Tuesday, April 23, 2024

சிம்மாசனத்தில் அமர்ந்தும் பிச்சைக்காரனாய்

  மக்கள் மனமறிய

ஒற்றர்படை தேவையில்லை
ஊடகங்கள் போதுமளவு இருக்கிறது

செய்தி கடத்த
புறாக்கள் தேவையில்லை
மின் அஞ்சல் விரல் நுனியில் இருக்கிறது

தூரம் கடக்க
தேர் வேண்டியதில்லை
தூரத்திற்கேற்ற வாகனம் இருக்கிறது

மனச் சொடக்கெடுக்க
நர்த்தகிகள் தேவையில்லை
ஆயிரம் தொலக்காட்சிகள் இருக்கிறது

இருள் நீக்க
தீவட்டிகள் தேவையில்லை
வண்ண விளக்குகள் பரந்து கிடக்கிறது

அதிகாரம்  காட்டச்
செங்கோல் கூடத் தேவையில்லை
வாக்குச் சீட்டு கைவசம் இருக்கிறது

யோசிக்க யோசிக்க
சக்கரவர்த்திகளை அனுபவித்ததை விட
ஆயிரம் வசதிகள் நமக்கிருக்கிறது

ஆயினும்

மனம் மட்டும் ஏன்
சத்திரத்துப்பிச்சைக்காரனாய்
என்றும்  எதற்கோ ஏங்கியே கிடக்கிறது ?

இருப்பதையெல்லாம்
ஒருபக்கம் ஒதுக்கிவிட்டு
பறப்பதை மட்டுமே பார்த்துத் தவிக்கிறது ?

காரணம் அறிந்தால்
திண்ணையில் கிடப்பினும்
மன்னவனாய்  மகிழ்வோடு இருக்கலாமோ ?

இல்லையெனில் நம்நிலை
 சிம்மாசனதிலமர்ந்தாலும்
புத்திகெட்ட ப் பிச்சைக்காரன் நிலைதானோ ?

Saturday, April 20, 2024

அரசியல்..கர்மா..

 😀


*அண்ணாமலை* என்று ஒரு பலமான எதிரியை களமிறக்கியது *கர்மா*


கர்மா பொல்லாதது.. 

அதை வெல்ல யாராலும் முடியாதது.. 

இறைவனே கர்மாவுக்கு கட்டுப்பட்டவன் ..


மறைந்த பிரதமர் இந்திராவால் சஞ்சய்காந்தி அரசியல்வாதியாகப் பயிற்சி பெற்றார். ராஜீவ்காந்தி விமானியாகப் பயிற்சி பெற்றார். ஆனால், ராஜீவ்காந்தி அரசியல்வாதி ஆனார். சஞ்சய்காந்தி விமான விபத்தில் மாண்டார்.


காமராஜர் பதவி இழந்து, அண்ணாதுரை மறைந்த பின் நமக்கு எதிரி யாருமே இல்லை என்று இறுமாந்து இருந்த கருணாநிதிக்கு எம் ஜி ஆரை முன்னிறுத்தியது கர்மா.. அவர் உயிரோடு இருக்கும் வரை கருணாநிதியால் ஆட்சி கட்டிலுக்கு வர முடியவில்லை இதுதான் கர்மா 


எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜானகி அம்மாள் முதல் அமைச்சர் ஆனார், ஆர் எம் வீரப்பன் வசம் அதிகாரம் போய் விடும் என்று எண்ணிய திருநாவுக்கரசு ஜெயலலிதாவை முன்னிறுத்தி அதிகாரத்தை தன் கைக்குள் கொண்டு வந்து விடலாம் என்று எண்ணிய திருநாவுக்கரசு கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் தூக்கி எறியப்பட்டார் இதுதான் கர்மா .


ராமதாஸ்,சசிகலா , வைகோவும் 30 வருடங்களாக முதல்வர் கனவில் இருந்தாங்க... ஆனால்... ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் முதல்வர்கள் ஆகி பிரபலமானார்கள் இதுதான் கர்மா   ...


எம்ஜிஆர், அண்ணாதுரை, காமராஜர் மூவரும் எதிர்பாராத நிலையில் மரணித்தார்கள் பிரபலமாக இருக்கும் போதே...


ராஜீவும், பிரபாகரனும் தங்களின் பிரபல்யம் சறுக்கும் போது மரணித்தார்கள்... அதுவும் வேரொருவரால் கொல்லப்பட்டார்கள்...


ஈவேரா விநாயகர் சிலையை கல் என கூறி தூக்கி ஏறிந்தார்... ஆனால், தனது சிறுநீரகத்தில் உருவான கல்லை கூட தூக்கி எறிய முடியாமல் மூத்திர வாளியோடு சுற்றித்திரிந்தார் இதுதான் கர்மா  ...


ஜெயலலிதா சிறைக்கு போக வேண்டுமென கருணாநிதியும்.... கருணாநிதி பவர் இல்லாமல் நான்கு சுவருக்குள் மடங்கணும்னும் ஜெயலலிதாவும் நினைத்தார்கள்...


ஆனால், கருணாநிதி விருப்பப்படி ஜெயலலிதா சிறை சென்ற போது  அதை உணரும் நிலையில் கருணாநிதி இல்லை. ஜெயலலிதா விருப்பப்படி கருணாநிதி  இறந்த போது ஜெயலலிதாவே உயிருடன் இல்லை.


மெத்தப் படித்த மன்மோகன் சிங், சோனியாவின் கருத்துக்கு பொம்மையாய் ஆடினார்.. ஆனால், ஏதோ படித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு உலகமே ஆடுகிறது...


மன்மோகன் சிங் இரண்டு முறை பிரதமர் ஆக்கிய சோனியா, இந்தியாவே என் குடும்பத்திற்கு சொந்தம் என் மகனை எப்போது வேண்டுமானாலும் பிரதமர் ஆக்கி கொள்வேன் என்று இறுமாப்பில் இருந்த சோனியாவுக்கு மோடி வடிவில் ஆப்பு வைத்தார் கடவுள் இதுதான் கர்மா  


ஜெயலலிதா அம்மையார் மறைந்து சசிகலா முதலமைச்சர் ஆவார் என்று எதிர்பார்த்து, எடப்பாடியார் முதல்வர் ஆனார் இது விதி என்றால்... எடப்பாடியார், சசிகலா தினகரன் என பிரிந்து, தேர்தலில் படு தோல்வி அடைந்து ஸ்டாலின் முதல்வர் ஆகி, இனி எதிரிகள் யாரும் இல்லை நிம்மதியாக ஆட்சி செய்யாலாம் என்று ஸ்டாலின் நினைக்க, அண்ணாமலை என்று ஒரு பலமான எதிரியை களமிறக்கியது கர்மா .. இது தான் கர்மா 


விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தையே அடக்கி ஆள முயல்கிறார்கள்... ஆனால், பூமி இன்று உலகத்தையே முடக்கி நாளுக்கு நாள் மனித வாழ்வுக்கு உகந்த நிலையில் இருந்து விலகிச் செல்கிறது....


கர்மாவானது உங்களுக்கு எதிராக வினையாற்றுவது இல்லை... 


உங்கள் செயல்களுக்கு எதிர்வினையாற்றத் 

தவறுவதும் இல்லை....


உங்கள் செயல்களுக்கான பலனை ஏதோ ஒரு வடிவில் உங்களிடமே சேர்த்து விடும் மிகச்சிறந்த நிர்வாகிதான் கர்மா.


யாரை அலட்சியம் செய்கிறோமோ அங்கேதான் மண்டியிட வேண்டியதும் வருகிறது. கேடு செய்ய யாருக்கு நினைக்கிறோமோ அதே கேடு நமக்கே வருகிறது என்பதை புரிந்து கொள்வோம்.. .


கொஞ்ச நாள் வாழும் வாழ்க்கையில் 

நன்மையை மட்டுமே விதைப்போம்.


நல்லவர்களாக வாழ்வோம்.

கெட்டவன் தானே தன் அழிவை தேடிக் கொள்கிறான். அவனோடு உங்களை கொஞ்சம் கூட ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம்.....


*பாவமன்னிப்பு*  என்ற மதச்சடங்கு, இந்து மதத்தில் இல்லாதது ஏன் தெரியுமா?


பாவங்கள் மன்னிக்கப்படுமானால், பாவிகள், தைரியசாலிகள் ஆகிவிடுவர்.


உணர்ந்தவன் பாக்கியசாலி.... கட்டுப்பட்டவன், புத்திசாலி.. நீங்கள் பாக்கியசாலியா... புத்திசாலியா?..  உங்களுக்கான மதிப்பெண்களை நீங்களே போட்டுக் கொள்ளுங்கள்..... 


வாழ்வில் மறப்போம் மன்னிப்போம் என்ற நல் கொள்கையை பின்பற்றுவோம்  நமது வருமானத்தில் ஓர் மிக சிறிய தொகையினை நம் சமுதாய மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து மகிழ்வோம்.


தயவுசெய்து யாருக்கும் நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள். கர்மா அதனுடைய வேலையை மறக்காமல் செய்யும்.


இறைவனின் ஆசீர்வாதத்தையும் விட  தர்மத்தின் வாழ்த்து மிகவும் சிறப்பானது. தர்மம்-தலைகாக்கும்  தக்கசமயத்தில் துணை நிற்கும்.  கூட இருந்தே குழி பறித்தாலும் செய்த தர்மம் தலைகாக்கும்.      

 

தர்மமானது  நம் வம்ச வழியையும் நல் வழி அழைத்துச் செல்லும்.    

                                                                            பார்ப்போம்...(வாட்ஸ் அப் பகிர்வு )

 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Sunday, April 7, 2024

பயனுள்ள தை பகிரலாமே..

 தமிழ்நாடு அரசின் தோழி பெண்கள் தங்கும் விடுதி


வெளியூரில்  இருந்து சென்னைக்கு அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள மகளிர் விடுதி மாவட்டங்களில் வந்து வேலை செய்து வரும் மகளிருக்கான மாதம் 300 ரூபாய்க்கு ”தோழி பெண்கள் தங்கும் விடுதி”.. தமிழ்நாடு அரசின் புதிய முயற்சி! - முழுவிபரம்

அமைந்துள்ள இடங்கள்:


இவ்விடுதிகள் சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.


வசதிகள்:


சாப்பாட்டு அறை, ஓய்வு அறை, க்ரீச், வைஃபை, ஏர் கண்டிஷனர்கள், லிஃப்ட் வசதி, வாஷிங் மெஷின், அயர்ன் போர்டு, அயர்ன் பாக்ஸ், குளிர்சாதனப் பெட்டியுடன் கூடிய சரக்கறை, மைக்ரோவேவ், வாட்டர் கூலருடன் கூடிய ஆர்ஓ வாட்டர் போன்றவை உள்ளன. அதோடுகூட சிசிடிவி கேமராக்கள் என்று பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 24 மணி நேரம் கண்காணிப்பும் உள்ளது.குடும்பங்கள்/உறவினர்களுக்கு அவ்விடத்தில் தங்குவதற்கான விடுதி வழங்கப்படுவதில்லை.


நேரம்:


இரவு 10:00 மணக்குள் விடுதிக்கு வந்து விடவேண்டும். வெவ்வேறு ஷிப்டுகளில் பணிபுரிபவர்கள் ஷிப்ட் நேரத்திற்கு ஏற்றார் போல விடுதிக்கு வரலாம்.


கூடுதல் விவரங்களுக்கு:


தமிழ்நாடு அரசின் தோழி விடுதிகளில் சேர விரும்பும் பெண்கள் 9499988009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  techexe@tnwwhcl.in என்ற இணையதள முகவரியின் மூலம் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம், மேலும் தேவையான விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.


முழுமையான விவரங்களுக்கு:


http://tnwwhcl.in என்ற இணையதளத்தின் மூலமாக விடுதிகளின் முகவரி, கட்டணம், முன்பதிவு போன்ற  தகவல்களையும் பெறலாம். For புக்கிங் 


https://www.tnwwhcl.in/hostel-details

Friday, March 29, 2024

படித்ததில் பிடித்தது

 ●X: சார்... நான் T. Nagar லேந்து பேசறேன் உங்ககிட்ட, உங்க பொண்ணு கல்யாண விஷயமா பேசணும்.


○Y : நீங்க என் பொண்ணு கல்யாண விஷயமா பேசுறதுக்கு முன்னால, நாங்க எங்க பொண்ணுக்கு எப்படிப்பட்ட, வரனா பார்க்கறோம்ன்னு சொல்றோம்! அப்புறம் நீங்க பேசுங்க.


●X : சார்! கொஞ்சம் பொறுங்க! நான் என்ன சொல்ல வர்றேன்னா...


○Y : நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்... நான் சொல்றதை முதல்லே கேளுங்க! பிறகு நீங்க சொல்லுங்க!...


●X:  சரி! முதல்லே நீங்க என்ன சொல்லனுமோ சொல்லுங்க! அப்புறம் நான் சொல்லறேன்.


