இருவேறு துருவங்கள்
ஒரு மையப்புள்ளியில்
நேராக சந்தித்ததுபோல்
பல வருடங்களுக்குப்பின்
நானும் அவனும் சந்தித்திருந்தோம்
முக்கிய மூன்று தேவைகளின்
அசுர நெருக்கடியில்
அல்லும் பகலும் அவதியுறும் நான்...
பள்ளி நாட்களில்
ஒரு நம்பிக்கை நட்சத்திரம்
கல்லூரிப் படிப்பினில்
தங்கப்பதக்கம்வென்றவன்
அதிகார மையங்களின் மிக அருகில்
வசதி வாய்ப்புகளில் மிக உச்சத்தில்
நாளும் பவனி வரும் இவன்...
பள்ளி நாட்களில்
"மக்கு"என பட்டம் பெற்றவன்
கல்லூரி முடிக்கையில்
தோல்விக் கோட்டின் மிக அருகில்
வெற்றி வாய்ப்பைப் பெற்றவன்
அவனின் அதீத வளர்ச்சி
மகிழ்வினைத் தந்தாலும்
மிக அதிசயமாகவும் இருந்ததால்.
அது குறித்து விவரம் தெரிந்தால்
அனைவருக்கும் ஆகுமே என
அவனிடம் அதுபற்றிக் கேட்டு வைத்தேன
"எல்லாம் நாரதர்கனி தந்த பாடம்" என்றான்
விளங்காது நான் விழித்து நிற்க
அவனே விளக்கமும் சொன்னான்.
"நீங்களெல்ல்லாம்
கனிக்கான போட்டியில்
வேலிருக்கும் மயிலுருக்கும்
உள்ளார்ந்த தெம்பினில்
உலகம் சுற்றப்போகும் முருகன்கள்
நாங்களெல்லாம்
உலகமே அம்மையப்பன்
அம்மையப்பனே உலகமென்று
அவர்களைச் சுற்றியே
கனியினைப்பெறும் வல்லபர்கள்" என்றான்
"என் கேள்விக்கும்
இந்த பதிலுக்கும்
என்ன சம்பந்தம் " என்றேன்
"தத்துவங்களை ரொம்ப விளக்கக்கூடாது
விளக்கினால் நீர்த்துப் போகும்"எனச் சொல்லி
சிரித்தபடி என்னைக் கடந்து போனான்.
உங்களைப் போலவே எனக்கும்
எதுவும் விளஙகவில்லை
ஆனாலும்
எனக்கென்னவோ
அவன் கையில் ஞானப் பழம்
கொண்டு போவது போலவும்
நான் கோவணம் கட்டி
தெருவில் நிற்பது போலவும் பட்டது
ஒரு மையப்புள்ளியில்
நேராக சந்தித்ததுபோல்
பல வருடங்களுக்குப்பின்
நானும் அவனும் சந்தித்திருந்தோம்
முக்கிய மூன்று தேவைகளின்
அசுர நெருக்கடியில்
அல்லும் பகலும் அவதியுறும் நான்...
பள்ளி நாட்களில்
ஒரு நம்பிக்கை நட்சத்திரம்
கல்லூரிப் படிப்பினில்
தங்கப்பதக்கம்வென்றவன்
அதிகார மையங்களின் மிக அருகில்
வசதி வாய்ப்புகளில் மிக உச்சத்தில்
நாளும் பவனி வரும் இவன்...
பள்ளி நாட்களில்
"மக்கு"என பட்டம் பெற்றவன்
கல்லூரி முடிக்கையில்
தோல்விக் கோட்டின் மிக அருகில்
வெற்றி வாய்ப்பைப் பெற்றவன்
அவனின் அதீத வளர்ச்சி
மகிழ்வினைத் தந்தாலும்
மிக அதிசயமாகவும் இருந்ததால்.
அது குறித்து விவரம் தெரிந்தால்
அனைவருக்கும் ஆகுமே என
அவனிடம் அதுபற்றிக் கேட்டு வைத்தேன
"எல்லாம் நாரதர்கனி தந்த பாடம்" என்றான்
விளங்காது நான் விழித்து நிற்க
அவனே விளக்கமும் சொன்னான்.
"நீங்களெல்ல்லாம்
கனிக்கான போட்டியில்
வேலிருக்கும் மயிலுருக்கும்
உள்ளார்ந்த தெம்பினில்
உலகம் சுற்றப்போகும் முருகன்கள்
நாங்களெல்லாம்
உலகமே அம்மையப்பன்
அம்மையப்பனே உலகமென்று
அவர்களைச் சுற்றியே
கனியினைப்பெறும் வல்லபர்கள்" என்றான்
"என் கேள்விக்கும்
இந்த பதிலுக்கும்
என்ன சம்பந்தம் " என்றேன்
"தத்துவங்களை ரொம்ப விளக்கக்கூடாது
விளக்கினால் நீர்த்துப் போகும்"எனச் சொல்லி
சிரித்தபடி என்னைக் கடந்து போனான்.
உங்களைப் போலவே எனக்கும்
எதுவும் விளஙகவில்லை
ஆனாலும்
எனக்கென்னவோ
அவன் கையில் ஞானப் பழம்
கொண்டு போவது போலவும்
நான் கோவணம் கட்டி
தெருவில் நிற்பது போலவும் பட்டது
25 comments:
அருமை...! வேறென்ன சொல்றதுன்னே தெரியல!
