Showing posts with label anupavam. Show all posts
Showing posts with label anupavam. Show all posts

Thursday, September 3, 2020

கோடாலி அல்லாது நகத்தோடு

என் பெண்ணும் மாப்பிள்ளையும் அமெரிக்காவில்

இருப்பதால் ஆறு மாதப் பயணமாக மூன்று முறை

அமெரிக்கா சென்று வரும்படியாக அமைந்தது


மூன்றில் இரண்டுமுறை சமமான சீதோஷ்ண நிலை

இருந்த காலத்தில் சென்று வந்ததால் உடலுக்கு

எவ்வித பிரச்சனையும் இல்லை. ஒருமுறை மட்டும்

குளிர்காலத்தில் சென்று வரும்படியாக இருந்தது.


எங்களுக்கு இந்த மைனஸ் டிகிரி உஷ்ண நிலை

யெல்லாம் பரிச்சயமில்லை என்றாலும் அங்கு

வீடு மற்றும் செல்லும் மால்கள் முதலான

இடங்களில் எல்லாம் சீதோஷ்ண நிலையை 

சமன் செய்யும்படியானவசதிகள் எங்கும் இருந்ததால் 

வீட்டுக்குள் இருப்பதும் மால்கள் செல்வதும் 

பிரச்சனையில்லை.


ஆனால் வெளியில் தான் எத்தனை பாதுகாப்பாக

உடை அணிந்து கொண்டாலும்  ஐந்து நிமிடங்கள்

கூட தொடர்ச்சியாக இருக்க முடியாது..

இந்த அனுபவத்தை நேரடியாக அனுபவித்த பின்புதான்

கோடையை ஏன் அவ்வளவு சிறப்பாகக்

கொண்டாடுகிறார்கள் என்பதைப் புரிந்து

கொள்ளமுடிந்தது..நாங்களும் அவர்களுடைய

மனோபாவத்திற்கு மாறி கோடையை 

மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தோம்


அது குறித்து எழுதவும் புகைப்படங்களைப்

பகிரவும் நிறைய இருந்தாலும் இப்போது

இந்தப் பதிவு அதற்கானது இல்லை என்பதால்

அந்தக் குளிரின் காரணமாக கொண்ட

ஒரு அசௌகரியத்தை உடல் உபாதையை

அது தீர்ந்த விதத்தை பகிர்ந்தால்

அனைவருக்கும் அது பயன் தரலாம் என

இப்போது பகிர்கிறேன்


ஆறு மாதம் அங்கு இருந்து வந்த ஒரு வாரம்

எந்தப் பிரச்சனையுமில்லை. ஒரு வாரம் கழித்து

காலை நேரம் படுக்கையை விட்டு எழுகையில்

வலது கையை அசைக்க முடியவில்லை.

இடது கைப்பிடித்து தூக்கினாலும்

ஒரு நாற்பது டிகிரிக்கு மேல் நகர்த்தவே

முடியவில்லை.


சரி படுத்து இருந்ததில் வேலை செய்ததில்

ஏதாவது நரம்புப் பிசகு நேர்ந்திருக்கும்

இரண்டு நாள் லேசான பயிற்சிகள் செய்து 

பார்ப்போம் என முயற்சித்ததில் வலியும்

தூக்க முடியாத நிலையும்கூடியதே தவிர

குறைகிற பாடாய்க் காணோம்


சரி இதற்கு மேல் ரிஸ்க் எடுக்க வேண்டாம்

என மருத்தவரைப் பார்க்கப் போனேன்..

அவர் சொன்ன விஷயம் அதிர்ச்சி

அளிப்பதாக இருந்தது


மீதி அடுத்தப் பதிவில்