Wednesday, August 16, 2017

👇மறைந்த தெலுங்கு ஓவியர் திரு வட்டாதி பாபய்யா ஒரு பிரபலமானவர்.அவர் 1904ல் வரைந்த இந்த ஓவியம் கோபத்தில் இருக்கும் *கைகேயி* மற்றும் துக்கத்தில் இருக்கும் *தசரதன்*


இதிலென்ன  விஷேசம் .முயற்சித்துப்   பார்க்கவும் 


முடியவில்லையெனில் கடையில் பார்த்துத் தெரிந்து கொள்ளவும் 


* தலைகீழாக பார்த்தாலும் ஒரே மாதிரியாக இருக்கும்.Monday, August 14, 2017

பொறுப்பறியா சுதந்திரமும் சுதந்திரமில்லா பொறுப்புக்களும்

கம்னியூச நாட்டிலிருந்து
ஒரு கொழுகொழுத்த நாயும்

நம்போன்ற
ஜனநாயக நாட்டிலிருந்து
எலும்பும் தோலுமாய் ஒரு நாயும்

எல்லைக் கோட்டில் அதிருப்தியுடன்
சந்தித்துக் கொள்கின்றன

"எங்கள் நாட்டில்
உணவுக்குப் பஞ்சமில்லை
நேரத்திற்குக்   கிடைத்துவிடும்
ஆனால் நம்  இஷ்டம்போல்
குலைக்கத் தான் முடிவதில்லை "
என்று குறைபட்டுக்குக்  கொண்டது
கொழுத்திருந்த  அது

"எங்கள் நாட்டில்
எப்போது வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும்
யாரைப்பார்த்தும்குலைக்கலாம்
சோத்துக்குத்தான் பாடாய்ப்படனும்"
என்று சலித்தது
எலும்பும்  தோலுமாய்
காட்சியளித்த இ து 

இரண்டும் ஒத்தமனதுடன்
இடம் மாறிக்கொள்ளச் சம்மதித்து
நாடு மாறிக் கொண்டன

பொறுப்பறியா சுதந்திரமும்
சுதந்திரமில்லா பொறுப்புக்களும்
மீண்டும் சலிப்படையத்தான் செய்யும்
என்பதை உணராமலேயே...

இதே காரணத்திற்காக
இவை இரண்டும் மீண்டும்
மாறித் தொலைக்க வேண்டி இருக்கும்
என்பதை அறியாமலேயே

(சிறந்த சமூக மனிதனாய்
தகுதிப்படுத்திக் கொள்வோம்
சுதந்திரச்  சுகத்தை
முழுமையாய் அனுபவிப்போம்
அனைவருக்கும் இனிய
சுதந்திரத் தின நல்வாழ்த்துக்கள் )   

Friday, August 11, 2017

நம்பிக்கையுடன் எழுதிக்கொண்டிருப்போம்...

நம்
இளமைப் பருவத்தில்
தீமைகள் இல்லாமல் இல்லை

ஆயினும்
அவைகள் எல்லாம் எங்கோ
மிக மறைவாய்க்
கண்ணுக்குத் தெரியாதபடி..
கைகளுக்கு எட்டாதபடி
மிக மிக முயன்றால் மட்டுமே
அபூர்வமாய்க்  கிட்டும்படி...

இப்போது
நல்லவைகள் இருக்கிறபடி...

நம்
இளமைப் பருவத்தில்
தீயவர்கள் இல்லாமல் இல்லை

ஆயினும்
அவர்கள் எல்லாம்
மிக ஒதுங்கியபடி
அனைவருக்கும் தெரியாதபடி
அன்றாடவாழ்வில் தட்டுப்படாதபடி
அளவை மீறுகையில் மட்டும்
இருப்புத் தெரியும்படி

இப்போது
நல்லவர்கள் உள்ளபடி

என்ன செய்வது ?

கள்குடித்தக் குரங்கதுப்
பாறையில் நின்றபடித்
தன் முட்டைவைத்து
விளயாடுவதைப்
பார்த்துத் துடிக்கிறப்
பெட்டைகளாய்...

