Saturday, July 23, 2011

முத்தான மூன்று முடிச்சு

மாய உலகம் ராஜேஸ் அவர்களின் அன்பு அழைப்பிற்கிணங்க

முத்தான மூன்று முடுச்சு பதிவுத் தொடரினை இங்கே

உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்

மானே தேனே என கமலஹாசன் ஆங்காங்கே

போட்டுக்கொள்ளச் சொல்லுகிற மாதிரி

"எனக்கு" என்பதையும்" மூன்று"

என்பதையும்ஆங்காங்கே சேர்த்துக்கொள்ள வேணுமாய்

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

பிடித்த உறவுகள்

1.தாயாய் தந்தையாய் இருக்கிற அன்பான மனைவி    
2.ஆண் வாரிசுக்குரிய பொறுப்போடு இருக்கிற பண்புமிக்க  பெண்வாரீசுகள்
3. சுய நலமற்ற நண்பர்கள்

பிடித்த உணர்வுகள்.  
               

1.அன்பு 
2.இரக்கம்
3.சந்தோஷம்

பிடிக்காத உணர்வுகள்.              

1.அச்சம்
2.ஆணவம்  
3.கழிவிரக்கம்

முணுமுணுக்கும் பாடல்கள்

1.காக்கைச் சிறகினிலே நந்தலாலா
2.துள்ளாத மனமும் துள்ளும்
3.தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு

பிடித்த திரைப்படங்கள்

1.உதிரிப் பூக்கள்  
2.அன்பே சிவம்  
3.புன்னகை

அன்புத் தேவைகள்  

1.குடும்பம்  
2.உறவினர்கள்  
3. நண்பர்கள்

வலிமையை அழிப்பவை

1.அச்சம்
2.சோம்பல்  
3.கவலை

குட்டித் தத்துவம்  

1.அனுபவமே சிறந்த ஆசான்
2.கிட்டாதாயின் சட்டென மற
3.ஊக்கமது கைவிடேல்

பயமுறுத்தும் பயங்கள்  

1.வயதொத்தவர்களின் மரணம்
2.இயற்கையின் சீற்றங்கள்
3.ந்ட்பு வட்டத்தில் கறுப்பு ஆடுகள்

அடைய விரும்பும் நிலையான விருப்பங்கள்

1.சம நிலை மனது
2.திருப்தி
3.அமைதி

கற்க விரும்புவது  

1.யோகா    
2.வயலின்  
3.சமையல்

வெற்றி பெற வேண்டியவை

1.நேர்மறை எண்ணங்கள்
2.முறையான பயிற்சி
3.விடா முயற்சி

சோர்வு நீக்க தேவையானவை  

1.பிடித்த பாடல் கேட்பது
2.சூடான காபி
3.குழந்தைகளுடன் உறவாடுவது

எப்போதும் தயாராக இருக்க வெண்டியது    

1.உடல் நலம்    
2.செல்வ நிலை
3.உறவுகளின் நெருக்கம்

முன்னேற்றத்திற்கு  தேவை   

 
1.ஆசை  
2.பயிற்சி  
3.தொடர் முயற்சி

எப்போதும் அவசியமானது

1.உடல் நலம்  
2.போதுமான செல்வம்
3.உறவுகளுடன் நெருக்கம்

பிடித்த தத்துவம்  



1.இதுவும் கடந்து போகும்
2.உள்ளத்தனையதே உயர்வு
3.உடையது விளம்பேல்

தெரிந்து தெரியாது குழப்புவது

1.கடவுள் 

2.மனது 
3.இயற்கை

எரிச்சல் படுத்துபவர்கள்

1.பேசத் தெரிந்த முட்டாள்கள்

2.பேசத் தெரியாத புத்திசாலிகள்
3.பேச்சிலேயே சுகம் காண்பவர்கள்

மனங்கவர்ந்த பாடகர்கள் 

1.பி.பி.ஸ்ரீனிவாஸ்  

2.ஏ எம் ராஜா 
3.இளைய ராஜா

இனிமையானவை

1.புத்தகம் படிப்பது 

2.நண்பர்களுடன் உரையாடுவது
3.தனிமையில் உலாவுவது

சாதித்தவர்களின் பிரச்சனைகள்


1.தக்க வைத்துக் கொள்ள போராடுவது

2.உடன் அடுத்து உள்ளவர்களை சந்தேகிப்பது
3.தொடர முயலாது தேங்கி விடுவது

பிடித்த பழமொழிகள் 

1.மீன் பிடித்துக் கொடுத்துப் பழக்காதே மீன் பிடிக்கச் சொல்லிக் கொடு  

2.வெற்றி பெற்றவர்கள் வித்தியாசமாக எதையும் செய்வதில்லை செய்வதை வித்தியாசமாகச் செய்கிறார்கள்
3.மரம் வெட்டச் சொல்லி மூன்று மணி நேரமும் கோடாரியும் கொடுத்தால் முதல் இரண்டுமணி நேரத்தை  கோடாலியை கூர்படுத்துவதில் செலவிடு

 பதிவிட அழைக்கும் மூவர்  

 
1.மஞ்சுபாஷினி(http://manjusampath.blogspot.com/)
2,சந்திர கௌரி(http://kowsy2010.blogspot.com/)
3.வானதி (http://vanathys.blogspot.com/                                         

                                                  
                 

78 comments:

போளூர் தயாநிதி said...

//1.புத்தகம் படிப்பது
2.நண்பர்களுடன் உரையாடுவது
3.தனிமையில் உலாவுவது//
very nice

போளூர் தயாநிதி said...

உங்களின் அந்த முத்தான மூன்று எல்லாமே சிறப்புகள் நல்லவைகளை தெரிவு செய்துள்ளீர்க பாராட்டுகள் தொடர்க .

இராஜராஜேஸ்வரி said...

