Wednesday, September 27, 2023

நல்ல கவிதையை "நைஸ் "என்போம்

 மனைவியை ஒய்ஃப் என்றோம்.

வாழ்க்கையை லைஃப் என்றோம். 

கத்தியை நைஃப் என்றோம். 

புத்தியை புதைத்தே நின்றோம் !


அத்தையை ஆன்ட்டி என்றோம்.

அவள் மகளை ஸ்வீட்டி என்றோம்.

கடமையை டுயூட்டி என்றோம்.

காதலியை பியூட்டி என்றோம்!


காதலை லவ்வென்றோம். 

பசுவை கவ்வென்றோம். 

ரசிப்பதை வாவ் என்றோம். 

இதைதானே தமிழாய் சொன்னோம்!


முத்தத்தை கிஸ் என்றோம்.                                   

பேருந்தை பஸ் என்றோம். 

அளவை சைஸ் என்றோம். 

அழகை நைஸ் என்றோம் !


மன்னிப்பை சாரி என்றோம். 

புடவையை சேரி என்றோம்.

ஆறுதலாய் டோன்ட்வொரி என்றோம். 

தமிழ் வாயால் ஆங்கிலம் தின்றோம்!


மடையனை லூசு என்றோம். 

வாய்ப்பை சான்சு என்றோம்.

மோகத்தை ரொமான்ஸ் என்றோம். 

தமிழை அறவே மறந்தோம்!


அமைதியை சைலன்ஸ் என்றோம். 

சண்டையை வயலன்ஸ் என்றோம்.

தரத்தை ஒரிஜினல் என்றோம்.

தாய் மொழியை முழுதும் கொன்றோம்..!..வாட்ஸ்அப் உபயம்..

❤️❤️❤️❤️❤️❤️

Sunday, September 24, 2023

கனடாவிலிருந்து....

 நண்பர்கள் மூலமாக கனடாவில் பதிவிட்ட கடிதத்தின் தமிழ் வடிவம் . . . . . 


கனடா சகோதர்களுக்கு ஒரு கடிதம்!


உலக அமைதியை விரும்பும் நாடாகிய இந்தியாவின் ஒரு பெருமை மிகு பிரஜையாக இந்த கடிதத்தை கனடா நாட்டு நண்பர்களுக்கு எழுதுகிறேன்.


ஜஸ்டின் ட்ரூடோ என்ற பதவி ஆசை பிடித்த ஒரு தனிமனிதனால் பாழ்பட்டுப் போயிருக்கிறது இந்திய - கனடா உறவு.  


காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்கள் ஆட்டிவிக்கின்றபடி ஆடிக் கொண்டிருக்கும் உங்கள் பிரதமருக்கு கண்டனங்கள்.   தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்கு எந்த ஆதாரமுமில்லாமல் இந்தியாவின் மீது பழியை போட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறார் உங்கள் பிரதமர்.     இந்தியா திட்டவட்டமாக இந்தக் கொலைப் பழியை மறுத்திருக்கிறது.  


இந்தியாவிலிருந்து 11400 கிலோ மீட்டர் தூரத்தில் கனடா இருந்தாலும், இந்தியாவை அழிக்கும் முயற்சியில் பாகிஸ்தானின் கிளை அலுவலகம் போல கனடா செயல்படுவது வெட்கக்கேடானது.  


ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை ஒரு தீவிரவாதி என்று சொல்லாமல், அவனை ஒரு "ப்ளம்பர்", என்று சொல்லியிருக்கிறது உங்கள் அரசு.  அப்படியென்றால், அல்கொய்தா தலைவன்  பின்லாடனை ஏன் கட்டுமான இன்ஜினியர் என்று சொல்லவில்லை?   பதிலாக அவனை தீவிரவாத தலைவன் என்று ஏன் சொல்கிறீர்கள்?  அடுத்த நாட்டு பிரஜையாகிய பின்லாடனை, மற்றொரு நாட்டில் புகுந்து கொன்றதை ஆதரித்த நாடுகளில் கனடாவும் ஒன்றுதானே!   


