Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts

Saturday, August 19, 2017

இப்படியும் .....

ஜோலார்பேட்டை ரயில் நிலையம்
அருகில் வாணியம்பாடி செல்லும்
சாலையோரத்தில்இருக்கிறது ஏலகிரி ஓட்டல்.
 அங்குச்சாப்பிட்டுவிட்டுச் சிலர் பணம்
கொடுக்காமல் வணக்கம் மட்டும் தெரிவித்து
விட்டுச் செல்கின்றனர். NEW INFORMATION

கல்லாவில் இருந்தவரும்காசு கேட்பதில்லை.
பணத்துக்குப்பதில் வணக்கம் செலுத்தினால்
போதுமா?

விசாரித்தபோதுதான்மேலே
தொங்கிக்கொண்டிருந்த சிலேட்டுப் பலகைகளைக்
காட்டினார். விஷயம் புரிந்தது.

‘முதியோர், ஊனமுற்றோர்களுக்
கு காலை 8 முதல் 11
மணி வரை இலவச உணவு’ (100 பேர்
வரை), ‘

பால் வாங்கப்
பணமில்லையென்றால்
குழந்தைகளுக்கு இலவசமாகப் பால்’

, ‘வாரம் 100மாணவர்களுக்கு இலவசமாக
பேனா அல்லது பென்சில்’, ‘1 முதல் 8ம்
வகுப்பு வரையிலான
மாணவர்களுக்கு காலை முதல்மாலை வரை
பாதி விலையில் உணவு’ இந்த அறிவுப்புகள்
சிலேட்டுப் பலகைகளில் சாக்பீஸால்
எழுதப்பட்டிருந்தன.

ஆச்சரியத்துடன் கேட்டால்,
“பணத்துக்காக வாழ்றதில்லிங்க;
வாழ்றதுக்குதாங்க பணம்” பெரிய
தத்துவத்தை எளிதாகச் சொல்கிறார்
இந்த ஓட்டலின் உரிமையாளர் நாகராஜ்.
அவர் இந்தச் சேவையை 25 ஆண்டுக்கும் மேலாகச்
செய்துவருகிறார்.

ஒரு நாளைக்கு ஏறக்குறைய 100 பேர்
வரை இந்த ஓட்டலை நம்பியே காலம்
தள்ளுகின்றனர்.

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வட
மற்றும் தென் தமிழகம், கர்நாடகம்
மற்றும் ஆந்திரத்தை இணைக்கும்
முக்கியச் சந்திப்பு. இந்த
நிலையத்தைக் கடந்ததுதான்
அனைத்து ரயில்களும் பயணிக்கின்றன.

 பயணத்தின்போது காலி தண்ணீர்
பாட்டிலை ஜன்னல்
வழியே வீசுவதைப்போல
குடும்பத்தில் பாரமென கருதப்படும்
மனிதர்களை ரயிலில்அழைத்து வந்து
இங்கே இறக்கிவிட்டுச் சென்று விடுகின்றனர்.
அவர்கள்பெரும்பாலும் முதியவர்கள் மற்றும்
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்.

மாதந்தோறும் குறைந்தபட்சம் 15
பேராவது இப்படி அனாதைகளாகத்
தனித்து விடப்படுகின்றனர். திக்குத் தெரியாமல்
தவிக்கும்அவர்கள் ஜோலார்பேட்டையிலேயே
சுற்றித்திரிகின்றனர்   இப்படியும்
.
இவர்களுக்கு இந்த ஓட்டல் ஒரு அன்னச்
சத்திரமாக இருக்கிறது. “பசி என்ற
உணர்வு மட்டும்தான் சுயநினைவு இல்லாத
வருக்குக்கூடஉணவு நமக்கு தேவை
 என்பதை உணர்த்து கிறது”என்கிறார் நாகராஜ்.
இவர்கள் தவிர சுற்றுவட்டாரங்களில்
வீடுகளில் கவனிக்க முடியாதநிலையில் இருக்கும்
முதியவர்களுக்குத் தேவையான உணவை
அவர்களது குடும்பத்தினர்வந்து இலவசமாக
பார்சல் வாங்கிச் செல்லலாம்.

நாகராஜின்மனைவி சுஜாதாவும் தன் கணவரின்
இந்தத் தொண்டுக்குப் பக்கபலமாக
இருக்கிறார்.

மிகச் சின்ன வருமானத்தில்இதையெல்லா எப்படிச்
சமாளிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு,
“இவர்களுக் கென்று தனியாக
உலை வைக்கப்போதில்லை.
வழக்கமாக சமைக்கும் அளவோடு கொஞ்சம்
கூடுதலாகசமைக்கிறேன்.

