Sunday, September 24, 2023

கனடாவிலிருந்து....

 நண்பர்கள் மூலமாக கனடாவில் பதிவிட்ட கடிதத்தின் தமிழ் வடிவம் . . . . . 


கனடா சகோதர்களுக்கு ஒரு கடிதம்!


உலக அமைதியை விரும்பும் நாடாகிய இந்தியாவின் ஒரு பெருமை மிகு பிரஜையாக இந்த கடிதத்தை கனடா நாட்டு நண்பர்களுக்கு எழுதுகிறேன்.


ஜஸ்டின் ட்ரூடோ என்ற பதவி ஆசை பிடித்த ஒரு தனிமனிதனால் பாழ்பட்டுப் போயிருக்கிறது இந்திய - கனடா உறவு.  


காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்கள் ஆட்டிவிக்கின்றபடி ஆடிக் கொண்டிருக்கும் உங்கள் பிரதமருக்கு கண்டனங்கள்.   தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்கு எந்த ஆதாரமுமில்லாமல் இந்தியாவின் மீது பழியை போட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறார் உங்கள் பிரதமர்.     இந்தியா திட்டவட்டமாக இந்தக் கொலைப் பழியை மறுத்திருக்கிறது.  


இந்தியாவிலிருந்து 11400 கிலோ மீட்டர் தூரத்தில் கனடா இருந்தாலும், இந்தியாவை அழிக்கும் முயற்சியில் பாகிஸ்தானின் கிளை அலுவலகம் போல கனடா செயல்படுவது வெட்கக்கேடானது.  


ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை ஒரு தீவிரவாதி என்று சொல்லாமல், அவனை ஒரு "ப்ளம்பர்", என்று சொல்லியிருக்கிறது உங்கள் அரசு.  அப்படியென்றால், அல்கொய்தா தலைவன்  பின்லாடனை ஏன் கட்டுமான இன்ஜினியர் என்று சொல்லவில்லை?   பதிலாக அவனை தீவிரவாத தலைவன் என்று ஏன் சொல்கிறீர்கள்?  அடுத்த நாட்டு பிரஜையாகிய பின்லாடனை, மற்றொரு நாட்டில் புகுந்து கொன்றதை ஆதரித்த நாடுகளில் கனடாவும் ஒன்றுதானே!   


அந்தக் கொலை இனிக்கும்.  இந்தக் கொலை கசக்கிறதா?


ஈராக்கில் இரசாயண ஆயுதங்கள் இருப்பதாக ஒரு பொய்யைச் சொல்லி அந்த நாட்டை நாசம் செய்து, அந்த நாட்டு அதிபர் சதாம் உசேனை கொன்ற அமெரிக்காவுடன் ஆதரவு நிலையில் இருந்தீர்களே!  அது என்ன நியாயம்?


உங்கள் நாட்டில் உங்கள் குடிமகன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று சொல்லும் நீங்கள், உங்கள் குடிமகன்களால் இந்தியாவின் அமைதிக்கு பங்கம் ஏற்பட்டிருக்கிறதே அதற்கு கனடா அரசு  பொறுப்பேற்க முடியுமா?  


இந்திய ஏஜன்ஸி மூலமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தனது அனுமானத்தை வெளிப்படுத்தியிருக்கிறாரர் ட்ரூடோ.  ஒரு பிரதமர் இப்படி பொறுப்பில்லாமல் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது.  


ஒரு சம்பவத்தை உங்கள் நினைவிற்கு கொண்டு வருகிறேன்.   சவுதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி, துருக்கி தலைநகரான இஸ்தான்புல்லில் கொல்லப்பட்டார்.   இந்தக் கொலையில் சவுதி அரசின் தொடர்பை அம்பலப்படுத்தியது துருக்கி.  இந்த ஆதாரங்களே கொலைக்கு காரணமானவர்களை உலகத்திற்கு வெளிக்காட்டியது.  இதைப் போல ட்ரூடோவால் ஆதாரத்தை வெளிப்படுத்த முடியுமா?   


தெருவில் செல்லும் சாதாரண மனிதனைப் போல பொறுப்பில்லாமல் ஒரு பிரதமரால் பேச முடியுமா?  இவர் கிளப்பிய பிரச்னை இந்திய அரசுக்கு எதிராக சீக்கியர்களை தூண்டிவிட்டிருக்கிறது.  இதற்கு கனடா அரசு பொறுப்பேற்குமா?


அடுத்த நாட்டின் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆட்சியில் இருப்பவர்களே ஆதரவளிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதா?  கனடாவின் நட்பு நாடுகள் கனட பிரதமரின் நிலைப்பாட்டை ஆதரிக்கின்றனவா?  இந்தியாவில் அல்கொய்தா இயக்கமோ, ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு செயல்பட அனுமதி வழங்கினால் உலக நாடுகள் ஒப்புக் கொள்ளுமா?  கனடா ஏற்றுக் கொள்ளுமா?


சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து உங்கள் பிரதமர் பேசியது சரியா?  அடுத்த நாட்டின் உள் விவகாரங்களில் அவர் தலையிட்டது சரியா?  அவர் ஒவ்வொரு முறை பேசும் போதும் அது தீவிரவாதிகளுக்கு ஊக்கமளிப்பதற்காகத்தான் என்பதை நாங்கள் உணர்கிறோம்.  


உங்கள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முதல் முறையாக 2015ல் கனடாவின் பிரதமராக பொறுப்பேற்றார்.   அப்போது அவர், "இந்தியாவில் மோடி அரசில் இருப்பவர்களைவிட தனது அமைச்சரவையில் சீக்கிய அமைச்சர்கள் அதிகம்", என்று சொன்னார்.   இப்படி ஒரு ஒப்பீட்டை சொல்லும் போதே உங்கள் பிரதமரின் கேடு கெட்ட சிந்தனை வெளிப்பட்டுவிட்டது.  


இந்தியாவை கெடுப்பது ஜஸ்டின் ட்ரூடோவின் குடும்பத் தொழில்.   இவரின் தந்தை *பியரே எலியட் ட்ரூடோ* கனடாவின் பிரதமராக இருந்த காலத்தில் (Pierre Trudeau: 20-4-1968 to 03-06-1979 & 03-03-1980 to 29-06-1984)  காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்படவில்லை.

   

1971ம் ஆண்டு இந்தியாவிற்கு ஐந்து நாட்கள் விஜயம் செய்தார்.   ஒட்டக சவாரி, காளைகளுடன் விளையாட்டு, கங்கை விஜயம், தாஜ் மஹால் விஜயம் என்று எல்லா இடங்களுக்கும் சென்று வந்தார்.   வெளியில் எதையும் காட்டிக்கொள்ளாத மனிதர், நாடு திரும்பியதும் இந்தியாவிற்கு எதிராக நஞ்சை கக்கினார்.   இந்திய அணு ஆயுத சோதனைக்கு எதிராக குரல் கொடுத்தார்.


1981ம் ஆண்டு, தல்வீந்தர் சிங்பார்மர் என்ற ஒரு தீவிரவாதி பஞ்சாபில் இரண்டு காவலர்களை சுட்டுக் கொன்றுவிட்டு கனடாவிற்கு தப்பிச் சென்றான்.  அவனுக்கு அடைக்கலம் கொடுத்தது கனடா.  


இவன் பாபர் கல்சா என்ற தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவன்.   வெளிநாடுகளில் பல இந்தியர்களையும், அதிகாரிகளையும் தாக்கியவன்.   இவனை கைது செய்து இந்தியாவிற்கு அனுப்பிவைக்கும்படி  இந்திய அரசு அன்றைய பிரதமரான பியரே எலியட் ட்ரூடோவிடம் கோரிக்கை வைத்தது.  இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தார் பியரே ட்ரூடோ.   


இந்திய உளவுத்துறை பல எச்சரிக்கைகளை செய்தும் அத்தனை எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தாமல் வேடிக்கை மட்டுமே பார்த்தது பியரே ட்ரூடோவின் அரசு.   இது மிகப்பெரிய இழப்பை உலகத்திற்கு கொடுத்துவிட்டது.


ஜூன் 1, 1985, காலிஸ்தான் தீவிரவாதிகளால் இந்திய உளவுத்துறை விமானத் தாக்குதல் வாய்ப்பிருப்பதாக ட்ரூடோ அரசை எச்சரித்தது.   இதையும் ட்ரூடோ அரசு பொருட்படுத்தவில்லை.   


23 ஜூன், 1985 அன்று ஏர் இந்திய விமானம் கனிஷ்கா, கனடாவின் டொரன்டோ நகரிலிருந்து லண்டனை நோக்கி புறப்பட்டது.   அதில் பயணித்தவர்கள் 329 பேர்கள். அந்த விமானத்தை நடுவானில் குண்டு வைத்து தகர்த்தது காலிஸ்தான் தீவிரவாத இயக்கம்.  அதில் இறந்து போனவர்வர்களில் பெரும்பாலானவர்கள் கனடா நாட்டு பிரஜைகள்.   கனடா நாட்டு தீவிரவாத தாக்குதலில் மிகவும் மோசமானதாக பார்க்கப்பட்டது இந்தத் தாக்குதல்.   இந்த குண்டு வைப்பின் மூளையாக செயல்பட்டவன் தல்வீர் சிங் பார்மர். இவனை பாதுகாத்தது அன்றைய கனட பிரதமர் பியரே ட்ரூடோ.   


இதே தல்வீர் சிங் பார்மர் 1992ம் வருடம் பஞ்சாபில் சுட்டுக் கொல்லப்பட்டான் என்பது தனிக்கதை.   


இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக இந்தியாவின் விசாரணைக்கு கனடா அரசு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.   காலிஸ்தான் தீவிரவாதிகள் பற்றிய அன்றைய பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் எந்த வேண்டுகோளையும் ட்ரூடோ ஏற்றுக்கொள்ளவில்லை.    இறுதியாக காலிஸ்தான் தீவிரவாதிகளால் திருமதி இந்திரா காந்தி பலியானார்.


அன்று கனிஷ்கா விமான குண்டு வெடிப்பில் பலியான கனடாவைச் சேர்ந்தவர்களைப் பற்றி கவலைப்படாத கனடா அரசு, இன்று ஒரு தீவிரவாதியை தனது பிரஜை என்று உரிமை கொண்டாடுகிறது.   பொங்கி எழுகிறது!  இது ஏற்றுக்கொள்ளக் கூடியதா?   அதுவும், அன்று கனடா நாட்டைச் சேர்ந்த பலரை கொன்ற கனிஷ்கா குண்டு வெடிப்புக்கு சம்பந்தப்பட்டவர்களுடன் இன்று கூட்டணி அமைத்திருப்பது கனடாவிற்கு பெருமையா?  


இவையெல்லாம், இப்போதைய கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியவிற்கு எதிராக குழப்பத்தை விளைவிப்பதில் அவரது தந்தைக்கு சற்றும் சளைத்தவர் அல்ல என்பதை உணர்த்திய  நிகழ்வுகள்.  


உங்கள் பிரதமர் தனது பதவியில் நீடிப்பதற்கு ஜக்மீத் சிங் என்ற காலிஸ்தானிய தீவிரவாதிகளின் ஆதரவாளரின் ஆதரவு தேவைப்படுகிறது.   அதாவது ஜக்மீத் சிங்கிடம் உங்கள் பிரதமரின் குடுமி சிக்கியிருக்கிறது.   அவரை திருப்திப்படுத்த இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார் உங்கள் பிரதமர்.  இதை நான் சொல்லி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை.   ஜக்மீத் சிங்கின் குரலைத்தான் உங்கள் பிரதமர் எதிரொலிக்கிறார்.  இதைவிட கேவலமானது ஏதுமிருக்காது.  


பஞ்சாபிலிருந்த தீவிரவாதிகளுக்கு கனடா அடைக்கலம் கொடுத்திருப்பதை யாரும் மறுக்க முடியாது.  இந்தியாவிலிருந்து போலி பாஸ்போர்ட் மூலமாக அங்கு தஞ்சமடைந்தவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள்.   அவர்களின் மீது கனடா அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்ததா?   


ஒரு விஷயத்தை மறந்துவிடாதீர்கள்.   இப்போது இந்தியாவில் ஆட்சியில் இருப்பது நரேந்திர மோடியின் அரசு.  காங்கிரஸ் அரசு அல்ல.   


இதை இனி வரும் காலங்களில் ஜஸ்டி ட்ரூடோ உணர்ந்து கொள்வார்.    


எது எப்படி இருந்தாலும் இரண்டு நாட்டு மக்கள் எந்த இன்னல்களுக்கு ஆளாகக்கூடாது என்பதில் இந்திய அரசு மிக கவனமாக இருக்கிறது.  இன்றைய தேதியில் கனடா பிரச்னைக்கு அதிநவீன அறுவை சிகிச்சை அவசியமாகிறது.  


அரசு, ஆட்சியம் எல்லாமே குடிமக்கள் நிம்மதியாக, அமைதியாக வாழவேண்டும் என்பதற்காகத்தான்.  அடுத்த நாட்டின் அமைதியைக் கெடுத்தால்தான் நம் நாட்டில் அமைதி நிலவும் என்பது தீவிரவாத சிந்தனை.  கனடா மக்களாகிய உங்களிடம் நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி ஒன்றுதான்.   ஒரு பதவி வெறிபிடித்த ஒரு பிரதமரின் பேராசைக்காக குடிமக்கள் அனைவரும் கஷ்டப்பட வேண்டுமா?  


ஒரு தீவிரவாதிக்கு அடைக்கலம் கொடுப்பவனும் தீவிரவாதிதான்.   பிரிவினைவாதிகளை ஆதரித்து, அதன் மூலம் ஆட்சியை தக்க வைக்க முயலும் கேடுகெட்ட பிரதமரின் அரசியல் வாழ்க்கையை முடித்து வையுங்கள்.    


ஒரு சந்தர்ப்பவாத, பதவி வெறிபிடித்த உங்கள் பிரதமர் இந்தியாவிற்கு எதிராக செயல்படுகிறார் என்பதற்காக வெட்கப்படுங்கள்.   இவர் பதவியில் இருக்கும் ஒவ்வொரு நாளும் கனடா தனது சிறப்பை இழந்து கொண்டிருக்கிறது.  ஜஸ்டின் ட்ரூடோ கனடாவின் அவமானச் சின்னம்.  இதை இனிவரும் நாட்கள் உங்களுக்கு உணர்த்தும்.

3 comments:

Anonymous said...

TEST

திண்டுக்கல் தனபாலன் said...

சில வரிகள் பேடிக்கு மிகவும் பொருத்தம்...

நெல்லைத்தமிழன் said...

ஜஸ்டிட் ட்ரூடோவே ஒரு தீவிரவாதி. காலஸ்தான் ஆதரவாளர்களுடன் சேர்ந்துகொண்டு அவர் பயங்கரவாதியாக ஆக முயல்கிறார். கனடா, அவர் தலைமையில் ஒரு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானாக மாறிக்கொண்டிருக்கிறது.

Post a Comment