நாகரீகக் காலம்
நுகர்வுக்கலாச்சாரத்தில்
இளமையைவைத்து
விளையாடுவதைப்
பார்த்துத் துடிக்கிறோம்
ஊமைகளாய்..

என்ன செய்யலாம் ?

மழையில்லை என
புலம்பிய படியும்
அழுதபடியும்
இருத்தலை விடுத்து
நமபிக்கையுடன்
உழுதுக் கொண்டிருக்கும்
புஞ்சை விவசாயியாய்

மாற்றும் வழியதுத்
தெரியவில்லையெனப்
புரியவில்லையெனச்
சும்மா இருத்தலைவிடுத்து
நம்பிக்கையுடன்
எழுதிக்கொண்டிருப்போம்
பதிவர்களாய்..கவிஞர்களாய்

Thursday, August 10, 2017

#இலஞ்சியில்_முதுமை_இனிமையாகிறது


{இன்று ஒரு தகவல் INFORMATION TODAY மூலம் )

வயதானவர்களை பார்த்தால் கையெடுத்து கும்பிட்டு அவர்களது ஆசீர்வாதத்தை பெறுவது பொதுவான இயல்பு.....
அப்படிப்பட்ட வயதானவர்களே ஒருவரை பார்க்கும் போதெல்லாம் மகிழ்சியுடனும் நெகிழ்சியுடனும் வணங்குகின்றனர்.

 செங்கோட்டையில் இருந்து குற்றாலம் செல்லும் வழியில் உள்ள இலஞ்சி பாண்டியன் இல்லத்திற்கு செல்லவேண்டும்.

பெயர் தம்புராஜ் வயது 82 திருச்சி பெல் நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்து ஒய்வு பெற்றவர்.

மலேசியா போன்ற வெளிநாடுகளில் நிறுவனத்தின் பெருமையோடு நாட்டின் பெருமையையும் ஒருசேர நிறுவியர்
பணி ஒய்வுக்கு பிறகு இலஞ்சிக்கு வந்தவர் இங்கு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும் தென்காசி மூத்த குடிமக்கள் மன்றத்தின் உறுப்பினரானார் சில காலத்திலேயே மன்றத்தின் தலைவராகவுமானார்.

தலைவரான பிறகு அறுபது வயதை தாண்டி நுாறு வயதை தொடப்போகும் நிலையில் உள்ள அமைப்பின் உறுப்பினர்களுக்கு என்ன செய்வது என்று யோசித்தார்.

பல உறுப்பினர்களின் பிள்ளைகள் வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருக்கின்றனர் பெற்றவர்களுக்கு பணம் அனுப்புகின்றனர் ஆனால் பணம் இருந்தாலும் சரியான சத்தான சாப்பாடு இல்லாமல் அவதிப்படுவதை உணர்ந்தார்.

இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தீவிரமாக யோசித்து சென்னையில் இருந்து முதியவர்களுக்கான சிறப்பு மருத்துவர் நடராஜனை வரவேற்று மூன்று நாள் மருத்துவமுகாம் நடத்தி அவர்களுக்கு எப்படிப்பட்ட உணவு வழங்கவேண்டும் என்று கேட்டார்.

காலையில் பலகாரமும் மதியம் உணவும் இரவில் பழங்களும் இருக்கவேண்டும் காலை உணவும் மதிய உணவும் எப்படி இருக்கவேண்டும் எந்த அளவிற்கு உப்பு புளி காரம் இருக்கவேண்டும் எப்படி சமைக்கவேண்டும் என்றெல்லாம் எழுதி பட்டியலாக தந்துவிட்டார்.

இரவு உணவிற்கான பழங்களை அவர்களே வாங்கிக்கொள்வார்கள் அதில் பிரச்னை எதுவுமில்லை காலை மற்றும் மதிய உணவு மட்டும் மருத்துவர் சொன்னபடி உடலுக்கு ஆரோக்கியம் தரும்வகையிலும் ருசியாக இருக்கும்படியும் தருவது என முடிவு செய்தார்.

இதற்காக தனது வீட்டின் ஒரு பகுதியை ஒதுக்கி ஆட்களைவைத்து சமையல் செய்தார். செய்த சமையலை ஆட்டோ மூலமாக கேரியரில்வைத்து வீட்டிற்கே அனுப்பிவைத்தார்.கடந்த 2006-ம் ஆண்டு 25 பேருடன் துவங்கிய இந்த சேவை இப்போது 120 பேருடன் தொய்வின்றி தொடர்கிறது.

மாதத்திற்கு ஆன செலவை 120 பேருக்குமாக பிரித்துக்கொள்கிறார்கள் இது தலைக்கு 1800 ரூபாய் அளவில் வரும்.

காலை உணவு காலை 7.30 மணிக்கும் பகல் உணவு பகல் 11 மணிக்கும் வீடு தேடி சென்றுவிடுகிறது.

ஒரு நாள் ஒரு பொழுது கூட இது தவறியது இல்லை அதே போல ஒருவர் கூட உணவில் குறை என்று இதுவரை சொன்னது இல்லை.

இலஞ்சியில் மட்டுமின்றி செங்கோட்டை குற்றாலம் மேலகரம் சங்கராஸ்ரமம் வரை சாப்பாடு செல்கிறது.

பெரியவர்களின் மனம் நிறைந்த ஆசி கிடைப்பதால் இந்த வேலையை புனிதமாக கருதி சமையல் கலைஞர்களும் ஆட்டோ டிரைவர்களும் ஒரு ஈடுபாட்டுடன் செய்கின்றனர்.

மேலும் துரை.தம்புராஜின் இந்த சமூக பணிக்கு அவரது துணைவியார் சண்முகவடிவு நாச்சியார் பெரும் ஊக்கமும் உற்சாகமும் தந்து உதவி வருகிறார்.

அதிகாலை ஐந்து மணிக்கு துரை.தம்புராஜின் பணி சுறுசுறுப்பாக ஆரம்பித்துவிடுகிறது.ஒரு இளைஞரின் வேகத்தோடும் விவேகத்தோடும் பல வேலைகளை பம்பரமாக சுற்றி சுற்றி வந்து பார்த்து காலை மதிய உணவை அனுப்பிவிட்டே கொஞ்சம் இளைப்பாறுகிறார்.

 இதில் இன்னோரு விஷயம் பயனாளிகளில் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருப்பவர்கள் திரு மற்றும் திருமதி துரை.தம்புராஜ்தான்.

உணவு விஷயத்தை தாண்டி முதியவர்களுக்கான மருத்துவமுகாம் கலந்துரையாடல் இலக்கிய கூட்டம் என்று ஏதாவது ஆரோக்கியமான விஷயங்களை நடத்தி தானும் தன்னைப்போன்ற பெரியவர்களும் எப்போதும் சந்தோஷமாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்.

கொஞ்ச நேரம் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தால் போதும் இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை வெடிச்சிரிப்புடன் அந்த சூழலையே தனது நகைச்சுவையான பேச்சால் கலகலப்பாக்கிவிடுகிறார்.மொத்தத்தில் முதுமையை இனிமையாக்கி கொண்டுள்ளார்.

ஆனால் இந்த விஷயத்தில் நான் ஒரு சாதாரண கருவிதான் எல்லா பாராட்டும் தென்காசி மூத்த குடிமக்கள் மன்றத்தை சேர்ந்த டி.சோமசுந்தரம்,ஆர்.வி.துரைசாமி,எஸ்.வேங்கடசுப்பிரமணியன்,பி.கே.சண்முகசுந்தரம்,டி.சோமசுந்தரம்,எஸ்.முததுசாமி,வி.சுப்பிரமணியன்,எஸ்.தெய்வாங்பெருமாள்,குற்றாலிங்கம்,அருணகிரிநாதர்,என்.திருவேங்கடம்,ஆர்.எம்.கணபதி ஆகியோரைத்தான் சாரும், அவர்கள்தான் தேவையான ஆலோசனைளை வழங்கி வழிநடத்தி செல்கின்றனர் என்கிறார் அடக்கமாக.

மகத்தான புண்ணியத்தைதரும் இந்த நல்ல காரியத்தை யார் வேண்டுமானாலும் அவரவர் ஊரில் இருந்து செய்யலாம்...

செய்து பாருங்கள் .
வாழ்க்கைக்கே ஒரு அர்த்தம் உண்டாகும் என்று சொல்லி முடித்த துரை.

தம்புராஜிடம் ஆலோசனை பெறவும் வாழ்த்தவும் விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய எண்:9944234499.

படித்ததில் பிடித்தது


Tuesday, August 8, 2017

புதிதாய்ப் பிறக்கவேண்டும்

''மொத்தம்
கழிந்தது
இருப்பு
இந்த மூன்றில்
எந்த இரண்டு இருந்தாலும்
மற்றொன்றை
எளிதாய் கண்டு விடலாம்
ஆனால்... "எனத் தயங்க

இதைக் கேட்ட நண்பன்
மிகப் பலமாய்ச் சிரித்தான்

"சுற்றி வளைத்து
எங்கு வருகிறாய் எனப் புரிகிறது
உனக்கு உன் மொத்த வாழ்நாள்
தெரிய வேண்டும் அப்படித்தானே "
என்றான்

நானும் மௌனமாய்த் தலையாட்ட


அவனே  தொடர்ந்தான்

"கழிந்த நாட்களை
கணக்கிட்டுக் கொள்

அதனுடன்
நீ விழிப்பதால்
சேருகிற நாளினை
கூட்டிக் கொள்

இப்போது கிடைப்பது
உன் மொத்த வாழ் நாள்

இப்போது இரண்டு கிடைத்து விட்டதல்லவா
இதில் கழிந்ததைக் கழி
இனி அடுத்தது கிடைப்பது
மிக மிக எளிதுதானே "
எனச் சப்தமாய் சிரிக்கிறான்

நான் மெல்லத் தயங்கியபடி
"அப்படியானால் விடை எப்போதும்
ஒன்றாகத்தானே இருக்கும் "

"ஆம் உண்மையும் அப்படித்தான்
மாறி மாறி இருக்காது
ஒன்றாகத்தான் இருக்கும்

புரிந்தவன் ஒவ்வொரு நாளும்
புதிதாய்ப் பிறக்கிறான்
கிடைத்த  நாளில்
முழுமையாய் வாழத் துவங்குகிறான்

புரியாதவனோ
உன்னைப் போல்
தேடி அலைந்து
அன்றையும்
கழிந்த நாளாக்கி
வாழாதுத் தொலைக்கிறான்" என்கிறான்

கொஞ்சம் புரிந்தது போலிருந்தது

நாளை முதலாவது
புதிதாய்ப் பிறக்கவேண்டும்

Sunday, August 6, 2017

"வாடா போடா " நண்பர்கள்...

"வாடா போடா "
நண்பர்கள் அதிகம்
உடனிருக்கையில் இருந்த
இளமைத் துள்ளலும்
தைரியமும் மகிழ்வும்

"வா, போ "
நண்பர்களிடம்
விட்டக் குறையாய்
தொட்டக்குறையாய்
விடாதுத் தொடர்ந்ததும்

இப்போது
"வாங்க போங்க "
நண்பர்களிடமும்
இருப்பது போன்ற
பாவனையில் என்
நட்பைத் தொடர்கிறேன்

பிறந்த சூழலில் வாய்த்த
புழுதி வீதியும்
அந்த எருமை குளிக்கும் குளமும்
கிட்டிப் புல் விளையாட்டும் தந்த
 நீங்காதச் சுகத்தை

இன்று வசதி வாய்ப்புகள் தரும்
பிரதான சாலைகளில்
நவீன நீச்சல் குளங்களில்
நவ நாகரீக  விளையாட்டுகளில்
நாளும்தேடிச் சோரும்
என்வயதுப்பெருசுகள் போலவும்

( வலைத்தளம், மற்றும் முக நூல் நண்பர்கள்
அனைவருக்கும்  
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் ) 

Friday, August 4, 2017

.....போக்கு மா நிலம்

முன்பு ஒரு காலத்தில் மத்திய அரசில்
தமிழகத்திற்கென ஒரு கேபினெட்
அந்தஸ்துள்ள மந்திரி கூட
இல்லாத காலம் இருந்தது

அப்போது ஒரு இயக்கம் தமிழகத்திற்கு
கேபினெட் அந்தஸ்துள்ள மந்திரிகள்
பெறும் தகுதி இல்லையா என தமிழகம்
எங்கும்  சுவர்ப் பிரச்சாரம் செய்த ஞாபகம்
இப்போதும் இருக்கிறது

அதே போல இப்போது அடுத்துள்ள
யூனியன் பிரதேசத்திற்குக் கூடத் தனியாக
துணை நிலைய ஆளுனர் இருக்க
நம் தமிழ் நாட்டுக்கு மட்டும் தனியாக
ஆளுநர் இல்லாமல் கூடுதல் பொறுப்பிலேயே
இருப்பது .......

(அதுவும் அரசியல்  அநாகரிகங்கள்
மிக மிக அதிகமாக அரங்கேறிக் கொண்டிருக்கும்
மிக மிக அவசியமான இந்தச் சூழலில் )

இம்மாநிலம் ஒரு .....போக்கு
மாநிலமாக மத்திய அரசால் மதிக்கப்படுகிறதோ
என்கிற ஒரு மோசமான எண்ணத்தைத்
தோற்றுவிப்பதைத் தவிர்க்க இயலவில்லை

(கிராமங்களில் ஒன்றுக்கும் லாயக்கற்றவனை
இப்படிச் சொல்லித்தான் கண்டு கொள்ளாமல்
விட்டுவிடுவார்கள் )

எது எதற்கோ எப்படியெல்லாமோ
விளக்கம் சொல்கிற தமிழக பி.ஜெ.பி
முக்கியஸ்தர்கள் இதற்கும் நாம்
இரசிக்கும்படியாகவோ அல்லது
திகைக்கும்படியாகவோ (கேஸ் மானிய
ஒழிப்பிற்கு மேடம் சொன்னமாதிரி )
விளக்கம் சொல்வார்களா ?

அல்லது தலைப்பில் சொன்னது
ஒருவேளை சரிதான் எனும்படியாக
இது குறித்துத் தொடர்ந்து மௌனச் சம்மதம்
தெரிவிப்பார்களா ?

இனி நாம்...

இனி நாம்...

மாடி வீடு வைத்திருக்கும் வேட்பாளருக்கு ஓட்டு போடக்கூடாது..

கார் வைத்திருக்கும் வேட்பாளருக்கு ஓட்டு போடக்கூடாது..

மாதம் 1 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ள வேட்பாளருக்கு
 ஓட்டு போடக்கூடாது..

1 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் வேட்பாளருக்கு 
ஓட்டு போடக்கூடாது.
.
அரசியல் பாடத்தில் முதுநிலை பட்டம் 
பெற்றிருப்போருக்கு மட்டுமே எங்கள் ஓட்டு..

வேட்பாளரின் மகன்/மகள் தனியார் பள்ளி/கல்லூரியில்
 படிப்பவர்களாக இருந்தால் ஓட்டு போடக்கூடாது
..
குடும்பத்தில் எவரேனும் அரசு வேலையில் பணிபுரிந்தால் 
அந்த குடும்ப வேட்பாளருக்கு ஓட்டு போடக்கூடாது..

கொடுமையான சட்டமியற்றி மக்களை சிரமப்படுத்தும் 
ஆட்சியாளர்களை நாமும் நம்மால் முடிந்த எதிர்ப்பினை 
ஒற்றுமையுடன் வெளிப்படுத்துவோம்.👍👍👍

வாட்சப்பில் வந்தது