Sunday, July 5, 2020

..மனித்த பிறவியும் வேண்டுவதே....

சிலிர்க்கச் செய்து
மனச் சொடெக்கெடுத்துப் போகும்
ஒரு அற்புதப் படைப்பு...

நம் பின்னடைவுத் தூரத்தை
மிகத் தெளிவாய்ச் சுட்டிக்காட்டி
நம்முள் ஒரு வெறுமையை
விதைத்துப் போக...

நாம் இனியும்
எழுதத்தான் வேண்டுமா எனும்
எதிர்மறை எண்ணத்தை
விளைவித்துப் போக...

படித்ததும் சட்டென
முகம் சுழிக்கச் செய்வதோடு
மனக் கசப்பையும் கூட்டிப் போகும்
ஒரு மோசமான படைப்போ

நம் கருத்தேர்வை
நம் மொழிப் பாண்டித்தியத்தை
நாம் உணரும்படியாய்
நமக்கே விளக்கிப் போக

நாம் இனிதான்
அவசியம் எழுதுதல் வேண்டுமெனும்
நேர்மறை உணர்வினை
உசுப்பேற்றிப் போகிறது

அதற்காக வேணும் இனி
மோசமான படைப்புகளும்
நிச்சயம் வேண்டியதே...

மனித்த பிறவியும்
வேண்டுவதே இந்த மாநிலத்தே
என்பதைப் போலவே...

Saturday, July 4, 2020

முள்ளும் கொரோனாவும்

சாலையோரம்
எப்படி கிடத்தப்பட்டேனோ அப்படியே
துளியும் நகரமுடியாதபடி
எப்போதும் கிடக்கிறேன் நான்.

ஏதோ ஒரு சிந்தனையில்
வழி மீது விழியின்றி
என் மீது மிகச் சரியாய்
மிதித்து "உச்" கொட்டுகிறீர்கள் நீங்கள்

பின் எவ்வித
கூச்சமின்றி குற்றவிணர்வின்றி
"நான் " குத்திவிட்டதாக
"என் மீதே " பழிசுமத்துகிறீர்கள்...

தவறு செய்வது  நீங்கள்
பின் ஏன் காலங்காலமாய்
"என்னைப்" பழிக்கிறீர்கள்...

சீனச் சந்தையில்
இயற்கைக்கு நேர்ந்த
புத்திப் பேதலிப்பில்
எப்படியோ பிறந்து விட்டேன் நான்

தூக்கி நகர்த்தாது
இம்மியும் நகர இயலாத என்னை
உலகமெலாம் கணந்தோரும்
தூக்கித் திரிகிறீர்கள் நீங்கள்

பின் இப்போது
எவ்வித பொறுப்புமின்றி தெளிவின்றி
"நான் " பரவுவதாக
"என் மீதே " பழிபோடுகிறீர்கள்

பரப்புவது நீங்கள் 
பின் ஏன் உலகோரேல்லாம்
"என்னைப்" பலியாக்குகிறீர்கள்

Thursday, July 2, 2020

கொரோனாவும் நீதி நூல்களும்.

அரசும்
வலைத்தளங்களும்
முக நூலும்
இன்னபிறவும்
கொரோனா குறித்து
விரிவாக விளக்கியும்

நம் மக்கள்
முகக்கவசம் அணியாதும்
சமூக இடைவெளிக் கடைப்பிடிக்காதும்
கொரோனாத் தொற்றை
அசுர வேகத்தில்
பரவச் செய்வது ஏன் ?

கொரோனா குறித்து
அறிந்தது எல்லாம்
அறிந்ததாகக் கொள்ளமட்டுமே
பிறருக்கு பகிர்ந்து கொள்ளமட்டுமே
தாம் கடைபிடிப்பதற்கு அல்ல என்பதில்
தெளிவாய் இருப்பதால்தானோ ?

ஒரு வகையில்
இந்தத் தெளிதல் கூட...

நீதி நூல்களும்
நீதியை எளிதாய்ப் போதிக்க வந்த
இதிகாசங்களும் புராணங்களும்
காலம் காலமாய் இருந்தும்
ஆயிரமாயிரமாய் இருந்தும்
..
அநீதியும்
அக்கிரமங்களும்
வன்மமும் துரோகங்களும்
புற்றீசல் போல்
பல்கிப்பெருகுவது தெரிந்தும்
பாடாய்ப்படுத்துவது புரிந்தும்

அவையெல்லாம்
காலம் காலமாய்
போற்றத் தக்கதாய்
பாதுகாக்கத் தக்கதாய்
வைத்திருக்கவேண்டியவையன்றி
கடைபிடிக்க வேண்டியவையல்ல என்பது
நம் இரத்தத்தில் கலந்துவிட்டதால் தானோ ?

Tuesday, June 30, 2020

கொரோனா கூட முகவுரையே

சில வரன்முறைகளுக்கு உட்பட்டே
நம் உடல் நம்மை
ஆரோக்கியமாய் உலவவிடுகிறது

நாவின் போக்கில்
மனதின் இழுப்புக்கு
நாம் அந்த வரன்முறைகளை மீறுகையில்..

தன் எதிர்ப்பை அது
சிறு சிறு நோயாக வெளிப்படுத்தி
எதிர்ப்பைப் பதிவு செய்கிறது.

பதிவுகளை அலட்சியப்படுத்தி
நாம் நம்போக்கில் தொடர்கையில்
பெரும் எரிச்சல் கொள்கிறது

அது நம்மை முடக்கி வைத்து
தன்னை சில நாட்களில்
தானே சரி செய்து கொள்கிறது..

சில வரன்முறைகளுக்கு உட்பட்டே
இப் பிரபஞ்சமும்
வாழத்தக்கதாய் விரிந்துக் கிடக்கிறது

ஆசையின் போக்கில்
ஆணவத்திற்கு அடிபணிந்து
நாம் அந்த வரன்மு\றைகளை மீறுகையில்..

தன் எதிர்ப்பை அது
சிறு சிறு பருவ மாறுதல்களால
பதிவு செய்து காட்டுகிறது

பதிவுகளை அலட்சியப்படுத்தி
நாம் நம் போக்கில் தொடர்கையில்
அது மெல்லத் தன் தன்மை மாறுகிறது

அது நம்மை முற்றிலுமாக
முடக்கி வைத்து
தன்னைத் தானே சரி செய்து கொள்கிறது

மனச் சாட்சியை மீறி
தர்ம எல்லைகளைக் கடக்கையில்
சட்டத்தின் தலையீட்டைத் தவிர்க்க இயலாது

இயற்கை நியதிகளை மீறி
பொதுவெளி அறம் கடக்கையில்
பேரிடர்களை நிச்சயம் தவிர்க்க இயலாது

இந்தப்  பாலபாடம் அறிந்து
தெளியாத வரையில்
அழிவு என்பது தொடர்கதையே..

கொரோனா தொற்றுக் கூட
இந்தப்  பாலபாட நூலுக்கான
சுருக்கமான முகவுரையே

பீலிபெய் சாகாடும் அச்சிறும்..

  • அவர்கள் பேச்சை கொஞ்சம்
கவனமாகக் கேளுங்கள்
நெருங்கிய நண்பர்களின் நயவஞ்சகத்தால்
நைந்து போனவர்களாக
அவர்கள் இருக்கலாம்

அவர்கள் கண்களைக் கொஞ்சம்
கருணையோடு பாருங்கள்
உரிமை என்கிற பெயரில்
உறவுகளால் அடிமையாக்கப்பட்டு
அவதிப் படுவர்களாக
அவர்கள் இருக்கலாம்

அவர்களுக்கு மனதுக்குஆறுதலாய்
இரண்டு வார்த்தைகள் கூறுங்கள்
தோல்வி தவிர ஏதுமறியாது
துவண்டு போனவர்களாய்
அவர்கள் இருக்கலாம்

நம்முடையை சிறு கவனம்
நம்முடைய  லேசான கருணைப் பார்வை
நம்முடைய  ஒரே ஒரு ஆறுதல் பேச்சு
என்ன செய்துவிடப் போகிறது என
அசட்டையாக மட்டும் இருந்துவிடாதீர்கள்

அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டு
இறுதியாக உங்களிடம்
அடைக்கலமென வருவோருக்கு
உங்களது சிறு அலட்சியம்
உங்களது சிறு முகச் சுழிப்பு
அவர்களுக்குள் ஒரு பெரும்
பிரளயத்தைஉண்டாக்கிவிடக் கூடும்

பீலிபெய் சாகாடும் அச்சிறும்  அப்பண்டஞ 
சால மிகுத்துப்பெயின் நேரும் அவலம்
உங்கள் சிறு அசிரத்தையால் கூட
அவருக்குள் நேர்ந்து விட வாய்ப்புண்டு
அந்தப் பாவம் நிச்சயம் நமக்கு வேண்டாம்
அதுவும் இந்தக் கொரோனா காலத்தில்
எனவே....yaathoramani.blogspot.com

Sunday, June 28, 2020

கொரோனா நல்லது

ஞானம் தேடிப் போகப்
புத்தனுக்குக் கூட
மூன்று
வருத்தம் தரும் நிகழ்வுகள் தேவைப்பட்டது

நான்..
எனது...
எனக்கு...
என்பதனைக் கடந்து

எனக்குப் பின்.....
நான் இல்லையெனில்...
தடுக்கமுடியாததை
ஏற்றுத்தானே ஆகணும்..
எனவெல்லாம்

அனுபவங்களும்
நீதிபோதனைகளும்
தராத மாற்றத்தைத் தர  

சுய நலம் கடந்துத்
தெளிவாய் யோசிக்கும்
புதிய ஞானத்தைப்  பெற
....

உயிரற்ற
கடத்துபவரின்றி
நகரக் கூட முடியாத

கண்ணுக்குத் தெரியாத
இந்தக் கொரோனாக் கிருமியே
போதுமானதாய் இருக்கிறது..

அந்த வகையில்
கறை நல்லது என வரும்
விளம்பர வாசகம் போல்

இந்தக் கொரோனா கூட
நல்லது தானோ எனத் தோணுகிறது
சில நாட்களாய் எனக்கும்...

Friday, June 26, 2020

கட்டுப்பட்டதைக் கொண்டு...

இரண்டும் ஒன்றை ஒன்று
சார்ந்தே இருப்பதெனினும்
இரண்டில் ஏதோ ஒன்றே
எப்போதும் நம் கட்டுப்பாட்டில்..

கட்டுப்பட்டதைக் கொண்டு
கட்டுப்படாததை சமாளித்தலே
ஆகக் கூடியது மட்டுமல்ல
அதுவே புத்திசாலித்தனமும் கூட

கட்டுப்பட்டது வரவெனில்
கட்டுப்படாத செலவதனை ..

கட்டுப்பட்டது கிடைப்பதெனில்
கட்டுப்படாத எதிர்பார்ப்பினை ...

கட்டுப்பட்டது உடலெனில்
கட்டுப்பட்டாத மனதினை...

கட்டுப்பட்டது வேகமெனில்
கட்டுப்படாத தூரத்தினை

கட்டுப்பட்டது யோகமெனில்
கட்டுப்படாத காமமதை

இப்படி உதாரணங்கள்  நூறு எதற்கு
மிகச் சுருக்கமாகவும்
நமக்கு மிகவும் நெருக்கமாகவும்
                                                                        கட்டுப்பட்ட சமூக இடைவெளியைக் கொண்டு                                                                   கட்டுப்படாத கொரோனாவை கட்டுப்படுத்துதல் போலவும்                                     
கட்டுப்பட்ட கீழ்த்தாடையினைக்  கொண்டு
கட்டுப்படாத மேல்தாடையை
தினமும் சமாளித்தல் போலவும்...Tuesday, June 23, 2020

நீரோடு செல்கின்ற ஓடம்...

நல்ல படிப்பு
நல்ல வேலை
என்னை
ஊரைவிட்டும்
உறவைவிட்டும்
பிரித்துப் போடும்

சம்பளத்தொகையே
என் இல்லத்திற்கும்
என் அலுவலகத்திற்க்கான
இடைவெளியை
நிர்ண்யித்துப் போகும்

வீட்டுக்கடன்
பிடித்தத் தொகையே
எனக்கான
சம்பாதிக்கும் பெண்ணை
முடிவு செய்துப்போகும்

யாரை அழைத்துக் கொள்வது
அல்லது
யாரிடம் பராமரிக்க அனுப்புவது
என்கின்ற தீர்மானமே
நான் தகப்பனாவதை
நிர்ணயிக்கும் காரணியாகிப் போகும்

திங்கள் காலை முதல்
வெள்ளி மாலைவரை
என் உணர்வுகளும்
என் செயல்களும்
அலுவலக திசை நோக்கியே நீளும்
இல்லம் கூட
அலுவலகம் போல வேகும்

அவசியப் பேச்சுக்கே
நேரமில்லை என்பதால்
எங்களுக்கான
அன்னியோன்னிய பேச்சுக்கள்
அடியோடு நசுங்கிப்போகும்

மறுவார தயாரிப்புக்கு
சனிக்கிழமை பலியாகும்
நாவுக்கு ருசிகாட்டவோ
உடலுக்கு சுருதி கூட்டவோ
ஞாயிறு ஒதுக்கீடாகிப்போகும்

என் இஷ்டப்படி எதுதான் நடந்தது என
அவ்வபோது முனங்கி
தொடர் ஓட்டத்தின்
துயர் தாங்காது
மன இறுக்கத்தின்
வலி பொறுக்காது
குறிப்பிட்ட கால இடைவெளியில்
என்னைக்
கடித்துக் குதறி சின்னா பின்னமாக்கி
தன் துயர் குைற்க்க முயன்று
தோற்று வீழ்வாள் துணை

என் இஷ்டபடியும்
இதுவரை எதுதான் நடந்தது
என்பதை விளக்கிச் சொல்லி
அவளுக்கு ஆறுதல் சொல்லி
நானும் ஆறுதல் பெறலாம் என
எத்தெனிக்கையில்
கடந்தகால இழப்புகளும்
எதிர்கால கவலைகளும்
நிகழ்கால பொறுப்புகளும்
என்னை
கையாலாகாதவன் ஆக்கிப்போகும்

இத்தனைக்கும் இடையில்......

ஆற்றங்கரையோரம்
வியாபாரத்திற்க்காக
பரப்பி வைக்கப்பட்ட மீன்கள் மேல்
சாகாதிருப்பதற்க்காக
அவ்வப்போது தெளிக்கப்படும்
துளி நீர் போல
உயிர் நீர் போல

"மின்னோடு வானம் தண் துளி தலை இ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணைபோல் ஆர் உயிர்
முறை வழிபடூஉம்..."என்ற
பூங்குன்றனின் அருள்வாக்கு
அவ்வப்போது ஆறுதல் சொல்லிப் போகும்

Saturday, June 20, 2020

தொடர் முயற்சி

எப்போதேனும்
கூடுதல் எடை கொண்ட
யானைக் கூட்டம்
பாறையினைக் கடக்கப்
பதியாதத் தடம்...

தொடர்ந்து
எடையே இல்லா
எறும்புக் கூட்டம் கடக்கப்
பதிவதனைக் கண்டு
முன்பு  நான் ஆச்சரியப்பட்டதுண்டு..

பலவானும் பண்டிதனும்
அலட்சிய மனோபாவத்தால்
வெற்றி எல்லையைத்
தொடத் தடுமாறுகையில்....

பலவீனனும் பாமரனும்
தொடர்முயற்சியால்
மிக எளிதாய்த் தொடுதல் இப்போது
எனக்கு அதிசயமாகப் படவில்லை..

ஆம் அதன் காரணமாகவே
முயல் ஆமைக் கதையின்
முக்கியத்துவமும்
தொடர்ந்து முயலாமையின்
பேரிழப்பும் இப்போது
மிக எளிதாய்ப் புரிகிறது எனக்கு..

(சொல்லிக் கொள்ளும்படியான
மொழிப் பாண்டித்தியமோ
பண்டை இலக்கியப் பின்புலமோ
இல்லையெனினும் தொடர்ந்து
பத்தாண்டு காலமாக  எழுதுவதாலேயே
  131 நாடுகளை சார்ந்த சுமார் 6.25 இலட்சம்
பக்கப் பார்வையாளர்களை பெறமுடிந்தது
ஏறக்குறைய  50 ஆயிரம் பேர்களின்
மறுமொழியினையும்....அனைவருக்கும்
எனது மனமார்ந்த நன்றியினையும்
நல்வாழ்த்துக்களையும் இந்தப்  பதிவின் மூலம்
சமர்ப்பித்துக் கொள்கிறேன்.. அன்புடன் .
yaathoramani.blogspot.com 

Friday, June 19, 2020

விதையும் விதைப்பந்தும்

அனுபவத்தில்
விளைந்து முதிர்ந்த
பயனுள்ள வீரியமிக்க விதைகளை
வீணாக்கிவிட விரும்பாது
அறிந்தவர் தெரிந்தவர் அனைவரிடத்திலும்
பயன்பெறட்டும் எனக் கொடுத்துப் போகிறேன்...

