Saturday, October 4, 2025

எதற்காக..?

 அக்பர், ஒருநாள் தான்ஸேனிடம் கூறினார்: 

“உன் சங்கீதத்தைக் கேட்கும் போது உன்னைப் போல இசைப்பவர்கள் பூமியில் அபூர்வமாகத்தான் இருப்பார்கள் என்ற எண்ணம் எழுகிறது...

ஏனென்றால் இதை விட உயர்வாக எது இருக்க முடியும் என்ற அனுமானம்கூட எழ மறுக்கிறது. நீ சிகரமாக இருக்கிறாய்...

ஆனால் நேற்று இரவு உன்னை அனுப்பிவிட்டுப் படுக்கைக்குச் சென்றபின், அப்படி ஒருவர் இருக்க முடியுமோ என்று எனக்கு தோன்றியது...

நீயும் ஒருவரிடமிருந்து கற்றுக் கொண்டுதானே இருக்கிறாய்?  

உனக்கும் குரு இருக்கிறார் என்பது நினைவுக்கு வந்தது. அதனால் இன்று உன்னிடம் அதைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன். உன் குரு யார்?  

அவர் இருக்கிறார் அல்லவா?”


தான்ஸேன் பதிலளித்தார்:  

"என் குருவின் முன்னே,  

நான் ஒன்றுமே இல்லை...   

எனக்குக் கற்றுக் கொடுத்தவருடைய 

கால் தூசு கூட நான் பெற மாட்டேன்... அதனால் நான் சிகரம் என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள்... தரையளவு கூட இல்லை...

தங்களுக்கு என்னை மட்டுமே தெரியும். அதனால் சிகரமாக நினைக்கிறீர்கள்...

ஒட்டகம், குன்றின் அருகே வந்த பின்தான், தான் குன்று அல்ல என்பதை உணர்கிறது. இல்லாவிட்டால் குன்று தன்னை விட சிறியது என நம்புகிறது...

குருவின் முன்னால் நான் ஒன்றுமே இல்லை. எப்போதும் குருவின் சரணங்களில் அமரும் பேறு கிடைத்தால், யோக்கியதை கிடைத்தாலே, எல்லாம் கிடைத்ததாக மகிழ்வேன்!" என்றார்...


அக்பர் உடனே, “உனது குரு உயிரோடு இருந்தால் இந்தக் கணமே அவரை இங்கே அழைத்து வா. நான் கேட்க விரும்புகிறேன்!" என்றார்...


தான்ஸேன், “அது சிரமம்! அவர் உயிரோடு இருக்கிறார். ஆனால் அவரை அழைத்து வர முடியாது," என்றார்...


அக்பர், "என்ன சன்மானம் வேண்டுமானாலும் கொடுத்து விடலாம்.. எதை விரும்புகிறாரோ அதைக் கொடுத்து விடலாம்.நீ கூறுவதை அளிக்கத் தயார்!" என்றார்.


தான்ஸேன், “சிரமம் அதுதான். அவரை, எதுவும் வாங்கிக் கொள்ளச் செய்வது முடியாது. எதுவும் வேண்டும் என்பது அவரிடம் கிடையாது!” என்றார்...


அக்பர் கேட்டார், "எந்த உபாயம் செய்ய முடியும்?" என்று...


தான்ஸேன், "இப்போது எதுவும் பிரயோசனமில்லை. நீங்கள் கேட்பதற்காகப் பாடுபவர் அல்ல அவர்... அவர் இசைத்துக் கொண்டிருக்கும்போது மட்டுமே கேட்க முடியும். அவர் எப்போது இசைக்கிறார் என்று கவனிக்கிறேன் பிறகு நாம் போகலாம்,'' என்று கூறி விடை பெற்றார்...


ஹரிதாஸ், தான்ஸேனுடைய குரு... 

யமுனா தீரத்தில் வசித்தார்.  

இரவு மூன்று மணிக்கு எழுந்து அவர் வாத்தியத்தை வாசிக்கிறார், ஆடுகிறார் என்று தெரிந்து கொண்டார், தான்ஸேன்..


உலகில் அக்பரைப் போன்ற செல்வாக்குள்ள வேறு சக்கரவர்த்தி எங்கும் மூன்று மணிக்கு இரவில் கண்விழித்து ஒரு சிறந்த சங்கீதக் கலைஞரது பாட்டைக் கேட்கக் காத்திருக்க மாட்டார்கள்...


அக்பரும், தான்ஸேனும் திருடர்களைப் போலக் குடிலுக்கு வெளியே குளிர் நடுக்கும் இரவில் ஒளிந்து உட்கார்ந்திருந்தனர்...


ஹரிதாஸ் பாடத்தொடங்கினார்... 