பிடித்த பழமொழிகள்

1.மீன் பிடித்துக் கொடுத்துப் பழக்காதே மீன் பிடிக்கச் சொல்லிக் கொடு
2.வெற்றி பெற்றவர்கள் வித்தியாசமாக எதையும் செய்வதில்லை செய்வதை வித்தியாசமாகச் செய்கிறார்கள்
3.மரம் வெட்டச் சொல்லி மூன்று மணி நேரமும் கோடாரியும் கொடுத்தால் முதல் இரண்டுமணி நேரத்தை கோடாலியை கூர்படுத்துவதில் செலவிடு//

அருமையாய் பலமுறை படித்து சிந்திக்க வைக்கும் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

R. Gopi said...

பழமொழிகள் சூப்பர்

தமிழ் உதயம் said...

கேள்விகள் அருமை..பதில்கள் சிறப்பு.

கவி அழகன் said...

சிந்தித்து முத்தான மஊன்று விடைகளை தந்திருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்

மனோ சாமிநாதன் said...

அனைத்து பதில்களும் சிறந்தவை தான் என்றாலும் பிடித்த தத்துவங்கள் ஒரு படி கூடுதல் அருமை!

மாய உலகம் said...

நம்ம கமலஹாசன் சொன்னமாதிரி எனக்கு ,மூன்று எல்லாம் போட்டவாறே புன்னகையுடன் படிக்க ஆரம்பித்தேன்... நீங்கள் குறிப்பிட்ட அனைத்து மூன்றுகளும் மிகச்சிறப்பானவைகளாக மனதை கொள்ளைக்கொண்டன... அதிலும்
//.மரம் வெட்டச் சொல்லி மூன்று மணி நேரமும் கோடாரியும் கொடுத்தால் முதல் இரண்டுமணி நேரத்தை கோடாலியை கூர்படுத்துவதில் செலவிடு//

மிக மிக அருமை .... எப்போதும் நினைவில் வைத்து செயல் படவேண்டியவை .. நன்றிகளுடன் வாழ்த்துக்களண்ணா...

M.R said...

முத்தான மூன்று அனைத்தும் முத்துக்கள் .

அருமையான கருத்து நண்பரே .

நீங்கள் முணுமுணுக்கும் பாடல் காக்கை சிறகினிலே எனக்கும் பிடித்த பாடல்களில் ஒன்று .

இப்பாடல் நம் தளத்தில் ஜுன் மாத பதிவில் பதித்தேன் பார்த்தீர்களா நண்பரே .

மூன்று பாடகர்கள் பாடியிருப்பார்கள் .

பகிர்வுக்கு நன்றி நண்பரே .
தொடருங்கள் தொடர்கிறேன் .

ஸாதிகா said...

”நச்”என்ற கேள்விகள் ”நச்” என்ற பதில்கள் உங்களுக்கே உரித்தானவை.

சாந்தி மாரியப்பன் said...

ரொம்ப நல்லாருக்குது.. அதுவும் அந்த தத்துவங்கள் ரொம்பவே அருமை :-)

Anonymous said...

முத்தான மூன்றுகளில் முதிர்ச்சியான பதில்கள் .அருமை

ஸாதிகா said...

மனங்கவர்ந்த பாடகர்கள்

1.பி.பி.ஸ்ரீனிவாஸ்
2.ஏ எம் ராஜா
3.இளைய ராஜா

தங்கள் பார்வைக்காக

குணசேகரன்... said...

பதிவு நல்லா இருக்கு.நைஸ்

வெங்கட் நாகராஜ் said...

சுவையான பதில்கள். அதிலும் அந்த மூன்றாவது தத்துவம் - மிகவும் பிடித்தது.

தொடரட்டும் இந்தத் தொடர் பதிவு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வெற்றி பெற்றவர்கள் வித்தியாசமாக எதையும் செய்வதில்லை செய்வதை வித்தியாசமாகச் செய்கிறார்கள்

மரம் வெட்டச் சொல்லி மூன்று மணி நேரமும் கோடாரியும் கொடுத்தால் முதல் இரண்டுமணி நேரத்தை கோடாலியை கூர்படுத்துவதில் செலவிடு//

இவை இரண்டும் எனக்கு மிகவும் பிடித்தமான
பழமொழிகள். சரியாக நினைவு படுத்தியுள்ளீர்கள்.

உங்களின் வெற்றிக்கும் காரணம் இவை தான் என்பது அறிய சந்தோஷமாக உள்ளது. நல்ல பதிவு. நல்ல பதில்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

மோகன்ஜி said...

முத்துக்கள் அத்தனையும்... மிக நல்ல தேர்வு ..

சாகம்பரி said...

இதுவும் கடந்து போகும் ----> சம நிலை மனது . நல்ல தத்துவம்.

மாலதி said...

உங்களின் அந்த முத்தான மூன்று எல்லாமே சிறப்புகள்

ஜோதிஜி said...

நடத்துங்க.

கதம்ப உணர்வுகள் said...

பிடித்த உறவுகள் என்று சொல்லி தாய் தந்தை மனைவி மகளை மகனாக்கி நட்பையும் மேன்மைப்படுத்தியது சிறப்பு ரமணி சார்....

அன்பு இரக்கம் சந்தோஷம் பாசிட்டிவ் அப்ரோச்னு இதை தான் சொல்வாங்களோ.... அன்பு செலுத்தினால் அதில் கருணையும் அதில் கிடைக்கும் சந்தோஷம் அதனுடனே முடிந்துவிடுகிறதே அங்கே சண்டை சச்சரவுக்கே இடமென்பதே இல்லையே....

பாரதியார் பாட்டு கறுப்பு நிறத்தை கூட அழகுபடுத்தி அதை இறைவனுடன் சம்மந்தப்படுத்தும் மிக அருமையான பாடல், இனிமையான பாடல் கேட்கனும்னா பழைய தமிழ் படம் பார்க்கலாம் மெலோடியஸ் இசை, ஜேசுதாஸ் பாட்டு தெய்வம் தந்த வீடு அதில் எத்தனையோ கருத்து பொதிந்திருக்கும்....

