கால எல்லைகளை
கடக்கத் தெரிந்தால்
இணக்கமாய் மனத்துள்
நினைக்க முடிந்தால்
புரியாத புதிர்கள்
புரிந்து போகுமோ ?
குழப்பிய நிகழ்வுகள்
சீராகிப் போகுமோ ?
கவிஞராக இல்லாது
வணிகராக இருந்தவர்
ஒருசிறு அதிர்வினில்
பெருங்கவிஞர் ஆவது
எங்ஙனம் சாத்தியம் ?
முத்தான கவிதை
என்பது கூட
நிச்சயமாய் சாத்தியம்
"முத்தைத்தரு பத்தித் திரு நகை.."
எங்ஙனம் சாத்தியம் ?
பட்டினத்து அடிகளின்
கதைகேட்டு நானும்
குழம்பித் தவித்ததுண்டு
நம்பாது கதையென்று
நாளும் நினைத்ததுண்டு
ஒரு நாள்..
கைபேசி மாற்றாது
"சிம்"மதனை மட்டுமே
சில நேரம் மாற்றிவிட
அலைபேசியின் உள்ளடக்கம்
அடியோடு மாறிவிட
புதிருக்குத் தெரிந்தது புதிய வழி
எனக்குள் புகுந்தது புதிய ஒளி
உடல் உருவம் மாற்றாது
அங்ஙனமே இருக்கவிட்டு
அறிவுதனை மட்டுமே
அடியோடு மாற்றுகிற
அதிசயங்கள் ஏதேனும்
நடந்திருக்கச் சாத்தியமா ?
பட்டினத்தாரும் அதுபோல
மாறியிருக்கச் சாத்தியமா ?
கடக்கத் தெரிந்தால்
இணக்கமாய் மனத்துள்
நினைக்க முடிந்தால்
புரியாத புதிர்கள்
புரிந்து போகுமோ ?
குழப்பிய நிகழ்வுகள்
சீராகிப் போகுமோ ?
கவிஞராக இல்லாது
வணிகராக இருந்தவர்
ஒருசிறு அதிர்வினில்
பெருங்கவிஞர் ஆவது
எங்ஙனம் சாத்தியம் ?
முத்தான கவிதை
என்பது கூட
நிச்சயமாய் சாத்தியம்
"முத்தைத்தரு பத்தித் திரு நகை.."
எங்ஙனம் சாத்தியம் ?
பட்டினத்து அடிகளின்
கதைகேட்டு நானும்
குழம்பித் தவித்ததுண்டு
நம்பாது கதையென்று
நாளும் நினைத்ததுண்டு
ஒரு நாள்..
கைபேசி மாற்றாது
"சிம்"மதனை மட்டுமே
சில நேரம் மாற்றிவிட
அலைபேசியின் உள்ளடக்கம்
அடியோடு மாறிவிட
புதிருக்குத் தெரிந்தது புதிய வழி
எனக்குள் புகுந்தது புதிய ஒளி
உடல் உருவம் மாற்றாது
அங்ஙனமே இருக்கவிட்டு
அறிவுதனை மட்டுமே
அடியோடு மாற்றுகிற
அதிசயங்கள் ஏதேனும்
நடந்திருக்கச் சாத்தியமா ?
பட்டினத்தாரும் அதுபோல
மாறியிருக்கச் சாத்தியமா ?
11 comments:
அருமை அருமை அண்ணா.....
முத்தான கவிதை
என்பது கூட
நிச்சயமாய் சாத்தியம்
"முத்தைத்தரு பத்தித் திரு நகை.."
எங்ஙனம் சாத்தியம் ?
.....நல்லா எழுதி இருக்கீங்க....
அறிவை மாற்ற வேண்டாம். மனமதனை மாற்றினால் போதும்
உங்கள் பதிவின் தலைப்புகளை பதிவு தப்பி செய்யும் பக்கத்தில் Title:
அந்த இடத்தில டைப் செய்யவும்
அருமையான கவிதை. ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிட முனைந்தால் விடை கிடைத்திடுமோ!
ஒரு வியாபாரி கவிஞனாவது வரைதான் இடைவெளி.அவன் கவிஞனான பிறாகு எல்லாமும் ஆகிவிடுகிறான்.
அருமையான சிந்தனையும் பதிவும் ரமணி ஸார்.
இன்னிக்குத்தான் உங்க பக்கம் வந்தேன் அருமையான கவிதை கிடைத்தது. இனி அடிக்கடி எட்டிப்பார்ப்பேன்.
கணநேர நிகழ்வுகள் போதும் மனிதனை அடியோடு மாற்றிவிட. தொடங்கி விட்டால் பின் தேடல் தொடரும். அருமையான பதிவு.வாழ்த்துக்கள்
அட...எதுக்கும் எதுக்கும் முடிச்சுப் போட்டிருக்கு.நல்ல சிந்தனை!
Transformation in mind is an irreversible change. One may have to get free from the past. Pattinathar had a transformation by a psychological shock. Once transformed, he could perceive great things and exhibited ultimate creative state.
The above explanation is not very simple. But your poem explains it so easily. Sim change on a mobile phone explains the phenomenon like a punch statement. I enjoyed your poem. Please keep posting such great things simplified.
அருமையோ அருமை கவிவரிகள் அத்தனையும் அருமை..
Post a Comment