 5கிலோ மாவு புரோட்டோ போட்டாலும்
10 கிலோ மாவு போட்டாலும்மா
ஸ்டருக்கு ஒரே கூலிதான்.
எரிபொருளும் ஏறக்குறைய ஒரே அளவில்தான்
செலவா கிறது.

சில ஆயிரம் ரூபாய் வருவாய்இழப்புதான் என்றாலும்
எனக்கு குடும்பம் நடத்தத்தேவையான லாபம் கிடைக்கிறது.
மனதுக்கும் சந்தோஷமாகஇருக்கிறது” என்கிறார்
 வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்வாடி நிற்கும்' நாகராஜ்

.
NEW INFORMATIONNEW INFORMATION

Friday, August 18, 2017

*"தேடி வரும் தெய்வம்..."*🙏🏻

தன்னிடம் சீடனாக புதிதாக வந்து சேர்ந்தவரிடம் குரு கேட்டார்,
“ஆன்மிகத்தின் நோக்கம் என்ன என்று சொல்ல முடியுமா?”

புதிய சீடன், “இறைவனை அறிவதும், அடைவது தான் ஆன்மிகத்தின் நோக்கம்...”

“அப்படியா?”

“என்ன அப்படியா என்று கேட்கிறீர்கள்... அப்படித்தானே இருக்க முடியும்?”

“சரி... இத்தனை நாள் ஆன்மிகத்தில் சாதகம் செய்து வருகிறாயே இறைவனை அறிந்தாயோ?”

“இல்லை... ஆனால் முயன்று கொண்டிருக்கிறேன்.”

“நல்லது... உண்மையிலேயே இறைவனை அறிந்து கொண்டுவிட முடியும் என்று நம்புகிறாயா?”

சீடன் சற்றே யோசித்துவிட்டுச் சொன்னான்.

“நம்புகிறேன்... இருப்பினும், கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது.”

“எதனால் இந்த சந்தேகம் வருகிறது?”

“பலர் பலவிதமாக இறைவனைப் பற்றிச் சொல்கிறார்கள். மிகவும் ஆராய்ந்து பார்த்தால் தெளிவை விடக் குழப்பமே மிஞ்சுகிறது.”

“நல்லது... எப்போது நீ உள்ளது உள்ளபடி சொன்னாயோ அதுவே நல்லது சீடனே...

இப்போது நான் வேறு விதமாகக் கேட்கிறேன்...

நீ ஆண்டவனைத் தெரிந்து கொள்ள, அடைய உண்மையிலேயே விரும்புகிறாயா...?”

“ஆமாம் குருவே.”

“உன் விருப்பத்தின் காரணமாகத்தான் நீ ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய். அப்படித்தானே?”

“ஆமாம் குருவே.”

“அன்புள்ள சீடனே! நீ இறைவனைத் அடைய, ஓர் எளிமையான மாற்று வழியைச் சொல்லித் தருகிறேன்...”

“மிகவும் சந்தோஷம் குருவே... இந்த வழிக்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.”

“ஆனால் இந்த வழியில் நீ இறைவனை அடைய முடியாது... ஆனால் இறைவன் தான் உன்னை வந்து  அடைவான்.”

“இது குழப்பமாக இருக்கிறதே.”

“ஒரு குழப்பமும் இல்லை...
ஒரு அரசன் இருக்கிறான்...

பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு அவன் ராஜா.

அவன் அருகே நெருங்குவதோ பேசுவதோ அறிவதோ எளிமையான விஷயம் அல்ல.
முடியவும் முடியாது.”

“ஆம்.”

“ஆனால், ராஜாவை சந்திக்க வேண்டும் என்கிற பிரஜை, ஓர் அருமையான காரியத்தைச் செய்கிறான்...

அவன் தேசத்தில் உள்ள மக்கள் எல்லோருக்கும் பயன்படும்படியாக உழைக்கிறான்.

பல அறச் செயல்களைச் செய்கிறான்.

இந்தச் செய்தி ராஜாவுக்குப் போகிறது.

உடனே ராஜா பிரதிநிதிகளை அனுப்பி தன் அரசவைக்கு அவனை வரவழைக்கிறார்.

அல்லது

அவரே நேரில் அவனைப் பார்க்க வருகிறார்.

அவனோடு உரையாடுகிறார்...
பாராட்டுகிறார்....
பரிசுகள் தருகிறார்.

இது நடக்கும் இல்லையா?”

“நிச்சயமாக நடக்கும் குருவே.”

“இப்போது ராஜாதான் இறைவன்.

நீதான் அவன்.