○Y : நாங்க எங்க பொண்ணுக்கு 6,5,4,3,2,1 இருக்கிற பையனாக பார்க்கறோம்.


●X : 6,5,4,3,2,1, அப்படின்ன என்ன?


 Y : 6,5,4,3,2,1ங்கறது என்னதுன்னா..


6 ன்ன பையன் 6 டிஜிட்ல சம்பளம் வாங்கனும் அதாவது குறைஞ்ச பட்சம் மாசம் 1லட்சம் சம்பளம் சம்பாதிக்கணும்.


5 ன்ன பொண்ணுக்கு நிச்சயதார்த்தின் போது 5 லட்சத்துக்கு வைர நெக்லஸ் போடணும்.


4 ன்ன, 4 சக்கரம் உள்ள கார், பையன் பேருலே வச்சு இருக்கணும்.


3 ன்ன, மூணு ரூம் உள்ள சொந்த பிளாட் பையன் பேருலே இருக்கணும்.


2 ன்ன, பையனோட அப்பா, அம்மா கல்யாணத்திற்கு பிறகு, 2 பேரும் பையனோட சேர்ந்து இருக்கக்கூடாது.


1 ன்ன, கல்யாணத்துக்கு பிறகு, என் பொண்ணு 1குழந்தை தான் பெத்துப்பா! அதுவும் அவ விருப்பப்படும் போதுதான்.


அப்புறம் எங்களுக்கு பையனை பிடிச்சுடுத்துன்ன, நீங்க பையனோட salary சர்டிபிகேட் "கொடுக்கனும்.


வைர நெக்லஸ் போடறதுக்கு, தகுதி இருக்கான்னு தெரிஞ்சுக்கறதுக்கு, பையனோட பேங்க் ஸ்டேட்மெண்ட் வேணும்.


பையன் பேர்ல இருக்கிற காரோட RC certificate, பிளாட்டோட property document வேணும்.


●X: மேலே சொன்ன விஷயங்களெல்லாம் உங்க பொண்ணு தன்னுடைய கல்யாணத்திற்கு போட்ட கண்டிஷன்களா?


○Y : என் பொண்ணு சின்ன பொண்ணு சார்! அவளுக்கு இதெல்லாம் தெரியாது! ரொம்ப வெகுளியா பழகுவா சார்! இதெல்லாம் நாங்க போடற கண்டிஷன்கள்!

ஒரே பொண்ணு ரொம்பவே செல்லம் கொடுத்து வளர்த்துஇருக்கோம்!" புகுந்த வீட்லே போய் கஷ்டப் படக்கூடாது என்பதற்காக நாங்க போடற கன்டிஷன்கள் இது!

மேலும், அவளுக்கு வாசல் தெளித்து கோலம் போடத்தெரியாது! சமையல் பண்ணத் தெரியாது! லீவு நாளுன்ன 10 மணிக்குத்தான் எழுந்துந்துப்பா, புடவை கட்டிக்கத்தெரியாது! அதனாலே விசேஷங்களுக்கு சுடிதார்தான் போட்டுப்பா!


அப்புறம் இன்னொரு விஷயம்! என் பொண்ணு சுயமரியாதைக்காரி, யார் காலிலேயும் விழுந்து கும்பிடமாட்டா! இதுக்கெல்லாம் நீங்க ok ன்னு சொன்னா மேற்கொண்டு, என் பொண்ணு கல்யாண விஷயமா, என் மனைவி உங்ககிட்ட பேசுவா! 


●X : சார்! எனக்கு நீங்க பேசினதே தலைய சுத்தறது... இதுலே உங்க மனைவி வேறயா? நான் என் பையனுக்கு வரன் தேடலே சார்! 


○Y : அப்புறம் எதுக்கு என் பொண்ணு கல்யாண விஷயமா பேசணும்ன்னு சொன்னீங்க...


●X : என்ன எங்க சார் பேசவிட்டீங்க நீங்க! நான் T Nagar லே இருக்கிற போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பேசறேன்...

உங்க பொண்ணு, இன்னிக்கு உங்க தெரு மெக்கானிக் ஷாப் பக்கத்திலே இருக்கிற ஒரு பையனை காதலிச்சு, தெருமுனையிலே இருக்கிற கோயிலிலே கல்யாணம் பண்ணிட்டு ஸ்டேஷனுக்கு வந்துருக்கா! 


நீங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க

மாட்டீங்க! மேலும் நீங்க உங்க ஊரு சனத்தை கொண்டு கல்யாணம் பண்ணினா இவங்களை பிரிச்சுடுவீங்களாம்! அதனாலே, அவங்க குடும்பம் நடத்தறதுக்கு, போலீஸ் protection வேணும்ன்னு கேட்டு வந்துருக்கா சார்!


○Y : என்னது... என்றவாறே மயக்கமாய் கீழே சாய்கிறார்...

Thursday, March 28, 2024

அமெரிக்கா..ஒரு புலிவால்..

 படித்தேன்- உண்மை- யதார்த்தம்-  பகிர்கிறேன்*


*Ground Reality from a US Citizen:

“ சித்ரா ராகவன்.

உ.எண்.1854.


*இதோ ஒரு புதிய பார்வை - தங்கள் கவனத்திற்கு...


*America ஒரு புலிவால்


நான் சமூக வலைதளங்களில் அமெரிக்காவிற்கு படிக்க சென்ற பெண்/ பிள்ளைகள் திரும்பி வருவதில்லை . பெற்றோரின் கடைசி காலத்தில் அவர்களுடன் வந்து இருப்பதில்லை . அவர்கள் அந்த சௌகரியத்திற்கு பழகி விட்டார்கள் திரும்பி வர மனமில்லை என்று பலர் எழுதுவதை பார்த்திருக்கிறேன்.

 

அவர்கள் நினைப்பது அவர்கள் பணமும் வசதியுமே பெரியது என்று அங்கு போகிறார்கள் என்று.....


*ஆனால் Ground reality வேறு. 


நாணயத்துக்கு 2 பக்கம் உண்டு. 

நான் அவர்கள் பக்கத்தையும் பார்க்க விரும்புகிறேன். 


அவர்களாகவே foreign college க்கு apply செய்து போவதில்லை. நாமதான் அனுப்பறோம். ஆனால் தான் விரும்பிய படிப்பை படிக்க வரும் குழந்தைகளின் student life எப்படிபட்டது தெரியுமா? 

Middle class அப்பாவால் fees boarding கொஞ்சம் கைச்செலவுக்கு மட்டும்தான் பணம் அனுப்பமுடியும். எல்லோருக்கும் scholarship கிடைப்பதில்லை .

*நிறைய குழந்தைகள் பணத்தேவைக்காக அந்த குளிரில் part time வேலை செய்யும். 


*வீட்டில் சாப்பிட்ட தட்டை அலம்பாத பையன் அங்கே hotelல் தட்டை எடுத்து table clean பண்ணுவான். *வீட்டில் துடைப்பத்தை எடுத்து பெருக்காத பெண் அங்கு canteenல் தரைக்கு mop போடுவாள். 


வீட்டு வேலை செய்ய ஆண் பெண் வித்தியாசம் இல்லை என்பதை அம்மா சொல்லி தர மாட்டாள். *அமெரிக்கா சொல்லி தரும். 


Vacationல் அமெரிக்க குழந்தைகள் அவரவர்கள் வீட்டிற்கு போய்விடும்.


உறவினர்கள் யாராவது அமெரிக்காவில் இருந்து அவர்கள் மனது வைத்து நம் குழந்தைகளை ticket வாங்கி அழைத்துக்கொண்டால் உண்டு.


*இல்லையென்றால் homesickல் அம்மாவை நினைத்துக்கொண்டு அழுது கொண்டிருக்கும்.

படிப்பு மிகவும் கடினம். 

நல்ல grade வாங்கவில்லை என்றால் collegeல் திருப்பி அனுப்பி விடுவார்கள். *Tension.


படிப்பு முடிந்தவுடன் ஒரு வருடத்திற்குள்

வேலை கிடைக்கவில்லை என்றால் திரும்பி போக வேண்டும் . பணம் waste. அப்பா மூஞ்சியை திருப்புவார். *Tension.


வேலை கிடைத்தவுடன் 3 வருடத்திற்குள் h1b work visa lotteryல் விழ வேண்டும்.

இல்லாவிட்டால் திரும்பி போக

வேண்டும். *Tension. 


இத்தனையையும் தாண்டி வந்தால் அடுத்தது கல்யாணம். இங்கே வேலை பார்க்க தகுதி உள்ள பெண்/பையன் அல்லது இங்கேயே வேலை பார்ப்பவர்களை பார்க்க வேண்டும்.


இந்தியாவாக இருந்தால் படிப்பு, வேலை, family background பார்த்தால் போதும்.


*இங்கே location, career முக்யம்.

North carolina, south carolina - 

Low cost area. Bay area, California. அதே area வரன்தான் வேண்டும். cost of living அதிகம்.


வேறு state வரன் என்றால் வேலையை விட்டு விட்டு இங்கு வந்து வேலை தேட முடியாது.  

Visa transfer ,amendment என்று ஏகப்பட்ட ப்ரச்னை.


*ஒருசம்பளத்தில் California வில் குடுத்தனம் பண்ண முடியாது.


Minasotta, Detroit, Chicago - snow area- 

Social drinking- NO


பாதி பேர் west coast california Bay areaல் இருப்பார்கள். *அவர்கள் east coast வரன்களை திரும்பி கூட பார்க்க மாட்டார்கள்.


இந்தியாவிலிருந்து பெண்/பையன் கல்யாணம் பண்ணிக்கொண்டு இங்கு வந்தால் அவர்கள் இங்கு வேலை பார்க்க EAD permit உள்ள வரன் வேண்டும். 

வீட்டில் வருடக்கணக்கில் வேலைக்கு போகாமல் உட்கார்ந்து இருக்க முடியாது.

அப்படியே வேலை பார்த்தாலும் dependent visa என்றால் ஒருத்தருக்கு வேலை போனால் அடுத்தவருக்கும் போய்விடும். இப்போதெல்லாம் இந்தியாவிலேயே எல்லா வசதியும் இருப்பதால் கல்யாணம் பண்ணிக்கொண்டு அமெரிக்கா வர யாரும் ஆர்வம் காட்டுவதும் இல்லை.

Citizen வரன்கள் born and brought up in USA வரன்தான் வேண்டும் என்பார்கள்.


*அதற்குள் நிறைய குழந்தைகளுக்குஇந்த ஊர் climate ,தண்ணிக்கு முடி கொட்டிவிடும்.😁


*இதெல்லாம் தெரியாமல் இந்தியாவில் அப்பா அம்மா நட்சத்திர பொருத்தம், ஜாதக பொருத்தம் பார்த்துக்கொண்டு வரும் வரனையெல்லாம் reject பண்ணிக்கொண்டிருப்பார்கள்.😁😁


பிறகு 2 வருடத்திற்கு ஒரு முறைதான் 3 weeks leave கிடைக்கும். 

*இரண்டு குழந்தைகளுடன் ஒருமுறை இந்தியா போய் வந்தால் இரண்டு வருட savings காலி. 


பெற்றோர்கள் இங்கு வரும்போது அவர்களை Nayagara falls, New york, Sanfrancisco, Disneyland என்று சுற்றிக்காட்டிவிட்டு கைநிறைய சாமானும் வாங்கி கொடுத்து அனுப்புவார்கள். 


*வயதான பெற்றோர்களை இங்கே அழைத்துக்கொண்டு வந்து வைத்துக்கொண்டால் life, health, பல்லுக்கு என்று தனித்தனியாக insurance எடுக்க வேண்டும்.


*Insuranceல் cover ஆகாத வியாதி வந்தால் அவ்வளவுதான். சொத்தையே எழுதி வைக்க வேண்டும். 


Doctor appointment கிடைக்க நாட்கணக்கில் காத்திருக்க வேண்டும்.

அதற்குள் ஒண்ணு வந்த வியாதி அதுவாகவே  போய் விடும் அல்லது நாமளே போய்விடுவோம்.


Doctors உம் சனி, ஞாயிறு லீவு எடுப்பார்கள். 

சனி, ஞாயிறு உடம்புக்கு எதுவும் வரக்கூடாது என்று வேண்டிக் கொள்ள வேண்டும். 


Weekdaysல் நட்ட நடு பகல் நேரத்தில் doctor appointment குடுப்பார்கள். அப்போதுதான் இவர்களுக்கு office meeting இருக்கும். அதற்கு நடுவில் நமக்காக வருவார்கள். *அதனால்தான் பணத்தை இந்தியாவுக்கு  அனுப்பி இங்கேயே ராஜ வைத்யம் பார்த்துக்கொள் என்கிறார்கள்.


நினைத்தபோது இந்தியா போக முடியுமா? முடியாது.


சமீபத்தில் அப்பா மறைவுக்கு சொந்த ஊருக்கு போய் வந்த ஒரு பையனை companyல் ஆட்குறைப்பு நடவடிக்கையில் வேலையிலிருந்து தூக்கி விட்டார்கள்.


