Tuesday, September 22, 2020

முனை சேரா முக்கோணம்.

இறக்கைகள் இன்னும்

கொஞ்சம் வளரணும்

அப்போதுதான்

வெகுதூரம் பறந்து தப்பிக்க இயலும்

என எண்ணியபடி

சீட்டை எடுத்து கொடுத்து

கூண்டுக்குள் அடைந்தது

சோலையை மனதில் கொண்ட

அந்த ஜோதிடக் கிளி...


இறக்கைகள் இன்னும்

கொஞ்சம் வளரணும்

அப்போதுதான்

பிய்த்தெடுக்கத் தோதாகும்

என எண்ணியபடி

சீட்டைப்படிக்கத் துவங்கினான்

கிளிஜோதிடம் தவிர்த்து 

வேறு ஏதும் அறியா 

அந்தக் கிளி ஜோதிடன்


கெட்ட நேரம் விலக

இன்னும் ஆறுமாதம் ஆகும்

அப்போதுதான் நினைத்த காரியம்

பலிதமாகும் என்ற

ஜோதிடனின் வாக்குக் கேட்டு

உடன் போதலை

ஆறுமாதம் தள்ளிப் போடத் தீர்மானித்தாள்

பொறுப்பற்ற பெற்றோருக்குப் பிறந்த

சித்தாள் செண்பகம்

6 comments:

வெங்கட் நாகராஜ் said...

முனை சேரா முக்கோணம் - நல்ல தலைப்பு.

திண்டுக்கல் தனபாலன் said...

ஜோதிடம் இப்படித்தான்...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

மூவரின் முக்கோண சிந்தனைகள் நன்றாக உள்ளது. தலைப்பு வித்தியாசமாக அதே சமயம் பதிவுக்கு பொருத்தமாக பகிர்ந்திருப்பது பாராட்டத்தக்கது.பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Bhanumathy Venkateswaran said...

யதார்த்தம்!

வல்லிசிம்ஹன் said...

வாழ்க்கையின் மாறா சோகம். ஆனால் உண்மை.

Post a Comment