அந்தக் கொலை இனிக்கும்.  இந்தக் கொலை கசக்கிறதா?


ஈராக்கில் இரசாயண ஆயுதங்கள் இருப்பதாக ஒரு பொய்யைச் சொல்லி அந்த நாட்டை நாசம் செய்து, அந்த நாட்டு அதிபர் சதாம் உசேனை கொன்ற அமெரிக்காவுடன் ஆதரவு நிலையில் இருந்தீர்களே!  அது என்ன நியாயம்?


உங்கள் நாட்டில் உங்கள் குடிமகன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று சொல்லும் நீங்கள், உங்கள் குடிமகன்களால் இந்தியாவின் அமைதிக்கு பங்கம் ஏற்பட்டிருக்கிறதே அதற்கு கனடா அரசு  பொறுப்பேற்க முடியுமா?  


இந்திய ஏஜன்ஸி மூலமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தனது அனுமானத்தை வெளிப்படுத்தியிருக்கிறாரர் ட்ரூடோ.  ஒரு பிரதமர் இப்படி பொறுப்பில்லாமல் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது.  


ஒரு சம்பவத்தை உங்கள் நினைவிற்கு கொண்டு வருகிறேன்.   சவுதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி, துருக்கி தலைநகரான இஸ்தான்புல்லில் கொல்லப்பட்டார்.   இந்தக் கொலையில் சவுதி அரசின் தொடர்பை அம்பலப்படுத்தியது துருக்கி.  இந்த ஆதாரங்களே கொலைக்கு காரணமானவர்களை உலகத்திற்கு வெளிக்காட்டியது.  இதைப் போல ட்ரூடோவால் ஆதாரத்தை வெளிப்படுத்த முடியுமா?   


தெருவில் செல்லும் சாதாரண மனிதனைப் போல பொறுப்பில்லாமல் ஒரு பிரதமரால் பேச முடியுமா?  இவர் கிளப்பிய பிரச்னை இந்திய அரசுக்கு எதிராக சீக்கியர்களை தூண்டிவிட்டிருக்கிறது.  இதற்கு கனடா அரசு பொறுப்பேற்குமா?


அடுத்த நாட்டின் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆட்சியில் இருப்பவர்களே ஆதரவளிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதா?  கனடாவின் நட்பு நாடுகள் கனட பிரதமரின் நிலைப்பாட்டை ஆதரிக்கின்றனவா?  இந்தியாவில் அல்கொய்தா இயக்கமோ, ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு செயல்பட அனுமதி வழங்கினால் உலக நாடுகள் ஒப்புக் கொள்ளுமா?  கனடா ஏற்றுக் கொள்ளுமா?


சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து உங்கள் பிரதமர் பேசியது சரியா?  அடுத்த நாட்டின் உள் விவகாரங்களில் அவர் தலையிட்டது சரியா?  அவர் ஒவ்வொரு முறை பேசும் போதும் அது தீவிரவாதிகளுக்கு ஊக்கமளிப்பதற்காகத்தான் என்பதை நாங்கள் உணர்கிறோம்.  


உங்கள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முதல் முறையாக 2015ல் கனடாவின் பிரதமராக பொறுப்பேற்றார்.   அப்போது அவர், "இந்தியாவில் மோடி அரசில் இருப்பவர்களைவிட தனது அமைச்சரவையில் சீக்கிய அமைச்சர்கள் அதிகம்", என்று சொன்னார்.   இப்படி ஒரு ஒப்பீட்டை சொல்லும் போதே உங்கள் பிரதமரின் கேடு கெட்ட சிந்தனை வெளிப்பட்டுவிட்டது.  


