Showing posts with label சினிமா-. Show all posts
Showing posts with label சினிமா-. Show all posts

Friday, September 2, 2016

ரஜினி,இரஞ்சித்,கபாலி ( 9 )

                        காட்சி (7  ) தொடர்ச்சி

ரஜினி:
( தன் பெட்டியிலிருந்து ஃபைல் ஒன்றை
எடுக்கத் தாணு முயற்சிக்க அதைச் சட்டெனத்
தடுத்து.. )

தாணு சார்.. ஃபுல் டிடைல்ஸ் எனக்கு வேண்டாம்
அதையெல்லாம் நீங்க பாத்துக்கங்க
எனக்கு எப்படிச் செய்யலாம்கிறதை ரேண்டமா
சொன்னாப் போதும்....

தாணு
(ஃபைலை மூடி வைத்துவிட்டு...)

சார் சூட்டிங் ஆரம்பிச்ச உடனே காஸிப் மாதிரி
படம் குறித்த செய்திகளை நாமே நாம் நினைக்கிறபடி
தொடர்ந்து பி.ஆர். ஓக்கள் மூலம்
பத்திரிக்கைகளுக்குக் கசியவிட்டுத்
தொடர்ந்துப் படம் பத்தினச் செய்தி
லைவ்ல இருக்கிறமாதிரிச் செய்யறோம்

இசை வெளியீட்டு விழாவை இதுவரை யாரும்
செய்யாத மாதிரி பிரமாண்டமா வெளி நாட்டில
வைச்சே செய்யறோம்

இதுவெல்லாம் எல்லாம் செய்யற மாதிரிதான்

ஆனா அடுத்து படம் வெளியாக இருக்கிற
ஒரு மாசத்துல நாம இதுவரை யாரும் செய்யாத
சில வித்தியாசமான விஷயங்களை உங்க
சூப்பர் ஸ்டார் பிராண்ட் வேல்யூவை வைச்சு
நம்ம படத்தோட மார்க்கெட் வேல்யூவை
இதுவரைத் தமிழ்ப் படம் எதுவும் போகாத
உச்சத்துக்குக் கொண்டு போறோம்...

(தாணு உற்சாகமாகப் பேசப் பேசப் ரஜினியும்
ரஞ்சித்தும் மிக ஆவலாய் முன் சரிந்து
கவனிக்கத் துவங்குகிறார்கள்...)

சாருக்குத்தேத் தெரியுமே
முன்னையெல்லாம் படம் ரிலீஸ் ஆன உடனே
டிஸ்டிபூட்டருக்குப் போனப் போட்டு
படத்தைப் பத்தி மவுத் டாக்
எப்படி இருக்குன்னு கேப்போம்

நாம் என்னதான் லட்சம் லட்சமா செல்வழிச்சு
வீள்ம்பரம் செஞ்சாலும் வாய் வழியா பரவுற
வெளம்பரம் மாதிரி வராது

அதைமாதிரி இப்ப முக நூலும் வலத்தளமும்
ஆகிப்போச்சு.அதுல படஎதிர்பார்ப்பைப்  தூக்கியும்
தாக்கியும் நாமே சில பதிவுக்கு ஏற்பாடு பண்றோம்

கிராமத்து வைக்கப் படப்புல ஒரு ஓரம்
பத்த வைச்சா காத்தே மத்ததை பாத்துக்கிரும் மாதிரி
நம்ம துவக்கி வைச்சாப் போதும்
மத்ததை அதுல உள்ளவங்கப் பாத்துப்பாங்க

அடுத்து அஞ்சு ஆறு வெளி நாட்டுல ரசிகர்கள்
ஆரவாரமா எதிர்பார்த்துக்கிட்டு இருக்கிறாப்பல
ஏற்பாடு செஞ்சிருவோம்.பனியன்,விளமபரம்
அது இது எல்லாம் அந்த ஏஜென்ஸியே
பாத்திக்கிடுவாங்க

அதேமாதிரி, மெடிகல் டூரிஸம் போல
 வெளி ஸ்டேட்ல இருந்து பஸ்
,ஸ்டார் ஹோட்டல் பேக்கேஜோட
நம்ம படம் பார்க்க நாலஞ்சு பஸ் ஏற்பாடு பண்றோம்

முன்னயெல்லாம் லீவு நாளாப் பாத்து
படம் ரிலீஸ் பண்ணுவோம்
இப்ப நம்ம பட ரிலீஸுக்கே லீவு விடற மாதிரி
நமக்குத் தெரிஞ்சரெண்டு மூணு கம்பெனி
மூலமா ஏற்பாடு பண்றோம்

முன்பு படம் ரிலீஸுன்னா பலூன் பற்க்க விடுவோம்,
பெரிய பெரிய போஸ்டர் அடிப்போம்
இப்ப நம்ம பட விளம்பரத்தையே ஒரு விமானத்திலேயே
வரைஞ்சுப் பறக்க விடறோம்