நீ என்ன முயற்சி செய்தாலும் ராஜாவைப் நெருங்குவது கஷ்டம்.
ஆனால், உன் செயல்கள் பலருக்கும் பயனுடையதாக இருந்தால்...

அந்த ராஜாவே (இறைவனே) உன்னைப் பார்க்க வருவார்.

எனவே, இறைவனைப் பார்க்கும் முயற்சியைக் கைவிடு.

*இறைவன் உன்னைத் தேடி வரும் தகுதியான செயல்களில் மட்டுமே ஈடுபடு...*

இறைவனே உன்னை வந்து அடைவான்... சரிதானே...?”

“மிகவும் சரிதான் குருவே...”

“நல்லது சீடனே, இனி ஆன்மிகம் உனக்கு கை கூடும். போய் வா...”

சீடன் தெளிவடைந்து குருவிற்கு நன்றி தெரிவித்தான்...

*நம்*
*எண்ணங்களும்...*
*உணர்வுகளும்...*
*சிந்தனைகளும்...*
*சொற்களும் ...*
*செயல்களும்...*

*நம்மை சுற்றி உள்ள மனிதர்களுக்கு...*

*நல்லது செய்யுமெனில்...*

*இறைவனை*
*நாம் தேட* *வேண்டியதில்லை...*

*இறைவனே நம்மை தேடி வருவார்...*

*இனி வரும் அனைத்து நாட்களும்...*
*இனிய நாளாக அமைய இறைவன் அருள் புரிவார்...*
வாழ்க வையகம்.வாழ்க வளமுடன்.

Thursday, August 10, 2017

#இலஞ்சியில்_முதுமை_இனிமையாகிறது


{இன்று ஒரு தகவல் INFORMATION TODAY மூலம் )

வயதானவர்களை பார்த்தால் கையெடுத்து கும்பிட்டு அவர்களது ஆசீர்வாதத்தை பெறுவது பொதுவான இயல்பு.....
அப்படிப்பட்ட வயதானவர்களே ஒருவரை பார்க்கும் போதெல்லாம் மகிழ்சியுடனும் நெகிழ்சியுடனும் வணங்குகின்றனர்.

 செங்கோட்டையில் இருந்து குற்றாலம் செல்லும் வழியில் உள்ள இலஞ்சி பாண்டியன் இல்லத்திற்கு செல்லவேண்டும்.

பெயர் தம்புராஜ் வயது 82 திருச்சி பெல் நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்து ஒய்வு பெற்றவர்.

மலேசியா போன்ற வெளிநாடுகளில் நிறுவனத்தின் பெருமையோடு நாட்டின் பெருமையையும் ஒருசேர நிறுவியர்
பணி ஒய்வுக்கு பிறகு இலஞ்சிக்கு வந்தவர் இங்கு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும் தென்காசி மூத்த குடிமக்கள் மன்றத்தின் உறுப்பினரானார் சில காலத்திலேயே மன்றத்தின் தலைவராகவுமானார்.

தலைவரான பிறகு அறுபது வயதை தாண்டி நுாறு வயதை தொடப்போகும் நிலையில் உள்ள அமைப்பின் உறுப்பினர்களுக்கு என்ன செய்வது என்று யோசித்தார்.

பல உறுப்பினர்களின் பிள்ளைகள் வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருக்கின்றனர் பெற்றவர்களுக்கு பணம் அனுப்புகின்றனர் ஆனால் பணம் இருந்தாலும் சரியான சத்தான சாப்பாடு இல்லாமல் அவதிப்படுவதை உணர்ந்தார்.

இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தீவிரமாக யோசித்து சென்னையில் இருந்து முதியவர்களுக்கான சிறப்பு மருத்துவர் நடராஜனை வரவேற்று மூன்று நாள் மருத்துவமுகாம் நடத்தி அவர்களுக்கு எப்படிப்பட்ட உணவு வழங்கவேண்டும் என்று கேட்டார்.

காலையில் பலகாரமும் மதியம் உணவும் இரவில் பழங்களும் இருக்கவேண்டும் காலை உணவும் மதிய உணவும் எப்படி இருக்கவேண்டும் எந்த அளவிற்கு உப்பு புளி காரம் இருக்கவேண்டும் எப்படி சமைக்கவேண்டும் என்றெல்லாம் எழுதி பட்டியலாக தந்துவிட்டார்.

இரவு உணவிற்கான பழங்களை அவர்களே வாங்கிக்கொள்வார்கள் அதில் பிரச்னை எதுவுமில்லை காலை மற்றும் மதிய உணவு மட்டும் மருத்துவர் சொன்னபடி உடலுக்கு ஆரோக்கியம் தரும்வகையிலும் ருசியாக இருக்கும்படியும் தருவது என முடிவு செய்தார்.