அந்த சங்கீதத்தில் லயித்து அக்பர் கண்களில் நீர் பெருக மௌனமாக அமர்ந்திருந்தார்...


பாட்டு முடிந்து மௌனமாகவே அரண்மனைக்குத் திரும்பினார்கள்... வழியில் இருவரும் பேசவேயில்லை...


வாயிலுக்கு வந்தவுடன் தான்ஸேனிடம், “இதுவரை உன்னைப் போன்ற சங்கீதக் கலைஞன் இல்லையென்று நினைத்திருந்தேன். இப்போது நீ எங்கே, அவர் எங்கே என்று தோன்றுகிறது....   

ஏன் உன் குருவைப் போல நீ வாசிக்க முடியவில்லை?” என்று கேட்டார்...


தான்ஸேன் உடனே,  

“விஷயம் வெகு தெளிவானது.  

நான் எதையோ அடைய வேண்டும் என்று வாசிக்கிறேன்....   

என் குரு எதையோ அடைந்து விட்டார்.... அதனால் வாசிக்கிறார்.... 

எனது சங்கீதத்திற்கு முன் சில லட்சியங்கள், தேவைகள் உள்ளன....

அவை எனக்கு கிடைக்க வேண்டும்....

தேவைக்காக பாடுவதில் என் பிராணன் முழுவதும் ஒருபொழுதும் பாடலில் இருப்பதில்லை....  

பாடுவதில் எப்போதும் குறையாகவே இருக்கிறேன்.....

பாடாமலே அவை எனக்குக் கிடைக்கும் என்றால், பாடிக் கிடைக்கும் சன்மானங்கள், பாடாமலே கிடைத்து விட்டால், பாட்டைத் தூக்கி உடைப்பில் போட்டு விடுவேன்.... 

சங்கீதம் எனக்கு ஒரு சாதனமே'' என்றார்...


வருங்காலத்தில், செல்வத்தில், புகழில், செல்வாக்கில்,  

சங்கீதம் ஒரு சாதனம் மட்டுமே....

சாதனம் ஒருபொழுதும் ஆத்மாவாகி விடுவதில்லை...


ஆனால் நீங்கள் இப்போது கேட்டு வந்தது ஒரு மகானுடைய சங்கீதம்....  

அவருக்கு எதையும் அடையும் சாதனம் அல்ல சங்கீதம்...


மேலே எதுவும் இல்லை,  

அவருக்குப் பாடி அடைவதற்காக.. பின்னால் ஏதோ இருக்கிறது,  

அவர் சங்கீதத்தைப் பெருகச் செய்து கொண்டு....

அதன் காரணமாக அவருள் பூரித்துப் பொங்குகிறது சங்கீதம்...


அவர் பாடுகிறார்.... 

எதையோ அடைந்து விட்டார்....

எதுவோ நிறைந்து விட்டது....

அது பெருகுகிறது.... 

அது ஒரு அனுபூதி....

ஒரு சத்தியம்....  

ஒரு இறைவன் உயிரில் நிறைந்துள்ளான்...  

இப்போது அது பெருகித் ததும்புகிறது...


அக்பர் மீண்டும் மீண்டும் கேட்கலானார்..

பிறகு எதற்காக பாடுகிறார்?"

எதற்காக, எதற்காக?” என்று்..


இயற்கைதான்.. நாமும் கேட்கிறோம்.. எதற்காகப் பாடுகிறார்? என்று...


தான்ஸேன் விடையளிக்கிறார்..

"நதி எதற்காக ஓடுகிறது?  

மலர் எதற்காக மலர்கிறது?   

சூரியன் எதற்காக உதயமாகிறான்?”

அதைப் போலத்தான் அவர் பாடுகிறார்....


‘எதற்காக?’


மனிதனுடைய புத்தி பிறப்பித்த கேள்வி...


மனிதனைத் தவிர எல்லாப் படைப்புகளும் 'எதற்காக' என்று கேட்பதில்லை. உலகம் முழுவதும் உள்ளுக்குள்ளே வாழ்கிறது...


மலர் மலர்கின்றது...

மலருவதிலேயே ஆனந்தம்...


சூரியன் உதிக்கிறான்...

உதிப்பதிலேயே ஆனந்தம்...


காற்று வீசுகிறது...

வீசுவதிலேயே ஆனந்தம்...


ஆகாயம் இருக்கிறது...

இருப்பதிலேயே ஆனந்தம்...


உங்கள் இருப்பில் அந்த லயம் இருந்தால்,  


நீங்களும் அந்த ஆனந்த பிரவாகத்தில் இருப்பீர்கள்...


ஆனந்தம் எங்கிருந்தும் வருவதில்லை...  

அங்கேயே இருக்கிறது...