Survival முக்கியம். வேலை எப்போது போகுமோ என்ற பயத்திலேயே வாழ்க்கையை ஓட்ட வேண்டும். 

இப்போது இந்தியாவிலும் இப்படித்தான்.


Greencard கிடைக்க வருடங்கள் ஆகலாம். 


Coronaவா? 

ஊருக்கு போக முடியாது. 

Stamping வாங்கலையா..... இந்தியா போனால் stamping வாங்காமல் USA க்குள் திரும்ப முடியாது. 

Stamping வாங்க  Indian embassy slotக்கு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். 

நடுவில் அப்பா போனாலோ, அம்மா போனாலோ USA வை விட்டு கிளம்ப முடியாது. 

*ஊரார் சாபத்தையும் வாங்கிக்கொள்ள வேண்டும். 


பெற்றோர்களுக்கு குழந்தைகள் நிலைமை புரிந்தாலும் சுற்றி உள்ளவர்கள் பேசும்போது என்ன செய்வது. 

Society pressure.


சரி. பரவாயில்லை ஊரோடு போய்விடுவோம் என்றால் இங்கேயே பிறந்து வளர்ந்த குழந்தைகள் மக்கர் பண்ணும்.


இந்தியாவுக்கு திரும்பி போவதென்று முடிவு எடுத்தால் வீட்டு கடன், கார் கடன் என எல்லா கடனையும் அடைத்து விட்டு 

எஞ்சிய சொற்ப பணத்தோடு ஊர்போனால் மாசா மாசம் லட்சலட்சமாய் சம்பாதித்தெல்லாம் என்ன செய்தாய் என்று பெற்றோரை அலட்சியம் செய்ததாக சொன்னவர்கள் கேட்பார்கள்.


இந்தியாவுக்கு திரும்பி போனவர்களும் இருக்கிறார்கள். 


அது அவரவர் குடும்ப சூழ்நிலயை பொறுத்தது.


Company மூலமாக onsightல் வந்து போகிறவர்களுக்கு இது பொருந்தாது.


அவர்களுக்கு இந்தியா திரும்பி போனாலும் வேலை இருக்கும்.


இவ்வளவையும் தாண்டித்தான் இங்கு settle ஆனவர்கள் பெற்றோர்களை பார்க்க ஓடி வருகிறார்கள். 

இது அங்கிருப்பவர்களுக்கு புரிவதில்லை.


மொத்தத்தில் அமெரிக்கா புலி வால் பிடித்த கதைதான்.* 

*விடவும் முடியாது. கூடவே ஓடவும் முடியாது.


அட இவ்வளவு கஷ்டம் இருந்தால் அப்படியாவது அமெரிக்கா போகாட்டா என்ன  என்கிறீர்களா???


மற்றவர்கள் நினைப்பது போல் பணம் வசதிக்காக மட்டும் யாரும் இங்கு வருவது இல்லை. இங்கு நிறைய கனவுகளோடு சாதிக்க வந்திருப்பவர்கள் அவரவர் துறையில் சாதித்தும்  இருக்கிறார்கள்.


*இந்த மனித சமுதாயத்துக்கு நாம் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இங்கு படிப்பு/research வசதி வாய்ப்புகள் சற்று அதிகம்.


*சொந்தமாக startup companyகள் ஆரம்பித்து அமெரிக்கர்களுக்கே வேலை கொடுக்கும் கண்ணுக்கு தெரியாத சுந்தர் பிச்சைகள் இங்கு ஏராளம். 


எனக்கு தெரிந்தவர் ஒருவரின் பையன் இங்கு ஆராய்ச்சி படிப்புக்கு வந்து ஒரு குறிப்பிட்ட cancerக்கு மருந்து கண்டு பிடித்து இங்குள்ளவர்களின் பாராட்டை பெற்றிருக்கிறார்.


*வெறும் பணத்துக்காக என்று பொதுவாக முத்திரை குத்தாமல் “”அவர்களின்  கனவுகளையும் நாம் மதிப்போம்

Monday, March 18, 2024

தேர்தல்...

 எங்களூரில் இருபதான ஜாதீயப் பிளவுகள்

கொடிகளின் சலசலப்பில்
எட்டாகச் சுருங்கும்
தேர்தல் புயலில்
கொடிகள் அகோரத் தாண்டவமாடுகையில்
எட்டு
மீண்டும்
இருபதாகிப் பல்லிளிக்கும்

எத்தனைமுறை காவடிஎடுத்தும்
அதிகாரச் சன்னதியின் திரைவிலக்காத
"மூலவர்களெல்லாம்"
"உற்சவ மூர்த்திகளாக" உருமாறி
குடிசை வாயில்களில்
நாளெல்லாம் தவமிருப்பர்

கொள்ளையடித்ததுதானே
கொடுக்கட்டும் என
துண்டுக்குப்பதில் வேட்டியையே
விரித்துக் காத்திருக்கும்
"கெட்டிக்கார" மக்கள் கூட்டம்

கொடுக்கவா செய்கிறோம்
விதைக்கத்தானே செய்கிறோம் என
அதிகாரத் துணையோடு
இரவில் வீடுவீடாக
"கவர்" கொடுத்துப்போகும்
"வெறி" பிடித்த வேட்பாளர்கள் கூட்டம்

அணில்களும் பட்டாம்பூச்சிகளும்
நேரம் சரியில்லை என
வீதி விட்டு ஒதுங்கி
வீட்டு மூலைகளில்
'முக்காடிட்டு' அமரும்

பாம்புகளும் ஓநாய்களும்
பொந்து விட்டு வெளியேறி
வீதிகளில்
"விட்டேத்தியாய்" உலா வரும்

துண்டு இழந்து வேட்டி இழந்து
அம்மணமானது தெரியாமல்
வார்த்தை ஜாலங்களில்
வான வேடிக்கைகளில்
மெய் மறந்து நிற்பர்
'திருவாளர்' பொதுஜனம்

நானே பெரும்பூதம்
நானே கருப்பணசாமி என
உறியடித்து
தீவட்டி சாட்டைகளோடு
ஊர் மிரள
ஊர் வலம் வந்து. . . .பின்
சிறிய தீய ஜந்துக்களுக்குக் கூட
சிறு தீங்கும் செய்யாது
மீண்டும் மலையேடறிப் போகும்
அதிகாரமிக்க 'ஆணையம்'
 
(ஐம்பதாண்டுகளுக்கு‌ முன்னால் சிகரம் முற்போக்கு மாத இதழில் நான் எழுதியது.திருத்தம் ஏதும்‌ செய்ய வேண்டி‌இல்லாது  சூழல் அப்படியே இருப்பது ஆச்சரியமே.  )

Sunday, March 17, 2024

யாதோ...

 கவிஞனாக அறிமுகமாயிருந்த 

என் நண்பனிடம்தான்
முதன் முதலாக
என் படைப்புகளைக் கொடுத்தேன்
பாதிபடிக்கும் வரை சமநிலையில் இருந்த 
அவன் முகம்திடீரெனக் சுருங்கத் துவங்கியது 

"கவிதைக்குரிய எந்தக் கூறும் இ ல்லை
இதை சரி செய்வதற்கான வாய்ப்பும் இல்லை
எந்தத் தைரியத்தில் என்னிடம் வந்தாய்" என்றான்
"என்ன செய்யலாம்" என பயந்த படி கேட்டேன்
"வேண்டுமானால் கட்டுரையாளரை சந்தித்துப் பார்
அவர்கள் தான் எதையும் ஒப்புக் கொள்வார்கள்"
 என்றான்

கட்டுரையாளரைச் சந்தித்தபோது அவர்
புத்தகத்தில் புதைந்து கிடந்தார்
படைப்பினில் பாதி கடக்கும்போதே
அவர் உடல் குலுங்கத் துவங்கியது
சப்தம் போட்டுச் சிரித்தபடி சொன்னார்
"கட்டுரைக்குரிய எந்த லாஜிக்கும் இல்லை
உனக்கு போதிய பயிற்சியும் இல்லை" 
என்றார்

"இதை என்ன செய்வது" என்றேன்
"வேண்டுமென்றால் கதாசிரியரிடம் போ 
அவர்கள் தான் எதையும் 
சரி பண்ணத் தெரிந்தவர்கள்" என்றார்

எழுதியபடியே இருந்த கதாசிரியர்
என்னைப் பார்ப்பதற்கே அரை மணி நேரம்  ஆனது
நம்பிக்கை இழந்த நிலையில்
என் படைப்புகளை அவரிடம் நீட்டினேன்
"அங்கே வைத்து விட்டுப் போ நாளை வா" 
என்றார்

அரசமரத்தடி பிள்ளையாரை
மௌனமாய் வேண்டியபடி
மறுநாள் அவரைப்  பயத்துடன் பார்த்தேன்
அவர் மேசையில் என் படைப்பு இல்லை
தூரமாய் கூடைக்கருகில்
குப்பை போல் இருந்தது

"கதைக்கு அவசியம் கரு வேண்டும்
உணரும்படியாகவும் ரசிக்கும்படியாகவும் 
நிகழ்வுகள் வேண்டும்
கொஞ்சம் கொஞ்சமாய் வளர்பிறை போல்............"
இன்னும் என்னென்னவோ சொன்னார்
எனக்கு எதுவுமே விளங்கவில்லை

முடிவாக

"இதனை இப்படியே கட்டி மூலையில் வை
ஓராண்டு தொடர்ந்து படி
பின்னர் முயற்சி செய்து பார்" என்றார்
"நல்லது" எனச் சொல்லி நொந்தபடி
நடுவீதிக்கு வந்தேன்

"கைகளில் என்ன பார்சல்"
இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்"
 என்றான்எதிரில் வந்த
பத்தாம் வகுப்பில்தமிழில்
 முப்பது மதிப்பெண்களே எடுத்ததால் 
படிப்பிற்கே முழுக்குப் போட்ட
என் பால்ய நண்பன்.
"எழுத்தில் ஆர்வம் 
கொஞ்சம் எழுதியிருக்கிறேன்
இது எதில் சேர்த்தி என தெரியாமல் 
அலைகிறேன்" என்றேன் பயந்தபடி

"பிள்ளையை பெற்று விட்டு
பேருக்காக அலைகிறாயா" என்றவன்
ஆவலாய் அதனைப் பிடுங்கி
அவசரம் அவசரமாய் படிக்கத் துவங்கினான்
ஒவவொரு பக்கம் முடிய முடிய
"பேஷ் பேஷ்" என்றான்
அவன் முகம் ப்ரகாசமாகிக் கொண்டே போனது
எனக்குள் பயம் அதிகமாகிக் கொண்டே போனது

"நான் கிளம்பலாம் என நினைக்கிறேன்" 
என்றேன் மெதுவாக
கொஞ்சம் பொறு இன்னும் இரண்டு பக்கம் தான்"
 என்றான்
முதன் முதலாக
எழுத்தின் மீது நான் கொண்ட காதலுக்காகவும்
இதை எழுதியதற்காகவும் மனம் நொந்து அழுதேன்
திடுமென என் தோளைத்  தட்டியபடி
"பிரமாதம்" என்றான்

தமிழில் தோற்றவனா என் எழுத்தை
ஏற்க வேண்டும்
எல்லாம் தலை விதி என்று நொந்து
"எப்படி" என்றேன்

"உன்னை பாதித்தவைகளை எழுதியிருக்கிறாய்
படிப்பவரை பாதிக்கும்படியும் எழுதியிருக்கிறாய்
குறிப்பாக புரியும்படியும் எழுதியிருக்கிறாய்
நோகாமல் தேன் கிடைப்பது சுகம் இல்லையா" 
என்றான்
அவனை அதிசயமாய் பார்த்து 
அச்சத்துடன் கேட்டேன்
"இது எதில் சேர்த்தி"

அவன் அமர்க்களமாய் ஆரம்பித்தான்
"சங்க காலங்களில் எழுதியவர் பெயர் தெரியாத
எத்தனையோ நல்ல கவிதை கள் கிடைத்தன
அவைகளை புறக்கணித்தா விட்டோம்
எழுதியவரை  " யாரோ "
எனச் சொல்லி சேர்த்துக் கொள்ளவில்லையா"
 என்றான்
நான் அமைதியாய் இருந்தேன்

எழுதியவர் பெயர் தெரியாதபோது
பெயரை" யாரோ "எனக் கொள்ளுதல் போல
எழுதியது எதனுள்ளும் அடங்காத போது
அதன் பெயர்" யாதோ" என்றான்

போதி மரத்து புத்தன் போல்
என் முன் அவன் பிரசன்னமானான்
எனது சிந்தனைகளை
இப்போதெல்லாம்
ஒரு வகைக்குள்ளோ
ஒரு வரையரைக்குள்ளோ
சிறை பிடித்துக் கொள்ளுவதேயில்லை
இப்போதெல்லாம் நான்
கதை கட்டுரை கவிதைப் பக்கம்
தலை வைத்துப் படுப்பதே இல்லை
நான் எழுதுவதெல்லாம்" யாதோ" தான்


Wednesday, March 13, 2024

டைம் பேங்க்..