மரியாதை நிமித்தம்
பணிவுடன் கனிவுடன்
பெற்றுக் கொண்ட போதிலும்
எவரும் விதைக்கவோ விளைவிக்கவோ
இல்லையெனத் தெரிந்த போது
மிக நொந்து போகிறேன்

இப்போதெல்லாம்
விதைகளை யாரிடமும் கொடுத்தலைத் தவிர்த்து
விதைப் பந்துகளாக்கி
வெளிதனில் விதைத்துப் போகிறேன்

அது மெல்ல முளைவிட
முகமறியாதவர்கள் ஆயினும்
அதன் மதிப்பறிந்தவர்கள்
அதனைப் போற்றிப் பாதுகாக்க
மிக மகிழ்ந்து போகிறேன்..

Thursday, June 18, 2020

கொரோனாவும் சனாதனமும்

மிக நெருக்கமானவர்கள் ஆயினும்
தொட்டுவிடாது மிகக் கவனமாய்
ஒதுங்கியிருந்து.....

எவ்வளவு தெரிந்தவர்கள் ஆயினும்
மேலே பட்டுவிடாது மிகக் கவனமாய்
விலகியிருந்து.

சில மணி நேர,ம் தான் ஆயினும்
வெளியில் சென்று வந்தாலே கவனமாய்
உடல் நனைத்து

சில நிமிடஙகள்தான் ஆயினும்
சாவு வீடு சென்று வந்தால் கவனமாய்
முழுக்குப் போட்டு

வெளியில் உண்ணாது
இடைவெளிப் பராமரிப்புக்குக் குடைபிடித்து

..............................

சனாதனவாதிகளின் சடங்குகள் அனைத்தையும்
விருப்பம் இருப்பினும்
இல்லாதே போயினும்
கட்டாயம் கடைப்பிடிக்கும்படி
சனாதனதர்ம எதிர்ப்பார்களையும்
மாற்றிச் சிரிக்கிறது
நாளும் பல்கிப் பெருகும
சைனச் சனியன் கொரோனா...

Monday, June 15, 2020

மாடிமனை கோடியென..

மாடிமனை கோடியெனத்
தேடியோடிச் சேர்த்ததெல்லாம்
மனதுக்குள் என்னமாற்றம் செய்யும் ? -அது
இன்னுமின்னும் எனக்கேட்டே கொல்லும்

பகலிரவாய் நூறுபெண்ணை
வகைவகையாய் அனுபவித்தும்
சுகம்போதும் எனமனமா சொல்லும் ?அது
அடுத்தொன்றைத் தேடித்தான் செல்லும்

நடுக்கமுடல் எடுத்தபின்னும்
நரைதிரையும் நிறைந்தபின்னும்
இருந்ததெல்லாம் போதுமென்றா எண்ணும் ?-மனது
இருக்கநூறு காரணங்கள் சொல்லும்

மொத்தமாகக்  கற்றுவிட்ட
வித்தைகளும் தத்துவமும்
சித்தமதில்  என்னவினை செய்யும் ?-அது
கூடுதலாய்க்குழப்பத்தான் செய்யும்

குட்டியிலே சங்கிலியில்
வளர்ந்தவுடன்  சணல்கயிற்றில்
கட்டிவைத்தால் யானையது  அடங்கும்-மாறிச்
செய்துவைத்தால் சங்கடந்தான் மிஞ்சும்

மனமதனை அடக்கிவைத்து
அறிவதனை வளர்த்தெடுத்தால்
தினம்நன்மை தடையின்றித் தொடரும்-மாறின்
சங்கடமே தொடர்கதைபோல் வளரும்

மதமென்ற ஓரமைப்பை
முன்னோர்கள்  ஆக்கிவைத்த
மகத்துவத்தை  மனமுணர்ந்தால்  போதும் -முன்னே
சொன்னதெல்லாம் மிக எளிதாய் விளங்கும்  

Sunday, June 14, 2020

இணைதலும்..இணைத்தலும்..

பிரிதலுக்கும்
பிரித்தலுக்கும் இடையில்
இணைதலுக்கும்
இணைத்தலுக்கும்
ஓரெழுத்து மட்டும் வித்தியாசமில்லை
ஒரு நூறு வித்தியாசமிருக்கிறது

பிரிதல் இணைதல்
சோகமானதாகவோ
சுகமானதோ
இதில் வன்முறையில்லை
இதில் கொள்கை திணிப்பில்லை
அடுத்தவர் தலையீடில்லை

பிரித்தல் இணைத்தல்
சோகமானதோ சுகமானதோ
இதில் வன்முறையுண்டு
கொள்கைத் திணிப்புண்டு
அடுத்தவர் தலையீடு அதிகம் உண்டு

ஜாதி மதத்தில் இருந்து பிரித்து
இனத்தில் சேர்த்தவனாயினும்
இனத்திலிருந்து பிரித்து
தேசீயத்தில் சேர்த்தவனாயினும்
தேசீயத்திலிருந்து பிரித்து
வர்க்கத்தில் இணைத்தவனாயினும்...

அப்பத்தைப் பங்கிட்ட குரங்காய்
அதிகப் பங்குகொண்டவன்
அவனாகத்தான் இருக்கிறான்
நிகழ்வில்
பங்கேற்பவனாக மட்டுமே நாமிருக்கிறோம்
பலனடைபவன் அவனாயிருக்கிறான்

இழப்பதற்கு கோவணம் தவிர
ஏதுமில்லையாயினும்
பிரிதலோ இணைதலோ
முடிவெடுப்பதில்  இனியேனும்
சுயமாய்  இருப்போம்
சுய நலப் பிண்டங்களை
இனி எட்ட நிறுத்தியே ரசிப்போம்

Thursday, June 11, 2020

பிணத்து மேல் போட்டப் பூமாலை..

சிந்தனையைத் தூண்டாத கல்வி
சங்கடத்தில் உதவாத நட்பு
நம்பிக்கை தாராத பக்தி
பயன்படுத்த இயலாத சக்தி
தன்மதிப்பைக் கூட்டாத செல்வம்
சமயத்தில் இணையாத சுற்றம்
நம்மோடு இருந்தால்தான் என்ன?
இல்லையென்று ஆனால்தான் என்ன?

பயனின்றி பேசுகின்ற பேச்சு
ஆக்ஸிஜன் இல்லாத காற்று
தயார் நிலையில் இல்லாத படைகள்
உடலுறுப்பு மறைக்காத உடைகள்
மனமகிழ்ச்சி  தாராத கூத்து
நடப்படாது கட்டிவைத்த நாற்று
கணக்கின்றி  இருந்தால்தான் என்ன ?
இல்லையென்று போனால்தான் என்ன ?

நோய் நொடிகள் தீர்க்காத மருந்து
நோக்கமற்று எழுதுகின்ற எழுத்து
பார்வையற்று திறந்திருக்கும் விழிகள்
ஒழுக்கமற்ற அழகான பெண்கள்
தாய்தந்தை பேணாத தனயன்
தனனலத்தை துறக்காத தலைவன்
மேற் சொன்ன எல்லாமே வீண்தான்
பிணத்தின்மேல் பூமாலை போல்தான்

Monday, June 8, 2020

நதி மூலம்...ரிஷிமூலம்..

ஹோட்டலில் உணவை இரசித்து
உண்ணும் ஆசை இருக்கிறதா ?
தயவு செய்து  சமயலறையை
எட்டிப் பார்க்காதிருங்கள்
அதுதான் சாலச் சிறந்தது

ஒரு சிற் பத்தின் அற்புதத்தை
இரசித்து வியக்க ஆசை இருக்கிறதா ?
அதற்குச் சிற்பம் செதுக்குமிடம்
ஏற்ற இடமில்லை
கலைக் கூடமே சரியான இடம்

பெருக்கெடுத்தோடும் ஆற்றின்
அழகை இரசித்து மகிழ ஆசையா ?
அதற்கு உற்பத்தி ஸ்தானம்
சரிப்பட்டு வராது
விரிந்தோடும் மையப் பகுதியே அழகு

குழந்தையின் அழகை மென்மையை
தொட்டு ரசிக்க ஆசையா ?
அதற்குப் பிரசவ ஆஸ்பத்திரி
சரியான இடமில்லை
அது தவழத்துவங்குமிடமே மிகச் சரி

கவிதையின் பூரணச் செறிவை
ருசித்து மகிழ ஆசையா ?
அதற்கு கவிஞனின் அருகாமை
நிச்சயம் உசித மானதில்லை
தனிமையே அதற்கு யதாஸ்தானம்

நதி மூலம் ரிஷி மூலம் மட்டுமல்ல
எந்த மூலமுமே அழகானதுமில்லை
கற்பனை செய்தபடி நிஜமானதுமில்லை
அதனை அறிந்து தெளிந்தவனுக்கு
ஏமாற்றம் நேர்வதற்கு வாய்ப்பே இல்லை

( மனம் கவர்ந்த ஒரு தலைவனை
நேரடியாகச் சந்திக்க விளைந்த ஏமாற்றம்
தந்த  சிந்தனை )

Sunday, June 7, 2020

செய்யும் தொழிலே தெய்வம்..

🤚செய்யும் தொழிலே தெய்வம்🤚

 பெயர் : ஜெயந்தி (ப்ராமணப் பெண்)
அப்பா : பட்டு குருக்கள் (சிவன் கோயில் அர்ச்சகர்)
படிப்பு : MA
வேலை : மின்மயானத்தில் பிணம் எரிப்பு
(குறிப்பு : தொடர்ந்து, பிணவாடையோ அல்லது பிணம்எரியும் புகையையோ சுவாசித்தால், மிகஅதிகமான மறதி நோய் ஏற்படும். மேலும் வாழ்நாட்கள் குறையும்)

அர்ச்சகரோ, வெட்டியானோ... அவங்கவங்களுக்கு கிடைச்ச, வாய்ச்ச வேலைகள இயல்பா அவங்கவங்க செஞ்சுட்டுதான் இருக்காங்க. ஆனா சில வேலவெட்டி இல்லாத ஓசிச்சோத்து தெருநாய்கள்தான், வேலைல பேதம்பிரிச்சு... பிரச்சனைய உண்டு பண்றாங்க. 'அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கணும்' ன்னு, போராடுன குரூப்பு... 'அனைத்து சாதியினரையும் வெட்டியான் ஆக்கணும்' ன்னு, போராடுமா ? போராட்டம் பண்ணி அர்ச்சகர் வேலை வாங்குனா... கோயில் சொத்தையும், உண்டியலையும் ஆட்டைய போடலாம். போராட்டம் பண்ணி  வெட்டியான் வேலை வாங்குனா... நெத்திக் காசும், வாய்கரிசியும்தான் மிஞ்சும் !!!

 பயத்துக்கு சவால் விடும் ஜெயந்தி..

பிராமண இன பெண் பிணத்தை எரிக்கிறார்..

நாமக்கல் அருகே கூலிப்பட்டி கிராமத்துல பிறந்தவ நான். அப்பா பட்டுகுருக்கள், சிவன் கோயில் அர்ச்சகர். எங்க வீட்டுல மூணு பொண்ணுங்க.

நான்தான் கடைசிங்கிறதால, அப்பாவுக்கு என் மேல ரொம்ப பாசம். எம்.ஏ முடிச்ச நேரத்துல வேற ஜாதியைச் சேர்ந்த வாசுதேவனைக் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

 எங்கம்மா, அக்கா எல்லோரும் என்னை ஒதுக்க, அப்பா மட்டும் எதிர்க்கல. கணவர் வீட்டுல என்னை ஏத்துக்கிட்டாங்க. எனக்கு ரெட்டைக் குழந்தைகள் பிறந்தன..

என் அப்பா திடீர்னு இறந்துட்டாரு. அவரை அடக்கம் பண்ணும்போது, பெண்ணா இருந்தாலும் நான் அங்கே இருந்தேன். அப்போ ஓர் உடலா இல்லாம, தெய்வமாதான் தெரிஞ்சாரு எங்கப்பா.

 நான் தையல் வேலை கத்துக்கிட்டு, அதை செய்திட்டிருந்தேன். தையல் மெஷினை மிதிக்க மிதிக்க வயித்துவலி அதிகமாக...

 டாக்டர், வயித்துல ரெண்டரை கிலோ கட்டி இருக்கிறதா சொன்னாங்க. சீரியஸான நிலையில ஆஸ்பத்திரியில அட்மிட் ஆனேன்.

உயிர் பிழைக்கிறது கஷ்டம்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. எங்கப்பாதான் தெய்வமா இருந்து அறுவை சிகிச்சையில் என்னைக் காப்பாத்திக் கொடுத்தார்.

வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம் என்ற குடும்பச் சூழலில்தான், நாலு வருஷத்துக்கு முன்ன இந்த மின்மயானத்துல தோட்டப் பராமரிப்பு வேலைக்காக வந்தேன்.

இடிபாடுகளாவும், மண்டை ஓடு, எலும்புகளாவும் இருந்த இடத்தை, நானும், மலர்னு ஒரு பெண்ணும் சேர்ந்து மூணே மாசத்துல பச்சைப்பசேல் தோட்டமா மாத்தினோம்.

சில மாசங்கள்ல, சிதையூட்டிட்டு இருந்த ஆண்கள் வேலையை விட்டுப் போக, நான் அந்த வேலையைச் செய்றேன்னு நிர்வாகத்துக்கிட்ட கேட்டேன். ‘உன்னோட கணவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தா வேலை தர்றோம்'னு சொல்லிட்டாங்க.

வீட்டுல எல்லாரையும் சம்மதிக்க வெச்சு இந்த வேலையில சேர்ந்தேன். என்னோட பணி நேர்த்தியைப் பார்த்து, ஒரே வருஷத்துக்குள்ள, என்னையே இந்த மின்மயானததுக்கு மேனேஜர் ஆக்கிச்சு நிர்வாகம்’’ என்ற ஜெயந்தி, தொடர்ந்தார்.

‘‘இறந்தவங்களோட உறவினர்களை எல்லாம் வெளிய அனுப்பிட்டு, நான், எனக்கு உதவியா மலர்னு ரெண்டு பொம் பளைங்க மட்டும், டிராலியில உடலை வைக்கிறதுல இருந்து, கடைசி வரைக்கும் எல்லா வேலைகளையும் செய்தாலும், கொஞ்சம்கூட பயந்ததில்ல. அதுக்காக சிதையூட்டும் வேலை சுலபமானதும் இல்ல.

இயற்கை மரணம் எய்தினவங்களை சிதையூட்டும் போது, 45 நிமிஷத்துல சாம்பலை எடுத்திடலாம்.

ஆனா, போஸ்ட் மார்ட்டம் பண்ணின உடலா இருந்தா, சிதையூட்டின கொஞ்ச நேரத்துலயே, சூட்டுல எல்லா உறுப்புகளும் தனியா சிதறி விழும்.

 அதை எல்லாம் மறுபடியும் எடுத்து, மரக்கட்டை மேல போடணும். சிரமமான அந்த வேலைகளை, தைரியமா பண்ணியிருக்கேன்.

ஒரு நாளில் அதிகபட்சமா 9 உடல்கள் வரை, பின்னிரவு வரைகூட இருந்து சிதையூட்டி இருக்கேன். அநாதைப் பிணங்களை இலவசமா சிதையூட்டுவேன்.

 சின்ன வயசுல, பக்கத்துல யாராச்சும் முட்டை சாப்பிட்டாகூட மூக்கை மூடிக்குவேன்.

இப்போ பிண வாடை பழகிப் போச்சு. அதான் வாழ்க்கை!’’ என்ற ஜெயந்தியின் கண்களிலும் படர்கிறது சிரிப்பு.    ஆம்....செய்யும் தொழிலே தெய்வம்...அதில் திறமைதான் நமக்குச் செல்வம்..

Saturday, June 6, 2020

சைக்கிள்தானே...

மதுரை மக்களை ஆச்சரியப்படுத்தும் ‘சைக்கிள் டாக்டர்!

மதுரை அப்போலோ மருத்துவமனையில் மிக பிசியான மருத்துவர் எஸ். மீனாட்சி சுந்தரம். நரம்பியல்துறை  வல்லுநர்! சிறப்பு மருத்துவர்! டாக்டர் SMS என்று அன்புடன் அழைக்கப்படுகிற அன்பான மருத்துவர். 