இந்தியாவை கெடுப்பது ஜஸ்டின் ட்ரூடோவின் குடும்பத் தொழில்.   இவரின் தந்தை *பியரே எலியட் ட்ரூடோ* கனடாவின் பிரதமராக இருந்த காலத்தில் (Pierre Trudeau: 20-4-1968 to 03-06-1979 & 03-03-1980 to 29-06-1984)  காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்படவில்லை.

   

1971ம் ஆண்டு இந்தியாவிற்கு ஐந்து நாட்கள் விஜயம் செய்தார்.   ஒட்டக சவாரி, காளைகளுடன் விளையாட்டு, கங்கை விஜயம், தாஜ் மஹால் விஜயம் என்று எல்லா இடங்களுக்கும் சென்று வந்தார்.   வெளியில் எதையும் காட்டிக்கொள்ளாத மனிதர், நாடு திரும்பியதும் இந்தியாவிற்கு எதிராக நஞ்சை கக்கினார்.   இந்திய அணு ஆயுத சோதனைக்கு எதிராக குரல் கொடுத்தார்.


1981ம் ஆண்டு, தல்வீந்தர் சிங்பார்மர் என்ற ஒரு தீவிரவாதி பஞ்சாபில் இரண்டு காவலர்களை சுட்டுக் கொன்றுவிட்டு கனடாவிற்கு தப்பிச் சென்றான்.  அவனுக்கு அடைக்கலம் கொடுத்தது கனடா.  


இவன் பாபர் கல்சா என்ற தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவன்.   வெளிநாடுகளில் பல இந்தியர்களையும், அதிகாரிகளையும் தாக்கியவன்.   இவனை கைது செய்து இந்தியாவிற்கு அனுப்பிவைக்கும்படி  இந்திய அரசு அன்றைய பிரதமரான பியரே எலியட் ட்ரூடோவிடம் கோரிக்கை வைத்தது.  இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தார் பியரே ட்ரூடோ.   


இந்திய உளவுத்துறை பல எச்சரிக்கைகளை செய்தும் அத்தனை எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தாமல் வேடிக்கை மட்டுமே பார்த்தது பியரே ட்ரூடோவின் அரசு.   இது மிகப்பெரிய இழப்பை உலகத்திற்கு கொடுத்துவிட்டது.


ஜூன் 1, 1985, காலிஸ்தான் தீவிரவாதிகளால் இந்திய உளவுத்துறை விமானத் தாக்குதல் வாய்ப்பிருப்பதாக ட்ரூடோ அரசை எச்சரித்தது.   இதையும் ட்ரூடோ அரசு பொருட்படுத்தவில்லை.   


23 ஜூன், 1985 அன்று ஏர் இந்திய விமானம் கனிஷ்கா, கனடாவின் டொரன்டோ நகரிலிருந்து லண்டனை நோக்கி புறப்பட்டது.   அதில் பயணித்தவர்கள் 329 பேர்கள். அந்த விமானத்தை நடுவானில் குண்டு வைத்து தகர்த்தது காலிஸ்தான் தீவிரவாத இயக்கம்.  அதில் இறந்து போனவர்வர்களில் பெரும்பாலானவர்கள் கனடா நாட்டு பிரஜைகள்.   கனடா நாட்டு தீவிரவாத தாக்குதலில் மிகவும் மோசமானதாக பார்க்கப்பட்டது இந்தத் தாக்குதல்.   இந்த குண்டு வைப்பின் மூளையாக செயல்பட்டவன் தல்வீர் சிங் பார்மர். இவனை பாதுகாத்தது அன்றைய கனட பிரதமர் பியரே ட்ரூடோ.   


இதே தல்வீர் சிங் பார்மர் 1992ம் வருடம் பஞ்சாபில் சுட்டுக் கொல்லப்பட்டான் என்பது தனிக்கதை.   


இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக இந்தியாவின் விசாரணைக்கு கனடா அரசு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.   காலிஸ்தான் தீவிரவாதிகள் பற்றிய அன்றைய பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் எந்த வேண்டுகோளையும் ட்ரூடோ ஏற்றுக்கொள்ளவில்லை.    இறுதியாக காலிஸ்தான் தீவிரவாதிகளால் திருமதி இந்திரா காந்தி பலியானார்.


அன்று கனிஷ்கா விமான குண்டு வெடிப்பில் பலியான கனடாவைச் சேர்ந்தவர்களைப் பற்றி கவலைப்படாத கனடா அரசு, இன்று ஒரு தீவிரவாதியை தனது பிரஜை என்று உரிமை கொண்டாடுகிறது.   பொங்கி எழுகிறது!  இது ஏற்றுக்கொள்ளக் கூடியதா?   அதுவும், அன்று கனடா நாட்டைச் சேர்ந்த பலரை கொன்ற கனிஷ்கா குண்டு வெடிப்புக்கு சம்பந்தப்பட்டவர்களுடன் இன்று கூட்டணி அமைத்திருப்பது கனடாவிற்கு பெருமையா?  


இவையெல்லாம், இப்போதைய கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியவிற்கு எதிராக குழப்பத்தை விளைவிப்பதில் அவரது தந்தைக்கு சற்றும் சளைத்தவர் அல்ல என்பதை உணர்த்திய  நிகழ்வுகள்.  


உங்கள் பிரதமர் தனது பதவியில் நீடிப்பதற்கு ஜக்மீத் சிங் என்ற காலிஸ்தானிய தீவிரவாதிகளின் ஆதரவாளரின் ஆதரவு தேவைப்படுகிறது.   அதாவது ஜக்மீத் சிங்கிடம் உங்கள் பிரதமரின் குடுமி சிக்கியிருக்கிறது.   அவரை திருப்திப்படுத்த இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார் உங்கள் பிரதமர்.  இதை நான் சொல்லி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை.   ஜக்மீத் சிங்கின் குரலைத்தான் உங்கள் பிரதமர் எதிரொலிக்கிறார்.  இதைவிட கேவலமானது ஏதுமிருக்காது.  


பஞ்சாபிலிருந்த தீவிரவாதிகளுக்கு கனடா அடைக்கலம் கொடுத்திருப்பதை யாரும் மறுக்க முடியாது.  இந்தியாவிலிருந்து போலி பாஸ்போர்ட் மூலமாக அங்கு தஞ்சமடைந்தவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள்.   அவர்களின் மீது கனடா அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்ததா?   


ஒரு விஷயத்தை மறந்துவிடாதீர்கள்.   இப்போது இந்தியாவில் ஆட்சியில் இருப்பது நரேந்திர மோடியின் அரசு.  காங்கிரஸ் அரசு அல்ல.   


இதை இனி வரும் காலங்களில் ஜஸ்டி ட்ரூடோ உணர்ந்து கொள்வார்.    


எது எப்படி இருந்தாலும் இரண்டு நாட்டு மக்கள் எந்த இன்னல்களுக்கு ஆளாகக்கூடாது என்பதில் இந்திய அரசு மிக கவனமாக இருக்கிறது.  இன்றைய தேதியில் கனடா பிரச்னைக்கு அதிநவீன அறுவை சிகிச்சை அவசியமாகிறது.  


அரசு, ஆட்சியம் எல்லாமே குடிமக்கள் நிம்மதியாக, அமைதியாக வாழவேண்டும் என்பதற்காகத்தான்.  அடுத்த நாட்டின் அமைதியைக் கெடுத்தால்தான் நம் நாட்டில் அமைதி நிலவும் என்பது தீவிரவாத சிந்தனை.  கனடா மக்களாகிய உங்களிடம் நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி ஒன்றுதான்.   ஒரு பதவி வெறிபிடித்த ஒரு பிரதமரின் பேராசைக்காக குடிமக்கள் அனைவரும் கஷ்டப்பட வேண்டுமா?  