ஓஷோ

Friday, October 3, 2025

ஜெனரிக் மருந்து..அடிப்படைத் தகவல்கள்

 நண்பர்களே! நம்ம எல்லாருக்கும் ஒரு பெரிய சந்தேகம் இருக்கும். "அரசு ஆஸ்பத்திரியில தர்ற மாத்திரைக்கும், பிரைவேட் டாக்டர்கிட்ட காசு கொடுத்து வாங்குற மாத்திரைக்கும் என்ன வித்தியாசம்?" உதாரணமா, சர்க்கரை மாத்திரை மெட்ஃபார்மின் 500 (Metformin 500) எடுத்துக்கலாம். ரெண்டும் ஒண்ணுதானா? இல்ல பிரைவேட்ல தர்றது 'ஒரிஜினல்' சரக்கா?


சிம்பிளா சொல்றேன், பெரிய வித்தியாசம் ஒண்ணுமே இல்லை!


மருந்து தயாரிக்கிற கம்பெனியில (Pharmaceutical) வேலை செய்யுற ஒரு நண்பர்கிட்ட இதைப் பத்திக் கேட்டேன். அவர் சொன்ன விஷயம் என்னன்னா, அவங்க தயாரிக்கிற பெரும்பாலான மருந்துகளே 'ஜெனரிக்' (Generic) மருந்துகள்தானாம். 'ஜெனரிக்'னா என்ன? 'பிராண்டட்'னா என்ன? இதைத் தெளிவா புரிஞ்சுகிட்டாலே, உங்க கேள்விக்கு பதில் கிடைச்சிடும்!


'Branded' மருந்துனா என்ன?


முதல்ல, ஒரு கம்பெனி பல வருஷங்கள், பல கோடிகள் செலவு செஞ்சு ஒரு நோய்க்கான புது மருந்தை (ஃபார்முலா) கண்டுபிடிக்குது. அதுக்கு அவங்க 'பேட்டன்ட்' (Patent) வாங்கிடுவாங்க. உதாரணமா, கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு அந்த மருந்தை அவங்க மட்டும்தான் விற்க முடியும். அவங்க இஷ்டம் போல ஒரு 'பிராண்ட் நேம்' (Brand Name) வெச்சு, அதிக விலைக்கு விற்பாங்க. ஏன்னா, அவங்க போட்ட ரிசர்ச் செலவையெல்லாம் எடுக்கணும் இல்லையா? இதுதான் Branded Drug.


'Generic' மருந்துனா என்ன?


இப்போ ட்விஸ்ட் பாருங்க! அந்த 20 வருஷம் பேட்டன்ட் முடிஞ்சதும், அந்த மருந்தோட ஃபார்முலா பப்ளிக் ஆகிடும். இப்போ, வேற எந்த கம்பெனி வேணும்னாலும் அதே ஃபார்முலாவைப் பயன்படுத்தி, அதே மருந்தை தயாரிக்கலாம். இதுக்கு பேருதான் Generic Drug (பொது மருந்து).


ஆனா, 'ஃபார்முலா தெரிஞ்சா மட்டும் போதுமா, யார் வேணா செஞ்சிடலாமா?'ன்னு கேட்டா, முடியாது!


தரக்கட்டுப்பாடு (Quality Control):


அவங்க அந்த மருந்தை தயாரிச்சதும் மட்டும் போதாது. "இந்த மருந்து, அந்த ஒரிஜினல் பிராண்டட் மருந்து மாதிரியேதான் வேலை செய்யுது"ன்னு பல சோதனைகள் (Biosimilar tests) செஞ்சு நிரூபிக்கணும். அப்புறம், CDSCO, FDA மாதிரி பெரிய அரசு நிறுவனங்களோட அதிகாரிகள் நம்ம ஃபேக்டரிக்கு வந்து, நம்ம தயாரிப்பு முறையை ஆய்வு செய்வாங்க. அவங்க ஓகே சொன்னா மட்டும்தான் விற்க முடியும்!


அதுமட்டுமில்ல, எப்போ வேணும்னாலும் முன்னறிவிப்பு இல்லாம திடீர்னு வந்து செக் பண்ணுவாங்க (Surprise Audits). தரத்துல சின்னப் பிரச்சனை இருந்தாலும், கம்பெனியையே மூடச் சொல்லிடலாம்! அவ்வளவு ஸ்ட்ரிக்ட்!


அப்போ ஏன் விலை வித்தியாசம்?


அதனாலதான், ஒரிஜினல் கம்பெனி 20 வருஷம் ரிசர்ச் செலவெல்லாம் சேர்த்து ₹100-க்கு விக்கிற மாத்திரையை, இந்த ஜெனரிக் கம்பெனியால ரிசர்ச் செலவு இல்லாம, ₹15-க்கோ ₹20-க்கோ விற்க முடியுது. விலை கம்மியா இருக்குறதுனால இது தரம் கம்மியானதுன்னு தயவுசெஞ்சு நினைக்காதீங்க!