இன்னும் இப்படி வித்தியாசமா ரெண்டு மூணூ இருக்கு

அதையெல்லாம் அந்த ஏஜென்ஸி மூலமே செஞ்சு
அந்த பட ரிலீஸ் வாரத்திலே எங்கேயும் நம்ம
படத்தைத் தவிர வேற பேச்சே இல்லாத மாதிரி செஞ்சு
என்ன விலைக் கொடுத்தாவது முதல் இரண்டு நாள்ல
படத்தைப் பார்த்தாகணும்கிற வெறியை உண்டாக்குறோம்

மிக முக்கியமா பட டிக்கெட் கூடுதலா விக்கிறது
தொடர்பா பிரச்சனை அரசின் மூலமா வராம இருக்க
இதுக்கு முன்ன பண்ணின மாதிரி
அரசுக்கு நெருக்கமானவங்க மூலமாகவே
ரிலீஸுக்கும் ஏற்பாடு பண்றோம்

(தொடர்ந்து பேசிய தாணு ,சற்று நிறுத்தி
 ரஜினி அவர்களின் கருத்தறிய முகம் பார்க்கிறார்)

ரஜினி
(மெல்ல புன்முறுவல் பூத்தபடி )
வெரி நைஸ் ..வெரி நைஸ்...
நான் எதிர்பார்த்தத்துக்கு மேலே
ரொம்ப அருமையா ஒர்க் பண்ணி இருக்கீங்க
தாணு சார்.. ரொம்ப தாங்க்ஸ்.ரொம்ப  தாங்க்ஸ்

(பின் இரஞ்சித் பக்கம் திரும்பி)

தாணு சார் நிச்சயம் அதிக எதிர்பார்ப்பை  ஏற்படுத்திடுவாரு
அப்படி எதிர்பார்ப்போட வர்றவங்க
 ஏமாறாம சந்தோஷமா ரசிக்கிறமாதிரி
படம் பிடிக்கிறமாதிரி
நாமதான் பண்ணனும் பண்ணீடலாமா ரஞ்சித்..

(எனச் சொல்லியபடி கைகுலுக்க ரஞ்சித்தை
நோக்கித்  தன் கையை நீட்டுகிறார்)

ரஞ்சித்
(ரஜ்னி அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டபடி
உறுதியளிக்கும் தொனியில்...)

செஞ்சிடலாம் சார்..நிச்சயமா செஞ்சிடலாம் சார்

(தொடரும் )

Saturday, August 27, 2016

ரஜினி , ரஞ்சித்,கபாலி ( 6 )

                                            காட்சி ( 6 )

ரஜினி:

(ரஜினி அவர்களின் பண்ணை வீடு. முன் லானில்
தாணுவும் ரஞ்சித் அவர்களும் அமர்ந்திருக்க
ரஜினி அவர்கள் மிக வேகமாக வீட்டின் உள்ளிருந்து
வெளியே வந்தபடி... )

வாங்க தாணு சார் டைரக்டர் சார்
கொஞ்சம் முன்னாலயே வந்துட்டிங்களா
இது என் யோகா நேரம்..அதுதான் கொஞ்சம் லேட்
சாரி...சாரி

தாணு:
இது எங்க  யோக நேரம்...அதுதான் கொஞ்சம்
முன்னாலய வந்துடோம் சார்....

ரஜினி (சிரித்தபடி )
என்னை விட நல்லா டைமிங்கா பஞ்ச் பேசுறீங்களே
ப்ரொடூஸர் சார்...சரி சரி டைரக்டர்  கிட்டே
கதையைப் பத்தி பேசினீங்களா

தாணு:
இல்லை சார் நீங்க வந்த உடனே பேசிக்கலாம்னுதான்
நான்தான் சொன்னேன்

ரஜினி:
ஓ.கே டைரக்டர் சார்..கொஞ்சம் விரிவாவே
கதையோட அவுட் லைன சொல்லுங்க
முதல்ல ப்ரொடூஸருக்குப் பிடிக்கணும்
அதுதான் முக்கியம்...

ரஞ்சித்
சார்,, சார் ..போட்டுப் பேசறது கொஞ்சம்
அன் ஈஸியா இருக்கு..ரஞ்சித்ன்னே சொன்னீங்கன்னா
கொஞ்சம் கம்போர்டெபில பீல் பண்ணுவேன்

ரஜினி
ஓகே ஓகே டைரக்டர்ன்னு சொன்னா தன்னால
அந்த சாரும் ஒட்டிக்கிரும்...இனி ரஞ்சித்துன்னே
சொல்றேன்.. ஓகே யா
..ம்...சொல்லுங்க

ரஞ்சித்
(கைகளால் முகத்தை அழுத்தத் தேய்த்து
தன்னை ஆசுவாசப் படுத்திய பின்  ...

சார் நடிச்சு ...இப்ப ஒரு மாஸ் கிட் கொடுக்கணும்னா
அதுக்கு ஒரு டாண் கதைதான் சரியா வருங்கிறது
என்னோட அபிப்பிராயம் சார்

டாண் கதைன்னா உலக சினிமா அளவுல
காட் ஃபாதரை மிஞ்சி ஒரு படமோ
தமிழ்ல நாயகனை மிஞ்சி ஒரு படமோ
இல்லை சார்.