உதிரிப்பூக்கள் மகேந்திரன் சாருடையது அன்பே சிவம் மனதை அன்பால் நிரப்பி அடுத்தவரை நல்வழியில் நடத்தும் கமல் கண்டிப்பா நினைவுக்கு வருவதை தவிர்க்கவே முடியாது, புன்னகை இந்த படம் நான் பார்த்ததா நினைவில்லை....அதனால் தெரியவில்லை ரமணி சார்....

மனிதனிடம் இருக்க கூடாதவை அச்சம், ஆணவம், கழிவிரக்கம், கரெக்டாச்சே.... அச்சம் இருந்தால் அப்புறம் அடுத்த அடி எடுத்து வைக்க முயற்சியை கூட சிந்திக்க விடாமல் மூளையை மந்தமாக்கிவிடும், அதே மூளை ஆணவத்தில் அடுத்தவரை எதிர்த்து அடக்கி அடிமையும் ஆக்கிவிடும், கழிவிரக்கம் ஐயே இது இருக்கவே கூடாது நம்மை நாமே பார்த்து பரிதாப்பட்டும் நிலை நாம் ஏற்படுத்திக்கவே கூடாது...

குடும்பம் அம்மா அப்பா மனைவி மக்கள் உறவுகள் நட்புகள் உலகத்தின் வட்டமே சிறியதாகி கையளவில் வந்தது போல இருக்கிறது.....

அச்சம், சோம்பல், கவலை ஆமாம் நிஜமே வலிமையை அழிப்பது மட்டுமல்லாது முயற்சிக்கவும் விடாது நம்பிக்கையையும் நசிப்பிக்கும். நல்லப்பெயரை கெடுக்கும்.... நமக்கே நம்மை பிடிக்காமல் செய்துவிடும்....

குட்டி தத்துவமா இது ரமணி சார் வாழ்க்கையில் எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டியது

1.அனுபவமே சிறந்த ஆசான் / நெருப்புக்கண்ணா தொடாதே தொடாதேன்னா கேட்கிறதா தொட்டு சுட்டுக்கொண்டப்பின் பயந்து அது பக்கம் போகாமல் இருக்கிறது அனுபவத்தை விட பெஸ்ட் மாஸ்டர் கண்டிப்பா கிடையாது....
2.கிட்டாதாயின் சட்டென மற / அதானே நமக்குன்னு என்ன இருக்கோ அதை வெச்சு திருப்திப்படுத்திக்கனும், கிடைக்கலன்னு அழறதோ அதை நினைச்சு வருத்தப்பட்டு உடல்நலத்தை கெடுத்துக்கிறதோ ஏன்னா நாம ஒன்றை ஆசைப்பட்டு அது கிடைக்கலன்னா அதுல இருந்து தான் மனிதனுக்கு பொறாமை உணர்வு ஆரம்பிப்பதே. அதனால கிடைக்கலன்னா அதை சட்டுனு மறந்துட்டு அடுத்தது என்னன்னு போய்க்கிட்டே இருப்பது நலம்...
3.ஊக்கமது கைவிடேல் / ஆமாம் இறுதிவரை முயற்சியை கைவிடாம நம்பிக்கையோடு தொடரச்சொல்லி இருப்பது சிறப்பு. ஆழ்ந்து வாசித்தால் இரண்டாவதுக்கும் மூன்றாவதுக்கும் இருக்கும் நுணுக்கமான வித்தியாசம் தெரியும் கண்டிப்பா....

பயமுறுத்துற விஷயமா மரணம் என்று பொதுவாக சொல்லாமல் (ஏன்னா இயற்கையா மரணிப்பதும், வயதானப்பின் மரணிப்பதும் ஏற்கக்கூடியதே.. ஆனா தன்னோடு பழகி பேசி இத்தனை வருடங்கள் நண்பனா இருந்து திடிர்னு இல்லாமல் போனால் அந்த அதிர்ச்சில இருந்து மீள்வது சற்று கடினமே...

இயற்கையின் சீற்றங்கள் சுனாமி குஜராத் பூகம்பம் இதெல்லாம் எத்தனை உயிர் பலி வாங்கித்து :(

நட்பு வட்டத்தில் கறுப்பு ஆடு சரியா சொன்னீங்க சார் நம்பிக்கை வைத்து பழகும்போது அவர்களின் நிஜ ஸ்வரூபம் தெரியவரும்போது நம் மரணம் நாமே பார்ப்பது போன்ற அதிர்ச்சி தான் வரும் :(

சமநிலை மனது / திருப்தி / அமைதி கண்டிப்பா கிடைக்கும் ததாஸ்து ரமணி சார்....

யோகா உடல்நலத்திற்கு ஏற்றது...
ஆனா சமையல் ஏன் ரமணி சார்? :( பாவம் வீட்டில் உள்ளோர்.... தப்பிக்கவே முடியாது....

வயலின்.... அருமையான இன்ஸ்ட்ருமெண்ட்... மனதை சந்தோஷத்திலும் சோகத்திலும் சமன் ஆக்குவது இசை மட்டுமே.. அது வீணையானாலும் சரி கீ போர்ட் ஆனாலும் சரி வயலின் ஆனாலும் சரி பாட்டானாலும் சரி... சரியானதையே தேர்ந்தெடுத்திருக்கீங்க ரமணி சார்...

வெற்றிக்கு தேவையானவை என மூன்றே விஷயத்தை சொன்னது மிக அருமை.... அத்தனையும் அவசியமானதே... ஒன்றில்லையென்றாலும் வெற்றியின் இலக்கை எட்டுவது கடினம்...

சோர்வு நீங்க இசை முக்கிய பிரதானம், குழந்தைகளின் சிரிப்பும் மழலையும் மனதை கொஞ்சம் சரிச்செய்யும், காபி பற்றி தெரியலை ரமணி சார்...