இந்த ஜெனரிக் மருந்துகளைத்தான் அரசு மருத்துவமனைகள்லயும், 'ஜன் ஔஷதி' (Jan Aushadhi) கடைகள்லயும் கொடுக்குறாங்க. சோ, அரசு மருத்துவமனையில தர்ற மெட்ஃபார்மினும், பிரைவேட்ல தர்ற மெட்ஃபார்மினும் (ஒரே கெமிக்கல் ஃபார்முலா இருந்தா) ஒண்ணுதான்! தைரியமா சாப்பிடுங்க!


குறிப்பு:


எதற்கும் ஒருமுறை உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுப்பது சாலச்சிறந்தது.


இன்னும் சில சந்தேகங்கள்:


1. "பேட்டன்ட் முடிஞ்சப்புறமும் ஏன் அந்த 'Branded' மருந்தை இன்னும் விக்கிறாங்க?"


சிம்பிள். பேட்டன்ட் முடிஞ்சா, மத்தவங்களும் தயாரிக்கலாம்னுதான் அர்த்தமே தவிர, ஒரிஜினல் கம்பெனி தயாரிக்கக் கூடாதுன்னு சட்டம் இல்லை. அவங்க பிராண்ட் பெயரை வெச்சே விற்கலாம், அது அவங்க இஷ்டம்.


2. "அப்போ நாம ஏன் அதிக காசு கொடுத்து 'Branded' மருந்தையே வாங்கணும்?"


வாங்கணும்னு அவசியமே இல்லை! ஆனா, நாம வாங்குறதுக்கு சில காரணங்கள் இருக்கு:


பெயர் தெரியாது: 


நம்மில் பலருக்கும் மாத்திரையோட 'வேதிப் பெயர்' (Chemical Name - அதாவது Metformin) தெரியாது. நாம கடைல போய் அந்த 'பிராண்ட் பெயரை'ச் சொல்லிக் கேட்கிறோம்.


தவறான எண்ணம்: 


நம்ம மனசுல பதிஞ்சுபோன ஒரு தப்பான எண்ணம்: "விலை அதிகமா இருந்தா நல்லது, கம்மியா இருந்தா தரம் கம்மி"ன்னு நாமளே நினைச்சுக்குறது.


லாபம்: 


மருந்துக் கடைகளுக்கு, விலை கம்மியான ஜெனரிக் மருந்தை விக்கிறதை விட, விலை அதிகமான பிராண்டட் மருந்தை வித்தாதான் லாபம் அதிகம். அதனால அவங்க அதையே நமக்குத் தருவாங்க!


நிச்சயம் இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன் நீங்க தெரிஞ்சுக்கிட்ட மாதிரி மத்தவங்களுக்கும் இதை பத்தி தெரியவைக்கிறதுக்காக லைக், ஷேர், கமெண்ட் செய்யுங்க..🙏


பகிர்வு

Thursday, October 2, 2025

UDGAM ?

வங்கிகளில் எப்போதோ ஒரு கணக்கை துவக்கி அதில் பணத்தை போட்டு வைத்திருப்போம் அல்லது நம் அப்பாவோ தாத்தாவோ யாரோ ஒருவர் போட்டு வைத்திருப்பார்கள்.காலப் போக்கில் அதை மறந்து போயிருப்போம்.திடீரென ஒருநாள் அந்த கணக்கு பற்றியும்,அதிலிருக்கும் பணம் பற்றியும் நினைவு வரும்.

அதை எப்படி தேடுவது?வங்கிக்கு நேரில் சென்று கேட்க வேண்டுமா?... என்றெல்லாம் கேள்விகள் வரும்.

இப்படி மறந்து போன அல்லது பல ஆண்டுகளாக,நமக்குச் சொந்தமான உரிமை கோரப்படாத வங்கிக் கணக்குகளை, அதிலிருக்கும் பணத்தை, உரிமை கோர இந்திய ரிசர்வ் வங்கி UDGAM என்றொரு வெப்சைட்டை உருவாக்கித் தந்துள்ளது.

அதென்ன UDGAM? 

Unclaimed Deposits- Gateway Access Information.

இதை கூகுளில் டைப் செய்யுங்கள்.ரிசர்வ் வங்கி உருவாக்கிய அந்த udgam வெப்சைட் வரும்.அதில் சென்று அது கேட்கும் தரவுகளைத் தந்து பதிவு செய்து கொள்ளுங்கள்.அதன் பின் எந்த வங்கிக் கணக்கைத் தேட வேண்டுமோ,அது குறித்து அந்த தளம் கேட்கும் தகவல்களைத் தந்து தேடுங்கள்.மீதியை அது பார்த்துக் கொள்ளும்.

தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக்