Saturday, July 31, 2021

முன்னதும் பின்னதும்

உணவில்லாது

தவிப்பவன் தவிப்பு

மிகப் பெரிதாகத் தெரிந்தது


உணவிருந்தும்

உண்ணமுடியாதிருப்பவன்

நிலை அறிகிறவரையில்...


திறனிருந்திருந்தும்

உயர்வில்லாதவன் கொதிப்பு

சரியெனவே பட்டது


திறனில்லாது

உயர்வு பெற்றவன்

தவிப்பு அறிகிறவரையில்


சக்தியிருந்தும்

அனுபவிக்காதவன் நிலைமை

கொடுமையானதாகவே பட்டது


வாய்ப்பிருந்தும்

அனுபவிக்கமுடியாதவன்

அவஸ்தைஅறிகிற வரையில்


வாழ்வதற்காக

அன்றாடம் செத்துப் பிழைப்பவன்

பாவியெனவே தெரிந்தான்


சாவதற்காக

அன்றாடம் வாழ்ந்து தொலைப்பவன்

வாழ்வறிகிற வரையில்


முன்னதுவும் பின்னதுவும்

நம் வாழ்வில்

இருவோர எல்லைகளே


சமநிலை பேணும்

சூட்சுமம் அறிந்திடின்

இல்லை இத்தொல்லைகளே

Thursday, July 29, 2021

மரபணுக்கள்

 எங்களூரில் எனக்குத் தெரிந்த அரசியல்வாதி

ஒருவர் இருந்தார்.அரசியல்வாதி எனச்

சொல்வதை விட பாட்சா படத்தில்

அண்ணனுக்கெல்லாம் அண்ணன் எனச்

சொல்வதைப் போல அரசியல்வாதிக்கெல்லாம்

அரசியல்வாதி எனக் கூடச் சொல்லலாம்.

அந்த அளவு பொதுப்பணத்தைச் சுருட்டுவதில்

அவர் பெரும் கில்லாடி..


எந்த ஒரு பொது அமைப்பென்றாலும் தானும்

அதில் உடன் அவரை இணைத்துக் கொள்வார்

எந்த அரசியல் மாற்றம் வரினும் தவறாது

ஆளும் கட்சியின் பக்கமே இருப்பதாகத்

தன்னைக் காட்டிக் கொள்வார்

.

அவரைப் பற்றித் தெரிந்தவர்கள் அவருடைய

வயதை உத்தேசித்தும் நாகரீகம் கருதியும்

எதிர்ப்புத் தெரிவிக்காது முணுமுணுப்பதோடும்

முகம் சுழிப்பதோடும் கடந்து போவதை

சாதகமாக்கிக் கொண்டு 

எந்த அமைப்பாயினும் அதில் முன்ணணி நிர்வாகிஆகி/

அல்லது அப்படி இருப்பதுபோல் காட்டிக்

கொண்டு தன் சுருட்டல் வேலையை

ஆரம்பித்து விடுவார்


.ஒருமுறை ஏமாந்தவர்கள் சுதாரித்துக்

கொண்டது தெரிந்தால் அதற்காகச் சங்கடம்

கொள்ளமாட்டார்.


ஏமாந்தவர் குறித்து ஏதாவது

வதந்தியைப் பரப்பிவிட்டு அடுத்து சில  

புதியவர்களைப் பிடித்துவிடுவார்..


அவருக்கென்று எப்படி  தொடர்ந்து

இப்படி ஏமாறும்படியான ஆட்கள் அமைகிறார்கள்

என நாங்கள் எங்களுக்குள் ஆச்சரியப்பட்டுப்

பேசிக் கொள்வதுண்டு..


சரி.இவ்வளவு வயதானபின் இவருக்கு

அறிவுரை சொல்வது வீண் எடுபடாது

எனத் தெரிந்த் கொண்டு அவரைப் பற்றித்

தெரிந்தவர்கள் அவரை விட்டு ஒதுங்கிவிடுவோம்.


மிக நெருங்கியவர்களிடம் மட்டும்

விவரம் சொல்லி ஏமாறாது காப்பாற்றிவிடுவோம்.