மீதி அடுத்ததுல தொடர்வேன்.. இதுல சேரமாட்டேங்குதே :(

கதம்ப உணர்வுகள் said...

தயாராக இருக்கவேண்டியவை சரியாவே சொன்னீங்க...எப்பவும் ஆரோக்கியமா வெச்சுக்கனும், நாம் படுத்து மற்றவருக்கு தொல்லையாகிவிடக்கூடாது, அப்படியே உடல்நலம் சரியில்லாமல் போனால் பணம் ரெடியா இருக்கனும் மருத்துவம் செய்ய.. பணம் இருந்தாலும் உறவுகள் இருக்கவேண்டும் இன்முகத்துடன் ஆறுதல் சொல்ல தைரியம் சொல்ல உனக்கு ஒன்னும் இல்லப்பா சீக்கிரம் வீட்டுக்கு போய்ரலாம் பாரு என்று....

பிடித்த தத்துவம் எல்லோருக்கும் நான் சொல்வதும் இதுவே இதுவும் கடந்து போகும் ஏன்னா இப்ப இருக்கும் நிமிடம் கூட நிலையில்லை... இதுவும் கடந்து போகும்....

தெரிந்து தெரியாது குழப்புவதுன்னு அதுல இறைவனை சொல்லிட்டீங்களே ரமணி சார் :) இறைவன் இல்லாத இடமும் இல்லை இறைவனை நினைக்காத மனமும் இல்லை.. இப்படி சொல்லிக்கலாம் நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கு இல்லன்னா நாமல்லாது இதெல்லாம் எப்படி இயங்குகிறது? மனது இயற்கை சரியா தான் சொல்லி இருக்கீங்க.. எப்ப மழை எப்ப வெயில் எப்ப புழுதிக்காற்று வீசும்னு ஹுஹும் சொல்லவே முடியாது....

எரிச்சல் படுத்துபவர்கள் லிஸ்ட் படிச்சதும் எனக்கு கண் அதிர்ச்சில நின்றுவிட்டது ரமணி சார் என் நண்பர் சொல்லியது அப்படியே நீங்க போட்டிருப்பதை பார்த்து தான்....

மனதுக்கு பிடித்த பாடகர்களாக போட்டவர்கள் ஓல்ட் இஸ் கோல்ட் என்று இசையை தேனாய் காதில் பாய்ச்சி இதயம் நிரப்புவர்கள்..

இனிமையானவை / புத்தகம் படிச்சுக்கிட்டே நேரம் போவதே தெரியாமல் இருப்பதும் நண்பர்களுடன் பேசும்போது மனதில் இருக்கும் சந்தோஷம் ஆனால் ரெட்டிப்பாவதும் சோகம் ஆனால் பாதியாக குறைவதும் தனிமையில் உலாவுவது அப்டியே காதுல ஒரு வாக்வேன் பொருத்திக்கிட்டே உலாவினால் இன்னும் நன்றாக இருக்கும்.... நினைவுகள் கூட மெல்ல மேலெழும்பும் அப்போது...

சாதித்தவர்களின் பிரச்சனைகளாக நீங்க சொன்ன அத்தனையும் நியாயமானது ஃபேக்ட் கூட.. ப்ராக்டிகலா நடப்பது கூட.... புகழின் உச்சியை எட்டுவது ஒரு போராட்டம் என்றால் அதை தக்கவெச்சுப்பது ஐயோ ராமா அதை விட கஷ்டமாச்சே... அதுல தானே தொடங்குவது அடுத்திருப்பவர் மேல் சந்தேகமும் மனம் சோர்ந்துவிடும்போது அடப்போப்பா அப்படின்னு விட்டுடறதும்....இதற்கு காரணம் மனம் பலகீனமாகிவிடுவது தான்... மனம் பலகீனமாகும்போது முயற்சியை கைவிட்டுடறாங்க....

பழமொழிகள் மூன்றுமே சிறப்பு முதல் பழமொழி அடுத்தவனை பைசா கொடுத்து சோம்பேறியாக்கி நீ தர்மம் செய்வதா நினைச்சு பெருமைப்பட்டுக்காம அவன் உழைக்க சொல்லிக்கொடுத்துட்டால் நீ மூனு ரூபா உழைக்க சொல்லி கொடுத்தால் அவன் கடின உழைப்பால் முப்பது ரூபா சம்பாதிப்பானே புத்திசாலியா இருந்தால்.... மரம் வெட்டச்சொல்லி டைம் கொடுத்து கோடரி கொடுத்தால் முதல்ல அறிவை யூஸ் பண்ணுங்கப்பான்னு நச் நு சொல்வது போல கோடரி ஷார்ப்பா இருந்துட்டால் மரம் சட் சட்டுனு வெட்டிரலாமே மொன்னை கோடரில வெட்டுனா இன்னைக்கெல்லாம் வெட்டிட்டே இருக்க வேண்டியது தான்... புத்தியை கொஞ்சம் கற்பூரமா வெச்சுக்கனும்னு சொல்லவைத்த பழமொழி இது.

வெற்றிப்பெற்றவர்களின் சிறப்பை சொன்ன விதம் மிக சிறப்பு...

ஐயோ என்ன இது ரமணி சார்......

வாழ்க்கைக்கு தேவையான நல்ல விஷயங்களை இங்க முத்தாய் கோர்த்த விதம் மிக மிக அருமை சார்..

அதோடு எங்க பின்னூட்டமும் இட எங்களுக்கு வாய்ப்பு தந்தமைக்கும் அன்பு நன்றிகள் ரமணி சார்....

Priya said...

முத்துக்கள் அத்தனையும் அருமையாக இருக்கிறது!

Avargal Unmaigal said...