எல்லோரும் அதைத் தழுவி படம் பண்ணி
இருக்காங்க சார்.. எனக்கென்னவே அதை
அடிப்படையா வைச்சு அதுன்னு தெரியாதபடி
அதுக்கு நேர்மாறா ஒரு கதை பண்ணினா
நல்ல வரும்னு எனக்கு ஒரு ஐடியா இருக்கு சார்

(தாணு அவர்களும் ரஜினி அவர்களும்
ஒருவரை ஒருவர்பார்த்துக் கொண்டு லேசாகத்
தலையாட்டிக் கொள்கிறார்கள்
ரஞ்சித் அவர்கள் இருவரின் முக பாவம் நேர்மறையாக
இருக்க பின் தொடர்ந்து பேசுகிறார் )


முதல்ல கதை சொல்ல ஆரம்பிக்கிறதில இருந்தே
கதையை மாத்தறோம் சார்

அதுல வேலு நாயக்கர் கதையை அவங்க
சிறு வயதில இருந்து ஆர்ம்பிச்சு டாணாகி
சாவு வரைன்னுக் கொண்டு போனா...

நாம டாணாகவே ஆரம்பிச்சு தொடர்ச்சியா
கதையைக் கொண்டு போகாம முன் பின்னா
போறோம் சார்

அதுல பேருல மட்டும் ஜாதி இருக்கும் சார்
மத்தபடி ஜாதிப் பிரச்சனை இருக்காது சார்

இதுல பேரே ஜாதி மாதிரி இருக்கும்
கதாப்பாத்திரமும் ஜாதியைத்தான் அதிகம்
பேசும் சார்

அதுல மனைவி சாவை  கண் எதிரே
பார்ப்பாரு சார்

இதுல அப்படியில்ல செத்துட்டதாச் சொல்லி
தேடுறதா கதையை நகட்டுவோம் சார்

அதுல அப்பாவைக் கொன்னதுக்கு லூஸ்மகன்
பழி வாங்கக் கொல்றதா முடியும் சார்

இதுல கொஞ்சம் மாத்தி லூஸு மாதிரி
தனியா ஒரு கேரக்டரையும் அப்பனை
கொல்றதுக்குக் காரணம் ஆனதுக்குப்
பழி வாங்கறதா இன்னொரு கேரக்டரையும்
ஆக அதை இரண்டா ஒடைக்கிறோம் சார்

அதுல வேலு நாயக்கருக்கு உள்ளூர் உடைன்னா
இதுல கதா நாயகனுக்கு சஃபாரி டிரஸ் சார்

ஏன்னா அதுல வேலு நாயக்கர் இருக்கிறது
இந்தியான்னா இந்தப் படக் கதா நாயகன்
இருக்கிறது வெளி நாடு சார்

அதுல வில்லன் உள்ளூர்னா

இதுல வெளி நாட்டுக்காரன் சார்...

அதுல கதை நடக்கிற லொகேசன், சேரி
கடல்னா

இது சிட்டி, பெரிய ஹோட்டல் மால்
அப்படி சார்...

அதுல கதா நாயகனுக்கு நல்லவனா
கெட்டவனான்னு அவருக்கே ஒரு
குழப்பம் இருக்கும் சார்

இதுல அதுக்கு சான்ஸே இல்ல சார்
கதானாயகனுக்கு தான் நல்லவன்ற
கர்வமும் திமிருமே இருக்கும் சார்

ரஜினி:

(இரஞ்சித் தொடர்ந்து சொல்லிக் கொண்டு போக
சட்டென கைகாட்டி நிறுத்தியபடி...)

சரி சரி..இப்படி மாத்திக்கிட்டேப் போனா
நாயகன்னு தெரியாம வேணுமானா போகும்
ஒரு கட்டுக் கோப்பான முழுக்கதையா இது வருமா

முடிஞ்சா இதையெல்லாம் உள்ளடக்கி
ஒன் லைனா கதையைச்
சொல்லமுடியுமா ரஞ்சித்?

(ரஞ்சித் யோசிக்கத் துவங்குகிறார் )

Thursday, August 25, 2016

ரஜினி, ரஞ்சித், கபாலி ( 5 )

                        காட்சி   ( 4  ) தொடர்ச்சி

(குறைந்தப்  பொழுதெனினும் கனத்துப்
பெய்து விடுகிறக் கோடை மழை போலச்
சுருக்கமாக எனினும்கனமான விஷயத்தை
மிக எளிதாகச் சொல்லிப்போன
ரஜினியை மலைப்புடன் பார்த்தபடி
நெகிழ்ச்சியுடன்..)