இவரைப் பற்றிய சுவாரசியமான இந்தச் செய்தி எப்படி இரண்டு நாளாகியும் என் கண்ணில் படாமல் போனது?
அலுவலகங்களுக்கு சொகுசு கார், பைக்குகளில் செல்பவர்களுக்கு மத்தியில் மதுரையில் நரம்பியல் துறை சிறப்பு மருத்துவர் ஒருவர், தான் வைத்திருந்த காரை விற்றுவிட்டு, சைக்கிளில் தினமும் மருத்துவமனைக்கு எளிமையாகச் சென்று வருகிறார்.
மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் டாக்டர் எஸ். மீனாட்சிசுந்தரம் (49). நரம்பியல்துறை சிறப்பு மருத்துவர். இவர் கடந்த 4 ஆண்டுகளாக தான் பணிபுரியும் மருத்துவமனைக்கு சைக்கிளில் சென்று வருகிறார். 18 ஆண்டுகளாக மருத்துவப் பணியில் இருக்கும் இவர், ஆரம்பத்தில் மருத்துவமனைக்கு மற்ற மருத்துவர்களை போல் காரில்தான் சென்று வந்துள்ளார். அதன்பிறகு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டதால், அருகில் உள்ள பூங்காவுக்கு நடைப் பயிற்சி செய்வதற்காக காரை பயன்படுத்தாமல் சைக்கிளில் செல்லத் தொடங்கினார்.
மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்வு ஏற்பட்டதால், தினமும் வீட்டிலிருந்து தான் பணிபுரியும் மருத்துவமனைக்கு தற்போது சைக்கிளில் சென்று வருகிறார். அருகே உள்ள கடைகளுக்கு வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கச் செல்வது முதல், நட்சத்திர விடுதிகளில் நடக்கும் மருத்துவக் கருத்தரங்குக்கும் செல்வதற்கு சைக்கிளை பயன்படுத்தி வருகிறார். நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்த சைக்கிள் டாக்டர் மீனாட்சி சுந்தரத்தை சந்தித்தோம்.
அவர் கூறியதாவது: ‘‘நானும் ஆரம்பத்தில் டவேரா காரில்தான் மருத்து வமனைக்குச் சென்று வந்தேன். ஒருநாள் எனது நண்பர் மதுரையைச் சேர்ந்த இருதய சிகிச்சை நிபுணர் கண்ணன்தான், சைக்கிள் ஓட்டும்படி பரிந்துரைத்தார். சைக்கிள் ஓட்டுவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்றும், குண்டாக இருக்கிறாய், எடையைக் குறைக்கும்படி அறிவுரை கூறி அவரே சைக்கிளையும் வாங்கித் தந்தார்.
2015-ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி முதல் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தேன். சைக்கிளை உடற்பயிற்சிக்காக ஓட்டக்கூடாது. கார் வைத்திருந்தால் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் வராது என்பதால் காரை விற்று விட்டேன். அதன்பிறகு சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தபின், காரை பயன்படுத்துவதே இல்லை. எங்கு போனாலும் சைக்கிளில்தான் செல்வேன்.

ஆரம்பத்தில், நான் சைக்கிளில் செல்வதை பார்த்து சிரித்தவர்கள், தற்போது என்னை வியந்து பாராட்டுகிறார்கள். என்னைப் பார்த்து என்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், எனது மருத்துவ நண்பர்கள் பலரும் தற்போது சைக்கிளுக்கு மாறி விட்டனர். சைக்கிளில் சென்றால் நிதானமாக பரபரப்பு இல்லாமல் வேலைக்குச் செல்ல முடிகிறது. சைக்கிளில் சென்றால் லேட்டாகும் என்று சொல்வதில் துளிகூட உண்மையில்லை. தொலை தூரத்துக்கு செல்ல வேண்டுமென்றால் அது பொருந்தும். நகர் பகுதியில் சைக்கிள்தான் சிறந்த வாகனம்.
 உடற்பயிற்சிக்காக சைக்கிள் ஓட்டினால் சில நாள்கள் ஓட்டிவிட்டு பிறகு விட்டு விடுவோம். சைக்கிள் நமது வாழ்க்கையோடு இணைய வேண்டும். என்னைப் பார்த்து எனது மகன்களும் பள்ளிக்கு சைக்கிளில் செல்ல ஆரம்பித்து விட்டனர். ஆரம்பத்தில் எனது மனைவிக்கு சைக்கிளில் செல்வது பிடிக்கவில்லை. பாதுகாப்பாக இருக்குமா, மற்றவர்கள் கேலி செய்வார்களே என நினைத்து வருந்தினார். தற்போது எனது உடல் ஆரோக்கியம் மேம்பட்டதை பார்த்து அவரே என்னை சைக்கிளில் செல்ல வழியனுப்பி வைக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளிலும் ‘சைக்கிள்’ பயணம்
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வெனீஸ் அருகே லீடோன் என்ற குட்டித் தீவில் ஒரு மருத்துவக் கருத்தரங்கில் பங்கேற்கச் சென்றிருந்தேன். நான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து கருத்தரங்கு நடந்த இடத்துக்கு காரில் செல்ல ஒரு முறைக்கு 8 யூரோ கொடுக்க வேண்டியிருந்தது. அதனால், சைக்கிளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு சென்றேன்.
எனது நண்பர்கள், கார் வாடகை, சாப்பாடு உள்ளிட்ட மற்ற அனைத்துக்கும் ஒரு நாளைக்கு 30 யூரோ வரை செலவு செய்தார்கள். ஆனால், நான் அங்கு தங்கியிருந்த 6 நாட்களும் சைக்கிளை குறைந்த வாடகைக்கு எடுத்து மருத்துவக் கருத்தரங்குக்குச் சென்றேன். தீவில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களையும் சைக்கிளில் எளிதாக சுற்றி பார்க்க முடிந்தது. கார் வாடகை பணமும் மிச்சமானது. மதுரையில் சைக்கிளில் செல்வதற்கு முன்பாக ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் ரூபாய் வரை பெட்ரோலுக்கு செலவழித்தேன். தற்போது அந்தப் பணமும் சேமிப்பாகி விட்டது. என்கிறார் மருத்துவர் மீனாட்சிசுந்தரம்...படித்ததில் பிடித்தது...

Wednesday, June 3, 2020

நிஜமாகும் கட்டுக்கதை...

ஏழுகடல் தாண்டி
ஏழுமலை தாண்டி
எங்கோ இருக்கும் மலைக் குகையில்
ஒரு கூண்டுக் கிளியிடம்  உயிரைவைத்து
ஊரில் உலவித் திரிந்த அரக்கனின் கதையை
நான் நம்பியதே இல்லை

உயிருக்கும் உடலுக்குமான
இடைவெளித் தூரம்
சாத்தியமற்றதென்றும்
அது ஒரு  தெளிவான கட்டுக்கதையென்றும்
ஆக்ரோஷமாய் விவாதித்திருக்கிறேன்

இப்போதெல்லாம் அப்படியில்லை

முகமறியாது பேசியறியாது
ஊரறியாது நாடறியாது
எங்கிருந்தோ என்னை ஊக்குவித்து

சாரமற்ற  என் படைப்பினுக்கு
உயிரளிப்போரை நினைக்க நினைக்க
புதிய சிந்தனைப் பிறக்கிறது

எங்கிருக்கும் உடலையும்
எங்கோ  இருக்கும்  உயிரும்
ஓயவிடாது  இயக்குதெலென்பது

அன்பிருந்தால் சாத்தியமென்று
தெளிவாகவும் புரிகிறது

இப்போதெல்லாம்
கட்டுக்கதை என நம்பிக்கைகொண்டிருந்த
அரக்கன் கதை  கூட
நிஜமாயிருக்கவும்
சாத்தியமென்றே படுகிறது

Monday, June 1, 2020

எண்ணமே வாழ்வு...

மனவெளிச் சாலைகளில்
கனவுகளும் நினைவுகளும்
நடத்துகிற கூத்துகளில்
மயங்கவிட்டு
பல சமயங்களில்
நமக்கான
பயணப் பாதையை
மறக்க வைப்பது எண்ணமே

நிகழ்வுகளும் உணர்வுகளும்
கொடுக்கிற நெருக்கடிகளில்
முற்றாக
நம்மை மூழ்கவிட்டு
புத்திகெடுத்து
வாகனம் மாற்றி ஏறவிட்டு
எங்கோ  எங்கோ
அலைய விடுவதும் எண்ணமே

நேற்றிலேயே உழலவிட்டு
கவலையூட்டி
நாளையிலேயே புரளவிட்டு
பயமூட்டி
இன்றையகணத்தை
 மறக்க வைத்து
இழக்கவைத்து
உயர்வைத் தடுப்பது எண்ணமே

தன் நிழலைத் தான்தொடர்ந்து
ஊர் சேர நினைக்கும்
முட்டாள் மனிதனாய்
உணர்வு தொடர்ந்து
கண் மூடி நடக்க விட்டு
செயல்கெடுத்து
புகழ் கெடுத்து
பரிதவிக்க விடுவதும் எண்ணமே

நூலைப் பொருத்தே
சேலையின் வனப்பு
வேரைப்  பொருத்தே
செடியின் செழிப்பு
எண்ணம் பொருத்தே
மனத்தின் உயர்வு
மனத்தைப் பொருத்தே
வாழ்வின் சிறப்பு

என்றும்  எப்போதும் இதனை
மறவாது மனதில் கொள்வோம்-வாழ்வில்
எதிர்படும் தடைகள்  எதையும்
 மிக மிக எளிதாய் வெல்வோம்

Sunday, May 31, 2020

இது ஒரு கொரோனா காலம்...

"ஹலோ"

"ஹலோ சார் குட்மார்னிங்"

"வெரி குட் மார்னிங் சார்...😊"

"சொல்லுங்க சார் எப்படி இருக்கீங்க"

"அமோகமா இருக்கோம்,  நீங்க எப்டி இருக்கிங்க, வீட்ல அண்ணி பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க..."

"எல்லா நல்லா இருக்கோம் சார்..."

"அப்றம் வேலைலாம் எப்படி போயிட்ருக்கு"

"சார் உங்களுக்கு ப்ரைவேட் செக்டார் பத்தி தெரியாததா, கோரனாவால, 50% வொர்க்கர்ஸ், ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒர்க், 50% சாலரி😔"

"ஆமாம் சார், ஆமாம் சார், எல்லாருக்குமே காமனா இன்கம் பாதியா கம்மியாயிடிச்சி, இயல்பு வாழ்க்கை திரும்புற வரைக்கும் கொஞ்சம் சிரமம் தான், கவலப்படாதீங்க சார், இதுவும் கடந்து போகும்"

"நிச்சயமா சார்"

"அப்றம், சார் திடீர்னு போன் பண்ணிருக்கீங்க, எதுவும் விசேசமா"

"கரெக்டா சொல்லிட்டீங்க சார், ப்ரில்லியன்ட் சார் நீங்க,
என் பொண்ணுக்கு மேரேஜ் வச்சிருக்கோம்"

"வெரி குட் சார், என்னவோ நேத்து ஃபர்ஸ்ட் பர்த்டே கொண்டாடுன மாதிரி ஞாபகம், கடகடனு வருசம் ஓடிடுது"

"ஆமா சார்,  நெஜந்தான அது😊,  அப்றமா, மாப்ள நல்ல இடம், அதான் டக்குனு செட்டாயிடிச்சி, அப்றம், லாக்டவுன் 1.0ல பேசி முடிச்சோம், ஆனா லாக்டவுன் தான் 2.0, 3.0, இப்ப 4.0,🤓, போகுற போக்க பார்த்தா இதோட முடிஞ்சிடுற மாதிரி தெரில😇, அதான் தள்ளிப்போட வேணாம்னு வச்சிட்டோம்😊, உங்களுக்கு தெரியாதது இல்ல, இப்ப உள்ள சூழல்ல ஊர் ஊரா பத்திரிகை வைக்க அலைய முடியாது, இ பாஸ் சில இம்பார்டன்ட் ட்ராவல்க்கு தான் அலோவ் பண்ட்றாங்க..."

"ஆமா சார், பக்கத்து ஏரியாவுக்கு கூட ஈவ்னிங் 7மணிக்கு மேல போக முடியல..."

"அடுத்தது,  ஃபோன்ல சொல்ட்றத நேர்ல வந்து சொல்ட்றதா நினைச்சுக்கங்க...🤗"

"அதனால என்ன சார், நாம என்ன அப்புடியா பழகுறோம், நமக்குள்ள என்ன சார் பார்ஃமாலிட்டி...😎"

"தேங்க்யூ சார், தேங்க்யூ சார், அப்றம் நீங்களும் பங்க்சனுக்கு வர்றது சிரமம் தான், அடுத்தது பங்சனுக்கு எங்க சைடுல 25பேரு, அவங்க சைடு 25பேரு தான், அவ்ளோ தான் அலோவ்டாம், அதனால வீட்லயே பண்ட்றோம்"

"அதுவும் சரி தான் சார், இப்ப உள்ள சூழல் அவ்வளவு  சரியாயில்ல"

"அப்றம்..."

"சொல்லுங்க சார்"

"நான் உங்க வீட்ல நடந்த பெரும்பாலான ஃபங்க்சன்ல கலந்துக்காம விட்டதில்ல, போன வருசம் உங்க வீட்ல நடந்த காது குத்து வரைக்கும் வந்திருக்கன்"

"என்ன சார் நீங்க, எங்க ஃபேமிலி ப்ரெண்ட் சார் நீங்க"

"தேங்க்யூ சார், ஆனா என் லைஃப்ல இப்ப தான் நான் ஃபர்ஸ்ட் ஃபங்சன் என் பொண்ணுக்கு பண்ட்றன், அதனால...😍"

"சொல்லுங்க சார்...🙂"

"ஃபங்சன் ஃபுல்லாவும்  நாங்க ஃபேஸ்புக்ல லைவ் வீடியோ போட்ருவோம், நீங்க கண்டிப்பா பார்க்கணும், விஷ் பண்ணணும்,
அப்றமா..."

"சொல்லுங்க சார்...😒"

"என அகௌண்ட் நம்பர் குடுத்துடுறன், நீங்க அதுக்கு மொய் அமௌன்ட ட்ரான்சர் பண்ணிடுங்க, அப்றமா, உங்க அட்ரச சொல்லிடுங்க😊, நீங்க வெஜ்ஜா, நான் வெஜ்ஜா சொல்லிட்டீங்கனா, நாங்க ஸ்விக்கி, ஜொமாட்டோ எது உங்க ஏரியா நியர் ல இருக்கோ அதுல ஆர்டர் பண்ணி உங்க வீட்டுக்கு அனுப்பிருவோம்...🤗"

"😕😯😒 ச...சர்ரீங்க சார்😐"

#படித்ததில்_ரசித்துச் சிரித்தது.

Thursday, May 28, 2020

அதீத பலம் எப்போதுமே ஜெயிப்பதில்லை

அதீத உடல் பலமும்
அனைத்தையும் அழிக்கும்
ஆதிக்கவெறியும் கொண்டு திரியும்
சிங்க இனமும் புலி இனமும்
தொடர்ந்து சிறுத்துக் கொண்டே போக

காற்றிடைப்பட்ட கற்பூரமாய்
தானே கரைந்து போக

காட்சிபொருளாக வேணும்
காத்துவைக்க வேணும்  என்கிற
அவல நிலைக்குப் போக

பயமொன்றே
பதுங்குதல் ஒன்றே அறிந்த
பலமற்ற
பாவப்பட்ட
அணில்களும் மான்களும்
பல்கிப் பெருகுவது கூட

வன்முறை குறித்த
அதீத பலம் குறித்த
ஆணவம் குறித்த
ஏதோ ஒரு செய்தியை
சொல்லித்தான் போகிறது

எளியவர்களுக்கும் நல்லவர்களுக்கும் புதியநம்பிக்கையைக்
கொடுத்துத்தான் போகிறது


கொடுப்பதன் மூலம் பெறுவோம்..

எதிர்படும் எல்லோருக்கும்
வாழ்க வாழ்க வென்று
வாழ்த்துச் சொல்லியபடி நகர்கிறேன்

அதுவரை
வாட்டமுற்றிருந்த முகமெல்லாம்
மலரத் துவங்குகிறது

அதுவரை
மலர்ந்திருந்த முகமெல்லாம்
கூடுதல் அழகு பெறுகிறது

எதிர்படும் எல்லோரையும்
வெல்க வெல்க வென்று
உற்சாகப்படுத்திச் செல்கிறேன்

அதுவரை
துவண்டு கிடந்தவர்கள் எல்லாம்
துள்ளி எழத் துவங்குகிறார்கள்

அதுவரை
ஜெயித்து கொண்டிருந்தவர்கள்  எல்லாம்
கூடுதல் எழுச்சி கொள்கிறார்கள்

"இதனால் உனக்கென்ன நன்மை "
எரிச்சல்படுகிறான் நண்பன்

வரவேற்பாளராய் இருந்து
சந்தனமோ பன்னீரோ தெளித்துப் பார்
அதிக மணம் உன் மேல்தான் இருக்கும் என்கிறேன்

மிகச் சரியாக புரியாது விழிக்கிறான்
எப்போதும் வாழ்த்தப் படுவதையே விரும்பும் அவன்

Tuesday, May 26, 2020

புலிவேட்டை...

அவர்களுக்கு நிச்சயமாய்த் தெரியும்

யானையைக் கொண்டு
பிச்சை எடுப்பதை விட
எடைத் தூக்கப் பயிற்றுவிப்பது
எளிதானதில்லை என்று.

ஆயினும் அவர்கள்
எடைத் தூக்க பயிற்றுவித்தலையே செய்கிறார்கள்

அவர்களுக்கு உறுதியாய்த் தெரியும்

புல்லாங்குழல்கொண்டு
அடுப்பூதுவதை விட
இசைப்பயிற்சி மேற்கொள்வது
சிரமமானது என்று

ஆயினும்
இசைப்பயிற்சிப் பெறுதலையே நாளும் செய்கிறார்கள்

அவர்களுக்கு திட்டவட்டமாய்த் தெரியும்

ஜாதி மதம் கொண்டு
ஒற்றுமைப் படுத்துவதை விட
வேற்றுமைப் படுத்துதலே மிக எளிதென்று

ஆயினும் அவர்கள்
ஒற்றுமைப் படுத்தவே நாளும் முயல்கிறார்கள்

அவர்களுக்குச் சந்தேகமின்றித் தெரியும்

சமூக வலைத் தளங்களில்
பயனற்ற சுவாரஸ்யங்களுக்கு இருக்கும் மதிப்பு
பயனுள்ள உண்மைகளுக்கு இல்லை என்று

ஆயினும் அவர்கள்
பயனுள்ள உண்மைகளையே நாளும் பதிவு செய்கிறார்கள்

காரணம் அவர்கள் அனைவருக்கும்
எவ்வித ஐயமுமின்றித் தெரியும்....

எலி வேட்டையாடித்
ஜெயிக்கக் கிடைக்கிற மகிழ்வை விட
புலி வேட்டையாடி
தோற்பதில் உள்ள ஆனந்தத்தின் அற்புதம் 

Thursday, May 21, 2020

கவிதை என்பது உணர்வு கடத்தி...


" ஏதோ ஒன்று குறைவதைப் போலுள்ளது
இன்னும் கொஞ்சம் முயற்சி செய் "என்கிறேன்

தரையில் சட்டென விழுந்து ஓடும்
தை மாத மேகம் போல்
சிறு வெறுப்பு அவன் முகம் கடக்கிறது

"எதுகை இருக்கிறது
மோனை இருக்கிறது
பாயாசத்து முந்திரியாய்
படிமமும் இருக்கிறது
மொக்கையாக இல்லாது
ஒரு செய்தியும் சொல்லி இருக்கிறேன்
கவிதைக்கு வேறென்ன வேண்டும் "என்கிறான்

"தலைவாரிப் பூச்சூடுகிறாள்
ஆடை அணிவிக்கிறாள்
சோரூட்டுகிறாள்.தாலாட்டுகிறாள்
தாய்க்குரிய அனைத்தையும் செய்வதால்
அவள் தாயாக இருக்கவேண்டும் என்பதில்லை
கவிதைக்குரிய அனைத்தும் இருப்பதால்
அது  கவிதை போல் இருக்கலாம்
ஆயினும் அது கவிதையாய் இருக்கவேண்டியதில்லை
ஏனெனில் கவிதை ஒரு புராடெக்ட் இல்லை"என்கிறேன்

"பின் இவை ஏதுமற்றதுதான் கவிதையா ""என்கிறான்

"அப்படியும் இருக்கலாம்
கவிதை வெறும் சொல்லடுக்கு இல்லை
கவிதை  நாட்டு நடப்புகளைச் சொல்லும்
செய்தித் தாளும் இல்லை
இலக்கண அறிவை விளம்பிட உதவும்
விடைத்தாளும் இல்லை
தான் அறிந்ததை பிறர் அறியச் சொல்லும்
விளம்பர சாதனமும் இல்லை
தான் உணர்ந்ததை பிறர் உணரச் செய்பவை எவையோ
அவை மட்டுமே  கவிதையாய் இருக்க முடியும்
ஏனெனில் கவிதை ஒரு உணர்வு கடத்தி "என்கிறேன்

புரிந்தது போல் லேசாகத் தலையாட்டிப் போகிறான்

புரிந்ததும் புரியாததும் அவனது அடுத்த படைப்பில்
புரிந்துவிடும் என்பது நமக்கெல்லாம் புரிந்தததுதானே ?


Wednesday, May 20, 2020

வாழ்வை இரசித்து வாழ்வோம்

நிழலைத் தொடர்பவனோ
அது குறித்த நினைவிலேயோ
பயணத்தைத் தொடர்பவனோ
நிச்சயம் இலக்கினை அடைவதில்லை

நிழல் தொடரத்தான் வேண்டும்
அது விதி என்றுணர்ந்தவனே
எல்லையினைக் கடக்கிறான்

கூலி குறித்தோ
பயன் குறித்த கற்பனையிலோ
கடமையினைச் செய்கின்றவன்
நிச்சயம் உயர்வடையச் சாத்தியமில்லை

உழைப்பின் மதிப்பின் கீழ்
கூலியிருக்க விரும்புபவனே
அடையாததையெல்லாம்  அடைகிறான்

நேற்றைய சுகங்களில்
நாளைய கற்பனையில்
இன்றினைத் தொலைப்பவன்
நிச்சயம் வெற்றிகாண வாய்ப்பேயில்லை

நேற்றும் நாளையும்
இன்றின் விளைவெனத் தெளிந்தவே
என்றும் எப்போதும் வெல்கிறான்

அந்த அந்த நொடியில்
விழித்து உயிர்த்து இருத்தலே
ஞானம் எனத் தெளிவோம்

என்றும் எங்கும் எப்போதும்
உடலிருக்குமிடத்தில் மனம் வைத்து
தொடர்ந்து வாழ்வை ரசிப்போம்

Monday, May 18, 2020

நாலாந்தரம்...

"நாலாந்தரம் என்பதென்ன "
விள்க்கம் கேட்கிறான் நண்பன்

"நல்லதை
நல்லவிதமாகக் கொடுப்பது
முதல் தரமெனச் சொல்வதும்

நல்லதை
மோசமாகக் கொடுப்பது
இரண்டாம் தரமெனச் சொல்வதும்

நல்லதல்லாததை
மோசமாகக் கொடுப்பது
மூன்றாம் தரமெனச் சொல்வதும்
புரிகிறது

அது என்ன
நான்காம் தரம்
அதுவும் மூன்றைவிட
மிக மோசமானதாய்..."

நல்ல கேள்வியாய்ப்படுகிறது எனக்கும்

நான் இப்படிச் சொன்னேன்

"அரசியல், சினிமா,பண்பாடு
கலாச்சாரம் மற்றும் இலக்கியம் என
அனைத்திற்கும்பொருந்தும்படியாய்
சொல்லட்டுமா " என்கிறேன்

"முடிந்தால் சுருக்கமாகச் சொல் " என்றான்

"நல்லதல்லாததை
மிகச் சிறப்பாகத் தருவது
அதுவும்
நாம் விரும்பும்படியாகவும்
நாம் படிப்படியாய்
நம்மையறியாது அதற்கு நாசமாகும்படியாகவும்"
என்கிறேன்

அவன் யோசிப்பதுப் புரிந்தது

ஒருவேளை ஒப்புக்கொள்ளக் கூடும்

Saturday, May 16, 2020

சுகப்பிரசவம் வேண்டி...

எதிர்பாராது
நாவில் தித்திப்பாய்
ஒரு வார்த்தை
நர்த்தனமாடி
இப்போதே
என்னை அரங்கேற்று என்கும்

சட்டென
உள்மனதில்
ஓர் உணர்வு
நிர்வானமாய் நின்று
உடனடியாய்
எனக்கு ஆடை அணிவி என்கும்

திடீரென
அடிமனதில்
ஒரு இராகம்
சுயம்புவாய்த் தோன்றி
மிகச் சரியாய்
எனக்கு வடிவு  கொடு என்கும்

சில நொடியில்
இமை இடுக்கில்
ஒரு நிகழ்வு
காட்சியாய் விரிந்து
அப்படியே
என்னைக் காட்சிப் படுத்து என்கும்

வார்த்தையா
உணர்வா
இராகமா
நிகழ்வா
எது சரிவரும்
நான் குழம்பித் தவிக்கையில்

உள்ளுணர்வு
"கண்டுகொள்ளாது விட்டுவிடு
வலுவுள்ளது ஜெயிக்கட்டும்"என்கும்

வழக்கம்போல்
சுமையும் வலியும்
தாங்கும் அளவைத் தாண்டினும்
இமைமூடித்
தாங்கிக்கொண்டிருக்கிறேன்
சுகப்பிரசவ சுகம்வேண்டி...

Tuesday, May 12, 2020

அனுமன் வாலாய்...

அனுமார் வால்

"சொல்ல வேண்டியவைகளையெல்லாம்
நிறையச் சொல்லிவிட்டார்கள்
எழுத வேண்டியவைகளையெல்லாம்
தெளிவாக எழுதிவிட்டார்கள்
நீயேன் உன்னையும் கஷ்டப்படுத்திக்கொண்டு
அடுத்தவர்களையும் கஷ்டப்படுத்துகிறாய்  "

மனதின் மூலையில் புகையாய்
மெல்லக் கிளம்பிய சலிப்புப் புகை
மனமெங்கும் விரிந்து பரவி
என்னை திணறச் செய்து போகிறது
நான் மிகச் சோர்ந்துச் சாய்கிறேன்

என் மனைவியிடம்  நெருங்கியமர்ந்த பேத்தி
" ஏன் பாட்டி உங்கள் காலத்தில்
நிஜமாகவே பீட்ஸா கிடையாதா
 சுடிதார் கிடையாதா ?
அட்டாச்சுடு பாத் ரூம் கிடையாதா ?"
என ஆச்சரியமாய்க் கேட்கிறாள்

" இல்லை அவையெல்லாம்  அப்போது
தேவையாய் இருக்கவில்லை " எனச் சொல்லி
பாட்டி எப்படியோ சமாளிக்கிறாள்
நான் அதிர்ந்து போகிறேன்

ஒரு கால் நூற்றாண்டில் தேவைகள்
 வாழ்வினையொட்டி
எப்படியெல்லாம மாறிவிட்டன
வாழ்வின் போக்கில்
உணவு உடை இருப்பிடம் மட்டுமின்றி
கலை பண்பாடு கலாச்சாரம
அனைத்திலும்தான்  பதிவு செய்யப்படாத
எத்தனை மாறுதல்கள் ?

தேவைகளை விளம்பரங்கள் முடிவு செய்ய
தேவைகளுக்கான இடத்தைக் கூட
பொழுது போக்கும் ஆடம்பரமும்  ஒதுக்கிக் கொடுக்க
உறவுகளைக் கூட அவர்களின் பயன் முடிவு செய்ய
உணவினை கிடைக்கும் நேரம் முடிவு செய்ய
உடலுறவைக் கூட கிழமை முடிவு செய்ய...

தொடர்ந்து சிந்திக்க சிந்திக்க
மனதின் மூலையில்
நெருப்புப் பற்றி எரியத் துவங்க
இப்போது புகை மூட்டமில்லா வெளிச்சத்தில்
 இந்த அவசரக் காலத்தைப் பதிவு செய்ய வேண்டிய
 இதுவரை பதிவு செய்யப்படாத
 புதிய பட்டியல்
அனுமார் வாலாய் நீண்டு தெரிகிறது
என்னுள்ளும் இதுவரை இல்லாத
அதீத உற்சாகம்
காவிரி நீராய் பரந்து விரிகிறது

Sunday, May 10, 2020

கர்ப்பக் காலக் கோளாறுகள்...

எங்கோ ஒளிந்துகொண்டு
நூற்கண்டை மேலும் சிக்கலாக்கிப் போகிறது
நூலின் நுனி

பயணத்தையே முடக்கிப் போகிறது
பயணத்தின் முன்
புறப்பட்ட குழப்பமும் சந்தேகமும்

எப்படிச் சிறப்பாகத் துவங்குவது என்று
விடாது தொடர்கிற சிந்தனையில்
மொட்டிலேயே கருகத் துவங்குகிறது
ஒரு தூய காதல்

அனுபல்லவியும் சரணங்களும்
மிகச் சரியாக அமைந்தும்
பல்லவி அமைந்து தொலையாததால்
கண் திறக்கப் படாத சிற்பமாய்
சிற்பக் கூடத்திலேயே
சிற்பமாகவுமில்லாது
பாறையாகவுமில்லாது
விடிவு காலம் எதிர்பார்த்து
தவமாய்த் தவமிருந்தும் பலனின்றி
கலையத் துவங்குகிறது
ஒரு கவிதைக் கரு

Saturday, May 9, 2020

மூலம் அறிதலே தெளிவு

பயணத்தின் இலக்கே
பயணத்தை அர்த்தப்படுத்தும்

பயணத்தின் அர்த்தமே
தூரம் குறித்துச் சிந்திக்கும்

பயணத்தின் தூரமே
வாகனத்தை முடிவு செய்யும்

வாகனமே பயண
வேகத்தை முடிவு செய்யும்

வாகன வேகமே
காலத்தை முடிவு செய்யும்

இத்தனையும்  பொருத்தே
இலக்கடைதலும் இருக்கும்

இதை புரியாதவன்
நல்ல பயணியும் இல்லை
சுகமாய் இலக்கடைதலும் இல்லை

எழுத்தின் நோக்கமே
கருவை முடிவு செய்யும்

கருவின் தாக்கமே
வடிவத்தை முடிவு செய்யும்

கொள்ளும் வடிவதுவே
வார்த்தைகளை முடிவு செய்யும்

வார்த்தைகளைப் பொருத்தே
உணர்வும் உள்ளடங்கும்

உணர்வின் உள்ளடக்கமே
படைப்பினைச் சிறப்பிக்கும்

இதைப் புரியாதவன்
நல்ல படைப்பாளியும் இல்லை
அவன் படைப்பு
சிறப்படைதலும் இல்லை

எச் செயலுக்கும்
முதலில்
மூலம் அறியும்
ஞானம் பெறுவோம்

பின்எச்செயலையும்
நிறைவாய்ச்   செய்து
சுகமாகவே
சிகரம் தொடுவோம்

Thursday, May 7, 2020

எல்லாம் சில காரணமாகத்தான்...

மதுபானக் கடைத் திறப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தலைவர்கள் யாரும் தன் கட்சியினர் யாரும் குடிக்கக் கூடாது என ஏன் சொல்வதில்லை...சொன்னால் கட்சி காணாமல் போய்விடும் அதனால்தான்.       தங்கள் தெருவில் மதுக்கடையைத் திறக்க அரசு அதிகாரிகளிடம் மல்லுக்கட்டும் பொதுஜனம் ஏன் குடிக்க வருபவர்களை மறிப்பதில்லை..அதற்குள் சொந்தபந்தம் உண்டு..வீண்பிரச்சனை வேண்டாம் என்றுதான்...                                      விதிமீறலுக்கு குடிமகன்களை சாலையில் அந்த அடி அடித்த காவலர்கள் அதே விதிமீறலுக்கு "குடி"மகன்களை பாரினில் அடிப்பதில்லை ஏன்.?அடித்தால் வருமானம் குறையும்..அதனால் அரசுக்கும் வலிக்கும் அதனால்தான்.                                               மதுக்கடை திறப்பதால் சமூக விலகல் பாதிக்கும் எனத் தெரிந்தும் அரசு அதைத் திறந்தது எதனால்...சமூக விலகல் பாதிப்பால் குரோனா பெருகும் ..குடிப்பவர்கள் சாவதால் குடியும் படிப்படியாய் குறையும் என்பதால்        அதுசரி இத்தனை களேபரங்களுக்கு இடையில் குடிக்காத பெரும்பாலோர் இந்தக் கருமாந்திரங்களை எல்லாம் சகித்துக் கொண்டிருப்பது எதனால்.. இனத்தால் மதத்தால் வர்க்க பேதத்தால் இணைய முடியாதபடி எல்லோரும் பிரிந்து கிடப்பதால்தான்...

Wednesday, May 6, 2020

பூந்தியாகும் லட்டுகள்

"ஸ்வீட் மாஸ்டர் பேசுகிறார்
என்னன்ன்னு கேளுங்கோ "என
அலைபேசியயைக் கொடுத்துப்போனாள் மனைவி

வாங்கிப் பேசினேன்

"அண்ணா ஒரு சின்னச் சங்கடம்
லட்டுக்கு ஆர்டர் கொடுத்திருந்தீர்கள் இல்லையோ
சின்ன ஆர்டர்ன்னு
அஸிஸ்டெண்டைப் பார்க்கச் சொல்லி இருந்தேன்
கொஞ்சம் பதம் விட்டுவிட்டான்
லட்டு இனி பிடிச்சா அதிகம் உதிரும்
மன்னிச்சுடுங்கோ
பூந்தியா பாக்கெட் செய்து கொடுத்திடறேனே " என்றார்

சரி இனி பேசிப் பயனில்லை எனப் புரிந்தது

"சரி அப்படியே செய்துடுங்கோ
இரண்டுக்கும் அப்படி என்ன வித்தியாசம் "என்றேன்
ஏதாவது சொல்லவேண்டுமே என்று

"ஒண்ணும் இல்லேண்ண
இரண்டுக்கும் சேர்மானம் செய்முறை எல்லாமே ஒன்றுதான்
சைஸ்தான் வித்தியாசம்
இது உருண்டை அது உதிரி " என்றார்

பல சமயம்
எப்படி முயன்றும்
ஒரு கட்டுக்குள் அடங்காது
வசனகவிதையாகிப் போன
சில மரபுக் கவிதைகளின் ஞாபகம்
ஏனோ எனக்கு உடன் வந்து போகுது.......(yaathoramani.blogspot.com ) 

Monday, May 4, 2020

உண்மையான நமக்கு நாமே இதுதான்...

[இன்று முதல், உங்கள் மாவட்டம் சிகப்பில் இருந்தாலும் சரி...

ஆரஞ்சில் இருந்தாலும் சரி...

கடைகள் திறந்தாலும் சரி...

 திறக்கப்படவிட்டாலும் சரி.....

ஊரடங்கு சட்டம் தளர்ந்தாலும் சரி...

 தளராவிட்டாலும் சரி.....

ரோட்டில் போலீஸ் உங்களை தடுத்தாலும் சரி....

 தடுக்காவிட்டாலும் சரி...

அரசாங்கம் உத்தரவு போட்டாலும் சரி....

 போடாவிட்டாலும் சரி...

மீடியாக்கள் கொரோனவை பற்றி பேசினாலும் சரி....

 பேசாவிட்டாலும் சரி..

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், உங்களை காப்பாற்றி கொள்வதும் உங்கள் குடும்பத்தை  காப்பாற்றிக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது...

இது ஒரு Pandemic - உலகளாவிய கிருமி பரவல்.

நீண்ட காலம் இருக்கும், பின்னர் இங்கொன்று அங்கொன்று என அடுத்த ஐந்து வருடங்களாவது இருக்கும்.

அதற்குள் தடுப்பூசி, மருந்துகள் வந்து, இது ஒரு மேட்டரே இல்லை என்ற நிலைக்கு வந்து  பின்னர் பொத்தென இல்லாமல் போய் விடும்.

கடைகளில் முண்டி அடிக்க வேண்டாம்.

லிஃப்டில் கூட்டம் இருந்தால், படிக்கட்டு வழியாக ஏறவும்/இறங்கவும்...

லிஃப்ட் பட்டனை வண்டி சாவி கொண்டு அழுத்துங்கள்....

பொதுவெளியில் மற்றும் ஆபீஸில் முழு நேரமும் மாஸ்க் அணியுங்கள்....

அவசியம் ஏற்பட்டால் ஒழிய மாஸ்கை கழற்ற வேண்டாம்....

வீட்டில், ஆபிசில் சானிடைசர் எப்போதும் உடன்  இருக்கட்டும்......

கண்ணை கசக்குவது, மூக்கு நோண்டுவது, வாயில் சொரிவது,முகத்தில் கை வைப்பது போன்றவற்றை அறவே விட்டு விடுங்கள்.....

எச்சில் துப்பாதீர்கள்.....

கர்சீப் வைத்து தும்முங்கள்/இருமுங்கள்...

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி கையை சுத்தப் படுத்தவும்....

கும்பல் கூடுவதை தவிருங்கள்.......

முடிந்தவரை 3-6அடி வரை தள்ளி நில்லுங்கள்..

அலுவலகம்,வீடு,கடை என்று அருகே இருந்தால் நடந்தே செல்ல பழகுங்கள்...

ஆட்டோ, ஷேர் ஆட்டோ, டாக்சி, பஸ்,ட்ரெயின் என்று பொது போக்குவரத்தில் பயணம் செய்யும் போது கவனமாக இருங்கள்...

தியேட்டர், மால்,ஹோட்டல், கேளிக்கை போன்றவை சிலகாலம் வேண்டவே வேண்டாம்.

திருமணம், பர்த்டே பார்ட்டி, ஆகியவை தவிர்க்க முடியவில்லை என்றால் சமூக இடைவெளி அவசியம்...

வாய்பிருந்தால்  தொலைவில் இருந்து மொய்/வாழ்த்து/அன்பளிப்பு அனுப்பலாம்.

பேச்சுலர்ஸ் போன்ற ஹோட்டல் அவசியமாக பயன்படுத்த வேண்டியவர்கள் ஓரமாக தனி டேபிளில் சாப்பிடவும்.

 அப்போது தயார் செய்யப்பட்ட உணவை மட்டுமே சாப்பிடவும்.

முடிந்தவரை கடைகளுக்கு செல்வதை தவிர்க்க.... மளிகை,பால்,காய்கறி என்று எதெல்லாம் ஹோம் டெலிவரி கிடைக்க வாய்ப்புள்ளதோ அதை பயன்படுத்தி கொள்ளவும்..

கிளினிக்/மருத்துவமனைகளுக்கு மாஸ்க் சானிடைசர் இல்லமால் செல்ல வேண்டாம்....

ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்....

வேறு ஒருவரால் நமக்கு நோய் தொற்று வந்தாலும் சரி, நம்மால் வேறு ஒருவருக்கு நோய்த்தொற்று வந்தாலும் சரி...

அவர்கள் வாழ்நாள் முழுதும் நம்மை மன்னிக்க மாட்டார்கள். (படித்ததில் பகிரப்பிடித்தது..)

Sunday, May 3, 2020

அனுபவமே அறிவு


ஏன்டா, சளி பிடிச்சிருக்கா? சரியாத் தூங்கலையா? குரல் கம்முது! என்று கேட்டுப் பதறும் நம் அம்மாக்கள், எந்தப் பல்கலைக்கழகத்திலும் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்கவில்லை

.'வானம் வடக்கே கருக்கலா இருக்கு, மழை வருமாட்டு இருக்கு, மாடில காயிற வத்தலை எடுத்துட்டு வா’ என்று சொன்ன பாட்டி வானிலை அறிவியல் படித்தது இல்லை.

ஆடிப் பட்டம் தேடி விதை என இன்றைக்கும் சொல்லும் வரப்புக் குடியானவன் விவசாயக் கல்லூரிக்குள் மழைக்குக்கூட ஒதுங்கியது இல்லை

*முந்தா நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்* எனப் பாடிய தேரன் சித்தர் மைக்ரோபயாலஜி தேர்வுகளில் தேறியது இல்லை.

செந்தட்டிக்கும் ஓடைத் திருப்பிக்கும் கொஞ்சம் உடம்புக்கு ஆகலை. எங்கேயோ நின்னுட்டு இருக்குங்க புடிச்சிட்டு வாரேன் எனச் சொல்லி மேய்ச்சல் நிலத்துக்கு ஓடும் சடையனுக்கு 60 ஆடுகளில் இரண்டை மட்டும் காணவில்லை என்பதைக் கண்டுபிடித்து, போதாக் குறைக்கு அதற்கு உடம்பும் சரியில்லை என்றும் சொல்லும் அறிவாற்றலை, எந்த வெர்ட்னரி கல்லூரிப் படிப்பும் அவருக்குக் கொடுத்தது இல்லை.

அப்புறம் எப்படி இவர்கள் எல்லாம் இப்படித் துல்லியமாகக் கணக்கிடுகிறார்கள்?

அப்போது எங்கிருந்து வந்தது இந்த அறிவியல்?

இப்போது எங்கே போனது அந்த அனுபவம்?

ஒவ்வொரு மனிதனும் அக்கறையுடன் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய காய்ப்பு உவப்பிலாத அனுபவம்தான் அந்த அறிவு.

வள்ளுவன் சொல்லும் மெய்ப்பொருள் காணும் அறிவும்

பாரதி சொன்ன விட்டு விடுதலையாயிருந்த மனமும் சில காலமாக ஒட்டு மொத்தமாகக் காணாமல் போனதில்தான் அத்தனை அறிவையும் இழந்து வருகிறோம்.

மம்மி எனக்கு வொயிட் சட்னிதான் வேணும் க்ரீன் சட்னி வைக்காதே, சொல்லிட்டேன்’ எனப் பள்ளி செல்லும் குழந்தை உத்தரவிடும் போது, 'எப்போது முதல் ஏசியன் பெயின்ட்டில் சட்னி செய்யத் தொடங்கினார்கள்?’ என்றே மனம் பதறுகிறது.

அந்தக் குழந்தையிடம், 'க்ரீன் சட் னின்னா என்ன தெரியுமா?’ எனக் கேட்டால் நிச்சயம் தெரிந்திருக்காது.

ஏனென்றால், சொல்லித்தர அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நேரம் இல்லை. இந்த மௌனங்களும், அவசரங்களும் தொலைத்தவை தான் அந்த அனுபவப் பாடம்!

தொலைக்காட்சி விளம்பரங்கள் சொல்லிக் கொடுத்து புரோட்டின், கலோரி, விட்டமின் பற்றிய ஞானம் பெருகிய அளவுக்கு,

*'கொள்ளும், கோழிக்கறியும் உடம்புக்குச் சூடு;*
*எள்ளும், சுரைக் காயும் குளிர்ச்சி*
*பலாப் பழம் மாந்தம்*
*பச்சைப் பழம் கபம்*
*புளிதுவர் விஞ்சிக்கின் வாதம்* என்ற வார்த்தைகள் வழக்கொழிந்து போய்விட்டன.

அதென்ன சூடு, குளிர்ச்சி? அப்படி எல்லாம் ஒண்ணும் கிடையாது !

இந்த தெர்மாமீட்டர்ல உங்க சூடு எங்கேயாவது தெரியுதா?’ என இடைக்கால அறிவியலிடம் தோற்றுவிட்ட அந்தக் கால அறிவியலின் அடையாளங்களை, வணிக உலகமும் தன் பங்குக்குச் சிரச்சேதம் செய்துவிட்டது.

விளைவு? லெஃப்ட் ஐப்ரோ ஸ்பெஷலிஸ்ட்கிட்ட நாளைக்கு ஒரு அப்பாயின்ட்மென்ட்’ எனும் அம்மா,

'சாப்பிடவே மாட்டேங்கிறான்ல, அதான் 3,500 ரூபாய்க்கு இந்த எனர்ஜி டிரிங்க்’ என்று அக்கறை காட்டும் அப்பா.

பியூஸ் போயிருச்சா? எனக்கு என்ன தெரியும்? போய் எலக்ட்ரீஷியனைக் கூப்பிடுங்க!’ என எரிந்துவிழும் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்த அண்ணன் போன்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது

*வயிறு உப்புசமா இருக்காமாந்தமாயிருக்கும் கொஞ்சம் ஓமத்தை வாணலில லேசாக் கறுக்கி, நாலு டம்ளர் தண்ணி விட்டுக் கொதிக்க வெச்சு ராத்திரி கொடு’ என்ற அனுபவத்துக்குள் அறிவியல் ஒளிந்திருக்கிறது.*

*ஏழு மாதக் குழந்தைக்கு மாந்தக் கழிச்சல் வந்தபோது, வசம்பைச் சுட்டுக் கருக்கி, அந்தக் கரியைத் தாய்ப் பாலில் கலந்து கொடுத்த தாய்க்கு இன்று திட்டு விழுகிறது.*

*'கைக் குழந்தைக்கு ஏன் வசம்பைக் கொடுத்தே?குழந்தைகளுக்கு வசம்பைக் கொடுக்கக்கூடாதுனு அமெரிக்காவுல எச்சரிச்சிருக்காங்க’ என்று கரித்துக் கொட்டுகிறார்கள்.*

வசம்பில் 0.04 சதவிகிதம் மட்டுமே உள்ள அசரோன் என்ற பொருள் நச்சுத்தன்மைக் கொண்டது என இன்றைய விஞ்ஞானம் கண்டறிந்திருக்கலாம்.

ஆனால், வசம்பைச் சுட்டுக்கருக்கும்போது அந்த அசரோன்காணாமல் போய்விடும் என்பதை அன்றைய அனுபவ அறிவியல் உணர்ந்திருந்தது.

*பேச்சு வர தாமதமாகும் குழந்தைக்கும், மாந்தக் கழிச்சலுக்கும், இன்னும் பல குழந்தை நோய்க்கும் மிக அற்புதமான மருந்தாக விளங்கும் வசம்புக்குப் பாட்டி வைத்தியப் பெயர் என்ன தெரியுமா? 'பிள்ளை-வளர்ப்பான்’!'*

சளி பிடிச்சிருக்கா? கற்பூரவல்லில பஜ்ஜி போட்டுக் கொடுங்க. மத்தியான ரசத்தில் கொத்தமல்லியோட கொஞ்சம் தூதுவளை, கொஞ்சம் துளசிப் போடுங்க;

மலச் சிக்கல்ல கஷ்டப்படுறானா? ராத்திரில பிஞ்சு கடுக்காயைக் கொட்டையை எடுத்துட்டு வறுத்து பொடி செஞ்சுக் கொடுங்க;

சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் இந்த அஞ்சையும் வறுத்துப் பொடிசெய்து, சரிக்குச் சரியா பனைவெல்லம் கலந்து மூணு சிட்டிகை கொடுத்தா, பசிக்கவே பசிக்காத பிள்ளை கன கனனுபசி எடுத்துச் சாப்பிடும்;

வாய்ப் புண்ணுக்கு மணத்தக்காளி கீரையில சிறுபருப்பு போட்டு கொஞ்சம் தேங்காய்ப் பால் விட்டு, திருநெல்வேலி சொதி செஞ்சு கொடுங்க

பித்தக் கிறுகிறுப்புக்க முருங்கைக்காய் சூப்,

மூட்டு வலிக்க முடக்கத் தான் அடை,

மாதவிடாய் வலிக்கு உளுத்தங்களி,

குழந்தை கால்வலிக்கு ராகிப் புட்டு,

வயசுப் பெண் சோகைக்கு கம்பஞ்சோறு,

வயசான தாத்தாவின் கால்வீக்கத்துக்க வாழைத்தண்டுப் பச்சடி’

என விரியும் இந்தப் பட பட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அத்தனையு சில நேரம் மருந்துகள்;பல நேரம் மருத்துவ உணவுகள்.

காப்புரிமைப் பிடியில்லா இந்த அடுப்பங்கரையின் அறிவியல் நம் தொன்மைச் சிறப்பு மட்டுமல்ல வரும் நாட்களில் தொற்று நோய்க் கூட்டத்தின் பிடியில் நாம் சிக்கித் தவிக்காமல் இருக்க உதவும் ஒரே வழி.

சுழியத்தைக் (ஜீரோவை கண்டுபிடித்து இன்றைய கணிதத்தின் அச்சாணியைத் தந்த தேசம் இது.

'பை’ என்றால் 22/7 என்ற பரிச்சயமே இல்லாத வெகு காலத்துக்கு முன்னரே, சுற்றளவுச் சூத்திரத்தைக் கச்சிதமாகத் தெரிந்துகொண்டு நிலத்தை அளந்த கொத்தனார்கள் புழங்கிய மண் இது.

'ஆறறிவதுவே அதனொடு மனமே என மனதின் முதல் சூத்திரத்தை சிக்மண்ட் ஃப்ராய்டுக்கு 30 தலைமுறைகள் முன்பே சொன்ன தொல் காப்பியம் எழுதிய ஊர் இது.

இத்தனை காலம் நாம் காத்து வந்த அறிவியலை, எந்த நெருக்கடியிலும் இழக்கலாமா?

வாட்சப்பிலும் முகநூலிலும் பெயரில்லாது பரப்பப்படும் செய்தியாக இல்லாமல், யாரோ நமக்காக நேரம் செலவுசெய்து அனுப்பிய சிறந்த பாடமாகக்கருதி பகிருங்கள.படித்ததில் பிடித்தது...                     
-

Saturday, May 2, 2020

சிரிக்கத் தெரிந்த பிறவி...

சிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்
மனிதப் பிறவியே-இதை
அறிந்தும் இங்கு சிரிக்க மறுத்தல்
பெரிய கொடுமையே
இதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்
இன்பம் இன்பமே-எதையும்
இதயம் தன்னில் மூடி வைத்தால்
என்றும் துன்பமே

வளர்ந்த நிலவு வானில் இருந்து
மெல்லச் சிரிக்குமே-அதன்
அழகு சிரிப்பில் மயங்கி மலரும்
மணந்து சிரிக்குமே-அதன்
மணத்தில் மயங்கி சோலை யெல்லாம்
சொர்க்க மாகுமே-அந்த
உணர்வை உணர்ந்த மனிதர் மனத்தில்
மகிழ்வு பூக்குமே

குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே-இந்த
உலகே உண்மை சொர்க்க மென்று
புரிய லாகுமே

விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
மகிழ்ச்சி  கொள்ளுவோம்

Thursday, April 30, 2020

மரபுக் கவி படைக்க சுருக்கு வழி

விளம"தும் "மா "வும் தேமா
முறைப்படி அமையும் வண்ணம்
இலக்கணக் கவிதை ஒன்று
உடனடி யாக உன்னால்
இயற்றிடக் கூடு மாயின்
கவியென ஏற்பேன் " என்றான்
வலதுகை போன்றே நாளும்
என்னுடன் உலவும் நண்பன்

"இதந்தரு மனையி னீங்கி
இடர்மிகு சிறைப்பட் டாலும் "
முதல்வரி இதுவாய்க் கொண்டு
முத்தெனத் தொடரும் அந்தச்
சுதந்திரத் தேவிப் பாடல்
சந்தமென் நினைவில் ஊற
பதட்டமே சிறிது மின்றி
பகிர்ந்தேன் இந்தப் பாடல்

"சிந்தனை செய்ய வேணும்
சிலநொடி நேரம் வேண்டும் "
என்றுநான் சொல்வே னென்ற
நினைப்பினில் இருந்த நண்பன்
மந்திரம் சொல்லல் போல
நிமிடமாய்ச் சொல்லக் கேட்டு
வந்தெனைக் கட்டிக் கொண்டு
வாழ்த்தினைப் பகிர்ந்து கொண்டான்

எட்டயப் புரத்து வேந்தன்
இயற்றிய பாடல் தன்னை
நித்தமும் பயின்றால் சந்தம்
நிலையென நெஞ்சில் தங்கும்
பக்குவம் இதனை யாரும்
பழகினால் மட்டும் போதும்
நிச்சயம் நொடியில் யாரும்
கவிஞராய் மாறக்  கூடும்

Tuesday, April 28, 2020

நம்பிக்கையூட்டும் செய்தி...

20 மாவட்டங்களில் புதிய தொற்று இல்லை:
ஊரடங்கை மதித்தால் விரைவில் வெற்றி!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அடுத்தடுத்து முன்னேற்றங்கள் எட்டப்பட்டு வருவது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. புதிய தொற்றுகள் குறைந்து வரும் நிலையில், இதேநிலையை தக்கவைத்துக் கொள்வது தான் தமிழகத்தின் முதன்மைக் கடமையாகும்.

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 52 புதிய நோய்த் தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. அவற்றையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1937 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஏற்பட்ட புதிய தொற்றுகளில் 47 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது கவலையளிக்கும் விஷயம் தான் என்றாலும் கூட, அவர்களைத் தவிர ஒட்டுமொத்த தமிழகத்திலும் 5 பேர் மட்டுமே புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிலும் கூட 4 பேர் மதுரையையும், ஒரு குழந்தை விழுப்புரத்தையும் சேர்ந்தவர்கள் எனும் நிலையில், மீதமுள்ள 35 மாவட்டங்களில் நேற்று புதிய தொற்று ஏற்படவில்லை என்பது உண்மையாகவே தமிழக மக்கள் அனைவருக்கும் நிம்மதியை அளித்திருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாகவே கட்டுக்குள் இருப்பதை புள்ளி விவரங்கள் உறுதி செய்கின்றன. தமிழகத்தின் மலை மாவட்டமான நீலகிரி கொரோனாவின் பிடியிலிருந்து  கிட்டத்தட்ட விடுவிக்கப்பட்டு விட்டது என்று கூறும் அளவுக்கு அந்த மாவட்டத்தில் கடந்த 19 நாட்களாக புதிய தொற்றுகள் ஏற்படவில்லை. அதேபோல் வட எல்லையில் இராணிப்பேட்டை மாவட்டத்திலும், தெற்கு எல்லையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடந்த 14 நாட்களாக புதிய நோய்த் தொற்றுகள் ஏற்படவில்லை. ஈரோடு மாவட்டத்தில் 13 நாட்களாகவும், கரூர், தேனி மாவட்டங்களில் 11 நாட்களாகவும், வேலூர் மாவட்டத்தில் 10 நாட்களாகவும் புதிய தொற்றுகள் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 8 நாட்களாகவும், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் 5 நாட்களாகவும், தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், தருமபுரி, திருப்பத்தூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 4 நாட்களாகவும் கொரோனா வைரஸ் யாரையும் புதிதாக தாக்கவில்லை. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தமிழகத்தின் 20 மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக யாரையும் கொரோனா வைரஸ் தாக்கவில்லை. இவை தவிர கிருஷ்ணகிரி மாவட்டம் தொடக்கம் முதலே கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக திகழ்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்படாத ஒரே மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொருபுறம் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான நேரத்தில் குணமடைந்து வருகின்றனர். தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள 1937 பேரில் இதுவரை 1101 பேர், அதாவது 57 விழுக்காட்டினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகளில் நேற்றைய நிலவரப்படி 809 பேர் மருத்துவம் பெற்று வரும் நிலையில், அவர்களை விட அதிகமானவர்கள் குணமடைந்திருப்பது  கொரோனா நோய் பரவலைத் தடுப்பதில் நாம் வெற்றிக்கோட்டை நெருங்குகிறோம் என்பதைக் காட்டுகிறது. தமிழக அரசின் வழிகாட்டுதல், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களின் கடுமையான உழைப்பு, காவல்துறையினர் மற்றும் துப்புரவு பணியாளர்களின் உதவி, இவர்களுக்கெல்லாம் மேலாக பொதுமக்களின் ஒத்துழைப்பு ஆகியவை இல்லாமல் இத்தகைய முன்னேற்றத்தை எட்டியிருக்க முடியாது. ஊரடங்கு ஆணையை தமிழக மக்கள் மதித்து நடந்ததற்கு கிடைத்த பரிசு தான் இதுவாகும்.

கொரோனா பரவல் தடுப்பில் நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கிறோம் என்றாலும் கூட, முழுமையான வெற்றியை அடைந்து விடவில்லை. அதற்கு இதே கட்டுப்பாட்டுடன் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். கடந்த சில வாரங்களில் நாம் அடைந்துள்ள முன்னேற்றத்தை வைத்துப் பார்க்கும் போது, அடுத்த சில வாரங்களில் கொரோனா அச்சம் இல்லாத தமிழகத்தை உருவாக்கி விட முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. அதற்காக நாம் செய்ய வேண்டியது ஊடரங்கு ஆணை  மற்றும் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது ஆகியவற்றை நாம் எவ்வளவு கடுமையாக கடைபிடித்து வந்தோமோ, அதை விட மும்மடங்கு கூடுதலாக கடைபிடிப்பதன் மூலம் கொரோனாவை விரட்டியடிக்க முடியும்.

சென்னையைப் பொறுத்தவரை நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்தாலும் கூட, அதை எண்ணி அச்சப்படுவதற்கு எதுவும் இல்லை. இந்தியாவின் மற்ற நகரங்களுடன் ஒப்பிடும் போது, அவற்றை விட மிக அதிகமாக சென்னையில் 10 லட்சம் பேருக்கு 3100 சோதனைகள் என்ற அளவில் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதனால் தான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக தெரிகிறது. அடுத்து வரும் நாட்களில் இன்னும் கூடுதலான சோதனைகளை மேற்கொண்டு  நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் அளிப்பதன் மூலம் சென்னையிலும் கொரோனா வைரசை வீழ்த்தி விட முடியும். ஆகவே, கொரோனாவை ஒழிப்பதற்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு அளித்தால் கொரோனா ஒழிப்பு போரில் வெற்றி விரைவில் சாத்தியமாகும்.
பா ம க நிறுவனர் மரு.ராமதாஸ் அறிக்கை
#SocialDistancing #LockDown #StayHomeStaySafeSavelives

Sunday, April 26, 2020

இது புலிவால்...

இது எனக்கு வாட்ஸ்அப்ல வந்தது
உண்மையா தெரியவில்லை
தோழமைகளின் கருத்துக்களை எதிர்நோக்கி

கொரொனாவை விட கொடூரமானது ஆன்லைன் ரம்மி.

ஊரடங்கு முடியும் பொழுது பலரின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை ஆன்லைன் ரம்மி கொண்டு போய்விடும். பொதுமக்கள் போண்டி ஆகிவிடுவார்கள் - அது இந்திய மக்களின் வாழ்வை கடுமையாக பாதிக்கும்

இந்தியா சட்டப்படி பணம் வைத்து சீட்டு விளையாடுவது தண்டனைகுரிய குற்றமாகும் மேல்தட்டு மக்களின் கிளப்புகள் - மனமகிழ் மன்றங்களில் பணம் வைத்து விளையாடுவது கூட சில நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான்

இப்போது சமூக வலைத்தளங்களில் எங்கு நோக்கினும் ஆன்லைன் ரம்மி விளையாட அழைக்கும் விளம்பரங்கள் இவ்விளம்பரங்களை சமூக வலைத்தளங்களில் இடுவது கூகுள் நிறுவனம் தான் என்பது கொடுமையிலும் கொடுமை

சுந்தர் பிச்சையின் கேரியரில் இது ஒரு கரும்புள்ளி பிச்சை பொதுமக்களை பிச்சை எடுக்க வைக்கப் போகிறார். ன்லைனில் எப்படி பணம் பறிபோகிறது

ஆன்லைனில் விளையாட உங்கள் வங்கி கணக்கிலிருந்து தான் நெட்பேங்கின் மூலம் தான் பணம் செலுத்த வேண்டும் நீங்கள் உடனே ரம்மி விளையாடுங்கள் உங்களுக்கு உடனடி போன்ஸ் 50 ரூபாய் என்று துண்டில் இடுவார்கள்

விளையாட ஆரம்பித்தவுடன் உங்களுக்கு 50 ரூபாய் போனஸ் கிடைத்துள்ளது என்று ஒரு மெஜெஜ் வரும் நீங்கள் உங்கள் வங்கி கணக்கு விபரத்தை அனுப்புவீர்கள்

அப்போதே உங்கள் கணக்கில் உள்ள பணம் எவ்வளவு என்பதை ஒரு "சிறப்பு சாப்ட்வேர்" மூலமாக ஆன்லைன் ரம்மி நடத்தும் நிறுவனம் அறிந்து கொள்ளும்

உங்கள் அக்கவுண்டில் 1 லட்சம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் விளையாட ஆரம்பித்தவுடன் 1000,5000..10,000 ரூபாய் என உங்களுக்கு கிடைக்கும்படி செய்வார்கள்

நீங்கள் ரம்மி விளையாட்டில் கில்லி என நினைத்துக் கொண்டு தொடர்ந்து விளையாடுவீர்கள் அப்போதுதான் ஆபத்து ஆரம்பிக்கும்.. நீங்கள் எவ்வளவு திறமையாக விளையாடினாலும்..தோற்றுக் கொண்டே இருப்பீர்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் முழுவதும் போய்விடும்

இதுதான் இன்றைய நிலைமை ஆன்லைன் ரம்மியின் ஆபத்து குறித்தும்..அது இந்தியாவில் சட்ட விரோதம் அதை தடை செய்ய வேண்டும் எனவும் நான் பலமுறை பதிவுகள் இட்டுள்ளேன்

பாமகா நிறுவனர் ராமதாஸ் மட்டும் ஆன்லைன் ரம்மியால் விளையும் ஆபத்து குறித்து கூறி..அதனை தடை செய்ய வேண்டும் என அறிக்கை கொடுத்தார் அச்சு ஊடகங்களும்.. காட்சி ஊடகங்களும் கண்டு கொள்ளவில்லை

மத்திய..மாநில அரசுகளும் ஆன்லைன் ரம்மியால் விளையப்போகும் ஆபத்து குறித்து உணரவில்லை தற்போது ஊரடங்கு அமுலில் உள்ள நேரத்தில் பொதுமக்கள் பலரும் வீட்டிலிருந்து இந்த ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்

ஊரடங்கு முடியும் பொழுது பொதுமக்கள் ஆன்லைன் ரம்மியால் போண்டி ஆகிவிடுவார்கள் எனவே,சமூக அக்கறையோடு.. ஆன்லைன் ரம்மியை தடை செய்யக்கோரியும் அதன் ஆபத்து குறித்து அச்சு ஊடகங்களும்.. காட்சி ஊடகங்களும் செய்தி வெளியிட வேண்டும்

அரசியல் காட்சிகள்,அமைப்புகள்,இயக்கங்கள் ஆன்லைன் ரம்மியை தடை செய்யக்கோரி மத்திய மாநில அரசுகளை வழியுறுத்த வேண்டும் மத்திய அரசு உடனடியாக ஆன்லைன் ரம்மியை இந்தியாவில் தடை செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும்

கொரோனாவை விட கொடியது ஆன்லைன் ரம்மி அது இந்தியாவில்.. தமிழகத்தில் பல வீடுகளுக்குள் நுழைந்து விட்டது. தடைசெய்..தடைசெய் ஆன்லைன் ரம்மி எனும் சீட்டு விளையாட்டை தடை செய்  ...இது புலிவால் பிடித்துவிடவேண்டாம்..

இருளில் ஒளிக்கீற்றாய்...

எச்.டி.எஃப்.சி வங்கி நிர்வாக இயக்குனர் திரு ஆதித்யா பூரியை நேர்காணல் செய்த போது, இந்தியா கொரானா சிக்கலில் இருந்து விடுபட்டு, இந்த சிக்கலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, எப்படி மாற்றி கொள்ளும் என்பது பற்றி கூறி இருக்கிறார் *

திரு.ஆதித்யா பூரி இந்திய பொருளாதாரத்தில் மிகுந்த அறிவாற்றல் கொண்டவர்.

அவரின் நேர்காணலில் இருந்து முக்கிய சில விஷயங்கள்:

1. இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரம் தற்போது கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படவில்லை. அது
வலுவாக தான் இருக்கிறது.

2. இந்தியா, இளைஞர்களின் தேசமாக இருப்பதால், மற்ற ஐரோப்ப நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்த கொரோனாவின் ஆரோக்கிய பாதிப்பு, இந்தியாவில் மிக குறைவாகவே இருக்கிறது.

3. வணிகர்கள் மற்றும் சிறு கடைகள் வைத்திருப்பவர்களுக்கு, அந்நியரிடம் அதிகமான கடன்கள் இருக்காது. எனவே கடைகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன்,  மீண்டும் வலுவாகி விடும்.

4. எண்ணெய் விலை வீழ்ச்சி, பணவீக்கம் மற்றும் பிற செலவுகளை வெகுவாக குறைக்கும்.

5. நம் நாட்டின் உள் நுகர்வு அதாவது உள்நாட்டு தேவை மிக வலுவானது, அதிகமானது.

6. இந்தியாவை 14 நாட்கள் அல்லது 28 நாட்கள் என மேலும் சில நாட்கள் ஊரடங்கில் வைத்திருந்தால் கூட, அது ஒரு பெரிய விஷயமே அல்ல.

7. இந்தியாவை சில நாட்கள் ஊரடங்கில் வைத்திருந்தால், பங்குச்சந்தை சரிந்து, முக்கியமாக தானியங்கி வழிமுறைகள் காரணமாக பங்கு விற்பனையை கட்டாய படுத்துகின்றன. ஆனால் இதில் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

8. வீட்டிலிருந்து வேலை செய்வது, நிறுவனங்களுக்கான அனைத்து செலவுகளையும் குறைக்கிறது. இது இறுதியில் கம்பெனிக்கு இலாபத்தை அதிகரிக்கும்.

இந்த இருண்ட நாட்களால், சில முக்கிய நிகழ்வுகள், இந்தியாவுக்கு மிகவும் சாதகமாக நடக்க சாத்தியக்கூறுகள் இருக்கிறது.

1. ஜூன் மாதத்திற்குள், இந்த தொற்றுநோயின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட முதல் நாடு இந்தியாவாக இருக்கும்.

2. ஊரடங்கு, வெப்பமான வானிலை மற்றும் நமக்கு இருக்கும் அதிக நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை நம்மை விரைவில் இந்த சிக்கலில் இருந்து விடுபட வைக்கும்.

3. நாம் மருந்துகளை அதிக அளவில் ஏற்றுமதி செய்பவர்களாக இருப்போம். மேலும் பி.சி.ஜி தடுப்பூசிகள், மலேரியா எதிர்ப்பு மருந்துகள், ஹைட்ராக்ஸி குளோரோக்வினின் போன்றவற்றை நம்மிடம் வழக்கமாக வாங்குவதற்கு உலகம் தயாராக இருக்கும்.

4. இதுவரை சீனாவுக்கு முன்னுரிமை கொடுத்து வந்த, உலகெங்கிலும் உள்ள பல நாட்டு நிறுவனங்கள், சீனாவை ஒதிக்கி, இனி இந்தியாவில் உற்பத்தி வசதிகளை மேற்கொள்வார்கள்.

100 அமெரிக்கா மற்றும் 200 ஜப்பானிய கம்பெனிகள் ஏற்கனவே சீனாவை விட்டு கிட்டத்தட்ட வெளியேறுகிறார்கள்.

மொபைல் போன்கள் முதல் மருந்துகள் வரை ஒவ்வொரு பொருளையும் உற்பத்தி செய்யும் மையமாக இந்தியா மாறும்.

இந்திய மக்கள் நேர்மையானவர்கள், கடின உழைப்பாளிகள், திறமையானவர்கள் மற்றும் நம்பகமானவர்கள் என இதுவரை மதிப்பிடப்பட்டவர்கள் என்பதை, உலகின் மிக பெரிய மற்றும் சிறந்த பிராண்ட் கம்பெனிகள் இனி உணரும்.

5. வேலை வாய்ப்பு இந்தியாவில் பெருகும்.

6. நமது சைவ உணவு வகைகள் மற்றும் நமது கலாச்சாரத்தை உலக நாடுகளால் மேலும் மேலும் இனி பாராட்டப்படும்.

7. உலகெங்கிலும் உள்ள இந்திய துணைத் தூதரகங்களுக்கு முன்பாக மக்கள் வரிசையில் நிற்பார்கள்.

இந்தியாவுக்கு வருவதற்கான விசாக்கள், சோதனைக்குப் பிறகு 3 வார இடைவெளிக்கு பிறகு வழங்கப்படும்.

சுற்றுலா, ஆரோக்கியம் மற்றும் சூரிய ஒளி ஆகியவற்றிற்காக மக்கள் இனி இங்கு வருவார்கள்.

8. இந்தியாவில், குறைந்த செலவிலான மருத்துவ வசதிகள் எளிதில் கிடைப்பது மற்றும் விரைவாக குணமாவது ஆகியவற்றால் உலக அளவில் பாராட்டப்படும்.