///தாயாய் தந்தையாய் இருக்கிற அன்பான மனைவி..///
முத்தான மூன்று முடிச்சில் நீங்கள் போட்ட முதல் முடிச்சுதான் என்னை மிகமிக கவர்ந்தது. தாரத்தை பொது வாழ்க்கையில் மதித்து பேச செய்யும் ஒருவனே மனிதன். அதில் நீங்கள் மிகவும் உயர்ந்து நிற்கிறிர்கள் என்பதில் எனக்கு மிகவும் சந்தோசம். உங்களுக்கோ உங்கள் அன்பு மனைவி தாய் தந்தை போன்றவர் ஆனால் உங்கள் மனைவிக்கோ நீங்கள்தான் மூத்த செல்ல குழந்தை. இந்த அன்பான உறவு என்றும் நிலைத்து இருக்க என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

நான் உங்கள் ஃபளாக்கின் ஃப்லோவராக மட்டுமல்லாமல் ஒரு நல்ல மனிதனின் ஃப்லோவராக் இருப்பதில் மிகவும் சந்தோஷம் கொள்கிறேன்.

Note: நான் ஆகஸ்ட் மாதம் இந்தியா வருகிறேன் நான் வளர்ந்த மதுரைக்கும் சிலநாட்கள் வருகிறேன். நேரம் கைகூடி வந்தால் உங்களை போல உள்ள நல்ல மனிதர்களையும்(பதிவர்கள்) சந்திக்க ஆசைப்படுகிறேன். முடிந்தால் பார்க்கலாம்.

பிரணவன் said...

அருமையான படைப்பு sir. . .

vanathy said...

ரமணி அண்ணா, சூப்பரா சொல்லியிருக்கிறீங்க. பதில்கள் எல்லாமே நச் தான்.
என்னையும் அழைத்து இருக்கிறீங்க. எனக்கு உங்களைப் போல தெளிவா எழுத வராது. கொஞ்சம் டைம் தாங்கோ எழுதுவேன்.

Madhavan Srinivasagopalan said...

//1.தாயாய் தந்தையாய் இருக்கிற அன்பான மனைவி
2.ஆண் வாரிசுக்குரிய பொறுப்போடு இருக்கிற பண்புமிக்க பெண்வாரீசுகள்
3. சுய நலமற்ற நண்பர்கள் //

நீங்களாவது பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தீங்களே.. அதுவும்
66 %

வாழ்த்துக்கள்..

vidivelli said...

எரிச்சல் படுத்துபவர்கள்

1.பேசத் தெரிந்த முட்டாள்கள்
2.பேசத் தெரியாத புத்திசாலிகள்
3.பேச்சிலேயே சுகம் காண்பவர்கள்..

!!இதை பார்க்கும்போது சிரிப்பும் வந்தது..

முணுமுணுக்கும் பாடல்கள்

1.காக்கைச் சிறகினிலே நந்தலாலா
2.துள்ளாத மனமும் துள்ளும்
3.தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு..

நீங்க முணுமுணுக்கும் பாடலைப்பார்க்கவே உங்களை புரிகிறது..

உங்கள் அனைத்து முடிச்சுக்களும் அருமை...

kowsy said...

பதிவிட அழைத்தீர்கள். அழைக்காமலே நுழையும் பாக்கியசாலியான். மூன்று மூன்று முத்தான புதையல்களைத் தந்திருக்கின்றீர்கள். அத்தனையும் அற்புதக் களஞ்சியங்கள்.
மனைவி மட்டும் தேவை அவளைப் பெற்ற கடவுள்கள் தேவையில்லை என்னும் இன்றைய உலகில் அவர்களைப் பிடித்த உறவாய் தந்திருக்கும் பாங்கில் மாற்றான் மனதின் தேவை புரிந்து கொள்ளும் உங்கள் மனப்பக்குவத்தைக் காண்கின்றேன். கருவை உருவாக்கி உலகில் கால் பதித்து நிமிர்ந்து நிற்க வைக்கும் பெண்மையை மதித்த சொற்களில் அர்த்தநாரீஸ்வரரை அடையாளங் காண்கின்றேன். அன்புள்ள உள்ளத்தில் இரக்கம் சொல்லிக் கொள்ளாமலே நுழைந்து கொள்ளும் இவையிரண்டும் இருக்கும் இதயத்தில் இன்பத்திற்குக் குறையேது.
பிடிக்காத அச்சவுணர்வு சில இடங்களில் நிச்சயம் இருக்க வேண்டும் ரமணி அவர்களே. தீமைக்கு அஞ்சும் உணர்வு தேவையல்லவா? வாழ்க்கைத் தத்துவங்களும் கற்பனை வண்ணங்களும் காணப்படும் பாடல் வரிகளைப் பிடித்திருக்கும் நீங்கள் சிறப்பான எழுத்தாளர் அல்லவா!
சமூகத்தில் தனிமனிதனாய் வாழ்வது நீரினுள் வாழும் மீனை நீரிலிருந்து பிரித்தெடுப்பதற்கு ஒத்தது. உங்கள் தேவைகள் பிடிக்கவேண்டிய உறவுகள். குட்டித்தத்துவத்தில் அநுபவமே சிறந்த ஆசான் என்று சொல்லியிருக்கின்றீர்கள். அதனாலேயே வயதானவர்களைத் துதிக்க வேண்டம் என்கின்றார்கள்.
கிட்டாதாயின் சட்டென மற என்பதை கிட்டாதாயின் எட்டிஎட்டிப் பெறு என்று போட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. சட்டென மறந்தால் ஊக்கமது கைவிட வேண்டி வரும் அல்லவா! எப்படியான தைரியசாலிகள் கூட மரணம் என்று வரும்போது பயமடைவது ஆச்சரியமல்லை. இதில் ரமணி அவர்கள் விதிவிலக்கா. ஆனாலும் இறப்பிற்கும் எமது நடத்தைக்கும் சம்பந்தம் இருக்கின்றதல்லவா. புரிந்து தெரிந்து நம்மைநாம் பாதுகாத்தலே சிறப்பு பயப்படல் எதிர்காலத்தை அழித்துவிடும். நட்பு வட்டத்தில் கறுப்பு ஆடுகள். பயங்கரம்....... அடையவிரும்பும் விருப்பத்தில் திருப்தி கூறியிருக்கின்றீர்களே. எதிலும் திருப்தி கண்டுவிட்டால் முன்னேறும் முயற்சி ஏற்படாதே. தேடல் தோன்றாதே. இது பற்றி மேலும் உங்கள் விளக்கத்தை நாடிநிற்கின்றேன். முன்னேற்றத்திற்குத் தேவை ஆசை என்பதை சிந்தித்தேன். ஆசைப்படப்பட ஆய் வரும் துன்பம் என ஒரு பதிவிட்டேன். ஆசையில் துன்பமும் இருக்கின்றது என அறிகின்றேன். ஆனாலும் ஆசையின்றி முன்னேற்றை எப்படிக் காணமுடியும். சிந்திக்கிறேன். என்னை மிகவும் கவர்ந்தது தெரிந்தும் தெரியாது குழம்புவது. நானும் உங்களைப் போலவேதான். புரியாத புதிர்.
கற்க விரும்பும் விடயங்களில் யோகா, வயலின் அமைதியான இசையும் உடலுக்குள் பயனம் செய்யும் அற்புதக்கலை யோகாவும் இவற்றைக் கற்க விரும்புபவர் என்பதை உங்கள் படைப்புக்கள் பறைசாற்றுகின்றன. சமையலைத் தந்திருக்கின்றீர்கள் too late ரமணி அவர்களே. இத்தனை காலமும் சமையல் தெரியாது சுவைக்க மட்டும் செய்திருக்கின்றீர்களே. பெண்மையை நீங்கள் எப்படிப் போற்றியிருக்கமுடியும். என் வீட்டுக்காரர். இதில் எக்ஸ்பேட். ஐரோப்பிய நாடுகளில் ஆண்கள் பெண்களை விட சமையல் வல்லுநர்கள். உங்களுக்குப் பிடித்த பழமொழிகள் உங்களைப் படம் போட்டுக்காட்டும் அற்புதமான பழமொழிகள். ஒருவரை முயற்சிக்கத் தூண்டுவதே ஒருவரை வளர்ப்பதற்கு உதவியாக இருக்கமுடியும். இதனையே ஆசிரியர்கள் மாணவர்களுக்குச் செய்ய வேண்டும். கோடாரி தீட்டுபவர் தன் புத்தியைத் தீட்டுகின்றார் அல்லவா. உங்களாலேயே இந்த அளவிற்கு சிறப்பாகப் படைக்கமுடியும். இம்முத்தான மும்மூன்று விடயங்களில் உங்கள் ஆழச்சிந்தனை பதியப்பட்டிருக்கின்றது. எனவே இது மகாபாரதக் குளக்கரைத் தத்துவங்களுக்கு நிகரானதே என்று கூறின் மிகையில்லை. வாழ்த்துகள்