ஒரு தீவிரவாதிக்கு அடைக்கலம் கொடுப்பவனும் தீவிரவாதிதான்.   பிரிவினைவாதிகளை ஆதரித்து, அதன் மூலம் ஆட்சியை தக்க வைக்க முயலும் கேடுகெட்ட பிரதமரின் அரசியல் வாழ்க்கையை முடித்து வையுங்கள்.    


ஒரு சந்தர்ப்பவாத, பதவி வெறிபிடித்த உங்கள் பிரதமர் இந்தியாவிற்கு எதிராக செயல்படுகிறார் என்பதற்காக வெட்கப்படுங்கள்.   இவர் பதவியில் இருக்கும் ஒவ்வொரு நாளும் கனடா தனது சிறப்பை இழந்து கொண்டிருக்கிறது.  ஜஸ்டின் ட்ரூடோ கனடாவின் அவமானச் சின்னம்.  இதை இனிவரும் நாட்கள் உங்களுக்கு உணர்த்தும்.

Monday, September 18, 2023

Request to all ladies..

 Request all the Ladies to spare a few minutes - read the below message carefully and think about it . 


One friend.. 3 years earlier crossed 50..

Just about 8 days later an ailment was the excuse and a condolence message  on the group ...Sad .. she is no more ...  *RIP* 

Two months later I called her husband. A thought crossed my mind ..he must be devastated. Her spouse had a travelling job. Till her death she would oversee everything.. home.. education of their children... Taking care of the aged in-laws.. their sickness.. managing relatives..   _*everything,  everything, everything*_ 


She would express at times..my house.. my family needs me.. but should we not get appreciation... why are we taken for granted?

I called up. I thought her hubby must be lost.. to be responsible for evetything.. aging parents, Kids, loneliness at this age.. how must he be managing?

The cell phone rang for some time..the mind was perplexed.. After an hour he returned the call.. He apoligised that he could not receive the call.. He had started playing tennis for an hour at his club and meeting friends ensured he had a good time. He took a transfer to Pune.

"All well at home? " I asked, 

He replied, he had hired a cook .. he paid her a little more and she would buy the groceries and provisions. He had hired *full time caretaker* for his aging parents. "Managing.. have to ..etc.. " ....

I barely managed to say a couple of sentences and we hung up.

Tears welled up my eyes.

She was immovable from my vision. She had missed the school reunion for minor ailment of her mother in law.

Always looking forward for some appreciation and some applause.. she always said 


Today I feel like telling her..

No one is indispensable.

And no one will be missed.. it is just the play of our mind.

Perhaps it is the consolation.. A symbol of our understanding if you would like to call it that... That's the problem of putting others first.

You have taught them that YOU COME SECOND 


 *Reality bytes* :

 _After her death *two more maids* were hired and the house was in order_


We only measure our respect and our value.. ain't that true?

Then do enjoy life.. Remove the frame of mind that I am indispensable and without me the house will suffer..


 My message to all Ladies : 

Most importantly make time for *yourself* .. the *ME* time.. the time for the self..

 Get in touch with your girlfriends... Talk, laugh and enjoy

 Live your passion, live your life  

 Once in a while do things that love to do ...

 

 Don't look for your happiness in others, *you too deserve some happiness* because if you are not happy you cannot make others happy 

 Everyone needs you, and you too need your own care and love 

 Women should come forward to help and guide other women who are unable to handle their personal stress and give them a hand to uplift their confidence 


Let us HELP Ourselves and make this *LIFE WORTHWHILE*  

 we all have only one life to live,,(thro Whatsup) 

Wednesday, September 13, 2023

படித்ததுதான் ..ஆயினும் நினைவூட்டலுக்காக..

 தினம் ரூபாய் 86400/-.

  

ஒரு சின்ன கற்பனை.

விருப்பமுடன் படியுங்கள் 


ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது.


பரிசு என்னவென்றால் -ஒவ்வொரு நாள் காலையிலும் 

உங்கள் வங்கிக் கணக்கில் 86,400. ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.


ஆனால் இந்தப் பரிசுக்கு சில நிபந்தனைகள் உண்டு.


அவை -


1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத

பணம் " உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.


2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு கணக்கிற்கு மாற்றமுடியாது. 


3) அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு


4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக்கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400 ரூபாய்வரவு வைக்கப்படும்


5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ளலாம்.


6) வங்கி - 

"முடிந்தது கணக்கு" என்று சொன்னால் அவ்வளவு தான். 

வங்கிக் கணக்கு மூடப்படும்,மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது.


இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?


உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?


உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள்மனதுக்கு பிடித்தவர்களுக்கும் வாங்கித்தருவீர்கள்

இல்லையா? 


உங்களுக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள். ஏனென்றால்

அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக

மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் -அப்படித்தானே?


முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும் எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள்தானே?


உண்மையில் இது ஆட்டமில்லை- 

நிதர்சனமான உண்மை😀😀


ஆம் நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கி க்கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை.


அந்த ஆச்சரிய வங்கிக்கணக்கின்பெயர் -

#காலம்.


ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும்போது வாழ்க்கையின் 

அதியுன்னத பரிசாக 86400

வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.


இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம் நமக்காக சேமித்து வைக்கப் படுவதில்லை.


அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள்தொலைந்தது தொலைந்தது தான்.நேற்றைய பொழுது போனது போனது தான்.


ஒவ்வொரு நாள் காலையிலும்

புத்தம் புதிதாக நம்கணக்கில் 86400 வினாடிகள்.


எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும்வங்கி உங்கள் கணக்கை 

முடக்க முடியும்.


அப்படியிருக்கும் பட்சத்தில்நீங்கள் என்ன செய்வீர்கள்?


உண்மையில் 86400

வினாடிகள் என்பது அதற்கு சமமான அல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும் மதிப்பு 

வாய்ந்தது அல்லவா?


இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க மாட்டோமா? 

வாழ்க்கை என்பது ஒருமுறை தான் அதை மகிழ்ச்சியுடனும் , உறவுகளுடனும் , மனிதனேயத்துடனும் இறைவனுக்கு   ஏற்ற வாழ்க்கையாக வாழ்வோம் !

🕛🕐🕑🕒🕓🕔🕕🕖🕗🕘🕙🕚

வாழ்க்கையை வாழவே பணம் தேவை , பணத்தை சேர்க்க வாழ்வு அல்ல !

காலம் நாம் நினைப்பதை விட வேகமாக ஓடிவிடும்.🏃

சந்தோஷமாகஇருங்கள் -

மீண்டும் பிறப்போம் என்பது நிச்சயம் இல்லை , மீண்டும் அம்மா,அப்பா, சகோதரர்கள் ,சகோதரிகள் ,நண்பர்கள் ,உறவுகள் வருவது இல்லை !

சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் - 🌈


வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்....

Tuesday, September 12, 2023

குழு தர்மம்..

 *நீங்கள் சேர்ந்த குழுவில் நட்பை எவ்வாறு பேணுவது.*


*1.* எல்லாவற்றையும் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளுங்கள்.


*2.* குழுவில் உள்ளவர்களை விட யாரும் பெரியவர்கள் இல்லை.


*3.* குழுவில் அனைவரும் முக்கியமானவர்கள். 

ஆனால் குழுவிற்கு யாரும் முக்கியமானவர்கள் அல்ல.


*4.* ஒவ்வொருவரும் அவரால் முடிந்த பங்களிப்பைச் செய்ய வேண்டும்.


*5.* எதுவுமே ஒரிஜினல் இல்லை..... அனைத்தும் ஃபார்வர்டுகள், 

(நீங்கள் இப்போது படிக்கும் செய்தி உட்பட) 😜


 *6.* எனவே எதிர்வினையாற்ற வேண்டிய அவசியமில்லை, 

சில சமயங்களில் மீண்டும் மீண்டும் பலரால் ஒரு  செய்தி  வரும், 

தொந்தரவு செய்யாதீர்கள், 

அவர்களை வரவேற்கிறோம். 

எல்லா இடங்களிலும் இது இயல்பானது.


*7.* யாரும் பணம் பெறுவதில்லை, எனவே இது அன்பு மற்றும் தன்னார்வ முயற்சிகள்.


*8.* உங்கள் இயல்பான வாழ்க்கையை வாழுங்கள், 

நீங்கள் தனித்துவமானவர்,

 உங்களில் சிலர் இல்லாமல் குழு சலிப்பாக இருக்கும்.


*9.* மற்றவர்கள் மட்டுமே பதிவுகள் இட வேண்டும் என்று ஒருபோதும் எதிர்பார்க்காதீர்கள், 


ஆனால் உங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குங்கள்.


*10.* குழுக்கள் எப்பொழுதும் பொழுதுபோக்காக இருக்கும், 

எனவே இடுகையிடப்படும் அனைத்தையும் படித்து மகிழ்வோம்.

 ஒரு இடுகையைப் படித்து , அதை வளப்படுத்த ஒரு கருத்தை இடுங்கள்.


*11.* ஒவ்வொரு அரட்டையையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்,


 ஏனென்றால் நாம் அனைவரும் குழுவில் வேடிக்கை பார்க்க, கற்றுக்கொள்ள, 

ஒருவரையொருவர் மகிழ்விக்க இருக்கிறோம்.


 *12.* கடைசியாக, ஒருவர் போடும் இடுகையை நீங்கள் விரும்பாத நேரங்கள் இருக்கலாம். 

 அதைப் பாராட்டக் கூடிய வேறு யாராவது குழுவில் இருக்கலாம்.


13) குழு என்பதே முன் பின் தெரியாத பலர் இணைந்து கருத்துக்களை பரிமாறிக்கொள்வது தான்


14) குழுவில் வரும் நகைச்சுவைப் பதிவுகளை ஜாலியாக படித்து விட்டு கடந்து செல்லுங்கள் அவை சிரிப்பதற்காக மட்டுமே சிந்திப்பதற்கு அல்ல

உணர்ச்சிவசப்பட்டு எதிர் கேள்விகள் கேட்காதீர்கள் 


15) ஒரு பதிவுக்காக பதிவிட்டவருடனோ மற்ற குழு உறுப்பினர்களிடமோ வீண் சண்டையை இழுக்காதீர்கள் 


ஒருவருக்கு சரி எனப்படுவது மற்றவருக்கு தவறு எனப் படலாம் 


பல விதமான சிந்தனை / கருத்துகள் / கொள்கைகள் / நம்பிக்கைகள்  கொண்டவர்கள் இணைந்தது தான் ஒரு குழு என்பது 


*இந்த குழுவில் அனைவரும் சமம் மற்றும் முக்கியமானவர்கள்

 என்பதை நினைவில் கொள்ளுங்கள்.👍👍                  மகிழ்வித்து மகிழ்வோமே..👍👍😊💕💕

Saturday, September 9, 2023

நல்லதோர் வீணையாய்...

  


"

நல்லதோர் வீணையாய் "அவனிருந்தான்

அதனால்தானே மடமை இருளில்
ஆழ்ந்திருந்த மக்களை தட்டி எழுப்பி
பூபாளம் இசைத்து விடியலைக் காட்ட முடிந்தது

"சுடர்மிகும் அறிவுடன் "அவனிருந்தான்
அதனால்தானே அடிமைச் சிறுமதிச் சுகத்தில்
சீரழிந்து பார்வையற்றுக் கிடந்த தம் மக்களுக்கு
ஒளியாகி விழிப்பூட்டி நல்வழி காட்ட முடிந்தது

"எமக்குத் தொழிலே கவிதை" யென்றிருந்தான்
அதனால்தானே பண்டிதர்களின் நாவினில்
அடைபட்டுத் தவித்த அருந்தமிழை விடுவித்து
கவிதையை அனைவருக்குமான தாக்க முடிந்தது

"ஊருக்குழைத்தலே" தன் கடமையென்றிருந்தான்
அதனால்தானே சமூகச் சீர்கேட்டைச் சீரழிக்கும்
கூர்வாளாய்ப்  புரட்சிக் கவிகள் படைத்து
சமதர்மச் சமூதாயத்திற்கு அடித்தளமிட முடிந்தது

" இமைப்பொழுதும்"  இருக்கும்வரைச் சோராதிருந்தான்
அதனால்தானே இளம்வயதில்
 காலனவன் அழைத்தபோதும்
காலத்தை வென்றவனாய் காவிய மானவனாய்
பாட்டுக்கொருவனென  இன்றளவும்
 அவன் மட்டுமே பரிமளிக்க முடிகிறது

Monday, September 4, 2023

சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இருக்கு..

 ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.🍋 #அன்பு_செய்வீர் 🌳 


பழங்களை எடை போட்டு வாங்கி பணம் செலுத்திய பின் அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு,


இந்த பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று அந்த பாட்டியிடம் கொடுத்து சாப்பிட சொல்லி புகார் செய்வார்.🍋 🍋 


உடனே பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு, இல்லையேப்பா, நல்லா தானே இருக்கு" என்பார், 


உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி பழங்களை எடுத்துக் கொண்டு செல்வார்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர் மனைவி அவரிடம்,


ஏங்க.. பழங்கள் நல்லா இனிப்பாக தானே உள்ளது, என் தினமும் இப்படி நல்லா இல்லைனு சொல்லி டிராமா போடறீங்க" என்று கேட்ப்பார்.


உடனே அந்த இளைஞர் சிரித்து கொண்டு மனைவியிடம், அந்த பாட்டி நல்ல இனிப்பான பழங்களை தான் விற்கிறார்,


ஆனாலும், தனக்கென்று ஒரு பழத்தைக் கூட சாப்பிட மாட்டார்.


நான் இப்படி குறை கூறி கொடுப்பதால் தினம்

அவர் காசு இழப்பின்றி ஒரு பழத்தை சாப்பிடுகிறார் என்றார்.


தினமும் நடக்கும் இந்த நாடகத்தை அருகில் இருந்த காய்கறி வியாபாரி கவனித்து விட்டு,

அந்த பாட்டியிடம்,


அந்த ஆள் தினமும் உன் பழங்களை குறை கூறுகிறான், இருந்தும் நீ ஏன் அவனுக்கு எடை

அதிகமாக போட்டு பழங்களை கொடுக்கிறாய் எனக் கேட்கிறான்.ஷ...ரு🌳 


உடனே அந்த பாட்டி புன்னகைத்துவிட்டு, 

அவன் என்னை தினமும் ஒரு பழத்தை சாப்பிட வைப்பதற்காகவே இப்படி குறை கூறுவது போல கூறி,கொடுத்து சாப்பிட வைக்கிறான்.


இது எனக்கு தெரியாது என்று நினைக்கிறான், 


நான் எடை அதிகமாக பழங்களை போடுவதில்லை,மாறாக அவனது அன்பில் எனது தராசு கொஞ்சம் சரிந்துவிடுகிறது என்றார் அன்போடு....,


இப்படிப்பட்ட சின்ன சின்ன அன்பில் தானேங்க

ஜீவன் இன்னும் இருக்கு.....


அன்பை விதையுங்கள்...அதையே அறுவடை செய்வீர்கள்.. ஷ...ரு🌳


Teachers  day  wishes, ஆசிரியர்  தின வாழ்த்துகள்வாட்ஸ் அப்பில் ரசித்தது..