 படித்ததில் பிடித்தது வியந்தது❤️😮


சுவிட்சர்லாந்தில் படிக்கும் ஒரு கல்லூரி மாணவர் எழுதுகிறார்:


சுவிட்சர்லாந்தில் படிக்கும் போது கல்லூரிக்கு அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தேன்.

வீட்டு உரிமையாளரான கிறிஸ்டினா 67 வயதான ஒற்றை வயதான பெண்மணி, அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

சுவிட்சர்லாந்தின் ஓய்வூதியம் மிகவும் நன்றாக உள்ளது, அவளது பிற்காலத்தில் உணவு மற்றும் தங்குமிடம் பற்றி கவலைப்படாமல் இருந்தால் போதும்.

இருப்பினும், அவள் உண்மையில் "வேலை" கண்டுபிடித்தாள் - 87 வயதான ஒற்றை முதியவரை கவனித்துக் கொள்ள.

அவள் பணத்திற்காக வேலை செய்கிறாளா என்று கேட்டேன்.

அவளுடைய பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது:

"நான் பணத்திற்காக வேலை செய்யவில்லை, ஆனால் எனது நேரத்தை 'டைம் பேங்கில்' வைக்கிறேன், மேலும் எனது வயதான காலத்தில் என்னால் நகர முடியாதபோது, நான் அதை திரும்பப் பெறலாம்."

"டைம் பேங்க்" என்ற இந்த கான்செப்ட்டைப் பற்றி நான் முதன்முதலில் கேள்விப்பட்டபோது, நான் மிகவும் ஆர்வமாக இருந்ததால், வீட்டு உரிமையாளரிடம் மேலும் கேட்டேன்.

அசல் "டைம் பேங்க்" என்பது சுவிஸ் மத்திய சமூகப் பாதுகாப்பு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட முதியோர் ஓய்வூதியத் திட்டமாகும். மக்கள் இளமையாக இருக்கும்போது முதியவர்களைக் கவனித்துக்கொள்வதில் 'நேரத்தை' மிச்சப்படுத்துகிறார்கள், மேலும் அவர்கள் வயதாகும்போது, நோய்வாய்ப்பட்டால் அல்லது கவனிப்பு தேவைப்படும்போது அதைத் திரும்பப் பெறலாம்.

விண்ணப்பதாரர்கள் ஆரோக்கியமாகவும், தொடர்புகொள்வதில் நல்லவர்களாகவும், அன்பு நிறைந்தவர்களாகவும் இருக்க வேண்டும். உதவி தேவைப்படும் முதியவர்களை அன்றாடம் கவனிக்க வேண்டும்.

அவர்களின் சேவை நேரம் சமூக பாதுகாப்பு அமைப்பின் தனிப்பட்ட 'நேர' கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும்.

அவள் வாரத்திற்கு இரண்டு முறை வேலைக்குச் சென்றாள், ஒவ்வொரு முறையும் இரண்டு மணி நேரம் வயதானவர்களுக்கு உதவினாள், ஷாப்பிங் செய்தாள், அவர்களின் அறைகளைச் சுத்தம் செய்தாள், சூரிய குளியலுக்கு அழைத்துச் செல்வாள், அவர்களுடன் அரட்டையடித்தாள்.

ஒப்பந்தத்தின்படி, அவரது சேவையின் ஒரு வருடத்திற்குப் பிறகு, *"டைம் பேங்க்"* அவள் பணிபுரிந்த மொத்த காலத்தைக் கணக்கிட்டு, அவளுக்கு "டைம் பேங்க் கார்டை" வழங்கும்.

மேலும், அவளைக் கவனித்துக் கொள்ள யாராவது தேவைப்படும்போது, "நேரம் மற்றும் நேர வட்டியை" திரும்பப் பெற அவள் "டைம் பேங்க் கார்டை" பயன்படுத்தலாம். முறையான சரிபார்ப்புக்குப் பிறகு, "டைம் பேங்க்" மற்ற தன்னார்வலர்களை மருத்துவமனையில் அல்லது அவரது வீட்டில் கவனித்துக் கொள்ளும்.

ஒரு நாள், நான் கல்லூரியில் இருந்தேன், வீட்டு உரிமையாளர் ஜன்னலைத் துடைக்கும் போது அவள்  விழுந்ததாகச் சொன்னாள்.

நான் அவசரமாக விடுப்பு எடுத்து அவளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினேன்.

வீட்டு உரிமையாளருக்கு கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சில நாட்கள் படுக்கையில் இருக்க வேண்டியிருந்தது.

நான் அவளைக் கவனித்துக் கொள்ள ஒரு வீட்டிற்கு விண்ணப்பிக்கத் தயாராகிக்கொண்டிருந்தபோது, அவளைப் பற்றி நான் கவலைப்படத் தேவையில்லை என்று அவர் உறவினர் என்னிடம் கூறினார்.

அவள் ஏற்கனவே "டைம் பேங்க்" க்கு திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை சமர்ப்பித்திருந்தாள்.

நிச்சயமாக, இரண்டு மணி நேரத்திற்குள் "டைம் பேங்க்" ஒரு நர்சிங் தொழிலாளியை வந்து வீட்டு உரிமையாளரைக் கவனித்துக் கொள்ள அனுப்பியது.

நர்சிங் தொழிலாளி தினமும் வீட்டுப் பெண்ணை கவனித்து, அவளுடன் அரட்டையடித்து, அவளுக்கு சுவையான உணவைச் செய்தார்.

நர்சிங் தொழிலாளியின் உன்னிப்பான கவனிப்பில், வீட்டுப் பெண் விரைவில் குணமடைந்தார்.

குணமடைந்த பிறகு, வீட்டு உரிமையாளர் "வேலைக்கு" திரும்பினார். தான் ஆரோக்கியமாக இருக்கும் போதே "டைம் பேங்க்" இல் அதிக நேரத்தை மிச்சப்படுத்த விரும்புவதாக அவர் கூறினார்.

இன்று, சுவிட்சர்லாந்தில், முதுமையை ஆதரிக்க "டைம் பேங்க்" பயன்படுத்துவது பொதுவான நடைமுறையாகிவிட்டது.

சுவிஸ் அரசாங்கம் "டைம் பேங்க்" திட்டத்தை ஆதரிக்கும் சட்டத்தையும் இயற்றியது.


நம்ம நாட்டுலயும் இப்படி திட்டம் இருந்தா நல்லா இருக்கும்ல!(இதை நாம் வேறுவிதமாக  புண்ணியத்தை சேர்க்கச் சொல்கிறோம்...அது டைம் பேங்கை விட அனைத்து விதத்திலும் சிறந்து இல்லையா )

Monday, March 11, 2024

படித்ததில் பிடித்தது

 ஒருவேளை வனவாசம் படிக்காமல் இருந்திருந்தால் அண்ணாதுரையை பேரறிஞர் அண்ணா என்றும் கருணாநிதியை கலைஞர் கருணாநிதி என்றுமே நம்பிக்கொண்டிருந்திருப்பேன்-


ஒருவேளை "வந்தார்கள் வென்றார்கள், சென்றார்கள்" படிக்காமல் இருந்திருந்தால் இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய மன்னர்களெல்லாம் அற்புதமானவர்கள் என்றும் பாபர் காலம் பொற்காலம், அக்பர் காலம் பொற்காலம் என்றே நம்பிக்கொண்டிருந்திருப்பேன்-


பூலித்தேவன் முதல், அழகுமுத்துக்கோன் வேலுநாச்சியார், கட்டபொம்மன் மருதுபாண்டியர்,வீரவாஞ்சி, பாரதியார், வ.உ.சி, சுப்ரமணியசிவா, நேதாஜி, ஜான்சிராணி போன்ற என்னற்ற வீரர்களின் தியாக, போராட்ட வலராறுகளைப் படிக்காதிருந்தால் வெள்ளையர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்காகத்தான் இங்கே ஆண்டார்கள் என்றும் கூட நம்பவைக்கப்பட்டிருப்பேன் -


இவை எதையுமே தெரியாமல் இங்கே வாழும் மக்கள்தான் அதிகம் -


கல்வியறிவு பெருமளவில் இல்லாமலிருந்த மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு இருந்த நாட்டுப்பற்று, ஆன்மிகப்பற்று, போராடும் வீரம் சுதந்திரத்திற்குப் பிறகு இன்று பெருமளவிற்கு மக்கள் கல்வியறிவு பெற்றும் கூட இல்லாமல் போனதற்குக் காரணம் இந்திய அளவில் கல்வித்துறையில் பெருமளவிற்கு ஊன்றிவிட்டிருக்கும் கம்யூனிஸ, மிஷநரிக் கூட்டங்களே -


இந்த நாட்டில் நம்மை அடிமைப்படுத்திய கொடுங்கோலர்களின் வரலாற்றை அவர்கள் செய்த கொடுமைகளை மறைத்து அவர்களை தேவதூதர்கள் என்று நம்மிடம் நம்பவைத்துள்ளனர் -


உதராணமாக தளராத முயற்சிக்கு உதாரணமாக கஜினி முகம்மது 17 முறை படையெடுத்தான் என்று மட்டுமே பதியப்பட்டுள்ளது ஆனால் 17 முறையும் கொள்ளையடிக்க மட்டுமே வந்தான், பல லட்சம் மக்களைக் கொன்றான், பல நூறு கோவில்களை இடித்தான் என்ற வரலாறு எங்குமே காணோம் -


அதே கஜனி முகமதுவின் சொந்த நாடான ஆப்கானில் அவனது கல்லறை இருக்கும் இடம் கூட இன்று யாருக்கும் தெரியாது -

(பல கோவில் சொத்துக்களைக் கொள்ளையடித்த அவனது நாடு இன்று பிச்சைக்கார தேசமாக இருப்பது இறைவன் செயல்)-


இந்தியாவின் இருப்புப்பாதைகளின் தந்தை என்று லார்ட் டல்ஹொசி பெயரைப் படித்திருப்போம், ஆனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் வளங்களை வேகமாகக் கடத்துவதற்காக மட்டுமே அவன் இருப்புப்பாதைகளை அமைத்தான் என்பதுதான் உண்மை -

உதாரணமாக இருப்புப்பாதையே இல்லாத மூனாறு -தேனி இடையே அவன் அந்தக்காலத்திலேயே பாதை அமைத்தது மூனார் பகுதிகளில் அதிக அளவில் கிடைக்கும் தேயிலை மற்றும் ஏலம் போன்ற பணப்பயிர்களைக் கடத்தத்தான் -


இவற்றையெல்லாம் மறைத்து நம்மை முட்டாள்களாக்கியது -


சுதந்திர இந்தியாவில் 35 வருடங்கள் தொடர்ச்சியாக கல்வி அமைச்சர்களாக இருந்தவர்கள் இஸ்லாமியர்கள், திராவிடக் கட்சிகளுக்குப் பிறகு 50 ஆண்டுகளாக தமிழக கல்வித்துறையில் வியாபித்து வரும் கிறிஸ்தவர்கள் -


இவற்றையெல்லாம் மாற்றியமைத்து பழம்பாரதத்தின் பெருமைகளையும், பழந்தமிழர் வீரத்தையும், அறிவையும், ஆன்மீகத்தையும் மீட்டெடுக்க -


இங்கே, திராவிடக் கட்சிகள் முற்றிலும் களையப்பட்டு தேசிய, தெய்வீக சிந்தனையுள்ள கட்சிகளின் ஆட்சி அமையவேண்டும் -Mk😍

Sunday, March 10, 2024

ஹாப்பி ஸ்ட்ரீட்????

பெ ரிய பெரிய கிரிமினல் விசயங்கள் தான் மிகவும் நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அப்படியான ஒன்று தான் ” ஹாப்பி ஸ்ட்ரீட் ”.  இதைப் படிச்சா உங்க குடும்பத்திற்கு நல்லது.


ஹாப்பி ஸ்ட்ரீட் என்றவுடன், ஏதோ கலாச்சார சீரழிவு என்று நினைத்துக் கொண்டு கலிகாலம்டா என்று தலையில் அடித்துக் கொண்டு போய் விடுகிறோம். ஆனால், அது லெஃப்ட்ல போட்ட இண்டிகேட்டர். நிஜத்தில் வலதுபுறமா கூட்டிட்டுப் போய் போதைப் பொருள் விற்கும் தளம் அது!


மனிதர்களுக்கு பொதுவாகக் கொண்டாட்ட மனநிலை தேவைப்படுகிறது. பண்டிகைகள் / கோவில் திருவிழாக்கள், நண்பர்களுடன் கூடிக் கும்மாளம் போடுவது, அவ்வளவு ஏன்.... ஞாயிற்றுக் கிழமை கறி எடுத்து குடும்பத்துடன் சேர்ந்து புசிப்பது கூட கொண்டாட்ட மனநிலை தான். இது தனிமையில் கிடைக்காது. குறைந்தபட்சம் சிறு கூட்டம். வாய்ப்பு கிடைத்தால் பெருங்கூட்டம். 