சிவகுமாரன் said...

அத்தனையும் முத்துக்கள் .

Unknown said...

தத்துவங்களும் பழமொழிகளும் மிகப்பிடித்த பதில்கள்.

ராமலக்ஷ்மி said...

தங்கள் அனுபவம், ரசனை ஆகியவற்றை உணர்த்துவதாக அமைந்த பகிர்வு. பழமொழிகள் மிக நன்று.

அப்பாதுரை said...

சுவையான பதிவு.
சமநிலை பாவிக்க முடிந்தால் திருப்தியும் அமைதியும் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
உதிரிப்பூக்கள் - மறந்தே போன மகத்தான படம்.

(கமலகாசன் எதற்கு மானே தேனே சேர்க்கச் சொன்னார்?)

அப்பாதுரை said...

கிட்டாதாயின் எட்டிப் பெறு - சந்திரகௌரி சொல்வது பிடித்திருக்கிறது.

FARHAN said...

1.மீன் பிடித்துக் கொடுத்துப் பழக்காதே மீன் பிடிக்கச் சொல்லிக் கொடு
2.வெற்றி பெற்றவர்கள் வித்தியாசமாக எதையும் செய்வதில்லை செய்வதை வித்தியாசமாகச் செய்கிறார்கள்
3.மரம் வெட்டச் சொல்லி மூன்று மணி நேரமும் கோடாரியும் கொடுத்தால் முதல் இரண்டுமணி நேரத்தை கோடாலியை கூர்படுத்துவதில் செலவிடு


முத்தான மூன்று பழமொழிகளை அடிக்கடி வாசிக்கும் போது ஏதோ உத்வேகம் கிடைகின்றது
அருமையான தெரிவு

Unknown said...

அண்ணே அழகா சொல்லி இருக்கீங்க நன்றி!

தனிமரம் said...

எரிச்சல்படுத்துபவர்கள் சிந்திக்கவைக்கும் பதிவு சிறப்பான உதாரணங்கள்!
தனிமரம் பாடலோடு வந்திருக்கு நேரம் இருந்தால் இனையுங்கள்!

கதம்ப உணர்வுகள் said...

ரமணி சார் உங்கள் அன்பு அழைப்புக்கிணங்கி முத்தான மூன்று முடிச்சு பதிவு என் ப்ளாக்கில் பதிவிட்டேன்... அருமையான வாய்ப்பு நல்கியமைக்கு என் அன்பு நன்றிகள் ரமணி சார்...

அடுத்து பதிவிட நான் அழைத்தது

கலைவேந்தன்
புலவர் ராமானுசம்
சிவகுமாரன்

அன்பு கூர்ந்து மூவரும் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்..

G.M Balasubramaniam said...

அத்தனையும் சத்தான முத்துக்கள். பாராட்டுக்கள்.

மாதேவி said...

முத்துக்கள் நன்று.

தத்துவங்கள்,வெற்றி பெறவேண்டியவை மிகவும் பிடித்தன.

காட்டான் said...

ஐய்யா நீங்கள் கொடுத்து வைத்தவர்...