9. இந்திய ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவம் மிகவும் பிரபலமாகிவிடும். யோகா மற்றும் பிராணயம் ஆசிரியர்களுக்கு அதிக கிராக்கி இருக்கும். ஆப்டெரால், ஃபைப்ரோஸிஸுக்கு சிறந்த தீர்வு, நுரையீரலுக்கு உடற்பயிற்சி செய்வது.

10. வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்த, சிறந்த மூளை கொண்ட இந்தியர்கள், தங்கள் ஆரோக்கியமான மற்றும் வளமான சொந்த நாட்டிற்கு திரும்புவதில் மகிழ்ச்சியடைவார்கள். அவர்களின் சம்பளமும் எதிர் பார்க்கும் அளவில் அவர்களுக்கு கிடைக்கும். ஏனெனில் மேக் இன் இந்தியா உற்பத்தி அதிகரிப்பதன் மூலம், மிக சுலபமாகவே கிடைக்கும்.

11. 2020 உலக வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக இருக்கும். அது இந்தியாவுக்கு முழுவதுமாக சாதகமாக இருக்கும்.

மிகவும் நம்பிக்கையான சூழ்நிலையாக தோன்றலாம்
ஆனால் அடுத்த 3 ஆண்டுகளில் ஒரு தங்க பறவையாக - இந்தியாவை பார்ப்போம்.

ஆங்கிலத்தில் வந்த பதிவு......

இவர் கூறி இருப்பது சற்று ஆறுதலாக..நம்பிக்கையாக இருக்கிறது. நம்பிக்கை தானே வாழ்க்கை...(வாட்ஸ் அப்பில் கிடைத்தது..)

👍👍👍.....🙋‍♂️ BE POSITIVE

Wednesday, April 22, 2020

கடும் பயிற்சியில் வார்த்தைகள்...

.கவிதைத் தேர்வுக்குத்தன்னைத்
தயார்செய்துகொள்ளும்படியான
கடும் பயிற்சியிலிருக்கின்றன
வார்த்தைகள் அனைத்தும்

நாணலினும்
இன்னும் நெகிழ்வாய்

கூரிய வாளினும்
இன்னும் கூர்மையாய்

மலர் இதழ்களினும்
இன்னும் மென்மையாய்

குளிர் நிலவினும்
இன்னும் தண்மையாய்

தேக்கு மரம் போல்
மிக்க உறுதியாய்

மொத்தத்தில்
கவிஞனின் எந்த மன நிலைக்கும்

கவிதைக்குள் கிடைக்கும்
எந்தச் சிறு இடைவெளியிலும்

மிகச் சரியாய்த்
தன்னைப் பொருத்திக்கொள்ளும்படியாய்..

கடும் பயிற்சியிலிருக்கின்றன
தமிழ் வார்த்தைகள் அனைத்தும்

வள்ளுவனின் விழிபட்ட
கம்பனின் கைத்தொட்ட
வள்ளலாரின் கருணைப்பெற்ற
பாரதியின் நாவு நவின்ற
அவன் தாசனால் எழுச்சிப் பெற்ற
வார்த்தைகள் போல்

காலம் எத்தனைக் கடந்தும்
மலர்ந்து மணம் வீசும்
புத்தம் புது மலராய்
மணக்க வேண்டுமெனில்

மாற்றங்கள் எத்தனை நேரினும்
மதிப்பில் உயர்ந்தே நிற்கும்
முத்தாய்ப் பவளமாய்ப் தங்கமாய்
ஜொலிக்க வேண்டுமெனில்

கவிஞனின் கருணைப் பார்வையில்
படும் படியாய்
அவன் கவிதைக்குள் பொருத்தமாய்
விழும் படியாய்
அதற்குரிய தகுதிகள் அனைத்தும்
பெறும் படியாய்
இருந்தால் மட்டுமே சாத்தியமென
உணர்ந்த படியால்

கடும் பயிற்சியிலும்
தொடர் முயற்சிலும்
இருக்கின்றன
அழகுத் தமிழ் வார்த்தைகள்

வார்த்தைகளின்
அசுர பலமறியாது
உயர் நிலையறியாது
அதை உமிழ்ந்துச்  செல்வோரே
சற்று விலகியே செல்லுங்கள்

ஆம் தவமனைய
அதன்கடும் பயிற்சிக்கு
அதன் பெரும் முயற்சிக்கு
பங்கம் வந்துவிடாது

மௌனமாய்   ......
ஆம்
மௌனமாய்
முடிந்தால்ஆசிர்வதிச்சு மட்டும் செல்லுங்கள்


Sunday, April 19, 2020

எங்களைக் குறை கூ றி அலையாதீர்கள்..

எங்களைக்  குற்றவாளியாக்காதீர்கள்
எங்களைக் குறைகூறி அலையாதீர்கள்

கொஞ்சம் தூரமாயினும்
அமருமிடமும்
பறிமாறும் நேர்த்தியும்
திருப்திப்படவில்லையாயினும்
கைப்பக்குவமும் ருசியும்
சரியாயிருந்தால் சரி
என்ற காலம் போய்.....

ருசி கொஞ்சம்
முன்பின்னாயினும்
ஹோட்டல் இருப்பிடமும்
கார் பார்க் வசதியும்
பரிமாறும் நேர்த்தியும்
சரியாய் இருந்தால்தான்
திருப்திப்படுகிறது என்பதால்

வசதியற்றவனாயினும்
நேர்மையானவனாக
எளிமையானவனாக
கூப்பிட்ட குரலுக்கு
உடன் வருபவனாக
இருந்தால் போதும்
என்ற காலம் போய்.....

ஜெயித்தப்பின்
காணாமல் போகிறவனாயினும்
கிரிமினல் குற்றவாளியாயினும்
தேர்தல் சமயத்தில்
கொடுப்பவருள்
கூடுதலாய் கொடுப்பவனாய் இருந்தால்
சரியானவனாய்ப் படுகிறது என்பதால்

ஒப்பனைகளாயினும்
அழகுக் கடங்கியும்
பாவனைகளாயினும்
அறிவுக் கடங்கியும்
அளவுகோள்கள்
நெகிழும் தனமையற்றும்
இருந்த.காலம் போய்...

அழகென்பதே
ஒப்பனைகளாய்
அறிவென்பதே
பாவனைகளாய்
நெகிழத் தக்கதே
அளவுகோள்களாய் இருந்தால்தான்
சந்தைப்படுத்த முடிகிறது என்பதால்

சொல்லத் தக்கதை
பயனுள்ளதை
எளிமையாய்
மிக உறுதியாய்
சொல்வதென்பதே
மதிக்கத் தக்கதென
இருந்தகாலம் போய்...

பொய்யாயினும்
சுவாரஸ்யமாய்
பயனற்றதாயினும்
நேரங்கடத்தியாய்
இருக்கத் தகுந்ததே
மதிக்கத் தகுந்ததாய்
வியாபாரமாகிறது என்பதால்...

இது சரியானது
இதற்கானது எது என்பது போய் ...
எனக்கிது சரி
இதற்கானது எது
என்பதுவே
இன்றைய   சூழலின்
தர்மமாகிப் போனதால்

எப்போதும்,
இனியேனும்
எங்களைக்  குற்றவாளியாக்காதீர்கள்
எங்களைக் குறைகூறி அலையாதீர்கள்

Thursday, April 16, 2020

ஏன் வீட்டுக்குள் முடங்க வேண்டும்..?

*நான் Dr.P.மணி.நான் உயிர்தொழில் நுட்ப துறை (Biotechnology )ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். இப்போது கும்பகோணம்அன்னை அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ குழுமத்தின் இயக்குநராக பணியாற்றி வருகிறேன் என்னிடம் என் மாணவர்கள் மற்றும் நண்பர்கள் ஏன் கொரானாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என கேட்டனர். எனக்கு தெரிந்த அறிந்த உயிரியல் விளக்கம் ........ முழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் வைரஸ். ஒரு ஆர்என்ஏ(நமது செல்களில் ஜீன் எனப்படும் டிஎன்ஏ இருப்பது மாதிரி வைரஸ்களில் இருப்பது டிஎன்ஏவின் அரைகுறை வடிவமான RNA) அதைச் சுற்றி ஒரு புரதம் (Protein) மற்றும் கொழுப்பு சேர்ந்த ஒரு உறை (ஆல்கஹால் கொண்ட சானிடைசர்கள், சோப்பு நுரை பட்டால் இந்த உறை கறைந்து வைரஸ் அவுட்). அந்த உறையின் மீது ஆங்காங்கே முட்கள். இது தான் கொரோனா வைரஸ். இந்த முட்களின் வேலை எளிதாக எதிலும் ஒட்டிக் கொள்ளவதே. இந்த முட்களும் புரதத்தால் ஆனவையே. கொரோனா வைரசில் இந்த முட்கள் பார்ப்பதற்கு கிரீடத்தில் (Crown) இருக்கும் வேலைப்பாடு போல இருப்பதால் இந்த வைரசுக்கு கொரோனா வைரஸ் எனப் பெயர்.இதை ஏன் அரைகுறை உயிரி என்கிறோம். இந்த வைரஸ்களால் தானாக வாழ முடியாது. இது ஒரு முழுமையான ஒட்டுண்ணி. ஏதோ ஒரு உயிரினத்தின் செல்லுக்குள் புகுந்து அந்த செல்லில் இருக்கும் திட, திரவப் பொருட்களையே உணவாக்கிக் கொண்டு பல்கிப் பெருகுவது தான் வைரஸ்களின் வேலை. செல்லுக்கு வெளியே சில மணி நேரமோ அல்லது சில நாட்களோ தான் இதனால் தாக்குப் பிடிக்க முடியும்.இந்த வைரஸ் மூக்கு, வாய் அல்லது கண் வழியாக உள்ளே நுழைந்தவுடன் முதலில் தொண்டப் பகுதியை தாக்குகிறது. தொண்டையில் உள்ள திசுக்களின் செல்களில் இது பல்கிப் பெருகியவுடன் தான் தொண்டை வலியும் இருமலும் தொடங்குகிறது. இந்த வைரஸ்களை எதிர்த்து நம் உடலின் எதிர்ப்பு சக்தி (Immune system) மோதலை தொடங்குகிறது. அந்த மோதலின் அறிகுறி தான் காய்ச்சல். பெரும்பாலான வைரஸ்கள் அதிக வெப்ப நிலையை தாங்க முடியாதவை என்பதால், உடலின் வெப்ப நிலையை உயர்த்தி வைரஸ்களை காலி செய்ய நமது உடலின் எதிர்ப்பு சக்தி முயற்சிக்கிறது.* *இந்த மோதலின்போதே பெரும்பாலான வைரஸ்களை நமது உடல் கொன்று விடுகிறது, கொரோனா வைரஸ் உள்பட. நமது உடலின் Immune system ஒரு மாபெரும் பாதுகாப்பு அரண். வைரஸோ, பாக்டீரியாவோ அல்லது வேறு ஒரு நுண்ணுயிரோ உடலுக்குள் புகுந்தவுடன் அவற்றை நமது உடல் இரு வகையான காரணிகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கிறது.* *முதலாவது அந்த நுண்ணியிர் வெளியிடும் வேதியியல் பொருட்கள், இரண்டாவது அந்த நுண்ணியிரின் உருவம்.* *இது வெளியில் இருந்து வந்த பொருள் என்பதை கண்டுபிடித்த உடனே நமது ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் அவற்றை கொல்லும் வேலையில் இறங்குகின்றன. வைரஸ், பாக்டீரியாவை அப்படியே விழுங்கி ஏப்பம் விடும் வேலைக்கு Macrophages, Neutrophils போன்ற அடியாட்களை வெள்ளை அணுக்கள் அனுப்புகின்றன.* *ஆனால், இதையும் தாண்டி வைரஸோ பாக்டீரியாவோ உடலை பதம் பார்க்க ஆரம்பித்தால், அடுத்த கட்ட அரண்கள் வேலையில் இறங்கும். அதில் ஒன்று Innate lymphoid cells. இதன் ஒரு பிரிவான T- Killer cellகளின் வேலை வைரஸ்களால் பாதிக்கப்பட்ட உடல் செல்களை கொன்று, வெளியேற்றி உடல் திசுக்கள் மேலும் மோசமடையாமல் தடுப்பது. மேலும் வைரஸ்களுக்கு உணவாகிக் கொண்டிருக்கும் செல்களின் எண்ணிக்கையை குறைப்பது. இது தான் இதன் வேலை.அதே நேரத்தில் Macrophages, Neutrophils போன்றவற்றால் தடுக்க முடியாத வைரஸ்களை ஒழித்துக் கட்ட நமது உடல் அனுப்பும் பிரம்மாஸ்திரம் தான் B cells எனப்படும் வைரஸ்களை தாக்கும் செல்கள். இந்த செல்கள் வைரஸ்களின் உருவத்தை அடையாளம் கண்டு, அதன் மீது ஒட்டிக் கொண்டு, அப்படியே இழுத்துச் சென்று Lumph nodes எனப்படும் நிணநீர் சுரப்பிகளில் வைத்து, அங்கு சுரக்கும் ரசாயனங்கள் உதவியோடு வைரஸ்களை கொல்லும்.* *இந்த உடல் எதிர்ப்பு சக்தி ஒரு பக்கம் இருக்க...* *தொண்டைப்பகுதியை அடைந்த கொரோனா வைரஸ்கள் அடுத்ததாக நமது உடலை பாதிப்பது நுரையீரலை. நுரையீரலின் உள் சுவற்றில் இருப்பவை மிக லேசான பில்லியன் கணக்கான எபிதீலியல் செல்கள். இந்த செல்களில் கொரோனா வைரஸ் ஒட்டிக் கொண்டு, துளை போட்டு தனது ஆர்என்ஏவை உள்ளே நுழைக்கும். இந்த ஆர்என்ஏ செல்லுக்குள் போய் லட்சக்கணக்கில் தனது பிரதிகளை ஜெராக்ஸ் மெசின் மாதிரி காப்பி எடுக்கும். இன்த ஒவ்வொரு ஆர்என்ஏவும் ஒரு வைரசாக மாறும்.* *அந்த செல் முழுக்கவே வைரஸ்களால் நிறையும்போது, அந்த செல்லே வெடித்து மடியும். அந்த வெடிப்பில் இருந்து கிளம்பும் லட்சக்கணக்கான வைரஸ்கள் அடுத்தடுத்த செல்களை இதே போல தாக்கி அழித்து, பல்கிப் பெருகும். 10 நாட்களில் நுரையீரலின் பெரும்பாலான செல்களை இந்த வைரஸ் ஆக்கிரமிக்கும்.இதுவரையும் கூட பிரச்சனை அதிகமில்லை. ஆனால், இந்த வைரஸ்களை அழிக்க நமது உடலின் Immune cells எனப்படும் எதிர் தாக்குதல் செல்கள் நுரையீரலில் நுழைந்து தாக்க ஆரம்பிக்கும்போது தான் பிரச்சனையே துவங்குகிறது.* *மற்ற வைரஸ்களில் இருந்து கொரோனா இங்கே தான் மாறுபடுகிறது. இந்த கொரோனா வைரஸ், நமது உடலின் எதிர் தாக்குதல் செல்களுக்குள்ளேயே நுழைந்து அதையும் சேதப்படுகின்றன. சேதப்படுத்துவதோடு மட்டுமல்ல, அந்த செல்களின் ஜீன்களில் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன.நமது Immune system செல்கள் ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாறிக் கொள்வது சைட்டோகைன்ஸ் (Cytokines) எனப்படும் ஒரு வேதிப் பொருள் மூலம் தான். ஜீன்கள் பாதிக்கப்பட்ட எதிர் தாக்குதல் செல்கள் குழப்பமான சைட்டோகைன் தகவல்கள் அனுப்ப, நுரையீரலை பாதுகாக்க கிளம்பி வரும் Neutrophils செல்கள், கொரோனா வைரஸ்களுக்கு பதலாக உடலின் எதிர்ப்பு சக்தி செல்களை தாக்க ஆரம்பிக்கும்.அதே போல பாதிக்கப்பட்ட நுரையீரல் செல்களை தற்கொலை செய்ய வைத்து நோய் மேலும் பரவாமல் தடுக்க வேண்டிய வேலைக்காக வரும் T- Killer cellகள் வந்த வேலையை விட்டு விட்டு, நன்றாக இருக்கும் நுரையீரல் செல்களை அழியச் சொல்லி தகவல் தரும். இதனால் நுரையீரல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, அடுத்ததாக பாக்டீரியா தாக்குதல், நிமோனியா உள்ளிட்ட தோற்று நோய்களுக்கு ஆளாக நேரிடும். இந்த இடத்தில் தான் மரணங்கள் நிகழ்கின்றன.* *இப்படி உடலின் எதிர்ப்பு சக்தியையே நமது உடலுக்கு எதிராக திருப்பி விடுவதில் தான் கொரோனா வைரசின் முழு சக்தியும் அடங்கியுள்ளது. வைரசின் உருவத்தை வைத்து அடையாளம காணும் B- cellகள் கூட கொரோனாவிடம் இதுவரை எளிதில் வெற்றியை ஈட்டவில்லை. இந்த வைரஸ்கள் அனுப்பும் வேதியல் தகவல்கள் (Cytokines) எல்லா நேரமும் ஒரே மாதிரியாக இல்லை. அவை லட்சக்கணக்கான வகைகளில் மாறிக் கொண்டே இருப்பதால் T-killer cells, B cells ஆகியவற்றால் இவற்றை சரியாக அடையாளம் காண முடியவில்லை. இது தான் இந்த வைரசுக்கு எதிராக மருந்தோ தடுப்பு ஊசியோ தயாரிப்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிபது.நாம் உண்ணும் அல்லது ஊசி மூலம் போட்டுக் கொள்ளும் மருந்துகள் உடலுக்குள் சென்றவுடன் வேதியியல் தகவல்களாக மாறித்தான் நோயை ஏற்படுத்தும் கிருமிகளோடு நேரடியாக மோதுகின்றன அல்லது உடலின் Immune system- உடன் பேசி, வேண்டிய எதிர்ப்பு மருந்தை உடலையே தயாரிக்க வைக்கின்றன.* *ஆனால், கொரோனா நமது உடல் எதிர்ப்பு சக்தி சிஸ்டத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றுவிடுவது தான் இந்த வைரசுக்கு எதிராக எந்த மருந்தை வைத்து போராடுவது என்ற குழப்பத்தில் மருத்துவ உலகை ஆழ்த்தியுள்ளது.கொரோனா வைரஸ்களின் கெமிக்கல் தாக்குதல்களால் குழம்பிப்போன T-killer cells, B cells-களும் ஏற்கனவே கொரோனா பாதித்த நுரையீரல்களை மேலும் பாதித்து உலகெங்கும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை, நோய் எதிர்ப்பு சக்தியில் பிரச்சனை உள்ளவர்களில் தான் இந்த உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுகிறது.நல்ல உடல் நிலையில் உள்ளவர்களுக்கு பிரச்சனை குறைவாகவே உள்ளது. உடலில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பெரும் குழப்பத்துக்கிடையிலும் பெரும்பாலான நேரங்களில் நமது உடல் எதிர்ப்பு சக்தி சிஸ்டம் கொரோனா வைரஸை தோற்கடித்துவிடுகிறது.* *நீரிழிவு நோய் உள்ளவர்களின் ரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையால் உடலின் எதிர்ப்பு சக்தி முடக்குகிறது. அதே போல இதயக் கோளாறு, பி.பி உள்ளவர்களின் உடலில் நுண்ணிய ரத்தக் குழாய்கள் போதிய ரத்தத்தை எடுத்துச் செல்வதில் சிக்கல் வருவதால், உடலின் எல்லா பகுதிக்கும் போதி சக்தி கிடைப்பதில்லை, நோய் எதிர்ப்பு சக்தி உள்பட. ஆனால், சர்க்கரை அளவும் பிபியும் மருந்துகள், உடற்பயிற்சி மூலம் கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கு பிரச்சனை இல்லை. இங்கேயும் உடலின் எதிர்ப்பு சக்தி கொரோனாவை தோற்கடித்துவிடுகிறது என்பது தான்* *நல்ல செய்தி.கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிடுவார்களா?* *தெரியவில்லை.* *35 ஆண்டுகளுக்கு முன் வந்த எய்ட்ஸ் நோய்க்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த எச்ஐவி வைரசும் கொரோனா வைரஸ் ரகத்தை சேர்ந்தது தான். அதுவும் நமது உடலின் எதிர்ப்பு சக்தியை கதிகலங்க வைக்கும் வைரஸ் தான்.* *ஆனால், கொரோனா மாதிரி எச்ஐவி இவ்வளவு சாதாராணமாக இருமல், தும்மல் மூலம் எல்லாம் பரவவில்லை. அந்த வகையில் கொரோனா தான் கொடூரம்.* *அதற்குத் தான் வீட்டிலேயே முடங்க சொல்கிறார்கள்.* *இன்னும் மருந்து இல்லாத நிலையில், இந்த நோயில் இருந்து தப்பிப்பதே உசிதம்.இந்த நோய் தாக்குதலை தவிர்ப்பதே இதற்கான இப்போதையே ஒரே மருந்து!*......வாட்ஸ் அப்பில் கிடைத்தது..

