Thursday, January 13, 2011

மரமும் மனிதனும்

ஜடமாக நிற்கும் மனிதனை
மரத்துடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்
ஏனெனில்
அந்த ஒப்பீடு
மனிதனுக்கு வேண்டுமானால்
பெருமை சேர்ப்பதாக இருக்கலாம்.
ஆயினும் அது
மரத்தினை இழிவுபடுத்துவதாகவே அமையும்

மனிதனின் கழிவுகளைக் கூட
மனிதனுக்கான்
உயிர்காக்கும் உணவாக்கும் சூட்சுமம்
மரங்களுக்கு மட்டுமே தெரியும்
கிடைக்கிற நன்மைகளையெல்லாம்
வாரி அணைத்துக்கொண்டு
தீமைகளை விருத்தி செய்யவே
மனித உடலுக்குத் தெரியும்

நீரிட்டு வளர்த்தவனைக் கண்டு
பூவாகிச் சிரிக்கவும்
கனியாகக் கொடுக்கவுமே
உயிருள்ள மரங்களுக்குத் தெரியும்.
படைத்துக் காத்தவர்களையே
மறக்கவும் இகழவும்
ஒதுக்கிவிட்டு வாழவுமே
ஆற்றவு மனிதனுக்குத் தெரியும்.

வீழ்ந்து விட்டால் கூட
நிலையாகி,சிலையாகி
பட்டுவிட்டால் கூட
விறகாகி உரமாகி
தன் வாழ்வினை
அர்த்தப்படுத்தும் வல்லமை
புனித மரங்களுக்கு உண்டு

இறந்த பின்பும் கூட
எதற்கும் பயனறு
நாற்றமுடைய பொருளாகி
இருப்போர்க்கும் தொல்லைதரும
சகிக்கவொண்ணா பிணமாகி
 தன் இருப்பை
சுமையெனசெய்யும் வல்லமை
மனித உடலுக்குமட்டுமே உண்டு

எனவே இனிமேல் தயவுசெய்து
விளையாட்டாகக் கூட
ஜடமாக நிற்கும் மனிதனை
மரங்களோடு ஒப்பிட்டுப் பேசாதீர்கள்

5 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ம்... உண்மைதான்! மரங்களால் கிடைக்கும் நன்மைகள் கூட மனிதனால் கிடைப்பதில்லை! நன்றாக எழுதியுள்ளீர்கள்!

S.Venkatachalapathy said...

மனம் என்று இருப்பதால் மனிதன் மரம் போன்று சக மனிதனுக்குப் பயன் பட வில்லையோ?
பூச்சிகளுக்குப் பயன்படுவான் போலும் !
நல்ல ஆதங்கம்,

www.usssvenkat.blogspot.com

S.Venkatachalapathy said...

பூச்சிகள் என்பது உயிருடன் இருக்கும்போது அட்டை பூச்சிகள், கொசுக்கள்.
பிணமான பின்பு புழுக்கள் போன்ற மனிதர்களையும் சேர்த்து !

ShankarG said...

இறந்த பின் எதற்கும் உதவாமல் போவது மனிதனே. உயிர் இல்லாத போதும் உபயோகப்படுவது மரம். வளர்ப்போம் மரங்களையும், மனித நேயத்தையும். அருமையான கவிதை. வாழ்க.

Vidhya.N said...

unga aadhangam correct thaan. but one thing... maraththukku family kedayadhu/theriyadhu! :-)

Post a Comment