கொஞசம் யோசித்துப் பாருங்கள்... நியூ இயர் கொண்டாட்டம் என்பதில் என்ன நடக்கிறது? யாரும் யாருக்கும் வாழ்த்து சொல்லிக்கலாம். ஆரவாரமாக எந்த கூச்ச நாச்சமும் இல்லாமல் கெட்ட வார்த்தைகளில் கூட கத்திக் கொள்ளலாம். வாகனங்களை கட்டுப்பாடின்றி ஓட்டிக் கொள்ளலாம். குடித்து விட்டு பொது நாகரீகம் இல்லாமல் அலையலாம். ஏன் பொதுவிடத்திலேயே குடிக்கலாம். இதெல்லாம் கூட்டமாகச் செய்யும் போது குற்றவுணர்வின்றி போகும். 

எல்லாரும் செய்வதால் தவறில்லை என்ற மாயை. எல்லாரும் செய்றாங்க நானும் செய்றேன். 


இப்ப புரியுதா...? கூட்டமா செய்யும் போது சமூக பயம் , சமூக ஒழுங்கு, கட்டற்ற கொண்டாட்ட மனநிலை. 


சரி, ஹாப்பி ஸ்ட்ரீட்டுக்கும், போதைப் பொருள் விற்பனைக்கும் என்ன சம்பந்தம்? 


முதலில் பெரிய ஸ்பீக்கர் வைத்து இளைஞர்களின் தினவுக்கு இரையாக ஆடச் செய்வர். ஆண்களுக்கு பெண்கள் முன் வித்தையைக் காட்டவும், பெண்களுக்கு ஆண்கள் முன் ஈர்ப்பைக் காட்டவும், ஆட்டத்தில் உற்சாகமும், அதீத கொண்டாட்டமும் பொங்கும். நிகழ்ச்சி முடிந்ததும், ஏதோ பெரிதாகக் கொண்டாடியது போன்ற ஒரு மகிழ்ச்சி உருவாகும். 


அடுத்து....?


நாமெல்லாம் நண்பர்களுடனோ சில குடும்பங்கள் சேர்ந்தோ டூர் போய்விட்டு திரும்பும் போதே... அடுத்து எங்கே போகலாம் என்று திட்டமிடுவோம் இல்லையா? அதே போல அடுத்த ஹாப்பி ஸ்ட்ரீட்டிற்கு இப்படி போகணும், அவனையும் கூப்பிடணும் லைட்டா சரக்கு அடிச்சுட்டுப் போனா கூடுதல் மஜாவா இருக்கும் என்றெல்லாம் திட்டம் எழும்.  அடுத்த சில நாட்களுக்கு ஹாப்பி ஸ்ட்ரீட்டில் ஆடியதை எல்லாம் சற்றே மிகைப் படுத்தி நண்பர்களிடம் பகிரப்படும். ஹாப்பி ஸ்ட்ரீட்டுக்குப் போகாதவனெல்லாம் சமகால இளைஞன் அல்ல என்பதாக சித்தரிக்கப்படும். 


அடுத்த ஹாப்பி ஸ்ட்ரீட்டில் சீனியர்கள் சரக்கடித்து விட்டு வந்திருப்பார்கள். உடன் வந்த குடிப்பழக்கம் இல்லாத பெண்களை, “இன்று மட்டும் கொஞ்சமா” என்று வற்புறுத்துவார்கள். அவர்களும், அவர்கள் வற்புறுத்துவதால் மட்டும் என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு குடிக்கத் தொடங்குவார்கள். இதன்... நீண்ட நாள் இலக்காக...


இந்தக் கூட்டத்திற்குள் ஒருவன் நுழைந்து ஒரு ஸ்டஃப் இருக்கு பாஸ்... யூஸ் பண்ணிப் பாருங்க என்று ஒரு பணக்கார இளைஞனை இழுப்பான். முதலில் ஓசியாக... பிறகு ஷேரிங்காக, அப்புறம் அவனவன் காசில், பிறகு ஸ்டஃப் கிடைக்கவில்லை என்று டிமாண்ட் கூட்டி... வேண்டுமென்றால் கொஞ்சம் மொத்தமாக வாங்கணும். இன்னும் நாலைந்து பேர் ஷேர் பண்ணினால் தான் என்று இன்னும் இளைஞர்களை உள்ளிழுப்பார்கள். இது தான் எல்லா தேசத்திலும் போதை விற்பனை ஆசாமிகளின் சேல்ஸ் டெக்னிக். 


நம்பாதவர்கள் ஹாப்பி ஸ்ட்ரீட் ஸ்பான்சர்களின் நெட்வொர்க்கை தேடிப் பாருங்கள். 


ஒன்று பத்தாகும், பத்து ஆயிரமாகும்.  நாளைக்கு பிடிபடுபவர்கள் எல்லாம் சமூகத்தில் பொருளாதார பெருசுகளாக இருப்பதால், பணத்தை விட்டெறிந்து ரகசியம் காப்பார்கள். இந்த போதைப் பழக்கம் நடுத்தரக் குடும்பத்திற்குள் நுழையும் போது, பணத் தட்டுப்பாட்டால், வழிப்பறி திருட்டு, கொலை வரை சர்வசாதாரணமாகி விடும். 


எச்சூச்மீ.... உங்க வீட்ல இளம் வயதினர் இருக்காங்களா? ஹாப்பி ஸ்ட்ரீட் பத்தி பேசத் தொடங்கும் போதே செருப்பால் அடித்து அடக்கி வச்சுடுங்க. புள்ள முக்கியமா இல்ல அதோட பிடிவாதம் முக்கியம்


இந்த பதிவை உங்கள் குழுவில்/நண்பர்களுடன் பகிருங்கள்.

Tuesday, March 5, 2024

சுய பரிசோதனை.

மறுக்க முடியாத, மூடி மறைக்க முடியாத எதார்த்தத்தை பற்றிய சுயபரிசோதனையில் தமிழ்நாடு....


கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் மிக சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது... 


இதை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் அனுபவித்திருப்போம்...


ஒரு பக்கம் வேலை இல்லை என்று திண்டாட்டம்..


இன்னொரு பக்கம் வேலைக்கு சரியான ஆள் கிடைக்கவில்லை என்று திண்டாட்டம்... 


எந்த படிப்பு படித்தவனுக்கும் நல்ல வேலை கிடைக்கவில்லை என்ற புலம்பல்..


எந்த தொழில் நடத்தவும் சரியான ஊழியர்கள் கிடைக்கவில்லை என்ற விசும்பல்... 


பல தொழில் நிறுவனங்கள் சிறிய மற்றும் பெரிய முதலீடுகளில் தொடங்கப்பட்ட வேகத்தில் மூடப்படுகின்றன... 


எங்கு பார்த்தாலும் "எந்த பிசினசும் சரியில்லைங்க" என்ற பேச்சுகள்...


இதற்கு பின்னணியில் என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் என்பதை நண்பர் ஒருவர்

அனுப்பியுள்ள செய்தி......


1. மது & போதை

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை இலைமறை காய்மறையாக இருந்த மதுப்பழக்கம்...


இப்போது காபி, டீ போல சாதாரண ஒன்றாகிவிட்டது... 


தினமும் மாலை ஆகிவிட்டால் பாட்டிலை தொடாமல் இருக்க முடியாது...


என்கின்ற நிலையில் மிக அதிக எண்ணிக்கையில் ஆண்களும்...


 அவர்களுக்கு போட்டியாக....

 பெண்களும் மது பழக்கத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்...


 உலகிலேயே திறன் வாய்ந்த பணியாளர்கள் இருந்த தமிழகத்தில்...


 இன்று குடிகார்ர்கள் நிறைந்து , 

உற்பத்தி திறன் (productivity) மிகவும் குறைந்துவிட்டது... 


குடி நோயாளிகளால் எந்த வேலையையும் நேர்த்தியாகவோ , குறிப்பிட்ட பணி நேரத்திலோ... 

செய்ய முடிவதில்லை.. 


குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள், 

கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுவோரால் சராசரி 8 மணிநேர பணியை கூட செய்ய முடிவதில்லை... 


அதிகம் போனால் 4 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.. அதற்கு 1000 கூலி கேட்கின்றனர்...


 வீட்டுக்கு 500, தனக்கு இருவேளையும் மது , சிகரெட் உள்ளிட்டவற்றுக்கு 500 என்று... 


இது மட்டுமல்லாமல் மலட்டுத்தன்மை, பாலியல் குறைபாடுகள் ஏற்பட்டு, முறையற்ற உறவுகள் பெருகுவதும்,...


இதனால் கவனிக்கப்படாத குழந்தைகள் சமூகவிரோதிகளாகவும் உருவாகும்...


மிகப்பெரிய ஆபத்தை நோக்கி நம் தமிழகம் வேகமாக பயணித்துக்கொண்டு இருக்கிறது...


2. 2009-11 காலகட்டத்தில் நிலவிய அபரிமிதமான மின்வெட்டினால்....

 பல சிறு,குறு தொழில்கள் முற்றிலும் நசிந்து....

 அவர்களில் பலர் வெளி மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்தனர். 


சிலர் வேறு வேலைகளுக்கு சொற்ப சம்பளத்திற்கு சென்றனர்.. 


சிலர் கவலையில் குடி நோயாளிகளாகிவிட்டனர்...


 மின்சாரம் சீரடைந்த பின்னரும் தொழில் தொடங்க பயந்து பணிக்கு செல்வதே பாதுகாப்பானது என்று இருப்பவர்களும் உண்டு.


3. நூறுநாள் வேலை..


இந்த திட்டம் விவசாயம் உள்ளிட்ட எவ்வித வாழ்வாதாரமுமே இல்லாத மாவட்டங்களுக்கு அவசியம் தேவை...

ஆனால் .... 

தமிழகத்தில் பெரும்பகுதி மாவட்டங்கள் ஓரளவு வளர்ந்தவை.. 


இங்கு இத்திட்டத்தை முறையான திட்டமிடல் இல்லாமல் செயல்படுத்தியதால்...


 காலை 10 மணிக்கு போய்விட்டு 2 மணிக்கு வந்துவிடலாம், 

வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்


வேறு எந்த வேலையும் இல்லை.. 150 அக்கவுண்டுக்கு வந்துவிடும் என்ற நிலையால்....


சிறிய டீக்கடைகள் முதல் பெரிய நிறுவனங்களில் அடிநிலை உதவியாளர் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் தடுமாறும் நிலை ஏற்பட்டது...


4. இலவசங்கள்...

அரசு தரும் இலவச பொருட்களும், 

ஊரக வேலைவாய்ப்பு திட்டமும்... 

 மக்களை உழைக்க விரும்பாத, 

சும்மாவே காசு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் சோம்பேறிகளாக்கிவிட்டனர்..


5. நம் கல்விமுறை மற்றும் கல்வியின் தரம்..

அது பட்டதாரிகளை (scholars) உருவாக்குகிறதே தவிர திறன்மிக்கவர்களை (skilled) உருவாக்குவதில்லை... 


இத்தகைய காரணங்களால்.....

 தமிழகம் மிகமிக ஆபத்தான நிலையை நோக்கி பயணிக்கிறது...  


தொழில் நடத்தியே ஆகவேண்டிய கட்டாயமுள்ளோர், 

வேறு வழியின்றி தங்களுக்கு தேவையான வேலையை ஓரளவு குறைவான சம்பளத்தில் (தமிழ்நாட்டவரை ஒப்பிடுகையில்) கிடைக்கும் வட நாட்டவரை அழைத்து வந்து இங்கே வேலைக்கு வைத்துக்கொள்கின்றனர்... 


ஓட்டல் முதல் கட்டுமான துறை வரை இதுதான் நடக்கிறது... 

ஒரு நாளைக்கு 850-1000 சம்பளத்திற்கு , 

(பெரும்பாலும் அடிக்கடி லீவு போடும் பழக்கமுடையவர்கள்) செய்யும் வேலையை விட...


ஒரு வடநாட்டவர் 2 மணிநேரம் அதிகமாக 500-600 சம்பளத்திற்கு செய்கிறார்.. 


தங்க வீடு, சாப்பாடு கொடுத்துவிட்டால் போதுமானது.. 

வருடத்திற்கு ஒருமுறை ஒருமாதம் லீவு கொடுத்தால் போதும்... 


இதுதான் அனைத்து வேலைகளுக்கும்... 

 

நம் ஆட்கள் கேலி செய்வதை போல அவர்கள் பானிபூரி மட்டுமே விற்க இங்கே வரவில்லை...


கடைசியாக..


நம் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு மக்களின் மனநிலையில்.... 

ஆபத்தான மாற்றம் ஏற்பட்டுள்ளது... 


வேலையே செய்யக்கூடாது,


சும்மாவே எல்லாம் கிடைக்க வேண்டும்,


சும்மாவே பணம் கிடைக்க வேண்டும்,


சும்மாவே சுகபோகமான வாழ்வு கிடைக்க வேண்டும், 


தினசரி குடிக்க வேண்டும் என்றெல்லாம் மாற்றங்கள்... 


