Showing posts with label பட விமர்சனம். Show all posts
Showing posts with label பட விமர்சனம். Show all posts

Tuesday, March 11, 2014

நிமிர்ந்து நில்--பட விமர்சனம்

நான் திரைப்பட விமர்சனம் எழுதியதில்லை
அதிக எதிர்பார்ப்புடன் போய் படம் வெளியானவுடன்
போய்ப் பார்த்த படம் என்பதால் எழுதலாமோ
எனத் தோன்றியது

படம் ஆரம்பித்ததும் மிக மிக வேகமாக வருடங்களைக்
கடக்கத் துவங்கியதும் இந்த இயக்குநர்  சொல்வதற்கு
நிறைய விஷயம் வைத்திருக்கிறார் அதுதான் இந்தத்
தாவு தாவுகிறார் என நம்மை முதலில்
 எண்ணவைக்கிறார்

பின் நிகழ்காலத்திற்க்கு வந்ததும் கயிறு பிடித்து
ஒவ்வொரு அடியாக மலையேறுவதுபோல்
மிக நிதானமாக ஒவ்வொரு நிகழ்வாக அதுவும்
ஒரு குறிப்பிட்ட நிகழ்வின் தொடர்ச்சியாகவேத்
 தொடர்வதால்கொஞ்சம் அலுப்பூட்டினாலும்
 சமூக அவலம் குறித்த யதார்த்த நிலையைச்
சொல்லிப்போகும் வசனங்கள்
நம்மை இடைவேளை வரை நன்றாக நிமிர்ந்து
உட்காரவைத்துவிடுகிறது.

அதுவும் எம். ஆர் ராதா
மணிவண்ணன் வாரிசு போல பரோட்டா சூரி
உடல் மொழி மற்றும் அழுத்தமான வசன
உச்சரிப்பின் மூலம்சமூக அவலங்களை
வெளிப்படுத்திய விதம்
மிக மிகப் பிரமாதமாக அமைந்துவிடுவதால்
இடைவேளையில் அனைவரும்   ஒரு
நல்ல படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிற
திருப்தியைதங்கள் மனம் திறந்த
வாய் விமர்சனம் மூலமே தெரிந்து
கொள்ளமுடிந்தது.

 இடைவேளைக்குப் பின்னே இதற்கு நேர்மாறாக
கதையை மசாலக் கலந்து சொல்ல முயற்சிப்பது
படத்தை திரிசங்கு  நிலையில் நிறுத்திவிடுகிறது

ஒரு சமூகக் கண்ணோட்டமுள்ள இயக்குநரும்
லாப நோக்கமுள்ள தயாரிப்பாளரும் இணைந்து
ஒருமுழுப் படம் எடுத்தால் நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும்

ஆனால் ஒரு சமூக நோக்கமுள்ள  இயக்குநர்
லாப நோக்கத் தயாரிப்பாளரிடம் இடைவேளை வரை
முழுமையாக நான் எடுத்துக் கொடுத்துவிடுகிறேன்,
நீங்கள் எதிலும்தலையிடவேண்டாம் எனவும்

அதைப் போல  லாப நோக்கத் தயாரிப்பாளர்
சமூக நோக்கமுள்ள இயக்குநரிடம் முன்பாதியை
எப்படியும் எடுத்துக் கொள்ளுங்கள் அது எனக்குப்
பிரச்சனையில்லை.
பின் பாதியில் நீங்கள்தலையிட்டுத்
தொலைக்கவேண்டாம் எனவும்

பேசிப் படம் எடுத்தால் எப்படி இருக்கும்
என்பதற்கு இப்படம் ஒரு நல்ல உதாரணம்

மொத்தத்தில்

இப்படத்தின் முன்பாதி கூனனையும் நிமிரவைக்கும்
பின் பாதி இளைஞனையும் கூனனாக்கிவிடும்