கவிமூலம்

சின்னப் பொண்ணு செல்லப் பொண்ணு
உன்னைத் தாண்டிப் போனா
தாண்டிப் போகும் கன்னிப் பொண்ணும்
கண்ண டிச்சுப் போனா
மண்ணை விட்டு விண்ணில் நீயும்
தாவி ஏற மாட்டியா-அந்த
கம்ப னோட மகனைப் போல
மாறிப் போக மாட்டியா ?

இனிய நினைவு உன்னில் பெருக
மகிழ்ந்து நிற்கும் போது
குளிந்த நிலவும் மனதைத் தடவி
கொஞ்சிச்செல்லும் போது
உலகை மறந்து உன்னை மறந்து
பறக்க நினைக்க மாட்டியா-அந்த
உணர்வை கவியாய் சொல்ல நீயும்
முட்டி மோத மாட்டியா ?

வலிமை இருக்கும் திமிரில் ஒருவன்
எல்லை மீறும் போது
எளியோன் தன்னை எட்டி உதைத்து
பலத்தை காட்டும் போது
உதிரம் கொதிக்க கண்கள் சிவக்க
புலியாய் சீற மாட்டியா-அந்த
வலியைச் சொல்ல நாலு வார்த்தை
நீயும் பேச மாட்டியா ?

கண்ணில் காணும் காட்சி எல்லாம்
கனவு போலத் தானே
தண்ணீர் மேலே போட்ட கோலம்
தானே வாழ்வு தானே
உண்மை இதனை உணர்ந்து கொண்டால்
முதிர்ச்சி கொள்ள மாட்டியா-நீயும் 
அந்த  ராமா னுஜனைப் போல
உரத்துக்  கதற மாட்டியா ?

விதையாய் கவிதை அனவரி டத்தும்
நிறைந்து தானே  கிடக்கு
விரைந்து வெளியே  விளைந்து வரவே
தவித்துத் தானே  கிடக்கு
முறையாய் இதனைப்  புரிந்து  கொண்டால்
மட்டும்  போதும் போதுமே--உன்னுள் 
நிறைவாய்க்  கவிதை நூறு  கோடி
தானாய்ப்  பெருகிக் கொட்டுமே  ! 

Tuesday, April 14, 2020

சில கட்டாய விதிகள்..

*அடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி!*

*ஒரே நபர் கொள்கை:* அத்தியாவசியத் தேவைகளுக்காக வீட்டில் இருந்து வெளியே போகும் ஒரு நபரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்... வீட்டின் ஒவ்வொரு தேவையின்போதும் அவர் ஒருவரே வெளியே செல்ல வேண்டும். மற்றவர்களை அவர் உடன் அழைத்துச் செல்வதையோ, அவருக்குப் பதிலாக மற்றவர்கள் செல்வதையோ தவிர்க்க வேண்டும்.

*ஒரே ஆடை:* அப்படி வெளியே செல்லும் நபர், ஒவ்வொரு முறை வெளியே செல்லும்போதும் ஒரே ஆடையை அணிவதை வழக்கமாகக் கொள்ளலாம். அது முழுமையான ஆடையாக இருக்க வேண்டும். இந்த ஆடைகளை மற்ற ஆடைகளுடன் கலந்துவிட வேண்டாம்.

*ஒரே வாலெட்:* வெளியே செல்லும் நபர், ஒரே வாலெட்டைப் பயன்படுத்த வேண்டும். அதில் இருக்கும் பணம், மீதி சில்லறை போன்றவற்றை வீட்டில் இருக்கும் மற்ற பணம், மற்றும் சில்லறைகளுடன் கலந்துவிடக்கூடாது!

*ஒரே பை:* ஒவ்வொரு முறை கடைகளுக்குச் செல்லும்போதும் ஒரே பையை எடுத்து செல்லலாம். வீட்டுக்கு வந்த பின்னர் அந்தப் பையை தனியே வைத்துவிடலாம். வீட்டுக்கு வெளியே வைப்பதற்கு வாய்ப்பு இருந்தால், அங்கேயே வைத்துவிடுவது நல்லது!

*ஒரே வாகனம்:* இன்று பல வீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் இருக்கும் சூழல் இருக்கிறது. ஆனால், இந்த காலகட்டத்தில் வாகனங்களில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்கச் செல்பவர்கள், ஒரே வாகனத்தைப் பயன்படுத்த வேண்டும்

*ஒரே `ஒருமுறை’:* அத்தியாவசியத் தேவைகளுக்காகச் செல்லலாம் என்பதால், ஒவ்வொன்றுக்காகச் செல்லாமல், முறையான திட்டமிடுதலுடன் ஒரே ஒருமுறை மட்டும் வெளியே சென்று வரலாம். அந்த ஒரே பயணத்தில், அனைத்து விதமான பணிகளையும் செய்து முடிக்கும்படி செய்யலாம்!

வெளியே செல்பவர்கள் மொபைல் போனை எடுத்துச் செல்ல வேண்டாம். ஒருவேளை எடுத்துச் சென்றாலும், வெளியே அதைப் பயன்படுத்த வேண்டாம்.

நாம் அதிகம் பயன்படுத்தாத கை அல்லது கை முட்டி கொண்டு கதவுகளைத் திறப்பது, பொத்தான்களை அழுத்துவது போன்ற செயல்களுக்குப் பயன்படுத்துவது சிறந்தது. அந்த கையைக்கொண்டு நம் முகத்தைத் தொடுவதற்கான வாய்ப்பு குறைவு... இதனால் பாதிப்பை நிச்சயம் கட்டுப்படுத்த முடியும்.

வெளியே செல்லும்போது, அத்தியாவசியம் என்றாலும்கூட கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும். விரைவாகப் பணியை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிட வேண்டும்.

*வீட்டுக்கு வந்ததும் செய்ய வேண்டியது:* வெளியே செல்ல பயன்படுத்தப்பட்ட ஆடை, பை, சாவி, வாலெட் முதலிய பொருள்களைத் தனியாக வைக்க வேண்டும். கட்டாயம் மற்ற பொருள்களுடன் கலக்கக் கூடாது. வீட்டில் எந்தப் பொருளையும் தொடுவதற்கு முன்பாக கை மற்றும் முகத்தை நன்றாகக் கழுவிவிட வேண்டும். முன்னரே சொன்னது போல், வெளியே செல்லும்போது மொபைல் போனை தவிர்ப்பது நல்லது. மீறி பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டால், அதை வீட்டுக்கு வந்ததும் சானிடைஸரால் துடைத்துவிட்டுப் பயன்படுத்துவது சிறந்தது.

நன்றி: *விகடன்.*

🌹🌹🌹🌹🌹🌹🌹
பகிர்வதில்
மகிழ்ச்சி.
🌹🌹🌹🌹🌹🌹🌹

நம் நாடே வழிகாட்டி ஆகும்

நித்தம்
உடல்தேடி அலையுதுங்க கொரோனா..நம்ம
ஊரெல்லாம் உலகெல்லாம கொரோனா..அதுக்கு
உடலேதும் கிடைக்காது போனா...அதுவா
உடனழிஞ்சு போகுமுங்க நெஜமா..

அதுக்கு
பணக்காரன் ஏழையென்ற கணக்கோ..பெரும்
முதலாளி தொழிலாளி நெனைப்போ..உசந்த
இனமென்ற  மதமென்ற பிரிப்போ....எதுவும்
இல்லாததே கொரோனாவின் சிறப்பே
                                                                     
நோயாளி
மூனடிக்குள் இருந்தாலே போதும்...முகத்தை
மறைக்காது தும்மினாலே போதும்..தொத்து
நேரடியா நம்மேலே தொத்தும்...பின்னே
நம்மைவச்சு ஊரெல்லாம் சுத்தும்..
                                                                     
தொடர்ந்து
எரிவதற்கு ஏதுமின்றிப்  போனா..எந்த
நெருப்பதுவும் அணைஞ்சுபோகும் தானா..அதுபோல்
பிடிப்பதற்கு உடலின்றிப் போனா...தானே
அடங்கிவிடும் ஒழிந்துவிடும் கொரோனா

அதுக்கு
ஊரடங்கை மதித்திருந்தா போதும்..நாம
வீதிக்கு வராதிருந்தா போதும்...கொரோனா 
வேரற்ற மரம் போல வீழும்...உலகுக்கு நம்நாடே வழிகாட்டி ஆகும்...

Friday, April 10, 2020

ஒன்றுக்குள் ஒன்றுதானா..

குழப்பங்களே கேள்விகளாகிறதா            கேள்விகள்தான் குழப்புகிறதா                                                                                              கேள்விகள்தான் பதில்பெறுகிறதா                  பதில்கள்தான் கேள்விக்குக் காரணமா                                                                                                எளிதானதுதான் புரிகிறதா                          புரிந்ததுதான் எளிதாய்த் தெரிகிறதா                                                                                                  புதிரானதுதான் புரியவில்லையா              புரியாததால் அது புதிராகிறதா                                                                                                                சிந்திப்பது எழுதுவதால்தானா                    எழுதுவதே சிந்திப்பதால் தானா                                                                                                              இருப்பதனால் வாழ்வதுபோல்                            வாழ்வதனால் இருப்பதுபோல்                                                                                                                  இவையெல்லாம் ஒன்றுதானா                    இல்லை ஒன்றிலிருந்து ஒன்றுதானா

Thursday, April 9, 2020

உணர்தலே புரிதலாய்..

பால்மணம் மாறாத
பச்சிளம் குழ்ந்தையை
மடியில் கிடத்தி
ஏதோ பழங்கதையைச்
சொல்லிக் கொண்டிருக்கிறாள்
குடிசை வாசலில் தாய் ஒருத்தி

"இதென்ன கேலிக் கூத்து
இவள் சொல்வது
குழந்தைக்குப் புரியவா போகிறது ?
ஏன் அவளும் கஷ்டப்பட்டு
குழந்தையையும் கஸ்டப்படுத்துகிறாள் ?"
எரிச்சல்படுகிறான்  உடன் வந்த நண்பன்

"தாய்மை உணர்விருந்தால்
புரியும் என்பது
உனக்கும் புரியும்'
இல்லையேல் வாய்ப்பில்லை"
என்கிறேன்

அவன் அலட்சியமாய்ச் சிரிக்கிறான்

வரும் வழியில்
கோவில் வாசலில்
கண்ணீர் மல்க
என்ன என்னமோ
வேண்டிக் கொண்டிருக்கிறான்
பக்தன் ஒருவன்

"இத்தனைப் பக்தர்களையும் தாண்டி
இவன் வேண்டுதல்
ஆண்டவனுக்குத் தெரியப் போகிறதா ?
ஏன் இப்படி
இவனும் கஸ்டப்பட்டு
ஆண்டவனையும் கஷ்டப்படுத்துகிறான் ?"
மீண்டும் ஆதங்கப்பட்டான் நண்பன்

"பக்தி உணர்விருந்தால்
தெரியும் என்பது
உனக்கும் தெரியும்
இல்லையேல் வாய்ப்பில்லை "
என்கிறேன் மீண்டும்

தொடர்ந்து
"இவை இரண்டுக்கும்
ஆதாரமாய்இருக்கும்
ஒரு விஷயம்
கவிதைக்கும் கவிஞனுக்கும் உண்டு
அது குறித்து ஒரு கவிதை
எழுதும் உத்தேசமிருக்கிறது " என்கிறேன்

அவன் சிரிக்கிறான்
"இரண்டுமே அர்த்தமற்றது என்கிறேன்
அதை அர்த்தப்படுத்தும் விதமாய்
ஒரு கவிதை வேறா
அதுவாவது புரிய வாய்ப்புண்டா? "என்கிறான்

"கவி மனம் கொண்டால்
உனக்கும் புரிய வாய்ப்புண்டு
இல்லையேல்  அவைகள் போல்
நிச்சயம் இதற்கும் வாய்ப்பில்லை "
என்கிறேன்

பிரியும் இடம் வர
மெல்ல என்னை விட்டு
விலகத் துவங்குகிறான் அவன்

Wednesday, April 8, 2020

பட்டுப் போன மனம்...


  1. ஈரமிழந்த மரமாய் மனமும்                                மெல்ல மெல்ல                                              பட்டுப் போய்க்கொண்டிருக்கிறது                மனிதாபிமானமிழந்து..                                                                                                        மணத்தையும்   நிறத்தையும்  உணர்ந்து      மலரை எடைபோட்ட மனம்                              இப்போது வியாபார குணம் மிகுந்ததால்  எண்ணிக்கையும்   எடையையும் வைத்தே    மதிக்கப் பழகிக் கொண்டு விட்டது  போலவும்                                                                                                                                      முகமறியா தொடர்பேயில்லா                          ஒருவரின் மரணச் செய்தி கேட்டு                  அதிர்ந்த அதே மனம்                                      இப்போதுஇயலாமையினகாரணமாய் மாலைச் செய்தியில்                                    மரண எண்ணிக்கை அறிய.                          ஆவலாயிருக்கிறது                                              எவ்வித உறுத்தலின்றியும்...