இதற்காக தனது வீட்டின் ஒரு பகுதியை ஒதுக்கி ஆட்களைவைத்து சமையல் செய்தார். செய்த சமையலை ஆட்டோ மூலமாக கேரியரில்வைத்து வீட்டிற்கே அனுப்பிவைத்தார்.கடந்த 2006-ம் ஆண்டு 25 பேருடன் துவங்கிய இந்த சேவை இப்போது 120 பேருடன் தொய்வின்றி தொடர்கிறது.

மாதத்திற்கு ஆன செலவை 120 பேருக்குமாக பிரித்துக்கொள்கிறார்கள் இது தலைக்கு 1800 ரூபாய் அளவில் வரும்.

காலை உணவு காலை 7.30 மணிக்கும் பகல் உணவு பகல் 11 மணிக்கும் வீடு தேடி சென்றுவிடுகிறது.

ஒரு நாள் ஒரு பொழுது கூட இது தவறியது இல்லை அதே போல ஒருவர் கூட உணவில் குறை என்று இதுவரை சொன்னது இல்லை.

இலஞ்சியில் மட்டுமின்றி செங்கோட்டை குற்றாலம் மேலகரம் சங்கராஸ்ரமம் வரை சாப்பாடு செல்கிறது.

பெரியவர்களின் மனம் நிறைந்த ஆசி கிடைப்பதால் இந்த வேலையை புனிதமாக கருதி சமையல் கலைஞர்களும் ஆட்டோ டிரைவர்களும் ஒரு ஈடுபாட்டுடன் செய்கின்றனர்.

மேலும் துரை.தம்புராஜின் இந்த சமூக பணிக்கு அவரது துணைவியார் சண்முகவடிவு நாச்சியார் பெரும் ஊக்கமும் உற்சாகமும் தந்து உதவி வருகிறார்.

அதிகாலை ஐந்து மணிக்கு துரை.தம்புராஜின் பணி சுறுசுறுப்பாக ஆரம்பித்துவிடுகிறது.ஒரு இளைஞரின் வேகத்தோடும் விவேகத்தோடும் பல வேலைகளை பம்பரமாக சுற்றி சுற்றி வந்து பார்த்து காலை மதிய உணவை அனுப்பிவிட்டே கொஞ்சம் இளைப்பாறுகிறார்.

 இதில் இன்னோரு விஷயம் பயனாளிகளில் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருப்பவர்கள் திரு மற்றும் திருமதி துரை.தம்புராஜ்தான்.

உணவு விஷயத்தை தாண்டி முதியவர்களுக்கான மருத்துவமுகாம் கலந்துரையாடல் இலக்கிய கூட்டம் என்று ஏதாவது ஆரோக்கியமான விஷயங்களை நடத்தி தானும் தன்னைப்போன்ற பெரியவர்களும் எப்போதும் சந்தோஷமாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்.

கொஞ்ச நேரம் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தால் போதும் இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை வெடிச்சிரிப்புடன் அந்த சூழலையே தனது நகைச்சுவையான பேச்சால் கலகலப்பாக்கிவிடுகிறார்.மொத்தத்தில் முதுமையை இனிமையாக்கி கொண்டுள்ளார்.

ஆனால் இந்த விஷயத்தில் நான் ஒரு சாதாரண கருவிதான் எல்லா பாராட்டும் தென்காசி மூத்த குடிமக்கள் மன்றத்தை சேர்ந்த டி.சோமசுந்தரம்,ஆர்.வி.துரைசாமி,எஸ்.வேங்கடசுப்பிரமணியன்,பி.கே.சண்முகசுந்தரம்,டி.சோமசுந்தரம்,எஸ்.முததுசாமி,வி.சுப்பிரமணியன்,எஸ்.தெய்வாங்பெருமாள்,குற்றாலிங்கம்,அருணகிரிநாதர்,என்.திருவேங்கடம்,ஆர்.எம்.கணபதி ஆகியோரைத்தான் சாரும், அவர்கள்தான் தேவையான ஆலோசனைளை வழங்கி வழிநடத்தி செல்கின்றனர் என்கிறார் அடக்கமாக.

மகத்தான புண்ணியத்தைதரும் இந்த நல்ல காரியத்தை யார் வேண்டுமானாலும் அவரவர் ஊரில் இருந்து செய்யலாம்...

செய்து பாருங்கள் .
வாழ்க்கைக்கே ஒரு அர்த்தம் உண்டாகும் என்று சொல்லி முடித்த துரை.

தம்புராஜிடம் ஆலோசனை பெறவும் வாழ்த்தவும் விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய எண்:9944234499.

படித்ததில் பிடித்தது