இவற்றை பற்றி அக்கறை கொள்ள வேண்டிய அரசாங்கம்.... 


கற்றோர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் , 


இன்னும்... 


எல்லோரும்...?????

 

இந்த சமூக மனநிலையை பிடித்துள்ள..நோயை மாற்ற...


வழி தேடினால் மட்டுமே தமிழகம் தப்பிப்பிழைக்கும்...🙏


மதுவை ஒழிக்க வேண்டும்


கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும்


படித்துப் பார்த்தேன் இன்றைய தமிழகத்திற்கு தேவையான பதிவு..


©️

Tuesday, February 20, 2024

இதையும்...

 சு. வெங்கடேசன்  MP எழுத்திலிருந்து.....


"மதுரைக்கு மிக அருகில் உள்ள கிராமம் கடச்சனேந்தல். இங்கு விவசாயிகளை அமைப்பாகத் திரட்டும் ஒரு முயற்சிக்காக நான் சென்றிருந்தேன்.  விவசாயச் சங்கத்தினர் உடன் இருந்தனர். அந்த சின்னஞ்சிறிய கிராமத்தின் குறுகிய வீதிகளின் வழியே, வயல் வேலைகள் முடித்துத் திரும்பும் விவசாயிகளைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தோம். 


சடசடவென மழை பெய்ய ஆரம்பித்தது.

எங்கு ஒதுங்குவது எனச் சுற்றும்முற்றும் பார்த்து, மூலையில் இருக்கும் ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் ஒதுங்கினோம். காற்றும் மழையுமாகக் கொட்டித் தீர்த்தது.  


நான் எதையோ யோசித்தபடி அங்கு சிறு பலகை ஒன்றில் எழுதியிருந்ததைப் பார்த்தேன்.


 'கவுந்தியடிகள் ஆசிரமம்’ என எழுதியிருந்தது. 


என் கண்களையே நம்பாமல், ஆச்சர்யத்தோடு மீண்டும் ஒருமுறை படித்து உறுதிப்படுத்தினேன். 


கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வருவதற்கு, உறுதுணையாக இருந்து ஆற்றுப்படுத்திய சமணத் துறவி கவுந்தியடிகளுக்கு இங்கு எதற்கு ஆசிரமம் என யோசித்தபடி நின்றேன்.


மழை குறையத் தொடங்கியது. தாழ்வாரத்துக்கு அடுத்து இருந்தவரிடம், 'கவுந்தியடிகள் ஆசிரமம் என்ற பெயர் எதற்காக வைத்திருக்கிறீர்கள்?’ எனக் கேட்டேன். 


அவர் சொன்னார், 'இந்த அம்மாதானே கோவலன் - கண்ணகியை எங்க ஊருக்குக் கூட்டிவந்துச்சு’ என்றார்.


அவரின் பதில், மேலும் ஆச்சர்யத்தை ஊட்டியது.


 'கோவலன் - கண்ணகி மதுரைக்குத்தானே வந்தார்கள்? உங்கள் ஊருக்கு எங்கு வந்தார்கள்?’ எனக் கேட்டேன்.


 'என்ன தம்பி... மதுரைக்குள்ள போறதுக்கு மொத நாளு அவங்க ரெண்டு பேரையும், எங்க ஊர்லதான அந்த அம்மா தங்கவெச்சுச்சு’ என்றார். 

 

நான் பேச்சைத் தொடர்ந்தேன். அவர் மேலும், 'கோவலன் - கண்ணகி தங்கி இருந்த வீடு அருகில்தான் இருக்கிறது’ என்றார். நான் ஏறக்குறைய உறைந்துபோய் நின்றேன்.   


தொடர்ந்து, 'கண்ணகி வீடுதானே... அது எனக்குத் தெரியும். நான் கூட்டிப்போய் காட்டுறேன்’ என உடன் இருந்தவர் பதில் சொன்னார்.


சிலப்பதிகாரத்தை வெளியில் இருந்து படித்த நான், முதன்முறையாக அதற்குள்ளே இருக்கும் மனிதர்களைச் சந்தித்தேன். 


அவர், 'வாருங்கள் போகலாம்’ எனச் சொல்லி என்னை அழைத்துப்போனார். மழை நின்ற அந்த இரவில் நான் காலத்துக்குள் நடந்து போய்க்கொண்டிருந்தேன்.


இரண்டு தெரு தள்ளி ஓர் இடத்தைக் காட்டினார். 


'இந்த இடத்தில்தான் கண்ணகியின் வீடு இருந்தது’ என்றார். நான் விழித்த கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். 


அந்த இடம் எதுவும் இல்லாத வெளியா... அல்லது காலவெளியா என்பது புரியாத திகைப்பில் நின்றிருந்தேன்.


வயதான ஒரு மூதாட்டி, 'என்னப்பா, இந்த ராத்திரியில வந்து கண்ணகி வீட்டைப் பார்த்துக்கிட்டிருக்கீங்க?’ எனக் கேட்டபடி எங்களைக் கடந்து போனார். 


இப்போதுதான் கண்ணகியை வீட்டில் விட்டுவிட்டுப் போகும் கவுந்தியடிகளைப்போல இருந்தது அவளது வார்த்தைக்குள் இருந்த உரிமை.


என்னை அழைத்துப் போனவர் தொடர்ந்து சொன்னார்... 


'கண்ணகி - கோவலன் கடைசியா இருந்தது இந்த வீட்டில்தான். இங்கிருந்துதான் சிலம்பை விற்க கோவலன் மதுரைக்குப் புறப்பட்டுப் போனான். புதுவாழ்வு தொடங்க ஆசையோடு காத்திருந்த கண்ணகிக்கு, போனவன் கொலையுண்ட செய்திதான் வந்து சேர்ந்தது. செய்தி கேள்விப்பட்டதும் ஆத்திரம் பொங்க தனது காலில் இருந்த இன்னொரு சிலம்பை கையில் ஏந்தியபடி இங்கிருந்துதான் புறப்பட்டாள். அதனால்தான் எங்கள் ஊருக்கு 'கடை சிலம்பு ஏந்தல்’ எனப் பெயர்.

20 வருடங்களுக்கு முன்புவரைகூட ஊரின் பெயர்ப்பலகை எல்லாமே 'கடை சிலம்பு ஏந்தல்’ என்றுதான் இருந்தது.  பிறகு  பேச்சுவழக்கில் எல்லோரும் 'கடச்சனேந்தல்’ என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர்’ என்றார்.


நான் மறுபடியும் ஊரின் பெயரில் இருந்து எல்லாவற்றையும் யோசிக்க ஆரம்பித்தேன். அவர் பேச்சைத் தொடர்ந்தார். 'கோவலன் - கண்ணகியை அவமதித்துப் பேசிய இருவரை, கவுந்தியடிகள் நரியாகப் போகுமாறு சபித்துவிட்டார் இல்லையா?’ எனக் கேட்டார், சிலப்பதிகாரத்தின் காட்சியை நினைவுபடுத்தி. 


'ஆம்... ஓராண்டு காலம் நரியாகப் போகுமாறு சபித்தார்’ என்றேன். 


'அதுதான் அந்த நரி’ என்றார்.


அவர் கைகாட்டும் திசையை மிரட்சியோடு பார்த்தேன். கும்மிருட்டாக இருந்த அந்தத் திசையில் இருந்து அடுத்து வெளிவரப்போவது என்னவோ என்ற திகைப்பு குறையாமல் அவரை நோக்கித் திரும்பினேன். 


அவர் சொன்னார், 'கவுந்தியடிகளால் சபிக்கப்பட்ட அந்த நரிகள் இரண்டும் ஓராண்டு காலமும் அந்தப் பக்கம் உள்ள காட்டில்தான் இருந்ததாம். அதனால்தான் அந்த இடத்துக்கு 'அந்தநேரி’ எனப் பெயர்’ என்றார். அடுத்து இருக்கும் ஊரின் பெயர் 'அந்தநேரி’ என்பது அப்புறம்தான் நினைவுக்கு வந்தது (அதுவே 'அந்தனேரி’ ஆகிவிட்டது).


நிகழ்காலத்துக்கும் கடந்தகாலத்துக்கும் இடையில் இடைவெளியற்ற ஒரு நிலத்தில், நின்றுகொண்டிருப்பதுபோல் உணர்ந்தேன். ஒருவகையில் மதுரையே இப்படி ஒரு நிலம்தான். காலத்தின் எந்தப் புள்ளியில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம் என்பது பல நேரங்களில் ஒரு புகைமூட்டமாகத்தான் தென்படும்.


அந்த வீடுதான் சிலப்பதிகாரத்தில் கொந்தளிக்கும் உணர்ச்சிகள் மையம் இட்டிருந்த இடம். கோவலன் - கண்ணகி இருவரும் இங்குதான் ஒரு புது வாழ்வைத் தொடங்கினர். கண்ணகியின் களங்கம் இல்லாத அன்பின் முன்பாக கோவலன் ஒரு தூசுபோல கிடந்தான். ஆண் எனும் அகங்காரம் முற்றிலும் அழிந்து, கண்ணகியின் கால் பற்றி நின்றான். 12 ஆண்டுகள் நெஞ்சம் முழுவதும் பெருகிக்கிடந்த துயரக் கடலை அன்பு எனும் மிதவைகொண்டு எளிதாகக் கடந்தாள் கண்ணகி. கால் சிலம்பைக் கழட்டிக் கொடுத்து புதுவாழ்வின் வாசல் நோக்கி அனுப்பினாள். நற்செய்தியோடு வருவான் என எதிர்பார்த்திருந்த கண்ணகிக்கு, அவன் கொலையுண்ட செய்தியே வந்து சேர்கிறது. அவள் வெகுண்டெழுந்தாள்.


சிலப்பதிகாரத்தில் உணர்ச்சிகளினால் உச்சம் பெற்ற காட்சி இங்குதான் அரங்கேறியது. பெருக்கெடுத்த அன்பும், புதுவாழ்வின் கனவும், கொடுங்கொலையும் வந்துசேர்ந்த இடமாக, இந்தச் சிறு குடிலே இருக்கிறது. கோவலனின் மனைவியாக மட்டுமே இருந்த ஓர் அபலைப் பெண், கண்ணகியாக உருமாற்றம்கொள்வது இந்த இடத்தில் இருந்துதான். ஒரு காப்பியத்தில் எந்த இடத்தை சமூகம் பற்றி நிற்கவேண்டுமோ, அந்த இடத்தை இறுகப் பற்றி நிற்கிறது இந்த ஊர்.


கதைகளின் பலம், பெருந்துக்கத்தை மறந்துவிடாமல் மீண்டும் மீண்டும் நினைவூட்டிக் கொண்டே இருப்பதுதான். 'எங்கள் ஊருக்கு வந்த பெண்ணுக்கு இப்படி ஆகிவிட்டதே’ என்ற துக்கம், இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தக் கதையைச் சொல்பவரின் தொண்டைக் குழியில் தேங்கி நிற்கிறது. அந்தத் துக்கம் மறக்காமல் இருந்தால்தான் மனிதன் அறம்சார்ந்த வாழ்வை வாழத் தொடர்ந்து தூண்டப்பட்டுக் கொண்டிருப்பான். மனிதனை நியாயவானாக மாற்றவேண்டிய செயல், மனிதன் இருக்கும் வரை நடத்தப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டிய செயல்.


அதற்கான கருவியை தனது அனைத்து அங்கங்களிலும் வைத்திருக்கும் பண்பாட்டையே சிறந்த பண்பாடாக நாம் கருதுகிறோம். அத்தகைய பண்பாட்டு விழுமியங்கள் செழிப்புற்று இருப்பதே நாகரிகச் சமூகத்துக்கான சான்று. கண்ணகியின் கண்ணீர்த் துளியைக் கைகளில் ஏந்தி, கவுந்திக்கு மரியாதை செய்துகொண்டிருக்கும் இந்தச் செயல்கூட அத்தகைய நாகரிகத்தின் அடையாளமே.


தார்ச்சாலையின் ஓரத்தில் இருக்கும் பெயர்ப்பலகையில் எனாமல் பெயின்டால் எழுதப்பட்ட எழுத்துக்குப் பின்னால் இவ்வளவு நெடிய கதையும் காலமும் மறைந்திருக்குமானால்... பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட எழுத்துக்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் கதைகளை யார் அறிவார்?


அப்படிப்பட்ட எழுத்தைத் தாங்கிநிற்கும் கருங்கல் ஒன்று, வைகையின் தென்கரை கிராமம் ஒன்றில் நிமிர்ந்து நிற்கிறது. சுமார் 2,400 ஆண்டுகளாக...


நன்றி-  எழுத்தாளர் சு.வெங்கடேசன்

ம்..வாசித்து வைப்போம்..

 மனித தன்மை சேஷனின் வாழ்கையில் நடந்த உண்மை சம்பவம்.

.......................................................................

அனைவருக்கும் எனது வினீதம்கூடிய அனேகநமஸ்காரங்கள்.


பாரதீயதேஸத்தில் ஜனாநாயகத்தில் தேர்தல் நடக்கும்.

ஆனாலும் ,அந்த தேர்தலுக்கு அதை ஜனநாயகரீதியாக நடத்த ஒரு தலைமை தேர்தல் தலைமை அதிகாரி இருக்கின்றார்.

என்பதெல்லாம்.  T.n சேஷன் தேர்தல் தலையைஅதிகாரியாக, வந்தபிறகுதான் பொதுஜனங்களுக்கு தெரியவந்தது, அதுவும் 

தான் ஒரு ரப்பர்ஸ்டாம்ப் அதிகாரி இல்லை! என்று நீருபணம் செய்தவர்தான் இந்த பாலகாடன் ஐயர்.


அப்படிப்பட்ட சேஷன் ஒரு முறை தன்னுடைய கெட்டியோளுடன் உத்திரபிரதேசத்தில் ஒரு குக்கிராமத்தில் காரில் சென்றுகொண்டேயிருந்தார்.


அப்போது ஒரு இடத்தில் மாந்தோப்பில் ,மாமரங்களில் குருவி கூடுகள் கண்டார்.

அந்த குருவிகூட்டில் குட்டிகுருவிகளின்  கீச்கீச் சப்தத்தை சேஷனும், கெட்டியோளும் ரசித்தனர்.


இதை கண்ட சேஷனின் புருஷத்திக்கு ஒரு இஷ்டம் தோன்றியது.

சில குருவிகூடுகளை தங்களுடைய வீட்டில் வைக்கலாம்.

அந்த கீச்கீச் சப்தத்தை ரசிக்கலாம் என்று தோன்றியது.

அந்த இஷ்டத்தை தன்னுடைய கெட்டியோனிடம் சொன்னாள்.


அந்த மாந்தோப்பில்  காரை விட்டு இருவரும் இறங்கினார்கள்.

அந்த மாந்தோப்பை நிர்வகிக்கும் ஒரு மாடு மேய்க்கும் சிறுவனை கண்டு, அந்த மாடுமேய்க்கும் சிறுவனிடம் தேர்தல் அதிகாரியின் பாதுகாப்பு காவலர்கள் ஒரு ஐந்து குருவிகூடுகளை கேட்டனர்.

அந்த சிறுவனோ கொடுக்கமுடியாது என்று சொல்லிவிட்டான்.


பாதுகாப்பாளர்களுக்கு அதிர்ச்சி.

அவர் யார் தெரியுமா? அவரின் அந்தஸ்து என்ன தெரியுமா? அவர் நினைத்தில் இந்த தோட்டத்தையே, இப்போதே விலைக்கு வாங்கமுடியும், மரியாதையாக குருவிகூடுகளை கொடுத்துவிடு! என்றனர்.


சிறுவனோ! ஐயா நீஙக என்ன சொன்னாலும் கொடுக்கமுடியாது!

அவர் பெரிய ஆளாக இருந்தாலும் குருவிகூடுகளை கொடுக்கமுடியாது!

என்று தீர்க்கமாக சொல்லிவிட்டான்.


அதை கண்ட சேஷன் காரை விட்டு இறங்கி தம்பி ஒரு கூட்டிற்கு பத்து ரூபாய் வைத்து தருகின்றேன் ..என்றார்

அன்றைக்கு பத்துருபாய் சிறிதளவு பெரிய பணம்.


ஆனாலும்கூட அந்த சிறுவன் கொடுக்கமுடியாது என்று சொல்லிவிட்டான்


உடனே காவலர்கள் ஒரு கூட்டிற்கு ஐம்பதுரூபாய் வைத்து தருகின்றோம் என்றார்


அதை கேட்ட அந்த சிறுவன் சேஷனை பார்த்து கைகூப்பி நமஸ்கரித்து கண்ணீர் மல்க சொன்னான்! 


ஜீ சாப் : இந்த கூட்டில் உள்ள குருவிகளின் தாய்குருவிகள் தன்னுடைய குழந்தைகளுக்காக, இரைதேடி சென்றிருக்கின்றன.

அந்த தாய்குருவிகள் இரையோடு வரும்போது தன்னுடைய பிஞ்சு சூருவிகளும் கூடுகளும் காணாமல் அவைகள் அழும். கீச்கீச் என்று அழும்!

அதை காணும்போது, அதன் வேதனையை என்னால உணர்ந்து கொள்ளமுடியும்.

அந்த மகாபாவம் எனக்கு வேண்டாம்.

காசுக்காக இரக்தபாசத்தை விற்கமுடியாது. என்று சொன்னான்.


இதை கேட்டதும் சேஷனுக்கு பேரதிர்ச்சி ,அவரின் கண்ணீர் வர தொடங்கியது.


தன்னுடைய கௌவரம் நஷ்டப்பட்டுபோனதுபோல் தோன்றியது.

தன்னுடைய. I.A.S படிப்பு ஒன்றுமே இல்லை போன்று தோன்றியது.

தான் அணிந்துகொண்டிருக்கும் சூட்டும்கோட்டும் ஒன்றுமில்லை போல் தோன்றியது.

தான் இந்தியதேஸத்தின் மிகப்பெரிய பதவியை வகிக்கும் தலைமைதேர்தல் அதிகாரி என்பதையெல்லாம் கணநேரத்தில் மறந்தார்.


தான் வானாளய அதிகாரம் படைத்தவன் என்கிற அகம்பாவம் நஷ்டப்பட்டுபோனது அவருக்கு!


தன் எதிரே  இருக்கின்ற, தலையில் முண்டாசு கட்டிகொண்டிருக்கின்ற மாடுமேய்க்கின்ற சிறுவன்.


நிச்சயமாக சாக்ஷாத் குருவாயூரான் கிருஷ்ணபரமாத்மாவாக தோன்றினான்.


அன்றைக்கு மகாபலி தம்புரானுக்கு வாமனஅவதார மூர்த்தி விஸ்வரூபத்தில் தர்சனம் தந்தாரோ!

அதேபோல்தான் தோன்றியது எனக்கு என்று எண்ணினார்


ஒன்றுபேசவில்லை, தன்னுடைய கெட்டியோளோடு காரில் ஏறி சென்றுவிட்டார்.

பத்துபதினைந்து நாட்களாக உறக்கம் நஷ்டப்பட்டுபோனது அவருக்கு.


ஒரு சிறுவன் தாய்பாசத்தை தனக்கு உணர்த்திவிட்டானே!

என்று எண்ணி துக்கமடைந்தார்.


(கேரளாவில் ஒரு கூட்டத்தில் தான் ஓய்வுபெற்றபின்னர் இதைபற்றி பேசிய தொகுப்பு தான்)


இவன்


ஸ்னேகம்கூடிய

அஜய்குமார்

Friday, February 16, 2024

ம்...படித்து வைப்போம்

 (Very thought provoking message. Please go through the write-up.)


*Whoever wrote, it is wonderfully written.*


I never understood one thing that what do these film actors or actresses do that they get 50 crores or 100 crores for each film?


In a country where top scientists, doctors, engineers, professors, officers, etc. get 10 lakh to 20 lakh rupees per year, in the same country a film actor earns 10 crores to 100 crores of rupees per year!


What does he do after all?


What is their contribution in the development of the country?  After all, what do they do to earn so much in just one year that it might take 100 years for the top scientists of the country!


Today, the three areas which have fascinated the new generation of the country are cinema, cricket and politics.


The earning and prestige of the people belonging to these three fields is beyond all limits.


These three areas are the ideals of modern youth, while their credibility is currently under question.


So it is useless for the country and the society.


Drugs and prostitution in Bollywood, match fixing in cricket, hooliganism and corruption in politics.  Money is the main reason behind all this and it is we who bring this money to them.


We are doing our own harm by burning our own money.  This is the height of stupidity.


Till 70-80 years back, famous actors used to get normal salary.


30-40 years ago, the earnings of cricketers were also not special.


30-40 years ago, there was not so much loot in politics.


Slowly they started robbing us and we went on to let them  rob ourselves happily.

 

By getting caught in the clutches of these mafia, we are destroying the future of our children and our country.

 

50 years back, movies were not made so vulgar and sloppy.  Cricketers and politicians were not so arrogant.  Today they have  become our God (?).  Now there is a need to lift them from the head and slap them so that they can know their status.


Once , when the then Vietnamese President, Ho-Chi-Minh, came to India for a meeting with Indian ministers, he asked, "What do you guys do?"


These people said - "We do politics."


He could not understand this answer, so he asked again - "I mean, what is your profession?"


These people said - "Politics is our profession."


Ho-Chi Minh got a little annoyed and said - "Maybe you people do not understand my meaning. I do politics too, but by profession , I am a farmer and I do farming. Farming makes my livelihood. In the morning and evening I go to my fields.  I work. I do my responsibility for the country as President during the day."


When Ho-Chi-Minh asked the same thing again, a member of the delegation shrugged and said - "Politics is our profession."


It is clear that Indian leaders had no answer to this.  Later, a survey revealed that the livelihood of more than 6 lakh people in India was supported by politics.  Today this number has reached in crores.


Just a few months back, when Europe was being devastated by Corona, the doctors were not getting even a little rest for several months in a row, then a Portuguese doctor said angrily - "Go to Ronaldo, to whom you would give millions of dollars to watch. I only get a few thousand dollars."


I firmly believe that in a country where the idols of young students are not scientists, researchers, educationists, but actors, politicians and sportsmen, they may have their own economic progress, but the country will never progress.  


Socially, intellectually, culturally, strategically the country will always remain backward.  The unity and integrity of such a country will always be in danger.


The country in which the dominance of unnecessary and irrelevant sector continues to grow, that country will be weakening day by day.  The number of corrupt and anti-nationals will continue to increase in the country.  Honest people will be marginalized and forced to lead a difficult life.


We need to create an environment to groom and promote talented, honest, conscientious, social workers, belligerent & patriotic citizens.


Really an eye opener msg to a True Indian

Thursday, January 18, 2024

பண்டிதரும் குதிரைக்காரரும்

 ஒரு ஊரில் மிகவும் புகழ்பெற்ற பண்டிதர் இருந்தார். பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தவர் , அனைத்தும் கற்றவர் மற்றும்  புகழ்வாய்ந்தவரும் ஆவார். பக்கத்து ஊரில் அவரை உபன்யாசத்திற்காக அழைத்திருந்தார்கள். ஊர் முழுவதும் விளம்பரம் செய்ய பட்டு பல ஆயிரம் பேரை அழைத்திருந்தார்கள்.


பண்டிதரை அழைத்து  வர ஒரு குதிரைக்காரனை அனுப்பி வைத்தனர். அன்று அந்த ஊரில் பயங்கர மழை. உபன்யாசத்திற்கு அழைக்கப்பட்டிருந்தவர்கள் பெரும்பாலோர் வரவில்லை. வந்தவர்கள் இந்த மழையில் பண்டிதர் வரவே முடியாது என்றெண்ணி வீடு திரும்பினார்.




பண்டிதர் வந்தபோது அங்கே யாருமே இல்லை. உபன்யாசத்திற்காக வெகு தூரத்தில் இருந்து வந்த பண்டிதர்கோ ஏமாற்றம். இருக்கின்ற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை. ‘என்னப்பா பண்ணலாம்?’னு குதிரைக்காரனிடம் கேட்டார்.




‘அய்யா! நான் குதிரைக் காரன்… எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க… நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க. நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்’னான்.




பொளேர்னு அறைஞ்ச மாதிரி இருந்தது பண்டிதருக்கு. அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டுட்டு, அவனுக்காக மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பிச்சார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம்னு சரமாரியா எடுத்துரைத்து பிரமாதப் படுத்திட்டார் பண்டிதர். பிரசங்கம் முடிஞ்சுது. ‘எப்படிப்பா இருந்தது என் பேச்சு?’னு அவனைப் பார்த்து பெருமையா கேட்டார் பண்டிதர்.




‘அய்யா… நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க… நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!’னான். அவ்ளோதான்… பண்டிதர் ஒன்றும் பேசாமல் மௌனமாக அவ்விடத்தில் இருந்து புறப்பட்டார் .




நீதி ;-  மத்தவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எது சொன்னா புரியுமோ அதை மட்டும் சொல்லனும்…புரியாத, தேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்றது நம்மை தான் முட்டாளாக்கும் . பக்தியில் ஒருவனுடைய ஈடுபாடு மற்றும் முன்னேற்றத்திற்கு தகுந்தாற்போல் ஒருவருக்கு படிப்படியாக  உபதேசத்தை தர வேண்டும். !!!




🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆






ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 


கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே


ஹரே ராம, ஹரே ராம, 


ராம ராம, ஹரே ஹரே




🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண🙏

Sunday, January 7, 2024

படித்ததில் பிடித்து

 *நுகர்ச்சி* ( *consumption* )


*உலகின் தற்போதைய தலையாய பிரச்சினை  என்னவென்று நினைக்கிறீர்கள்* ? 