இவருடைய வாரிசுகள் எல்லாம் படித்து

நல்ல வேலைக்குச் சென்றுவிட்டதால்

அவர்களிடத்தில் இதுபோன்ற சில்லுண்டித்தனம்

துளியும் இல்லை.அவர்கள் பெருந்தன்மை

கொண்டவர்களாக இருந்தார்கள்.


எனவே இவருடைய சுருட்டல் குணம்

இவரோடு தொலைந்துவிடும் என்ற

நம்பிக்கையோடு எல்லோரும் இருந்தோம்.


ஒரு நாள் காலை வேளையில் நடைப்பயிற்சிக்காக

அவருடைய வீட்டைத்தாண்டிச் செல்லவேண்டி 

இருந்தது..


வாசலில்  நின்றுகொண்டிருந்தவர் என்னை அழைத்து

கையில் வைத்திருந்த ஒரு பேப்பரைக் கொடுத்து

இதை இருபது நகல் எடுத்து வரும்படிச்

சொன்னார்,


அது ஏதோ ஒரு அமைப்பின் நிகழ்வுக்கான

சுற்றறிக்கையாக இருந்தது..


நான் செல்லுகிற வழியில் ஒரு ஜெராக்ஸ்

கடையும் இருந்ததால் மறுக்க முடியவில்லை


"எடுத்துக் கொண்டு வா. காசை வந்ததும்

வாங்கிக் கொள் " என்றார்


எப்போதும் இப்படித்தான் சொல்வார்

அவரிடம் ஒரு பைசா நகராது

நாங்களும் இதுபோன்ற சின்னச் செலவு

என்றால் வராது எனத் தெரிந்தே

செய்து கொடுத்து விடுவோம்



.அப்போது என் பையில் இருபது

ரூபாயும் இருந்தது


அதனை வாங்கிக் கொண்டு நான்

புறப்படுகையில் உள்ளே இருந்து அவரின்

பேரன் வேகமாக ஓடி வந்து

"நானும் மாமா கூட கடைக்குப் போறேன்"

என்றான்,


ரொம்ப சூட்டிக்கான பையன்

வயது எட்டு இருக்கும்.அவனுடைய

பேச்சும் செயல்பாடுகளும் அவன்

வயதுக்கு மீறியதாக இருக்கும்

அவர் கூட அவ்வப்போது என் வளர்ப்பு

எனப் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்..


அவரும் " சரி ஆசைப்படுகிறான்

கூட்டிக் கொண்டு போய் ஜெராக்ஸ் எடுத்து

இவனிடம் கொடுத்து அனுப்பி விட்டுக் கூட

நீ தொடர்ந்து வாக்கிங் போ

வருகிற வரை தூக்கிக் கொண்டு

அலைய வேண்டாம் " என்றார்.


இதில் உள்ள சூட்சுமம் உங்களுக்கும்

புரிந்திருக்கும் என நினைக்கிறேன்

ஜேராக்ஸ் நகல் கொடுக்கும்போது

ரூபாய் கேட்பதற்கோ அல்லது

அவர் சாக்குச் சொல்வதற்கோ கூட

வாய்ப்பிருக்கிறது


பின்னால் இதை ஒரு பணமாக நான்

கேட்க வாய்ப்பில்லை.


( ஒருவேளை வேண்டுமென்றே கேட்டால் 

"சரியான பிசுனாரி ஒரு பொதுக் காரியத்துக்கு

இருபது ரூபாய் செலவளிக்கக் கூட

மனசில்லாதவன் என ஆயிரம் ரூபாய் அளவு

பிரச்சாரம் செய்யது துவங்கி விடுவார் )


சரி எனச் சொல்லிவிட்டு அவனையும்

அழைத்துக் கொண்டு ஜெராகஸ் கடைக்குப்

போய் நகல் எடுக்கக் கொடுக்கையில்

கடைக்கு முன்னால் இருந்த மிட்டாய்

பாட்டிலைக் காட்டி 

"இதுல ரண்டு வாங்கிக் கொடுங்க மாமா"

என்றான்


வாங்கிக் கொடுப்பது ஒரு பெரிய

பிரச்சனை இல்லை.


ஆனால் என்னிடம் அப்போது

 இருபது ரூபாய்தான் இருந்தது..


