திருமண வரவேற்பில்
கூடுதல் அந்தஸ்துக்காக
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
அந்த கச்சேரியை
கண்டும் காணாது பலரும் கடக்கிறார்கள்
விருந்துண்ண
இடம் கிடைக்காதோர்
அல்லது உண்ட அலுப்புத் தீர
சிறிது அமர்வோர் மட்டும்
இரசித்துக் கேட்கிறார்ப் போல
கொஞ்சம் பார்க்கிறார்கள்
அது மனவருத்தம் தருவதுபோல்
இருந்தாலும்
தன்னை அறிமுகம் செய்து கொள்ள
அதுவும் பாடகனுக்குத்
தேவையாகத்தான் இருக்கிறது
சங்கீத சபாக்களில்
ரசிப்பதற்கென்றே
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
அந்தக் கச்சேரியை
மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே
கேட்டு இரசிக்கிறார்கள்
எண்ணிக்கை சிறிதாயினும்
மிகச் சரியாய்
உணர்ந்து இரசிப்போராய்
அவர்கள் இருப்பதால்
பாடகனின் வளர்ச்சிக்கு
அதுதான் அவசியமாகப்படுகிறது
(முக நூலில் தொடர்பவர்கள் நான்காயிரமாய்
உயர்ந்திருக்கிறார்கள் .சும்மா ஒரு . தகவலுக்காக )
கூடுதல் அந்தஸ்துக்காக
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
அந்த கச்சேரியை
கண்டும் காணாது பலரும் கடக்கிறார்கள்
விருந்துண்ண
இடம் கிடைக்காதோர்
அல்லது உண்ட அலுப்புத் தீர
சிறிது அமர்வோர் மட்டும்
இரசித்துக் கேட்கிறார்ப் போல
கொஞ்சம் பார்க்கிறார்கள்
அது மனவருத்தம் தருவதுபோல்
இருந்தாலும்
தன்னை அறிமுகம் செய்து கொள்ள
அதுவும் பாடகனுக்குத்
தேவையாகத்தான் இருக்கிறது
சங்கீத சபாக்களில்
ரசிப்பதற்கென்றே
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
அந்தக் கச்சேரியை
மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே
கேட்டு இரசிக்கிறார்கள்
எண்ணிக்கை சிறிதாயினும்
மிகச் சரியாய்
உணர்ந்து இரசிப்போராய்
அவர்கள் இருப்பதால்
பாடகனின் வளர்ச்சிக்கு
அதுதான் அவசியமாகப்படுகிறது
(முக நூலில் தொடர்பவர்கள் நான்காயிரமாய்
உயர்ந்திருக்கிறார்கள் .சும்மா ஒரு . தகவலுக்காக )

