும்.


           நமது கோவில்களில் அர்ச்சகர்களின் நிலை மிகவும் மோசமாக ஆக்கப்பட்டு விட்டது. அவர்களை பிச்சைக்காரர்கள் போல் காட்டியது யார்?


          சம்பளம் இல்லாமல் கோவில் நடைமுறைகளுக்கு பணி செய்ய எவரும் முன்வரக் கூடாது. என்ற திட்டமிட்ட சதிச் செயல்பாடுகள்.


   ஆனால்..


         இது எல்லாம் மாறி விடும் என்று இன்று நான் நம்ப ஆரம்பித்து விட்டேன்.


       ஒரு இந்துவாக.. என்னை சாதரணமாக அல்ல, தலை நிமிர்வுடன் என்னை உணர ஆரம்பித்தேன். இந்த முறை  ""ஹிந்து வேறு ஹிந்துத்வா வேறு"" என்று ராகுல் காந்தி சொன்ன போது நான் ஏமாறவில்லை.


      திருப்பி கேலி செய்தேன் அதை ஒரு 'இந்து வெறுப்பாளன்' சொல்லக்கூடாது என்று உடனே பதிவிட்டேன்.


       அந்த தந்திரமான மதசார்பற்ற நிலை மனோநிலை மாறி சுதந்திரமான இந்து ஆதரவாளன் என உணர்ந்தேன்.


        போலிகளை, வேஷமிடுபவர்களை என்னால் இப்போது எளிதாக கண்டுபிடித்து விட முடிகிறது.


        மம்தா கோவிலுக்கு செல்வதும்,


      பிரியங்கா திலகமிடுவதும், 


       துர்கா ஸ்டாலின் கோவில் கோவிலாக ஏறி இறங்குவதும்..


ஜெகன் இந்துவாக மாறியதாக படித்ததையும் என்னால் போலித்தனம் என்று உடனே உணர முடிகிறது.


        இப்போது.. 


          *நான் மிகவும் பெருமையுடன் எனது கோயில்களுக்குச் செல்கிறேன்.*


         *கோவில்களில் என்னால் முடிந்த அளவு தானம் செய்கிறேன்.*


         அந்தணர்களுக்கு.. பிச்சை என்றல்ல.. தாராளமாக காணிக்கை இடுகிறேன்.


          நம் தெய்வங்களுக்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த.. நம் மரபைக் கவனித்துக்கொள்பவர்களுக்கு நன்றி செலுத்தும் பங்களிப்பாக இதை நான் கருதுகிறேன்.


            இப்போது அவர்கள் உருவத்தை கண்டு கேலி உணர்வு பொங்குவதில்லை. மாறாக அவர்களை காணும் போது மனத்தால் பணிகிறேன்.


         நமது தர்மத்தைக் காக்க நினைக்கும் அந்த தியாக உணர்வு.. என்னில் நமது தர்மத்தின் ஊற்றைப் பெருக்கெடுக்க வைக்கிறது.


        போலி வரலாறு மற்றும் ஆரிய படையெடுப்பை நம்பிய காலம் மலையேறிவிட்டதை அடுத்த முறை நீங்கள் கோவிலுக்குச் சென்று குருக்கள் அல்லது அர்சகரிடம் பணம் காணிக்கை அளிக்கும் போது.. அவர் பாதிக்கப்பட்டவர் & குற்றவாளி அல்ல என்பது உங்களுக்குத் தெ(பு)ரிய வேண்டும்.


       "மலிவான.. மதமாற்ற அரசியலுக்கு அவர் பலியாக்கபட்டார்" என்பதை உணரும் தருணம் அது.


        கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதையும், பக்தர்கள் கொடுக்கும் பணத்தை நம்பி இருக்க வேண்டிய அவசியமில்லாத அளவுக்கு சம்பளம் வழங்கப்படுவதையும் அரசுகள்  உறுதிப்படுத்த வேண்டும்.


         விரைவில்.. இந்த நிலை மாறி நன்மைகள் வந்து விடும் என்று உறுதியாக நம்புகிறேன். 


     எனக்குத் தெரியும். இந்து என்ற எனது உணர்வால் நான் யாரையும் புண்படுத்தவில்லை.


ஆனால்..


        இனி என்னை நான் இந்து என்பதற்காக யாரும் புண்படுத்தி விட முடியாது.


இந்து என்ற உணர்வில் எனது தர்மத்தை மதிக்கும், காப்பாற்றும் ஒரு ஆட்சியை தேர்ந்தெடுக்க நான் செயல்படுவேன்.


           பிறரால் என்மீது கட்டமைக்கப்பட்ட தயக்கங்களை நான் குப்பையில் தள்ளினேன்.


         இந்து என்றால் நடுநிலை அல்ல என்ற பொய்யை அடித்து நொறுக்கினேன்.


       என்னைப் போன்ற இந்துக்கள் நடுநிலையாக இருப்பதால் தான் பிற மதங்கள் இன்று இந்த நாட்டில் சுதந்திரமாக இருக்கின்றன. 


ஆனால்


          இன்று எனது கோவிலை இடித்தால் பொறுத்துக் கொள்வதே நடுநிலைமை என்று எவனாவது சொம்படித்தால் அதை நம்பும் மூடனல்ல!! அதுதான் நிச்சயமாக முட்டாள்தனம்.


        மதமாற்ற கட்சிகள் அல்லது வேறு எந்த கட்சியாக இருந்தாலும் இனி எனது ஆதரவைப் பெறுவதற்கு அவை இனிமேல் என்னை, எனது தர்மத்தை மதிக்க வேண்டும். மதித்தே ஆக வேண்டும். இதில் இனி மாற்றமில்லை.


*ஆம், நான் ஒரு இந்து!இந்துத்வனும் நானே!!


🙏🏻🙏🏻🙏🏻வாட்ஸ் அப் பகிர்வு..