2.ஆண் வாரிசுக்குரிய பொறுப்போடு இருக்கிற பண்புமிக்க பெண்வாரீசுகள்..

உண்மைதானய்யா எனக்கு இரண்டு ஆண் வாரிசுகள் இருந்தும் சொல்கிறேன்.. பெண் பிள்ளைகள் எவ்வளவு பாசத்துடன் இருக்கிறார்கள் என்பதை எனது சகோதரிகளின் மூலம் தெரிந்து கொள்கிறேன்...
அன்மையில் ஆனந்த விகடனில் வந்த கவிதை..



ஆண் குழந்தைகள்
அம்மா தோளை விடாத
குரங்குக் குட்டிகள்!
பெண் குழந்தைகளோ,
அப்பா முகம் விரைவில் அறிந்து
ஆனந்த மின்னலோடு
அம்மா மடியிலிருந்து
அப்பா தோளுக்குத் தாவும்
அணில் பிள்ளைகள்!
எவ்வளவு உண்மை ஐய்யா.!!!

r.v.saravanan said...

அனைத்தும் நன்று அதில் இது மிக நன்று
பாராட்டுக்கள்.

பிடித்த உறவுகள்

1.தாயாய் தந்தையாய் இருக்கிற அன்பான மனைவி
2.ஆண் வாரிசுக்குரிய பொறுப்போடு இருக்கிற பண்புமிக்க பெண்வாரீசுகள்
3. சுய நலமற்ற நண்பர்கள்

Unknown said...

முத்தான மூன்று முடிச்சு-நான்
முறை யாகப் படிச்சு
சத்தாக அவை பெற்றேன்-நல்ல
சமயத்தில் அதைக் கற்றேன்
வித்தாக நீர் போட்டீர்-அதன்
விளைவாக எனைக் கேட்க
வைத்தீரே இரமணி நீர்-பத்த
வைத்தீரே இரமணி சார்

புலவர் சா இராமாநுசம்

Anonymous said...

வெற்றி பெற வேண்டியவை

1.நேர்மறை எண்ணங்கள்
2.முறையான பயிற்சி
3.விடா முயற்சி

முத்தான மூன்று...

கற்க விரும்புவது

1.யோகா
2.வயலின்
3.சமையல்

எனக்கும் அதே ஆசைகள்...

மொத்தத்தில் எல்லாம் முத்துக்கள்...

சக்தி கல்வி மையம் said...

மூன்றும் முத்துக்கள்,,,

சென்னை பித்தன் said...

அழகிய முத்துச் சரம்.

Murugeswari Rajavel said...

பக்கம்,பக்கமாய்ப் பாராட்டிட ஆசை.உங்கள் பதிவு படிக்கும் போது மனதில் மேலோங்கி நிற்பது' உயரிய மனிதர்' என்ற ஒற்றைச் சொல் தான்.icing sugar cake
ஆக இருந்தாலும் அதற்கான கருத்தையும் அழகாய்ச் சொல்லும் விதம் நேர்த்தி.

RVS said...

சார்! அத்தனையும் முத்துக்கள். உங்களது பாணியில் வித்தியாசமான பதில்கள். அற்புதம். :-)

A.R.ராஜகோபாலன் said...

முத்தமிழ் போல
முக்கனியை போல
மூழ்காமல் எடுத்த
முத்துக்கள் சார்
அமர்க்களம்

சத்ரியன் said...

முத்துக்கள் மூன்று- தலைப்பில் உங்களின் பகிர்வு அனைத்துமே “ முத்துக்கள்” தானே!

கற்க விரும்புவது:

//சமையல்//

(வீட்ல எப்பவும் நீங்கதான் சமையல்னு அம்மா சொன்னாங்களே!)

Thenammai Lakshmanan said...

வெற்றி பெற வேண்டியவை

1.நேர்மறை எண்ணங்கள்
2.முறையான பயிற்சி
3.விடா முயற்சி
//மிக அருமை..:)

A.R.ராஜகோபாலன் said...

பண்பு நிறை ரமணி சார்
வணக்கம்.......
எனது பின்னூட்டத்திற்கு
தாங்கள் இத்தனை தூரம்
மதிப்பளித்தமைக்கு
பாதம் பணிந்த நன்றி.
உங்கள் பொக்கிஷ பதிவை
படித்த நானே
பாக்கியசாலி
உங்களின் பெருதலுக்கரிய
பெருந்தன்மையில்
பெரு மகிழ்ச்சி அடைந்தேன்

மாய உலகம் said...

சரியாக சொன்னீர்கள்...நானும் நம்மை பதிவிட அழைத்தவர்களிடம் நமது வரிசையில் தொடர் பதிவிட்டவர்களின் பதிவை குறிப்பிட்டிருக்கிறேன் ...நன்றி சகோதரரே....

அம்பாளடியாள் said...

மூன்று மூன்றாகத் தொடுத்த முத்துக்கள் ஒவ்வொன்றும்
அருமை ஐயா....வாழ்த்துக்கள் இன்றுதான் எனக்கு இங்கே
கருத்துரை அளிக்க முடிந்தது இனி என் கருத்துத் தொடரும்
தங்கள் தளத்தினிலே!........

இந்திரா said...

சரியான தொடர்பதிவு..

//முன்னேற்றத்திற்கு தேவை

1.ஆசை
2.பயிற்சி
3.தொடர் முயற்சி//

யதார்த்தமான உண்மை

இந்திரா said...

//பிடித்த தத்துவம்

1. இதுவும் கடந்து போதும்//


சிறப்பான தத்துவம். நான் அடிக்கடி எனக்குள்ளே சொல்லிக்கொள்வதும் இதுவே.

பகிர்விற்கு நன்றி.

ஸ்ரீராம். said...