மக்கள் தொகைப் பெருக்கம்? 


இல்லை.


over-population அன்று, 


*இன்று over-consumption* தான் என்கிறார்கள். 


அதாவது ஒரு தேசத்தில் வெறும் 100 பேர் இருக்கலாம், இன்னொரு தேசத்தில் 10,000 பேர் இருக்கலாம். 


ஆனால் 100 பேர் இருக்கும் தேசம் பேராசையுடன் பத்தாயிரம் பேர்களுக்கான resource களை படுவேகமாக நுகர்ந்து கொண்டிருக்கலாம். 


இப்போது இந்த இரு நாடுகளும் கிட்டத்தட்ட ஒரே மக்கள்தொகை கொண்டவை என்று சொல்லிவிட முடியும்.


 *population is not exactly the issue. consumption is* ! 


அமெரிக்கர் ஒருவர் இந்தியர் ஒருவரை விட சராசரியாக 32 மடங்கு அதிகம் consume செய்வதாகச் சொல்கிறார்கள்.


 *அதாவது, 32 பேருக்கான சாப்பாட்டை ஒருவரே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்*.


*இந்த over consumption நம்மிடமும் தலைகாட்ட ஆரம்பித்து விட்டது* . 


சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குச் சென்று பார்த்தால் என்னென்னவோ தயாரிப்புகள் கலர் கலராக, வகை வகையாக, வெவ்வேறு சைஸுகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். 


இதை எல்லாம் கூட வாங்குவார்களா என்று யோசிப்போம். 

வாங்குவதால் தானே வைக்கிறார்கள்?


 பிரியாணி மசாலா ஓகே, தக்காளி சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதத்துக்குக் கூட மசாலா வந்திருக்கிறது. 

ஒன்றுக்கொன்று என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை.


 ' *பூஜா kit' விலை 180 ரூபாய்*! 


உள்ளே ஒரு காட்டன் துணி, இரண்டு விளக்குத் திரி பாக்கெட், ஊதுபத்தி, கொஞ்சம் கற்பூரம், குட்டியூண்டு பாட்டிலில் பன்னீர், அவ்வளவு தான்

180 ரூபாய்!


*தேவையற்ற பொருட்களை, தயாரிப்புகளை வாங்கிக் குவிக்கும் கலாச்சாரம்*! 


*ஆணிகளை முதலில் விற்று விட்டுப் பிறகு சுத்தியலுக்கான தேவையை உருவாக்கும் வியாபார  யுக்தி* !


 தேவையே இல்லாவிட்டாலும் ஒருவித ' *fake demand*' ஐ உருவாக்குவதிலும் *கார்ப்பரேட்கள் வல்லவர்கள்*. 


சமீபத்திய உதாரணம் *vegetable wash* ! 


250-300 ரூபாய்க்கு விற்கிறார்கள். 

இதை இதற்கு முன் நாம் கேள்விப்பட்டு இருப்போமோ! 


பெரும்பாலும் மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளை வாங்கிவந்து   அப்படியே தான் பிரிட்ஜில் வைத்துக்கொண்டு இருந்தோம். 


எல்லா product களிலும் சகட்டு மேனிக்கு *kills 99.9% germs* என்று போட்டு விடுகிறார்கள்.


 'கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கிறது' என்று போடுகிறார்கள். 


எந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வருகிறார்கள் போன்ற விவரங்கள் இல்லை. 


' *கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க வேண்டி கடவுளை வழிபடுவதற்கு எங்கள் ஊதுபத்தி சிறந்தது* ' என்று கூடிய சீக்கிரம் விளம்பரங்கள் வந்து விடும்!


*இந்த consumption எப்போதும் exponential ஆக இருக்கிறது*


அதாவது நாம் நம் தாத்தாவை விட *8* மடங்கு அதிகம் நுகர்ந்தோம் என்றால் நம் பேரன் நம்மை விட *64* மடங்கு அதிகம் நுகர்வான். 


நம் தாத்தாவுக்கு இருந்தது ஒரே ஒரு *option lifebuoy* சோப் என்றால் நம் பேரன் முன்பு 64 சோப்புகள் கடை விரிக்கப்படும். 


எல்லா சோப்புகளும் *more or less* ஒன்றுதான் என்ற அறிவு நம்மிடம் இருப்பதில்லை. 


64 வகை சோப்புகள், சூப்பர் மார்க்கெட்டில் கால்வாசி இடத்தை அடைத்துக்கொண்டு! 


' *selection time rule*' என்ன சொல்கிறது தெரியுமா? 


இரண்டு பொருட்களில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்க நமக்கு 10 நிமிடங்கள் ஆகிறது என்றால் மூன்று பொருட்களில் இருந்து தேர்ந்தெடுக்க நமக்கு 100 நிமிடங்கள் ஆகுமாம். 


நான்கு பொருட்கள் என்றால் ஆயிரம் நிமிடங்கள்!


நம்முடைய நேரத்தையும் சத்தமில்லாமல் திருடி விடுகின்றன இந்த ஹைப்பர் மார்க்கெட்டுகள்.


இது நல்லது தானே? நிறைய தயாரிப்புகள் என்றால் நிறைய வேலைவாய்ப்பு என்று நினைத்தால் தப்பு. 


அந்தக் குறிப்பிட்ட தயாரிப்பு எப்படி சந்தைக்கு வருகிறது என்ற விவரம் நம்மிடம் இல்லை. 

முழுக்க முழுக்க *automated process* சில் வந்திருக்கலாம். 

எந்த ஒரு தயாரிப்பும் அப்படியே வானத்தில் இருந்து குதித்து விடுவதில்லை. 


அது பஞ்சபூதங்களையும் கணிசமான அளவு பதம் பார்க்கிறது. அதற்கான தயாரிப்பில் எத்தனை தண்ணீர் உறிஞ்சப்பட்டது, எத்தனை ஏக்கர் மண் மலடானது, எத்தனை டன் காற்று மாசுபட்டது, அந்தத்தயாரிப்பு எத்தனை *carbon footprint* ஐ பூமியின் வளிமண்டலத்தில் வெளிவிட்டது என்றெல்லாம் நமக்கு தெளிவாகத் தெரிவதில்லை. 


மேலும் அந்தத் தயாரிப்பின் பின்புலத்தில் நசுக்கப்பட்டவர்கள் யார், மிரட்டப்பட்டவர்கள் யார், அதன் பின்புலத்தில் இயங்கும் *socio, economic, political forces* கள் எதுவும் நமக்கு விளங்குவதில்லை.


' *கடை விரித்தேன் கொள்வார் இல்லை' என்ற வாசகம் இப்போது எடுபடாது*.


 *எங்கே கடைவிரித்தாலும் எங்கிருந்தோ 'கொள்வார்' கள் வந்து விடுகிறார்கள்*. 


*home-made* என்று போட்டுவிடு, *organic* என்று எழுது, *100% hygienic* என்று எழுது, *good for liver* என்று போடு, 

ஏதோ ஒரு வைட்டமின் இருக்கிறது என்று அளந்து விடு, கவரில் பற்கள் தெரியச் சிரிக்கும் ஒரு *happy family* யின் படத்தைப் போட்டுவிட்டு, அவ்வளவு தான், *shit sells*!!


ஓகே. இவை எல்லாம் நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயங்கள் தானே என்றால் *பொருட்களை மட்டும் அல்ல, சேவைகளையும் நாம் over consume செய்கிறோம்* என்று தோன்றுகிறது. 


*தினமும் 3 GB டேட்டா இலவசம்*. 

வேறு என்ன செய்ய? 

வீடியோக்கள் scroll செய்யச் செய்ய மேலெழும்பி வந்து கொண்டே இருக்கின்றன. 

இரவு முழுவதும் பார்க்கலாம். காலையில் நம் *cognitive data base* அப்படியே தான் இருக்கும். 

எதையும் புதிதாக கற்றுக்கொண்டு இருக்க மாட்டோம். எதுவும் நம்மை மாற்றி இருக்காது. 


' *Stop making stupid people famous* ' என்று சொல்வார்கள். 


அரைவேக்காடுகளை, கத்துக்குட்டிகளை நாம் தான் பிரபலம் ஆக்குகிறோம். 


*மில்லியன் subscribers, லட்சக்கணக்கில் followers* ! 


*வாங்குவோர் இல்லையென்றால் விற்பனை செய்வோர் இல்லை. பார்ப்போர் இல்லை என்றால் பிரபலங்கள் இல்லை*. 


data என்றில்லை, மின்சாரம், தண்ணீர்,எரிபொருள் எல்லாமே over consumption தான்.


 *Buffet*- வில் இலவசமாகக் கிடைக்கிறது என்று எல்லா அயிட்டங்களிலும் ஒன்றை எடுத்து உள்ளே தள்ளுகிறோம். 


*விளைவு* : வயிற்று வலி, இரண்டு நாள் வயிற்று உப்புசம், உபாதை! 


இலவச மருத்துவம் என்பதற்காக நோயை வலிய வரவழைத்துக் கொள்ளவும் செய்வோம் நாம்!


மூன்றாவதாக நாம் வாழ்க்கையையும் over consume செய்கிறோம்.


 ' *நாளை என்பது நிச்சயம் இல்லை, இன்றே அனுபவித்து விடு* ' என்பதெல்லாம் சரி தான்.


 ஆனால் வாழ்க்கையில் நம் அனுபவங்களை, சுகங்களை, சந்தோஷங்களை சரி சமமாக distribute செய்கிறோமா?


 40 வயதுக்குள்ளாகவே எல்லாவற்றையும் முடித்து விட்டு *போதும்டா சாமி என்று exhaust* ஆகி விடுகிறோம்.


 8 வயது சிறுவன் 28 வயது இளைஞன் போலப்பேசுகிறான் 


'மஞ்சத்திலே கொஞ்சக் கொஞ்ச' என்று ஆறு வயது குழந்தை ஒன்று பாடுகிறது.


 ' *expression பத்தலை* ' என்று ஜட்ஜுகள் (?!) தீர்ப்பு சொல்கிறார்கள்* .


 'ஆன்மிகம்' என்பது ஒருவருக்கு வயது முதிர்ந்தபின் தான் அர்த்தமுள்ளதாகும். 


50+...அந்தந்த வயதில் 

அது அது இனிக்கும். 


ஆன்மிகத்திற்கென்று ஓர் ஓய்வு, ஒரு விரக்தி, ஒரு களைப்பு, ஒரு சோர்வு, ஓர் அர்த்தமின்மை எல்லாம் தேவைப்படுகிறது. 


20 வயதில் எல்லாமே அர்த்தமுள்ளதாகத் தான் தெரியும். 


ஆனால் ஒரு *curiosity* க்காக, அனுபவத்துக்காக 20 வயதில் ஆன்மிகத்தின் பக்கம் ஒதுங்கினால் அதில் ஆழம் இருக்காது. 


அது வெறும் *over consumption* ஆகவே இருக்கும்.


சின்னக் குழந்தைகள் ஆன்மிக கதா காலட்சேபம் செய்வது பொருத்தமாகுமா?


பத்து வயதில் காதலித்து, 20 இல் ஆன்மிகம் பேசி விட்டு, முப்பதில் முடித்து விட்டால் என்ன தான் செய்வது?


 40-இல், 50-இல், 60-இல் வாழ்க்கை என்னும் காலிபாட்டிலை வைத்துக்கொண்டு எதை அனுபவிப்பது?


நாளைக்கென்று கொஞ்சம் மிச்சம் வைப்போம். 


நீரை, மின்சாரத்தை, கனிம வளங்களை, பெட்ரோலை நம் பேரப்பிள்ளைகளுக்கும் விட்டு வைப்போம் என்ற எண்ணம் நமக்கு வருவதே இல்லை. 


அளவுக்கு மிஞ்சினால்.????

அமிர்தமும் நஞ்சன்றோ...???


சரி... இதற்கான தீர்வு தான் என்ன,..???,


*மிகவும் எளிது*....!!!!

*விருப்பத்திற்காக நுகராதீர்கள்*. *தேவையிருந்தால் மட்டும் நுகருங்கள்*,


அப்படியென்றால், என் ஆசைகள் விருப்பங்கள் என்னாவது,,.???


உங்கள் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி விட்டதா என்று பாருங்கள், அதற்கு முன்னுரிமை தாருங்கள்,

அதன் பின் நீங்கள் விரும்புவதை நுகருங்கள், *அந்த நுகர்வும் உடல் ரீதியாகவும் , பொருளாதார ரீதியாகவும் உங்களை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டியது அவசியம்*. 


*நீங்கள் விரும்பும், உங்களுக்கு அத்தியாவசிய தேவை இல்லாத எதையும் கடன் வாங்கி நுகராதீர்கள்*. 🔍🔍🔍🔍🔍🔍🔍🔍🔍🔍🤷‍♂️ 


*(Excellent analysis of today's lifestyles and it's impact & Dangerous of Over Consumption)


படித்தேன்......பகிர்ந்தேன்😎😎