Tuesday, March 15, 2011

அலைவோர்...பயணிக்க...

தேடுதலையே...
நினைவுகளில் தீர்க்கமாய்
வாழ்வின் நோக்கமாய்
எக்கணமும் கொள்வதால்
அலுத்து அமரவோ
சலித்து ஒதுங்கவோ
நேர்வதில்லை எப்போதும்

இலக்குகளை....
எல்லைகளாகக் கொள்ளாமல்
இளைப்பாறிச் செல்லும்
இடமாகக் கொள்வதால்
தேங்கி நிற்கவோ
சோர்ந்து சாயவோ
தோன்றுவதில்லை எப்போதும்.

சிகரங்களை....
சாதனையாகக் கொள்ளாமல்
மறுசிகரம் காட்டுகின்ற
குறியீடாகக் கொள்வதால்
கிரீடங்களில் நாட்டமோ
சரிவுகளில் பதற்றமோ
வந்ததில்லை எப்போதும்.

விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
எப்போதும் கொள்வதால்
வெற்றிக்கு தடையேதும்
கண்டதில்லை எப்போதும்.

20 comments:

சக்தி கல்வி மையம் said...

வித்திறாசமான சிந்தனை ... அருமையான கவிதை...

சக்தி கல்வி மையம் said...

வித்திறாசமான சிந்தனை ... அருமையான கவிதை... -----

வித்தியாசமான சிந்தனை ... அருமையான கவிதை...

G.M Balasubramaniam said...

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார். தடை இல்லாத வெற்றி நோக்கிப் பயணிக்க என்றும் உண்டு என் வாழ்த்துக்கள் என் பதிவின் பின்னூட்டம் ஒரு முறை பாருங்கள் .

எல் கே said...

நல்லா இருக்கு ரமணி சார்

தமிழ் உதயம் said...

மாறுபட்ட சிந்தனையில் மலர்ந்த கவிதை. நன்றாக இருந்தது.

R. Gopi said...

சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். தொடர்ச்சியான வெற்றிகள் மூலமாகவே முந்தைய வெற்றிகளைத் தக்க வைத்துக்கொள்ள முடியும்.

goma said...

விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
எப்போதும் கொள்வதால்
வெற்றிக்கு தடையேதும்
கண்டதில்லை எப்போதும்.

அருமையான கருத்து.

VELU.G said...

அற்புத கருத்துக்களுடன் நல்ல சிந்தனை

வாழ்த்துக்கள்

ம.தி.சுதா said...

ஃஃஃஃசிகரங்களை....
சாதனையாகக் கொள்ளாமல்
மறுசிகரம் காட்டுகின்ற
குறியீடாகக் கொள்வதால்ஃஃஃஃ

மன உறதி வளர்க்கும் வரிகள் நன்றிகள்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

jothi said...

//விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக//

அருமை

வை.கோபாலகிருஷ்ணன் said...

தொடர்ந்து வெற்றிகளைத் தொடர்ந்து கொண்டே இருக்க வழிவகுக்கும் வழிமுறைகளுக்கு பாஸிடிவ் ஆன திசைகாட்டியாய் ஜொலிக்கின்றன உங்கள் வரிகள். வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள்.

raji said...

வெற்றியைக் கண்டு பெருமிதமோ கர்வமோ
அடையாமல் அடுத்த வெற்றிக்கான படியாகக்
காணக் கற்றுத் தந்திருக்கிறீர்கள்.மிக்க நன்றி

RVS said...

வெற்றிக்கு இல்லை வீழ்ச்சி.. நன்றாக இருந்தது ரமணி சார்! ;-))

ஹேமா said...

முயற்சி,தேடுதல் இருக்கும் வாழ்வில் ஓய்வு குறைவுதான் ஆனால் வெற்றி அதிகம் !

இராஜராஜேஸ்வரி said...

அலுத்து அமரவோ
சலித்து ஒதுங்கவோ
நேர்வதில்லை எப்போதும்
பாராட்டுக்கள்.

Kavinaya said...

//இலக்குகளை....
எல்லைகளாகக் கொள்ளாமல்
இளைப்பாறிச் செல்லும்
இடமாகக் கொள்வதால்//


//சிகரங்களை....
சாதனையாகக் கொள்ளாமல்
மறுசிகரம் காட்டுகின்ற
குறியீடாகக் கொள்வதால்//

பார்வை, அருமை.

அன்புடன் மலிக்கா said...

விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
எப்போதும் கொள்வதால்
வெற்றிக்கு தடையேதும்
கண்டதில்லை எப்போதும்.//

அருமையான் வரிகள். வாழ்த்துக்கள்.

நீரோடையில் பெண்ணெழுத்தைபற்றிய ஒரு தொடர் எழுதியுள்ளேன் படித்துவிட்டு கருத்தினை பகிருங்கள்..

vanathy said...

வித்யாசமான கவிதை. அழகா எழுதி இருக்கிறீங்க, ரமணி அண்ணா.

சிவகுமாரன் said...

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற பாரதியின் உத்வேகம் கொடுக்கும் வரிகளை நினைவுபடுத்தியது தங்கள் வரிகள்.
குறிப்பாய்
\\இலக்குகளை....
எல்லைகளாகக் கொள்ளாமல்
இளைப்பாறிச் செல்லும்
இடமாகக் கொள்வதால்
தேங்கி நிற்கவோ
சோர்ந்து சாயவோ
தோன்றுவதில்லை எப்போதும்.///

அருமையிலும் அருமை.
மீண்டும் மீண்டும் படித்தேன்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

அருமை ரமணி அண்ணா.

சீரான சிந்தனை தெறிக்கிறது எழுத்தில்.

Post a Comment