Showing posts with label பதிவர்கள். Show all posts
Showing posts with label பதிவர்கள். Show all posts

Sunday, January 13, 2019

பதிவர்களுக்கு....

படுத்தபடி விழிமூடி
யோசித்துக்கொண்டிருப்பவன்
தான் தூங்கவில்லை என
நிரூபணம் செய்வதற்காக
காலையாட்டிக் கொண்டிருப்பதைப் போலவேனும்

பதிவுகள் எழுத
நேரமில்லையாயினும்
தொடர்பில் இருக்கிறோம் என்பதை
நிரூபணம் செய்வதற்காகவேணும்
பின்னூட்டமிட்டுக் கொண்டாவது இருப்போம் வாரீர்
( எனக்கும் சேர்த்துத்தான் )

பசுஞ்சோலை மாலையாய்
திருவிழாவின் கோலாகலமாய்
இணைப்புக்கும் மனமகிழ்வுக்கும்
ஆதாரமாய் இருந்த பதிவுலகு...

இன்று இருண்டு
திருவிழா முடிந்த
மறு நாள் மைதானமாய்
வெறிச்சோடிக் கிடப்பது
உங்களைப்போல்
எனக்கும் உடன்பாடில்லை

பேரெழுச்சியின் துவக்கமாய்
இத்தைத் திருநாள் முதலேனும்
பின்னூட்டமிடுதல் மூலமோ
பதிவுகள் மூலமோ
பண்டைச் செழிப்பை
மீண்டும் நிலை நிறுத்துவோம் வாரீர்

எழுத்தின் மூலம்
அகம் கண்டுத் தொடர்ந்து
சந்திப்பின் மூலம்
முகம் கண்டு மகிழ்ந்த
அந்த வஸந்த நாட்களை
இன்று முதல்
மீட்டுருவாக்கம் செய்வோம் வாரீர்

(எம் மதிப்பிற்குரிய கரந்தையாரின்
பதிவின் தாக்கத்தில் எழுதியது
அவருக்கு என் மனப்பூர்வமான
நல்வாழ்த்துக்கள்

பதிவர்கள் அனைவருக்கும் இனிய
பொங்கல் திரு நாள் நல்வாழ்துக்கள் )

Wednesday, July 5, 2017

வாடித் தவிக்குது பதிவர் உலகு

வாடித் தவிக்குது பதிவர் உலகு -நீங்கள்
வாரா திருப்பதாலே-இருள்
மூடத் துடிக்குது பதிவர் உலகு -நீங்கள்
எழுதா திருப்பதாலே

தேரின்றி நடக்கும்
திருவிழா போலவும்
நீரின்றித் தவிக்கும்
காவிரி போலவும்

கண்ணனைக் காணாத
கோகுலம் போலவும்
வெண்நிலவைத் தேடும்
வானமதைப் போலவும்

வண்ணமதைப் பூணாத
ஓவியத்தைப் போலவும்
வண்ணமலர் இல்லாத
பூங்காவைப் போலவும்

கோலமது வரையாத
வெளிவாசல் போலவும்
தாளமது சேராத
சுகராகம் போலவும்

வாடித் தவிக்குது பதிவர உலகு -நீங்கள்
வாரா திருப்பதாலே-இருள்
மூடத் துடிக்குது பதிவர் உலகு -நீங்கள்
எழுதா திருப்பதாலே

பதிவர் மனமதில் உள்ளதனை-இங்கே
பதிவாய்  நானும் தந்து விட்டேன்
இனியும் தாமதம் செய்யாது-பதிவினைத்
தந்தெமை மகிழ்ந்திடச் செய்வீரே

(எழுதாது இருக்கும் நம்  மனம் கவர்ந்த
பதிவர்கள் அனைவருக்கும்
பதிவர்கள் சார்பில் ஒரு வேண்டுகோளாய்  )

Saturday, May 27, 2017

பதிவர்கள் ஊடக எழுத்தாளரினும்....

அன்றாட நிகழ்வுகளைத் தான்
பதிவு செய்து போகிறோம்
 எனினும்
பதிவெழுத்தினை
நாட்குறிப்பு எனச்
சொல்ல முடிவதில்லை

 ஆயினும்
நிகழ்வுகளின்சாரத்தை,
அதன் உள்ளார்ந்த காரணத்தைக்
குறிப்பாகப் பதிந்து போவதால்

அது நாட்குறிப்பினும்
அதிகம்  மேம்பட்டதே     

பதிவர்களின் பெரும்பாலோரின்
கவிதைகளை  கவிதைகள் எனச்
சொல்லமுடிவதில்லை

ஏனெனில் பதிவர்கள்
எதுகை மோனை சீர் செனத்திக்காக
அதிகம் மெனக்கெடுவதில்லை

ஆயினும்
அவர்கள் சமூக நோக்கத்திலும்
கருத்தின் ஆழத்திலும்
அதிகம் கவனம் கொள்வதால்

பதிவர்களின் படைப்புகள்
கவித்துவத்தில்
அதனினும்அதிகச் சிறப்புடையதே

பதிவினை ஊடகம் என்றும்
வகைப் படுத்த இயலவில்லை

ஏனெனில்
ஊடகம் போல அதிக வீச்சும்
ஜனரஞ்கத் தன்மையும் இல்லை

ஆயினும்
 சுயக் கட்டுப்பாடும்ஒரு நொடியில்
உலகைச் சுற்றி வரும் தன்மையிலும்
உடனுக்குடன் எதிர்விளைவுகளை
உண்டாக்கிப் போகும் திறத்தாலும்

பதிவர்களின் ஆக்கங்கள்
வேறு ஊடகத்தினும் நிச்சயம்  உயர்வானதே

பதிவர்கள்
 ஊடக எழுத்தாளர்களைப் போல
பிரபல்யமானவர்கள் இல்லை

ஆயினும்
போட்டிப் பொறாமையின்றி
ஒருவர் நலத்தில்
ஒருவர் அக்கறை கொள்வதிலும்
பரஸ்பர புரிதலிலும்உதவிக் கொள்வதிலும்
எழுத்தாளர்களுக்கு
நேர் எதிரானவர்களாய் இருப்பதால்

பதிவர்கள் வேறு  ஊடக எழுத்தாளரினும்
ஆயிரம் மடங்கு உயர்வானவர்களே

Wednesday, August 10, 2016

இடத்தால் மட்டுமே பிரிந்திருக்கிறோம்.. ( 2 )

பயிற்சி வகுப்புகள் ஸபா தீவில் முடிந்ததும்
மலேசியாவைச் சுற்றிப்பார்க்கும் விதமாக
மலேசியாவில் ஏற்கெனவே அறைகள்முன்பதிவு
செய்திருந்தோம்

எதற்கும் இருக்கட்டுமே என்று ஒரு நிலைத் தகவலாக
என்னுடை பதிவில் நான் மலேசியா வருகிற
விஷயத்தையும், தங்குமிடத்தையும் 
பதிவு செய்திருந்தேன்

தினமும் காலையில் சிற்றுண்டு முடித்ததும்
பகுதி பகுதியாக அவர்கள் அவர்களுக்குப்
பிடித்த இடத்தைப் பார்க்கக் கிளம்பினால்
மதிய உணவு மற்றும் இரவு உணவு முடித்து
ஓய்வெடுக்கத்தான் தங்குமிடம் திரும்புவோம்

அப்படி இரண்டாம் நாள் இரவு பத்து
மணி அளவில் அறைக்குத் திரும்புகையில்
வரவேற்பறையில் இருந்த என் நண்பர் 

"காலையில் இருந்து உங்கள் மலேசிய
நண்பர் ஒருவர் உங்களைப் பார்ப்பதற்காகக்
காத்திருக்கிறார்.அவர் உங்களை ரமணி என
விசாரித்திருக்கிறார். அந்தப் பெயர் நம்
குழுவில் உள்ளோர் பலருக்கும் தெரியாததால்
அப்படி யாரும் வரவில்லையென்று
சொல்லி இருக்கிறார்கள்.ஆயினும் அந்த நண்பர்
உறுதியாக வந்திருக்கிறார் எனச் 
சொல்லிக் கொண்டிருக்கையில் நல்ல வேளை
நான் வந்தேன். எனக்கு உங்கள் துணைப்பெயர்
தெரியும் என்பதால் நான் தான் நீங்கள் வந்த விவரம்
சொல்லி இரவுதான் வருவார்கள் எனச்
 சொல்லி இருந்தேன்

அவர்கள் ஊர் தூரம் என்பதால் சென்று வருவதை விட
அருகில் அறை எடுத்துத் தங்குவதாகவும் எப்படியும்
இரவு பார்த்துவிட்டே ஊர் சொல்வதாகவும்
சொன்னார்கள் " என்றார்

மலேசியா வந்ததும் உடன் தற்காலிக போன்
இணைப்பு எடுக்காதது எவ்வளவு தவறு என
நினைத்தபடி வாயிலுக்கு வர அங்கே பதிவர்
நண்பர் ரூபன் அவர்கள் தன் நண்பருடன்
வாயிலியே காத்திருந்தார்.