ரஞ்சித்:
எவ்வளவு உச்சத்தில இருந்தாலும் சினிமா
மற்றும் நடிப்புச்  சம்பத்தப்பட்டு , ஒரு கடைக் கோடிக்
கிராமத்துல நடக்கிறதைக் கூட  மிகச் சரியா
தெரிஞ்சு வச்சிருக்கிறது மலைக்க வைக்குது சார்

ரஜினி:
(சப்தமாய்ச் சிரித்தபடி )
உச்சம் தொடுறது கஷ்டம் இல்லை தம்பி
அதல நிலைக்கிறதுதான் ரொம்ப ரொம்பக் கஷ்டம்
சைக்கிள்ல இருந்து விழுந்தா சுளுக்கு மட்டும்தான்
ஆனா விமானத்தில இருந்து விழுந்தா...
மேலப் போறதைத் தவிர வேற வழியே இல்லை

(மீண்டும் சபதமாய்ச் சிரித்து.. நிறுத்திப்பின்.... )

சரி அதை விடுங்க எப்படிப் பண்ணலாம்..
என்ன பண்ணலாம் அதைச் சொல்லுங்க
முடிஞ்சா ஒன் லைனா.....

ரஞ்சித்:
சார்...உங்ககிட்ட இருந்து தகவல் வந்ததில இருந்து
உங்களுக்குச் சரியா இருக்கும்படியா
சீரியஸா ஒன்  லைன் யோசித்தேன் சார்

நீங்க எத்தனையோ கிட் கொடுத்திருந்தாலும்
திரும்பத் திரும்ப உங்க படம்னா
நினைப்புல வந்து நிக்கிறது
மூன்றுமுடிச்சு, புவனா ஒருகேள்விக் குறி
முள்ளும் மலரும்,அப்புறம் சரிதா மேடம் கூட
ஒரு டபிள் ரோல் பண்ணினீங்களே அந்தப் படம்
அப்புறம் மெயினா பாட்சா, எந்திரன்தான் சார்
காரணம் வில்லத்தனமான  அந்தக் கதா நாயகன்
பாத்திரங்கள் தான் சார்

அந்த மாதிரி பண்ணினாத்தான் உங்களுக்கு
ரொம்பப்பொருத்தமாகவும், ஜனங்களுக்குப்
ரொம்பப் பிடிக்கும்படியாகவும் இருக்கும்ங்கிறது
என்னோட அபிப்பிராயம் சார்

ரஜினி:
நீங்க சொல்றது ரொம்பச் சரி
மனம் திறந்து சொன்னா என் நிஜ குணத்துக்கும்
அந்தக் கதாபாத்திரங்களுக்கும் துளிக் கூட
பொருத்தம் இருக்காது

என்ன செய்யறது நீங்க சொல்ற மாதிரி
அதுதான் எனக்கும் மிகச் சரியா
பொருந்தி வருது. ஜனங்களுக்கும்
அதுதான் பிடிச்சுப் போகுது..

ஆனா முன்னப் போல அந்த ரோல் பண்ண
உடம்பு இடம் கொடுக்குமாங்கிற யோசிக்கணும்

ரஞ்சித்:
அது பிரச்சனை இல்லை சார்
ஒரு டாண் மாதிரி, கேங்க் லீடர் மாதிரி
இந்த வயசுக்குத் தகுந்த மாதிரி ஒரு
கேரக்டரை கிரியேட் பண்ணி கதைப் பண்ணினா
சரியா வரும் சார்.

ரஜினி
சரி அது எனக்குச் சரியாக பொருந்தி வரும்
உங்கள் பாணிக்கு......

ரஞ்சித்:
அது பிரச்சனை இல்லை சார்
அந்த டாண் ஒரு நசுக்கப்பட்டச் சமூகத்தைச்
சேர்ந்தவனா ஆக்கிட்டா அதுவும் சரியா
வந்திரும் சார்...

ரஜினி:
ஓ...ஏற்கெனவே  கொஞ்சம் யோசிச்சிட்டுத்தான்
வந்திருக்கீங்க ரொம்பச் சந்தோஷம்
அதை அப்படியே ஒன் லைனா சொல்றீங்களா ?
அப்பத்தான் கொஞ்சம் தொடர்ச்சியா யோசிக்க
சரியாய் வரும்...

ரஞ்சித்:
(கொஞ்சம் தயங்கியபடி )
ஒன் லைன் கூடக் கொஞ்சம் குழப்பும் சார்
வேற மாதிரிச் சொன்னா இன்னும் சரியாப் புரியும் சார்

ரஜினி
அப்படியா...பரவாயில்லையே சொல்லுங்க
டெவெலொப் பண்ண வசதியா இருந்தா சரிதான்
இந்த ஒன் லைன் சமாச்சாரம் எல்லாம்
இப்ப வந்ததுதானே...சும்மா சொல்லுங்க

ரஞ்சித்
சார் ..எப்படிச் சொல்றதுன்னுதான் ....

ரஜினி
என்ன ரஞ்சித்,.. உங்களுக்கு என்ன ஆச்சு?
ஏன் இத்தனைப் பீடிகை...சும்மா சொல்லுங்க

ரஞ்சித்:
வந்துசார்   ஒரு தோசையை அப்படியே
தலை கீழா திருப்பிப் போடுற  மாதிரி
ஒரு படத்தோடக்கதையை
அப்படியே அடையாளம் தெரியாம
திருப்பிப் போடறோம் சார்
ஆமாம் சுத்தமா அடையாளமே தெரியாத மாதிரி..

ரஜினி:
அப்படியா சும்மா சொல்லுங்க
 நாம தானே பேசறோம் எந்தப் படம்......

ரஞ்சித்:
கமல் சாரோடா நாயகன் சார்

(சொல்லிவிட்டு ரஜினி என்ன நினைப்பாரோ
என அதிர்ச்சியுடனும் ஒரு எதிர்பார்ப்புடனும்
அவரையே உற்றுப் பார்க்கிறார் )

(முற்றிலும் எதிர்பாராத  ஒன்றை
கேள்விப்பட்டவரைப் போல சிறுஅதிர்ச்சியுடன்
சோபாவில் இருந்து எழுந்து மெல்ல
நடக்கத் துவங்குகிறார் )


(தொடரும் )

Wednesday, August 24, 2016

ரஜினி இரஞ்சித் கபாலி 4

                                         காட்சி       ( 4  )     (தொடர்ச்சி )
ரஜினி :

(ரஞ்சித் ஆர்வமாக சோபாவின் முன் நுனி வர
ஆர்வமான ரஜினியும் முன் நகர்ந்து )

ரஞ்சித் உங்களுக்குத்தான் தெரியுமே...
நாடகக்கலையை இன்றளவும் கட்டிக் காக்கிறது
தென் தமிழகம் தான்
அதுவும் குறிப்பா சங்கரதாஸ் சுவாமிகளிருந்த மதுரை

அங்கெல்லாம் கிராமங்களில நாடகம் இல்லாம
திருவிழா இருக்காது அதுலயும் குறிப்பா
வள்ளித் திருமணம்

அங்கெல்லாம் நாடகத்துக்கு குழுக்கள் நிறைய
இருந்தாலும் கிராமத்துப் பெருசுங்க குழுவைக்
கூப்பிடமாட்டாங்க

போன வருஷம் எல்லா ஊர்லயும் நடந்த
நாடகங்கள்ல யார் சிறப்பா நடிச்சாங்கண்ணு
ஒரு லிஸ்ட் எடுப்பாங்க

வள்ளியா புதுக்கோட்டை சித்திரா தேவி
நாரதரா விராலிமலைக் கிட்டு
முருகரா தென்கரைக் கண்ணன்னு
பப்பூனா அவனியாபுரம் ராஜப்பா அப்படின்னு
ஒரு லிஸ்ட் எடுத்து அவங்களைப் புக்
பண்ணுவாங்க

லிஸ்ட்டைப் பார்த்ததும் சுத்துபத்து
கிராமங்கள்ல எல்லாம் சுவாரஸ்யம் தீப்பிடிக்கும்

காரணம் மேடை ஏறுகிறவரை இவங்க
ஒருத்தரை ஒருத்தர் சந்திருச்சுக்கமாட்டாங்க.
 ரிகர்ஸல் எல்லாம் கிடையாது
மேடைதான் முதல் சந்திப்பு

உங்களுக்த்தான் தெரிஞ்சிருக்குமே
வள்ளித் திருமண நாடகமே மூணு தர்க்கம்தான்

வள்ளி-நாரதர், நாரதர்-முருகர், முருகர் -வள்ளி
அம்புட்டுத்தான்

மூணு தர்க்கத்தில ஒவ்வொருத்தரும் தான்தான்
ஜெயிக்கணும்னு போடுகிற போட்டி இருக்கே

அது இருந்து பார்த்தாத்தான் தெரியும்

(பின் சிறிது நேரம் இடைவெளி விட்டு
மீண்டும் தொடர்கிறார் )

சினிமாவும் அப்படித்தான்

இதுவரை சேராத ஆனா தனித்தனியா
ஜெயிச்சவங்களை ஒண்ணு சேர்த்து ஒரு
படம் பண்ணஆரம்பிச்சா மக்கள்கிட்ட
ஒரு சுவாரஸ்யம் தீப்பிடிக்கும்

அப்படிப் பிடிச்ச நெருப்பை விடாம ஊதி ஊதி
ஊடகத்தால பெருசாக்கி பெருசாக்கி
படத்தை விட்டா அதன் மதிப்பே தனிதான்

நீங்க மெட்றாஸ் படம் மூலம் தனியா
ஒரு பெஸ்ட் டைரக்டரா இன்னைக்கு
முன்னால் நிக்குறீங்க

நானும் ஏதோ ஒரு முன்னணி நடிகர்னு
இத்தனி வருஷமா ஃபீல்டுல
குப்பைக் கொட்டிக்கிட்டு இருக்கேன்

தம்பி தாணுவும் ஒரு பெரிய தரமான
தயாரிப்பாளரா பேர் எடுத்து இருக்கார்

இந்த மூணு பேரும் சேர்ந்து ஒரு படம்
பண்றதாக ஒரு விளம்பரம் வந்தாலே
ஃபீல்டுல ஒரு சுவாரஸ்யம் தீப்பிடிக்கும்
மக்கள்கிட்டயேயும் ஒரு  எதிர்பார்ப்பு எகிரும்

அதை மட்டும் திருப்திபடுத்தும்படியா
ஒரு படம் பண்ணினா போதும்
தொடர்ந்து  எல்லோரும் உச்சத்தில்
நின்னுடலாம்

அதுக்கு முக்கியமா தேவை.......

(எனச் சொல்லி நிறுத்தியவர் சோபாவை விட்டு
எழுந்துத்  தன்னை ஆசுவாசப்படுத்திக்
கொள்ளும்படியாக சிறிது நேரம் நடக்கிறார்
பின் ரஞ்சித்தை நோக்கி .... )

ஆமா அதுக்கு முக்கியமா தேவை ஒரு கதை
எனக்கும் சரிப்பட்டும் வரும் படியா
உங்களுக்கும் திருப்தி தரும்படியா
என ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தும்படியா

(இப்படி ஒட்டுமொத்தமாய் தன் நிலையை
ரஜினி அவர்கள் சொல்லியதைக் கேட்டதும்
ரஞ்சித் தான் எதையோ சொல்ல முயல்கிறார்
ரஜினி அவரைத் தடுத்து )

கொஞ்சம் ஃபிரியா அரை மணி நேரம்
ரெஸ்ட் எடுத்துச் சொல்லுங்க
ஒண்ணும் அவசரமில்லை

(எனச் சொல்லி செல்போனில் ஸ்னாக்ஸ்
மற்றும் டீக்கு யாருடனோ பேசுகிறார்
ரஞ்சித் யோசிக்கத் துவங்குகிறார் )


தொடரும்

Monday, August 1, 2016

மலேசியக் கபாலி.....அமெரிக்காவில்

ஆறு மாதப் பயணமாக மதுரையிலிருந்து
அமெரிக்கா புறப்படுகையிலேயே
அமெரிக்காவில் இருக்கையில் பார்க்கத்தக்க
விஷயமாகப் பல விஷயங்களைக் குறித்து
வைத்திருந்தோம்

அதில் அமெரிக்காவில் ஒரு தமிழ்ப் படம்
பார்ப்பதும் இருந்தது.

மிகச் சரியாகக்  கபாலிப் படம் அதற்கு
ஒத்து வந்ததால் கபாலிப் பார்ப்பதாக
முடிவு எடுத்து வைத்திருந்தோம்

வெளியீட்டு அன்றே பார்ப்பதாகத்தான்
முதலில் திட்டம் இருந்தது

ஆனால் அன்று டிக்கெட் விலை 25 டாலர்
என இருக்க , அவ்வளவு தேவையா என்கிற
எண்ணமும்,மிகச் சரியாக செல்வதற்கான
சூழலும் இல்லாததால் அடுத்த வாரம் செல்வதாக
முடிவெடுத்து இந்த சனிக்கிழமை போனோம்

அமெரிக்க வந்தமுதல் வாரத்திலேயே
கம்பேரிஸன் மேனியாவையும்

(சுத்தம், சமூக ஒழுங்கு,)

கன்வர்ஸன் மேனியாவையும்

(நம் ஊரில் சாலையோரம் பழம் வெட்டி
விற்பவர்கள் ஐந்து ரூபாய்க்கு ஒரு டப்பாவில்
கொடுப்பார்கள்

அதே அளவு இங்குக் கடையில் வாங்க
அது இரண்டு டாலர்நம் மதிப்புக்கு 65 ஆல்
பெருக்கிக் கொள்ளுங்கள்)

தவிர்க்கவில்லையாயின் அமெரிக்காவை
மிகச் சரியாக அனுபவிக்க முடியாது
எனப் புரிந்து கொண்டோம்

நாங்கள் சென்ற தியேட்டர் வளாகத்தில்
ஐந்து தியேட்டர்கள் இருந்தன. அதில்
இந்தி மற்றும் ஆங்கில்ப் படத்துடன்
கபாலிப் படமும் இருந்தது.

ஆனால் ஒரு வாரம் ஆனதாலோ என்னவோ
டிஸ்பிளே போர்டில் கபாலிப் படம் இல்லை
ஆதலால் புகைப்படம் எடுக்கும் எண்ணம்
மங்கிப் போனது

ஏழு மணிக் காட்சிக்கு மிகச் சரியாக
ஆறரைக்குப் போனோம்.

எழுபது வயதுக்குக்கு மேல், நடுத்தர வயது
,குழந்தைகள் என பல்வேறு நிலைகளிலும்
அனைவரும் இருந்ததும்முழுவதும்
தமிழர்களாகவே அதிகம் பேரைப் பார்க்க
மிகவும் உற்சாகமாக இருந்தது

(ஏன் எனத் தெரியவில்லை..மாமியார் தமிழில்
பேசினால் மருமகள் ஆங்கிலத்தில் பதில்
சொல்லிக் கொண்டிருந்தார்.மகன் அம்மா
மகள் அம்மா அப்பா என்றால தமிழில்
பேசிக் கொண்டார்கள்.குழந்தைகள் யாரும்
தமிழில் பேசிக் கொள்ளவில்லை)

தமிழ்த் திரைப்படச் சரித்திரத்தில் மிக மிக
அதிகமாக இந்தியாவில் மட்டுமல்லாது
வெளி நாடுகளிலும் விளம்பரத்திற்காக அதிகம்
செலவழிக்கப்பட்ட படம்,

ரஜினி என்கிற மாஸ் ஹீரோ,
சமீபத்தில் தன்தரமான வித்தியாசமான
படைப்பின் மூலம்

அதிகம் பேசப்படுகிற கவனிக்கப் படுகிற
இய்க்குநர் பா.இரஞ்சித் அவர்களுடன்
இணைந்து வழங்கும் முதல் படம்

முதல் ஒரு வாரத்தில் ஒட்டியும் ,வெட்டியும்
மிக அதிகமாக விமர்சிக்கப்பட்டப் படம்

என அனைத்து விஷயத்திலும் கபாலித்
திரைப்படம் அதிக எதிர்பார்ப்புடன்
பார்க்கத் தக்கப் படமாக இருந்ததால்
துவக்கத்திலிருந்தே கவனம் சிறிதும்
சிதறாமல் படம் பார்க்கத் துவங்கினோம்

விமர்சனம் அடுத்த பதிவில்

(தொடரும் )

Thursday, October 10, 2013

நகத்தோடு போவதற்கு எதற்கு கோடாலி எடுக்கிறார்கள்

தமிழ் நாட்டுக்கென அவ்வப்போது யாரும்
எதிர்பாராதபடி ஏதாவது ஒரு புதுப் பிரச்சனை வந்து
கொண்டே இருக்கும்

வங்கக் கடலில் ஏற்படும் காற்றழுத்தத்
தாழ்வு மண்டலம் என இரண்டு நாள் டி.வி
பத்திரிக்கை யென பயமுறுத்திப் பின் ஒன்றுமில்லாது
ஒரிஸ்ஸா கடற்கரையைக் கடப்பது போல
கடந்த சில நாட்களாக நஸ் ரீன் தொப்புள் பிரச்சனை
பத்திரிக்கைகளையும் நம்மையும் பாடாய்ப்படுத்திவிட்டது

எளிதாகத் தீர்த்து வேண்டிய இந்தப் பிரச்சனையை
ஏன் இப்படிஊதி ஊதிப் பெரிதாக்கினார்கள்
என நினைக்க எரிச்சல் எரிச்சலாக இருக்கிறது

மது குடிக்கிற காட்சி இல்லாமல் இப்போது எந்த
சினிமாவும் வருவதில்லை.
ஆனாலும் அந்தக் காட்சியில் ஓரத்தில்
மதுவின் கெடுதி குறித்து ஒரு வாசகம் போட்டுவிட்டு
அந்த சீனை நாம் அரைமணி நேரம் ஓட்டவில்லையா ?

சிகரெட் குடிக்கும் காட்சியின் போது
அதன்தீங்கு குறித்து ஒரு வாசகம் போட்டுவிட்டு,
அந்தக் காட்சியை அருமையாய்
மனதில் பதியும் வண்ணம் எடுத்து ரசிகர்களைக்
கவரவில்லையா ?

அதைப்போல அது உண்மையில்
 நஸ் ரீன் தொப்புளோ தொடையோ இல்லையோ
அது தேவையற்ற பிரச்சனை
அதுவும் பண்பாடும் பகுத்தறிவும்  மிக்க எம் போன்ற
தமிழ் கலாரசிகர்களுக்கு நிஜமாகவே
இது தேவையில்லாத விஷயம்

 நாங்கள் சொல்லிக் கொள்வதெல்லாம்
அவர் குறிப்பிடுகிற அந்த அற்புதக் காட்சியை
சென்ஸார் செய்யாமல் எடுத்தபடி அருமையாக
ரசிக்கும்படி தெளிவாகக் காட்டிவிட்டு
அது நஸ் ரீன் தொடையல்ல  தொப்புள் அல்ல என
ஒரு வாசகம் போட்டுவிட்டால் நஸ் ரீனின்
 தன்மானமும்காக்கப்பட்டிருக்கும்
 பண்பாடு மிக்க தமிழ் சினிமா
ரசிகர்களின்  பேராவலும் பூர்த்தி
செய்யப்பட்டிருக்கும் இல்லையா?

அதைவிடுத்து நகத்தோடு செய்ய வேண்டியதை
ஏன் இப்படி கொலை வெறியோடு
கோடாலி கொண்டுதாக்க முயல்கிறீர்கள் ?

அவர் குறிப்பிடுகிற காட்சியை  தமிழ் படத்தில் மட்டும்
நீக்குவேன் எனச் சொல்வது உண்மையில்
தமிழினத்திற்குச் செய்யும் மாபெரும் துரோகம்
என்பதை இங்கே நாங்கள் பதிவு செய்ய விரும்புகிறோம்

வயதான இலக்கிய மிராசுதார்கள்
நிறைந்த தணிக்கைக் குழுவும் பார்த்துக் களித்து
பண்பாட்டுக்கு இந்தக் காட்சி கூடுதல் பலம் சேர்க்கும்
எனஅறிந்து தெளிந்து அந்தக் காட்சியை
அனுமதித்த பின்பு அந்தக் காட்சியை நீக்குதல் என்பது
எம் போன்ற்தன்மானம் மிக்க பண்பாட்டுக்
காவலர்களுக்குச் செய்யும் துரோகமே
எனப் பதிவு செய்வதோடு
இனியும் இதுபோன்ற கொடுமைகள் தொடருமாயின்
இதுபோன்ற அற்புதக் காட்சியைக் காண்பதற்காக
 நாங்கள் ஆந்திராவோ கேரளாவோ
 செல்லவேண்டி வரும் எனவும்
தெரிவித்துக் கொள்கிறோம்

வாழ்க  நூறாண்டு கண்ட அற்புதத் தமிழ்  சினிமா

தமிழர்களின் பண்பாட்டுத் தளமாய் விளங்கும்
அதிசயத் தமிழ் சினிமா

Friday, September 20, 2013

சினிமா- ஒரு மாய மோகினி

எப்படி எனக்கு சினிமாவின் மீது அப்படியொரு மோகம்
வந்தது என இப்போது நினைத்துப் பார்த்தாலும்
அனுமானிக்க முடியவில்லை

எங்களூரின் நான் சிறுவனாய் இருக்கையில் அதிகம்
நாடகம் நடக்கும்.குறிப்பாக வள்ளி திருமணமும்
ஹரிச்சந்தரா நாடகமும்.தெரிந்த கதைதான்
என்றாலும் கூட எங்களூர் "பெருசுகள் "
ஒவ்வொரு முறையும் எந்த ஊரில் எந்த நடிகர்
எந்தக் கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்வார்களோ
அவர்களைத் தேர்ந்தெடுத்து எங்களூரில் நடிக்கச்
செய்வார்கள்

அவர்களுக்கு ஓத்திகை கிடையாது
என்பதால் ஒவ்வொரு கதாப்பாத்திரத்து நடிகரும்
பாத்திரத்தை மீறித் தான் தான் ஜெயிக்கவேண்டும்
எனச் செய்கிற ஜெகதலப் பிரதாபங்கள் நாடகத்தை
உச்சக் கட்டத்திற்குக் கொண்டு செல்லும்.

பல சமயங்களில்  வள்ளி திருமணத்தில்  வள்ளிக்கும்
முருகனுக்குமான  இறுதி தர்க்கம் முடிவடையாது
வள்ளிமாலை வாங்காது போன நிகழ்வுகளும்
அதன் தொடர்சியாய் "பெருசுகள் " அப்படி
மாலை வாங்காமல் போனால் ஊருக்கு
ஆகாமல் போகும்என்று கெஞ்சிக் கூத்தாடி
மேடை பின்புறம் கூட மாலை வாங்கவைத்த
நிகழ்வுகள் இப்போது  கூடஎன்னுள் நிழற்படமாய்
ஓடிக் கொண்டுதான்  இருக்கிறது

அந்த சமயத்தில் "புதுமையும் புரட்சியுமே " எங்கள்
மூச்சு என்கிற நினைப்பில் படித்துக் கொண்டிருந்த
சிலரும்படித்து வேலை கிடைக்காமல்
அலைந்து கொண்டிருந்த சிலரும் நண்பர்களாய்
 இருந்தோம்

.எங்களுகெல்லாம் இந்தப் பெருசுகள்  இப்படியே
விட்டால் நூறு வருஷம் கூட வள்ளி திருமணத்தையும்
ஹரிச்சந்தரா மயான காண்டத்தையும் போட்டுக்
கொண்டுதான் இருப்பார்கள். இதற்கு மாற்றாக நாம்
உடனடியாக இன்றைய சமுகப் பிரச்சனைகளை
உள்ளடக்கியதாக சமூக நாடகம் ஒன்று போட்டு
இந்தப் பெருசுகளையும் சமூகத்தையும் உடனடியாக
மாற்றியாக வேண்டும் என முடிவெடுத்தோம்

என்ன காரணத்திலோ பெருசுகளுடன் மன விரோதம்
கொண்ட ஒலி பெருக்கி வைத்திருந்த மணி அண்ணனும்
ஒலி ஒளி அமைப்பும் இலவசமாய் தான்
செய்து தருவதாக ஒப்புக் கொள்ள உடனடியாக
ஒரு கூட்டம் போட்டு ஏபிஎம் நாடக் குழு என
ஒலிபெருக்கி அமைப்பாளரின்
பெயரிலேயே ஒரு நாடகக் குழுவை ஆரம்பித்தோம்

(தொடரும் )