பிடித்த திரைப் படங்கள் வரிசையில் புன்னகை. இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் போல வேறு ஒரு படத்தில் நான் பார்த்ததில்லை. அல்லது இது பாதித்த அளவு வேறு எதுவும் பாதிக்கவில்லை.
பாடல்..காக்கைச் சிறகினிலே நந்தலாலா...மூன்று பாடல் இருக்கிறது இந்த வரியின் தொடக்கத்தில்...எதுவாக இருக்கும்?!
பயமுறுத்தும் பயங்கள் ஒன்றும் மூன்றும் டாப்.
தனிமையில் உலவுவது நல்ல ரசனை. நான் மற்ற இடங்களில் பார்த்த மூன்று தொடர்பதிவின் தலைப்புகள் சற்றே மாறியுள்ளனவோ...

மாணவன் said...

நல்ல ரசனையுடன் முத்தான பதில்கள் அருமை சார்,
சிறப்பாக சொல்லியிருக்கீங்க வாழ்த்துக்கள்!!

S.Venkatachalapathy said...

விடைத்தாள் கஷ்டமானது!
பதில்கள் சூப்பர்!

இந்திரா said...

என் ப்ளாக்கில் எழுதப்படும் பதிவுகள் கூகுள் ரீடரிலும் டாஷ்போர்டிலும் அப்டேட் ஆகவில்லை.
என்ன செய்ய வேண்டுமென நண்பர்கள் ஆலோசனை கூறுங்களேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரசனையான பதில்கள்!

ஹேமா said...

கற்க விரும்புவது “சமையல்”...இதுவும் கடந்து போகும்...பக்குவமான பதில்கள் !

நிரூபன் said...

வணக்கம் சகோ,
வித்தியாசமான முறையில், உங்கள் ரசனையினை முத்தான மூன்று விடயங்கள் எனும் அடிப்படையில் வெவ்வேறு தலைப்பின் கீழ்ப் பகிர்ந்திருக்கிறீங்க.

உங்கள் மனதின் விருப்பு, வெறுப்புக்களை அறிந்து கொள்ள இப் பதிவு சிறிய ஓர் அறிமுகமாக இருக்கிறது.

தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.

shanmugavel said...

மூன்று நன்று

மாய உலகம் said...

இன்று எனது வலைப்பதிவில்


நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

http://maayaulagam-4u.blogspot.com

Chitra said...

அருமை. எல்லாவற்றையும் நன்கு சிந்தித்து , சிரத்தையுடன் எழுதி இருக்கீங்க....

சுதா SJ said...

சிறு இடைவேளையின் பின் வருகுறேன் பாஸ்,

ஹும்.. உங்களைப்பற்றி நிறைய அறிய உதவிய பதிவுக்கு தேங்க்ஸ்

நீங்கள் ரெம்ப வித்தியாசமானவர் பாஸ்

Unknown said...

நண்பரே என் கண்களை பனிக்க செய்தது உங்கள் அறிமுகம் ...நன்றி ..இதை நான் மறக்கவே மாட்டேன் ..
இன்று எனது நூறாவது பதிவுடன் கூடிய அறிமுகம் அல்லவா?நன்றி நன்றி ..உங்கள் நம்பிக்கையை காப்பாற்ற நிச்சயம் முயல்வேன் ..நன்றி நன்றி

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான பதில்கள் குரு, அசத்திபுட்டீங்க...!!!

MANO நாஞ்சில் மனோ said...

மும்மூன்று முத்துக்கள் முத்துக்களாய்...!!!

Rathnavel Natarajan said...

அருமை.

vetha. said...

மூன்று, மூன்று பதில்கள் நன்றாக உள்ளன. ஒருவர் மனதைப் புhயக் கூடியதாகவும் உள்ளது.
வேதா.இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

குடந்தை அன்புமணி said...

பதிவர் தென்றல் மாத இதழ் பற்றிய அறிவிப்பு. வருகை தாருங்கள்...

கதம்ப உணர்வுகள் said...

ரமணி சார், நீங்க ரெண்டு நாள் முன்பு போட்ட ஒரு பகிர்வு எனக்கு கண்டுபிடிக்க முடியவில்லை. சபரிமலை யாத்திரை போய் வந்ததைப்பற்றி எழுதி இருக்கீங்கன்னு நினைக்கிறேன். எடுக்கவும் தெரியவில்லை. கொஞ்சம் தயவு செய்து அந்த பகிர்வு எப்படி எங்கே பதிந்திருக்கிறீர்கள் எப்படி எடுப்பதுன்னு சொல்லுங்க ரமணி சார்....

G.M Balasubramaniam said...

என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி,நான் உங்கள் பதிவுகளைத் தொடர்பவன். பதிவு கண்டு பல நாள் ஆனதால் என்ன காரண்மோ என்று அறியாமல் இருக்கும்பொது, உங்கள் அறிமுக பின்னூட்டம் கண்டு வலைச்சரம் போகும்போதுதான் புரிந்தது நீங்கள் வலைச்சர ஆசிரியராய் ஒரு வாரம் இருந்தது. வாழ்த்துக்கள். நான் மனம் தோன்றும்போது தான் வலைகளில் மேய்வேன் . வலைச்சரம் பக்கம் வந்து பல நாட்களாகி விட்டன. உங்கள் ஆசிரியப் பணி அருமை. மீண்டும் வாழ்த்துக்கள்.

காட்டான் said...

ஐயா ஊரெல்லாம் கும்மியடிக்கிறீங்க.. உங்கட பிளாக்க மறந்திட்டீங்களாய்யா..?

நேரமிருந்தால் காட்டானின் படலைக்கும் வாருங்கோய்யா குழ போட...

காட்டான் குழ போட்டான்....

M.R said...

நண்பர் ரமணிக்கு

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

குறையொன்றுமில்லை. said...

ஒருமாசமா பதிவுலகம் வர சந்தர்ப்பம் கிடைக்கலே
அதான் இப்ப எல்லாரோடு பழைய பதிவுகளையும் படிச்சு கொஞ்சம் தாமதமாக பின்னூட்டம் போடரேன்.
உங்களின் முத்தான மூன்று நல்லா இருக்கு.

Post a Comment