அண்ணே இது மிகச்சிறந்த கட்டுரையாக வரவேண்டியது..
வேல் செய்யவும் மயில் வளர்க்கவும் உதவிய படிப்பு , வளர்ச்சியை தரவில்லை போலும்.
உண்மையான ஞானம் வேறு எங்கேயோ இருந்து கிடைக்கும் என்ற முடிவா ?
ரொம்ப நல்ல பதிவு.
Not only you but many have the same feeling. etharkum machcham vaentum. good luck to you.thank you for visiting my post. please continue.
உங்கள் நிலைமையில் தான் நானும். +2 பரிட்சையில் என் பேப்பரை பிடுங்கி காப்பி அடித்து பாஸ் பண்ணியவன் இன்று அமெரிக்காவில் . நான்....?
...எல்லாத்துக்கும் ........ல மச்சம் வேணுங்க.
அர்த்தமுள்ள ஆழமான கவிதை!
எவ்வளவு பெரிய தத்துவத்தை ...எத்தனை எளிமையாக விளக்கியிருக்காங்க..... சூப்பர்!
//எனக்கென்னவோ
அவன் கையில் ஞானப் பழம்
கொண்டு போவது போலவும்
நான் கோவணம் கட்டி
தெருவில் நிற்பது போலவும் பட்டது ///
அவன் பிழைக்க தெரிஞ்சவனய்யா.................
நல்ல பதிவு...!!
என்றும் நட்புடன்..
வைகறை
வாருங்கள்: www.nathikkarail.blogspot.com
நான் சொல்ல வந்த விசயத்தை செந்தில் சொல்லி விட்டார்.
யதார்த்தம்
ரமணி...இன்றைய வாழ்வின் நிதர்சனம்.சொன்ன விதமும் அழகு !
மிகவும் அழகான, அர்த்தம் நிறைந்த வரிகள்.
அதிகார மையங்களின் மிக அருகில்
வசதி வாய்ப்புகளில் மிக உச்சத்தில்
நாளும் பவனி வரும் இவன்...
பள்ளி நாட்களில்
"மக்கு"என பட்டம் பெற்றவன்
கல்லூரி முடிக்கையில்
தோல்விக் கோட்டின் மிக அருகில்
வெற்றி வாய்ப்பைப் பெற்றவன்//
மிக சரிங்க..
என்னை விட அதிக மதிப்பெண் எடுத்தவர் கீழேயும், என்னைவிட குறைந்த மதிப்பெண் எடுத்தவர் உயரேயும்...
நமக்கு கிடைத்ததை நிறைவாய் அனுபவிக்கணும் போல...:)
நன்று..
மிகவும் அழகாக் சொல்லப்பட்டு இருக்கிறது.பாராட்டுக்கள்.
சொல்லியது குறைவு, புரிய வைத்தது நிறைய..
ஆனால் முருகன்-களுக்கு இருக்கும் மன நிறைவு, நரதர்களுக்கு கிடைக்கக்கூடுமா?
இந்த வகை ஞானப்பழங்களின் முடிவு அழுகல் தான்...
ஈர்க்கும் வார்த்தைகள் இந்த கவிதையில் நிறைய இருக்குங்க..
அர்த்தங்கள் பொதிந்த ஆழமான கவிதை..
வருகை தாருங்கள்...!
வாசித்துப் பாருங்கள்...!
பங்கு பெறுங்கள்...!!
என்றும் உங்களுக்காக
"நந்தலாலா இணைய இதழ்"
நம் அருகிலேயே எல்லாம் இருக்கின்றன. உணர்ந்து எடுத்துக் கொள்வதும், உணராமல் எங்கோ சென்று தேடுவதும் அவரவரது உணரும் திறனைச் சார்ந்தவை. அருமையான கருத்தை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். வாழ்க.
எனக்குப் புரிந்த வரையில் ..
கனி - பணம்
வேல் - இளமை
மயில் - படிப்பு & தந்தை சொத்து
உலகம் சுற்றுவது - பணி இன்றி இளமையில் ஜாலி ஆக இருப்பது
அம்மைஅப்பன் - பணி என்னும் கடும் உழைப்பு
நீங்கள் இதற்கு விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும் .
இல்லை என்றால் எனக்கு மண்டை வெடித்து விடும் சார் ..
எல்லா அலுவலகத்திலும் அதிகாரிகளின்
சொந்த வேலைகளை மட்டும் பார்த்துவிட்டு
அலுவலக் வேலையே பார்க்காமல் நல்ல ஊழியர்கள் எனப்
பாராட்டுப் பெறுகிற பலரைப் பார்த்திருக்கிறேன்
மிகக் கடினமாக அலுவலகப் பணியை மட்டும்பார்த்துவிட்டு
நல்ல பெயர் பெறமுடியாது அவதிப் படுபவர்களையும்
பார்த்திருக்கிறேன்
அந்த சாமர்த்தியத்தை கருவாகவைத்து இதைச் செய்துள்ளேன்
இந்த விளக்கம் மண்டை வெடிப்பைத் தடுக்கக் கூடுமா ?
எப்படியோ நீங்கள் நினைத்த கருப்பொருளை சொல்லி விட்டீர்கள் .
ஓர் உயிர் பிழைத்த புண்ணியம் உங்களைச் சேரும் இனி.
Post a Comment