அவர் இருபது நகல் எடுக்கச் சொல்லி

இருந்ததால் அதற்குத்தான் சரியாக இருக்கும்


எனவே அவனுக்குப் புரியும்படியாக

வாங்கிக் கொடுக்கமுடியாத சங்கடத்துடன்

" உங்கள் தாத்தா இருபது ரூபாய்தான்

கொடுத்து விட்டார். இருபது ஜெராக்ஸ்க்கு

அதுவே சரியாகப் போய்விடும்

நான் சாய்ந்திரம் ஆபீஸ் விட்டு 

வரும் போது  கூட ஐந்து மிட்டாயாக

வாங்கித் தருகிறேன் " என்றேன்


அவன் தலையை ஒரு பக்கமாகச்

சாய்த்து என்னை ஒருமாதிரியாகப் பார்த்தான்

ஏதாவது வில்லங்கமாக மௌடீகமாகப்

பேசும்போதோ அல்லது செய்யும் போதோ

அவருடைய தாத்தா இப்படித்தான் செய்வார்,


அச்சு அசலாய் அவன் அப்படியே 

செய்தது கூட எனக்கு ஆச்சரியம்

அளிக்கவில்லை..


அடுத்து இப்படிச் சொன்னான்.

"எங்கத் தாத்தா இருபது இருக்கான்னு

எண்ணியா பார்க்கப் போறார்.

பதினெட்டு எடுத்துட்டு எனக்கு

மிட்டாய் வாங்கிக் கொடுங்க மாமா "

என்றான்

Tuesday, July 27, 2021

படித்ததும் பகிரப்பிடித்தது..

 *இன்றைய சிந்தனைக்கு 🤔🤔🤔🤔🤔🤔அபார்ட்மென்ட் வீடு உணர்த்தும் உண்மை*


👌👌👌👍👍👍👌👌👌

எஸ்

ஒரு நல்ல இடத்தில் FLAT வாங்க குறைந்தபட்சம் ஒரு கோடியாவது ஆகும்.


அந்த ஒரு கோடிக்கு என்னென்ன கிடைக்கிறது? 


நமது FLAT ன் தரைப்பகுதியை நம்முடையது என்று சொல்லமுடியுமா?! முடியாது. 


காரணம், அது, கீழ் மாடியில் இருப்பவனுடைய கூரை; ஆகவே, அவனுக்கும் சொந்தம்!


நம் தலைக்கு மேலிருக்கும் கூரையை நம்முடையது என்று சொல்லமுடியுமா? அதுவும் முடியாது; அது, மேல் மாடியில் இருப்பவனுடைய தரை. 


ஆகவே, அவனுக்கும் சொந்தமானது!


சரி... வலது பக்க சுவரை நம்முடையது என்று சொல்ல முடியுமா? முடியவே முடியாது... 

அது அந்தப்பக்கம் இருப்பவனுக்கும் சொந்தமானது!


சரி, இடது பக்க சுவர்?! அதுவும் இடதுப்பக்கம் இருப்பவனுக்கும் சொந்தமானது!


நாம் பயன்படுத்துகின்ற படிக்கட்டுகள், லிப்ட் ?! அவையெல்லாம் மொத்த அபார்ட்மென்டுக்கும் சொந்தமானது!


சரி, நமக்கென்று அபார்ட்மென்ட் வளாகத்தில் ஒரு பத்து சதுரடி இடமாவது கொடுத்திருக்கிறார்களா?


நிச்சயமாக இல்லை... இடம் எல்லோருக்குமே பொதுவானது! அப்படியென்றால்,

*அந்த ஒரு கோடிக்கு நமக்கு கொடுக்கப்பட்டது என்ன?!*


1500 சதுர அடி கொண்ட காலியான அந்த SPACE தான் நமக்கு கொடுக்கப்பட்டது!


சுற்றி இருக்கும் சுவர்களோ, கூரையோ, தரையோ நம்முடையது அல்ல, அந்த சுவர்களுக்கு இடையே உள்ள SPACE மட்டுமே நமக்கு கொடுக்கப்பட்டது!


*அபார்ட்மென்ட் வளாகத்தில் உள்ள அத்தனை வசதிகளையும் பயன்படுத்தலாம்*, *அனுபவிக்கலாம்*, 

*ஆனால்*

*என்னுடையது என்று உரிமை கொண்டாட முடியாது*!


*கடவுள் நமக்கு கொடுத்ததும் அதுதான்*.


இந்த பூமியில் வாழ்வதற்கான SPACE மட்டும்தான் கொடுத்திருக்கிறார்; 


அந்த SPACE ல் இருந்துகொண்டு, உலகத்தில் உள்ள *அத்தனை சந்தோஷங்களையும் ரசித்து அனுபவிக்கலாம்*,


*மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளலாம்*!


*ஆனால், இங்கு இருக்கின்ற எதையும் உரிமை கொண்டாட முடியாது*. 


*கொண்டுசெல்லவும் முடியாது*!


*என்னுடைய அம்மா எனக்கு தானே சொந்தம் *என்று சொல்லலாம்*,

*ஆனால்*, *அவர் அப்பாவின் மனைவி*, 

*அவருக்கு தான் சொந்தம்*. 


*அதன் பின்புதான் குழந்தைகள் வந்தது*!


*சரி... அம்மா, அப்பாவுக்காவது சொந்தமா என்றால் அதுவும் இல்லை*. 


*அவர் இன்னொருவரின் மகள்*; *தாத்தாவுக்கு தான் சொந்தம்*! 


*தாத்தாவும் தனியாக சொந்தம் கொண்டாட முடியாது*,

*காரணம் பாட்டிக்கும் அதில் சம பங்கு இருக்கிறது*!


*இப்படி இந்த பூமியில் இருக்கின்ற ஒரு துரும்பு கூட நமக்கு சொந்தமானது இல்லை*! 


*நாம் இங்கு நிரந்தரமாக இருக்கப் போவதுமில்லை*...


*பிறகு ஏன் பிற மனிதர்கள் மீது கோபம், போட்டி, பொறாமை, வெறுப்பு, வஞ்சகம், சுயநலம் எல்லாம்*!?


*நமக்கு கொடுக்கப்பட்ட SPACEல் சந்தோஷமாக இருப்போம்*. 


*சக மனிதர்களையும் நேசிப்போம்*. 


*முடிந்தால், பிறர் சந்தோஷப்படும்படி எதாவது செய்வோம்!*

என்றும் அன்புடன்::.         குமரவேல் ஆச்சாரியார்


👉 *படித்தில் பிடித்தது...*

Sunday, July 25, 2021

வாசித்தால் ஏக்கப் பெருமூச்சு நிச்சயம் வரும்..

 *காற்றில் கரையாத நினைவுகள் *


ஏழ்மையிலும் செம்மை இருந்த காலம் ஒன்று இருந்தது.


 பற்றாக்குறையிலும் உள்ளம் நிரம்பி வழிந்தது. பக்கத்து வீடும் நம் வீட்டின் நீட்சியாக நகரங்களிலும் அன்புக் கரம் நீட்டிய மனநிலை அன்று. 


எப்போது வேண்டுமானால் நம்மிடம் இல்லாததைப் பக்கத்து வீடுகளில் கேட்டுப் பெறலாம் என்பது எத்தனை பெரிய வசதி. 


அன்று பண்டம் மாற்றுமுறை பாசத்தால் நிகழ்ந்தது. 


புதிதாக நம் வீட்டு வத்தக் குழம்பு சின்னக் கிண்ணத்தில் அடுத்த வீட்டுக்குப் பயணிக்கும். அங்கு வைத்த மிளகு ரசம் இங்கு பதிலுக்கு வந்து சேரும். 


எந்த விசேஷமாக இருந்தாலும் அதற்காகச் செய்த பலகாரம் சுற்றியுள்ள வீடுகளுக் கும் சுடச்சுட வழங்கப்படும்.


நம் வீட்டு முருங்கை அதிகம் காய்த்தால், அது அடுத்த வீட்டினர் சாம்பார் வைப்பதற்காகவும். பக்கத்து வீட்டு செவ்வாழை தார் போட்டால் தண்டும் பழமும் கண்டிப்பாக நம் சமையலுக்கு வந்து சேரும். 


பால்காரர் மாடு கன்று போட்டதும் மறக்காமல் சீம்பால் அளிப்பது உண்டு. அதற்காகவே நாங்கள் அவர்கள் வைத்திருக்கும் மாடு எப்போது கன்று போடும் என்று காத்திருந்ததும் உண்டு. பாலில் கலக்கும் தண்ணீரை சீம்பாலால் அவர்கள் சரிசெய்து விடுவார்கள். 


இருப்பவர் இல்லாதவருக்குத் தருவதும், அதிகம் இருப்பவர் அடுத்தவரிடம் பகிர்வதும், யாரும் உபதேசிக்காமல் அன்று மக்கள் கடைப்பிடித்த நெறிமுறையாக இருந்தது. 


ஒரே பொருளாதார நிலையில் இருப்பவர்கள் அருகருகே வாழ்ந்த சூழல் அது. எல்லோரிடமும் அவ்வப்போது பற்றாக்குறை தலைநீட்டும். அதை புரையேறும் தலையைத் தட்டிக்கொடுப்பதைப் போல சுற்றியிருப்பவர்கள் தங்கள் தாராளத்தால் அமுக்கி விடுவார்கள். 


’ரெண்டு தீக்குச்சி வேண்டும்’


நாங்கள் சிறுவராக இருக்கும்போது எங்கள் வீட்டுக்கு எதிரே மாட்டு வண்டி ஓட்டும் அண்ணன் தம்பிகள் ஐவர் இருந்தனர். அவர்களுக்கு நாங்கள் வைத்த பெயர் ’பஞ்ச பாண்டவர்’. காலையில் பள்ளிக்குச் செல்லும் வழியில் நாங்கள் தட்டுப்பட்டால் ஒற்றைக் கைகொடுத்து எங்களை ஏற்றிக்கொண்டு பயணித்துப் பள்ளியில் இறக்கிவிடுவார்கள். 


நூறு கிலோ அரிசி மூட்டைகளை அலாக்காக முதுகில் தூக்குவார்கள். உடலில் இரும்பையும் உள்ளத்தில் காந்தத்தையும் வைத்திருந்தவர்கள் அவர்கள். சமயத்தில் தீக்குச்சிகளை இரவல் கேட்டு இரவில் வருவார்கள். தீப்பெட்டிகூட சமயத்தில் வாங்க முடியாத சூழல் இருந்ததை இன்றையத் தலைமுறை நம்ப மறுக்கும். 


அந்தத் தோழர்கள் வீட்டுப் பெண்கள் அரிசி களைந்து, பருப்பு வேகவைத்து, சாதம் வடித்து பானையில் ஊற்றிய நீரையெல்லாம் எடுத்துக்கொண்டு, கைநிறைய சாணத்தை வீட்டில் போட்டுவிட்டுச் செல்வார்கள். சமயத்தில் மிஞ்சிய குழம்பையும், சோற்றையும் கொடுத்தால் மறுக்காமல் வாங்கிச் செல்வார்கள். 


நள்ளிரவில் அரிக்கன் விளக்கோடு வெளியே வந்தால் அலறியடித்துக்கொண்டு ’என்ன ஆபத்தோ!’ என்று விசாரிக்க வருவார்கள். ’அண்ணன்’ என்றும் ’தம்பி’ என்றும் உறவு வைத்து அளவளாவுவார்கள். அத்தனை அந்நியோன்யம். 


அன்று அவசரத்திற்கொன்று கேட்பது கவுரவக் குறைச்சல் அல்ல. அதிகாலையில் காப்பித் தூள் டப்பா வறண்டி ருப்பதைப் பார்த்து, பக்கத்து வீட்டில் ஒரு குவளை இரவல் வாங்கி திருப்பித் தருவது உண்டு. இரண்டு நாட்கள் வெளியூர் சென்றுவிட்டு வந்தால் பாலுக்குப் புரையூற்ற பக்கத்து வீட்டில் இரண்டு கரண்டி தயிர் வாங்கி வருவது உண்டு. அவற்றையெல்லாம் மகிழ்ச்சியோடு கொடுத்தார்கள், மன நிறைவோடு பகிர்ந்தார்கள். 


ஜமுக்காளமும் மடக்கு நாற்காலியும்


மரச் சாமான்கள் அன்று விலை அதிகம். வீட்டடுக்கான முக்கியப் பொருட்களில் அவற்றிற்கு முதலிடம் இல்லை. பெரும்பாலும் பெண்களுக்கு பாயே விரியும். கொஞ்சம் வசதி இருந்தால் ஜமக்காளம் விரிக்கப்படும். ஆண்கள் அமர ஒன்றிரண்டு இரும்பு மடக்கு நாற்காலிகள். சிறுவர்கள் தரையில் அமர வேண்டும். வருகிற உருப்படி அதிகமானால் மர ஸ்டூல்கள் மேலிருக்கும் அரிசி டின்கள் இறக்கப்பட்டு துணியால் அவசரமாக சுத்தம் செய்யப்பட்டு இருக்கைகளாக மாறும். இன்னும் சிலர் கூடுதலாக வந்தால் அண்டை வீடுகளில் இருந்து நாற்காலிகள் இறக்குமதி செய்யப்படும். விருந்தினர் சென்றதும் உடனடியாகத் திருப்பி ஒப்படைக்கப்படும். 


ஏணி என்பது ஒரு சில வீடுகளில் மட்டுமே இருக்கும். பரணில் இருக்கும் பாத்திரம் எடுக்கவும், கூரையில் ஏறி பழுது பார்க்கவும் வேண்டியபோது அடுத்தவர் ஏணி நமக்கு ஏற்றம் தர சித்தமாக இருக்கும். 


மரணம் என்பது பெரும்பாலும் வயோதிகத்தில் வரும். இறந்தவரை சாய வைக்கிற நாற்காலிகூட இரவலாய்ப் போகிற இடங்கள் உண்டு. 


நம்மிடம் போதிய நாற்காலிகள் இல்லையே என்று யாரும் வருத்தப்பட்டதில்லை, உடனே இரவல் வாங்கி வர மகன்கள் என்கிற இரு காலிகள் இருந்ததால். 


தோசை சுடுவதற்கு அம்மாக்கள் கைவசம் முக்காலி இருக்கும். விருந்தினர் அமர்ந்து சாப்பிட நான்கைந்து பலகைகள் இருந்தன. தரையில் அமர்ந்து சாப்பிடும்போது அளவோடு சாப்பிட்டதோடு மட்டுமல்லாமல், மூட்டு வலியும் முழங்கால் வலியும் வராமல் எல்லோரும் திடமாக இருந்தார்கள். 


பக்கத்து வீட்டு அட்டிகை


அவசரம் என்றால் அடுத்த வீட்டினரிடம் மிதிவண்டியை இரவல் வாங்குவது உண்டு. திருப்பும்போது மரியாதைக்காக காற்றை நிரப்பித் தருவார்கள்.


அன்று கத்தி முதல் சுத்தி வரை தேவையான பொருளை வழங்கிக்கொள்வதில் நட்பும், உரிமையும் சோம்பல் முறித்தன. 


கைக்கும் வாய்க்குமே வருமானம் நீடிக்கும் பரிதாப நிலை நடுத்தரக் குடும்பங்களில் நர்த்தனமாடியது. பெண் பார்க்க வருகிறபோது பக்கத்து வீட்டு அட்டிகைகூட பெண்ணின் கழுத்தை அலங்கரிக்கப் பயன்படும். 


இரவல் என்பது சின்ன நகரங்களில் மட்டுமே இருந்தது. கிராமங்களில் யார் வேண்டுமானாலும் எந்த வேப்ப மரத்திலும் பல் துலக்க குச்சியை ஒடித்துக்கொள்ளலாம். 


எந்த மோட்டார் ஓடினாலும் தங்கள் துணிகளை மூட்டையாக எடுத்துச் சென்று துவைத்துக்கொள்ளலாம். ஓடுகிற தண்ணீரில் சிண்டுகள் சோப்புத் தேய்த்துக் குளித்துக்கொள்ளலாம். 

அதற்காகவே பெரிய தொட்டிகள். 