என்னைக் கண்டதும் "தாங்கள் ரம்ணி ஐயா
தானே "எனக் கூறி கட்டிப் படிக்க எனக்குக்
கண் கலங்கிவிட்டது

எழுத்து மற்றும் பின்னூட்டத்தின் வாயிலாக
தொடர்பு கொண்டதன்றி பேசியோ பார்த்தோ
நாங்கள் தொடர்பு கொண்டதில்லை

அப்படி இருந்தும் நான் வந்திருக்கிற தகவல்
அறிந்து எப்படியும் பார்க்கவேண்டும் என
காலை முதல் காத்திருந்ததை எண்ண எண்ண
வலைத்தளம் மூல்ம் உண்டாகும் இணைப்பு
எத்தனை உண்மையானது, வலுவானது
அன்பானது எனப் புரிந்தது

பின் அவருடன் பின்னிரவு வரை பேசிக் 
கொண்டிருந்துவிட்டு அருகில் இருந்த 
சிற்றுண்டிச் சாலையில் உணவருந்திவிட்டுப் 
பிரிந்தோம்

மறு நாளும் எனக்கும் என மனைவிக்குமாக
மதிப்பு மிக்க பரிசுப் பொருட்களுடன் வந்திருந்து
இரவு எங்களுடன் தங்கிவிட்டுச் சென்றது
இன்று வரை மற்க்கமுடியாத நிகழ்வாக
மலேசியாவில் மயக்க வைத்த பல இடங்கள்
தந்த சுகந்த நினைவுகளை விட

 இன்றுவரை இந்த நினைவுதான் என் நெஞ்சில் 
அதிகம் நிறைந்திருக்கிறது

இந்தச் சந்திப்பே பின்னாளில் ஊற்று என்கிற
இலக்கிய இணய தள அமைப்பை உருவாக்கக்
காரணமாகவும் இருந்ததது

நண்பர் பதிவர் ரூபன் அவர்களுடன் இருந்த
அந்த மகிழ்வான தருணங்களை இங்குப்
பதிவு செய்வதில் மிக்க மகிழ்வு கொள்கிறேன்

இத்தனை நாள் கழித்து இந்த நெகிழ்சியானப்
பதிவு இப்போது எதற்கு ?

அதற்குக் காரணமிருக்கிறது..
அது அடுத்தப் பதிவில்


Tuesday, August 9, 2016

இடத்தால் மட்டுமே பிரிந்திருக்கிறோம்..

பொதுச் சேவையில் ,சமூக இயக்கங்களில் எனக்கு
சிறு வயது முதலே அதிக ஈடுபாடு உண்டு

அந்த அந்த வயதில் அந்த அந்த சூழலில்
வய்து மற்றும் சூழலுக்கு ஏற்றார்ப் போல
ஒரு சமூக மனிதனாகவே வாழ எனக்குத் தொடர்ந்து
வாய்ப்புக் கிடைத்ததுக் கூடப் பாக்கியம்தான் என்கிற
நினைப்பும் எப்போதும் உண்டு

அதன் தொடர்சியாய் இப்போது  கூட உலகளாவிய
சேவை அமைப்பான அரிமா சங்கத்தில் தற்போது
மாவட்டத் தலைவராகத் தொடர்கிற எனக்குக்
கடந்த வருடம் வட்டாரத் தலைவராக
பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது

அதற்கான பயிற்சி வகுப்பு மலேசியாவில் உள்ள
ஸபா என்கிற அற்புதமான தீவில் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. அந்தப் பயிற்சி முகாம்
அந்த அற்புதத் தீவு ,மற்றும் மலேசியச் சுற்றுப்பயண
அனுபவங்கள் எல்லாம் இன்னும் எழுதப்படாமலேயே
உள்ளது





(பயிற்சி முடித்து அதற்கானச்  சான்று பெறுதல் )

சமீபத்தில் நமது முன்னாள் ஜனாதிபதி
உடலால் மறைந்த அப்துல் கலாம் அவர்களின்
காணோளி ஒன்று பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது

அதிலொரு பள்ளி மாணவன் "தங்கள்
கண்டுப்பிடிப்புகளிலேயே சிறந்த கண்டுபிடிப்பாக
எதைக் கருதுகிறீர்கள் " எனக் கேட்க, அவர்
விண்ணாய்வுத் தொடர்பாக தான் உடன் இருந்து
கண்டுபிடித்தவைகளையெல்லாம் சொல்லி
முடிவாக, ஊனமுற்றவர்களுக்கு பயன்படும்படியாக
எடைக் குறைந்த செயற்கைக் காலணிகள்
செய்ததுதான்எனச் சொல்லி முடித்தார்

https://www.facebook.com/BalaajeeCares/videos/1060691787299933/

அதைப் போல சுற்றுலாவை மட்டுமே பிரதான
வருமானமாகக் கொண்டிருக்கிற அந்த அழகிய
ஸபா தீவு, அமெரிக்க  வேகாவை மிஞ்சும்படியான
மலேசிய காஸினோ,பத்துமலை முருகன் கோவில்
இன்னும் பல நினைவில் இருந்த போதும்
இவைகளையெல்லாம் மிஞ்சும்படியாக ஒரு
நினைவு தொடர்ந்து மனதில் பசுமையாய்த் தொடர்கிறது
என்றால் .....அது.....

( நீளம் கருதி அடுத்தப் பதிவில் 

Tuesday, February 9, 2016

ஜாம்பவானி தேனம்மை லெட்சுமணன்



எளிமையாகத் தோற்றமளிப்பவர்கள்
அடக்கமாகப் பேசுபவர்கள்
இவர்களுக்குப் பின்னே மிகப் பெரும்
சாதனைச் சரித்திரம்  இருக்கும் என்பது
எனது அனுபவம்.

அந்த வகையில் வை.கோ அவர்களைப் பற்றிய
பதிவில் பின்னூட்ட மிட்டவர்களில்
பதிவர் தேனம்மை லெட்சுமணன் அவர்களும்
மிகச் சாதாரணமாக அதிகப் பின்னூட்டம்
பெற்றவர்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி
சார் என மட்டும் பின்னூட்டமிட்டிருந்தார்.

பதிவுலகில் 2009 இல்  இருந்து இன்றுவரை
ஒரு நிலையான இடத்தில் இருப்பவர்
அவர் என்பது  சிலருக்குத் தெரியும்.

ஆனால் உண்மையில் இத்தனைச்
சாதனைக்குச் சொந்தக்காரர் என்பது
எத்தனை பேருக்குத் தெரியும்

இவர் எழுதியுள்ள பதிவுகளின்
மொத்த எண்ணிக்கை 1800 க்கும் மேலே

இவரின் பதிவினைத் தொடர்பவர்கள்
680 க்கும் மேலே

இவரது பதிவினைப் பார்வையிட்டவர்களின்
எண்ணிக்கை ஐந்து இலட்சத்திற்கும் மேலே

கதை ,கட்டுரை, விமர்சனம், கவிதை
சமையல் குறிப்பு என இவர் எழுத்தில்
இவர் தொடாத இலக்கியப் பகுதிகளே
நிச்சயம் இல்லை

ஜி + இல் இவர் பகுதியில் இணைந்தவர்கள்
ஏறக்குறைய 2300 க்கும் மேலே

பக்கப் பார்வையாளர்களின் எண்ணிகையை
நிச்சயம்  மிகச் சரியாக யாரும்
 யூகிக்கவே முடியாது

(வேண்டுமானால் யூகித்துவிட்டுப் பின்
சரியா என சோதித்துப் பாருங்களேன் /postshttps://plus.google.com/102047366403381778289/posts


இத்தகைய அளப்பரிய வலைத்தள
சாதனையாளர் எழுதுகிற வலைதளத்தில்
நானும் ஏதோ ஒரு ஓரத்தில் பதிவர் என குப்பைக்
கொட்டிக் கொண்டிருப்பதே எனக்கு மிகப்பெரிய
சாதனையாகப் படுகிறது

பெருகட்டும் அவரது சாதனைப் பட்டியல்
வளரட்டும் அவரது பன்முகத் திறன்கள் என
என் சார்பாகவும் உங்கள் அனைவரின் சார்பாகவும்
அவரை வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்