உழவர்கள் தங்கள் நிலத்தில் இன்றும் வாணிகம் செய்வதில்லை. வருவோர் போவோர் ஆசையோடு மாங்காய் கேட்டால் காசு வாங்காமல் பறித்துத் தருவார்கள். கரும்பு வயல்களில் அங்கேயே ஒடித்து ருசிக்கத் தடையில்லை. குழந்தைகளுக்குப் பால் என்று கேட்டால் பணம் பெற்றுக் கொடுப்பதில்லை. 


இந்த அரிய பண்புகளால் சிற்றூர்களில் இன்னமும் மனிதம் ஜீவித்திருக்கிறது. 


வீட்டுக்குள்ளேயும் இரவல் உண்டு. அண்ணன் வளர்ந்ததும் தம்பிக்கு அந்த சட்டை தானாக வரும். அக்காவின் தாவணி தங்கைக்குத் தாரை வார்க்கப்படும். ஐந்தாவது படிக்கும் அண்ணன் முழு ஆண்டுத் தேர்வு முடிந்ததும் நான்காம் வகுப்பை முடித்த தம்பிக்கு புத்தகங்களை அப்படியே ஒப்படைக்க, அவன் அதிலேயே படிப்பைத் தொடரும் சிக்கனங்கள் உண்டு. 


வசதியற்ற மாணவர்கள் மற்றோர் படித்த புத்தகங்களை அரை விலைக்கு வாங்கி அவற்றை வைத்துத் தேறுவது உண்டு. 


வண்ணப் பென்சில்கள் வீட்டின் பொதுவுடைமை. வேண்டியபோது அண்ணன் தம்பிகள் எடுத்துப் பயன்படுத்தி மீள வைப்பது மரபு.


இன்று பொதுவுடைமை என்பது இல்லத்துக்குள்ளேயே இல்லை. அண்ணனுக்கு வாங்குவதை தம்பிக்கும் தருவிக்க வேண்டும். 

இல்லாவிட்டால் தகராறு. 


அவசரத்துக்கு என்று அடுத்தவரிடம் கேட்பது அநாகரிகம். அழுகி எறிவார்களே தவிர, பகிர்ந்து மகிழ மாட்டார்கள். 


பற்றாக்குறை இல்லாத நிலை பல வீடுகளில் இன்று இருக்கிறது. பெட்டியில் இல்லாத வறுமை உள்ளத்தை நிறைத்திருப்பது உண்மை. 


படித்ததில் பிடித்தது.

கட்டுரையாளர் திரு வெ.இறையன்பு.

(மீள்)

Sunday, July 18, 2021

ஒரு நல்ல செய்தி

 தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறையின் அமைச்சர் மாண்புமிகு தோழர் அன்பில் மகேஷ் அவர்களுக்கும்,   ஒரு வாழ்த்து சொல்லுங்க!


10, 11 & 12-வது வகுப்பு new bookல உள்ள கடினமான, முக்கியமான பகுதிகள் மற்றும் GK எல்லாம் எளிமையா, புரியும் படியா video lessons பண்ணிருக்காங்க. (லிங்க் கடைசியில்)


sema work. extraordinary plan. conceptஐ விளக்கி சொல்லியிருக்காங்க.


English, தமிழ் ரெண்டு மொழியிலும் தயாரிக்கப் பட்டிருக்கு.


இந்தாப்பா... இனி ஆயிரக்கணக்குல செலவழிச்சு Tuition அனுப்ப வேண்டாம்.


வாத்தியார் இல்லன்னாலும் சரி, நடத்துனது புரியலனாலும் சரி இத ஒரு அஞ்சு தடவ பார்த்தாவே போதும், தெளிவா புரிஞ்சிரும்.


TN SCERT அப்பிடீங்ற  You Tube Channelல்ல எல்லாமே upload ஆயிருக்கு.


இப்ப என்ன பிரச்சனைனா இது பத்தி யாருக்குமே தெரியல.


Freeyaa கிடைக்கிறதால யாருக்குமே இதன் அருமை தெரியல.


கிராமப்புற, ஏழைப் பிள்ளைங்களுக்கு இந்த விசயம் அதிகமாக போய்ச் சேரவேயில்ல.


ஏதாவது நல்லது செய்யனும்னு நினைச்சா இதப் பத்தி மாணவர்களுக்கு சொல்லி நல்லா படிக்க உதவுங்க.


What'sApp, Face book media வுல share பட்டன அழுத்துங்க.


பிடிச்சதோ, பிரச்சனையோ உடனே share பண்ணுறோம்ல.

அதே போல இதையும் share பண்ணுங்க.


இனி பணக்காரர்களுக்கு  மட்டுமல்ல நல்ல கல்வியும், மருத்துவமும், பொறியியலும், உயர் கல்வியும்.


ஒவ்வொரு ஏழை மாணவனுக்கும் இதைக் கொண்டு போய்ச் சேர்ப்போம்.


Kindly SHARE to all.🙏🙏🙏🙏🙏


https://www.youtube.com/channel/UC7GbVKqHPXww1acL1x9DNQw/playlists

  அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும்  இதனை  கொண்டு சேர்ப்போம். நன்றி.

Thursday, July 1, 2021

வாட்ஸ் அப்பில் வந்தது..

 *From some Indian in UK.*


My salary in UK is 61000 pounds per annum without tax. ( 61,000/ x 80= INR 48,80,000 ).


 *I pay 40% tax on my salary.* 48,80,000-19,52,000 = INR 29,28,000 balance.


Then 700 pounds per month as house rent, 140 pounds per month as council tax, about 100 pounds for gas and electricity per month. 500 pounds as water bill per annum. About 1000 pounds per annum car insurance and 250 pounds road tax per annum ( you cant drive car in UK without insurance and road tax). Total comes to 18,570 x 80 = INR 15,85,000.


29,29,000 - 15,85,000= INR 13,44'000.


*ALL THESE BILLS ARE NON NEGOTIABLE AND PAID BY ALL HUMAN BEINGS LIVING IN UK. ABOUT 40% UK RESIDENTS PAY INCOME TAX.*


Some bills like gas and electricity depend on usage but have to be paid.  


*Add to these all daily living expenses like food, petrol, mobile, wifi, etc., etc. And all these are much more  expensive than in India.* 


*That's why UK is developed, roads are good and clean, govt schools are best, with 24 hours electricity and water. I am telling just basic things. Forget about advanced and complex things (like tax on property, capital gain tax on selling a property, etc., etc).*


Remember, *UK is a net importer of food, clothes, things of daily life, petrol and petroleum products.* 


Size of UK is about the size of the state of Uttar Pradesh and 1/3 of its population.


*Coming to India:*


*It is a huge country with rich  resources. We don't import food and clothes.*


*Just 3.75 crore people out of 130 crore pay income tax. That is just 2.9 percent. And most of these are salaried employees who can't hide their income.*


*All 130 crore citizens want cheap electricity, water, good govt schools, best roads and highways and superfast trains.*


*Just sit and think for a minute. How many times have a local grocery shop / milk booth / sweets shop / garments shop / mobile and computer repair shop / have given you any bill??*

 

Look at all those businessmen around you who are earning more than an average salaried person. 


*And now think of businessmen sitting in areas like Karol Bagh, Chawari Bazaar, Sadar Bazaar and all other trading hubs of Delhi or Zaveri Bazaar, Hindmata market etc., etc. of Mumbai or any other market of any other Indian city.  You will never get a bill in these markets.*


At least not an invoice. How many get a  bill / invoice on buying or selling property?


*But all of them want good roads, 24 hours electricity and water supply. They want good school and will abuse govt for poor govt school.*


*They will blame the govt for traffic jams, filthy roads.*


*And when they go out they will abuse govt for poor railways and airports.*

 

Now, *when our govt. has introduced a system (GST) to prevent tax evasion all these are the ones who are raising hue and cry. These are the people who are sharing and liking everything on FB  which is against the present govt.*


*I am not pro-present govt. But, I am against this hypocrisy.*


This is democracy.


So all these tax evaders and opposition leaders and pseudo-intellectuals  have their own right to oppose govt. 


But then *don't abuse the system or govt when you don't get electricity or when your garbage is not picked or when you are struck in traffic jam or when Indian Military doesn't get its much needed sophisticated arms.* 


DON'T say Europe  highways are BEST. 


*First pay here and then demand.*


*Forward if you feel this message is right!*